1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அடுக்களை மருந்து- தோல் நீக்கப்படாத உளுந்து

Discussion in 'Posts in Regional Languages' started by periamma, Jan 27, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நாங்க தாளிக்க மாட்டோம் .தேங்காய் துருவல் போட்டு கிளறி சாப்டலாம்
     
    jskls likes this.
  2. Balasaraswathi

    Balasaraswathi New IL'ite

    Messages:
    3
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    என் பாட்டி சிறு வயதில் செய்து கொடுத்தது... நினைவூட்டியமைக்கு நன்றி பெரியம்மா..
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Balasaraswathi வாங்க வாங்க .ரசித்தமைக்கு நன்றி
     
    Balasaraswathi likes this.
  4. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    nalla pakirvummaa
     
    periamma likes this.
  5. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கோடை விடுமுறையில் எங்களுக்கு மூன்று முக்கிய assignment உண்டு.
    1.வாரம் இரு கட்டுரைகள் ஆங்கிலத்தில் ஒரு பக்கத்துக்கு எழுத வேண்டும்.எங்கள் தகப்பனார் காலை எட்டு மணி அளவில் தான் தலைப்பு சொல்லுவார்.மதியம் 12 -1 எழுத வேண்டும்.அம்மா -3ம் கிளாஸ் தான்-ஆனால் படு intelligent .ஒவ்வொருவருக்கும் ரஹஸ்யமாகக் குறிப்புகள் தருவார். அப்பாவுக்கு சந்தேகம் வந்தால் கடைசி நிமிடத்தில் டைட்டில் மாற்றி விடுவார்.எத்தனையோ முறை ரொம்ப நன்றாக எழுதியதாக நினைத்து அப்பாவிடம் பாராட்டு பெற எண்ணி,திட்டுகளில் முடியும்.
    2. கருப்பு முழு உளுந்தை நல்ல எண்ணெய் தடவி வெய்யிலில் சற்று காய வைத்து ,இயந்திரக் கல்லில் அரைப் பருப்பாக உடைக்க வேண்டும். ஆளுக்கு 10 படி கணக்கு.
    இரண்டு நாள் time .அதற்குள் உடைத்து,உரலில் குத்தி தவிடு தனியாக, பருப்பு தனியாக ஒப்படைக்க வேண்டும்.
    தவிடை மீண்டும் புடைத்து அதிலிருந்து ஒரு கால் படி யாவது குருணை கிடைத்தால் அடை செய்ய உபயோகிப்போம்.இல்லாவிடில் பாட்டியிடம் செமையாக அடி ,திட்டு கிடைக்கும்.இயந்திரத்தில் உடைக்கும்போது கை நிறைய போட்டு கவனமாக உடைக்கணும்.இல்லாவிட்டால் பருப்பு தூள் தூளாக போய் விடும்.கருப்பு உளுந்து உள்ள அளவில் 60% பருப்பு கிடைக்க வேண்டும்.
    கருப்பு உளுந்து களை வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.இதே முறைதான் பாசிப் பயிருக்கும் .
    3.தென்னங்கீற்று முடைதல்.

    இப்போது பிளாஸ்டிக் wire கூடை பின்னும்போது அந்த நினைவுதான் வருகிறது.காய்ந்த தென்னை ஓலையை நொறுங்கி விடாமல் இருக்க கிணற்றினுள் போட்டு வைத்திருப்பார்கள். இரண்டு நாள் ஊறியதும் பதமாக ஆகிவிடும். அதை எடுத்து அழகாக மாறி மாறி diagnal ஆக முடைய வேண்டும்.லீவு முடிவதற்குள் ஆளுக்கு 100 கீற்று முடைய வேண்டும்.ஆயிரம் கீற்று லீவ் நாளில் தயார் ஆகி விடும்.இரண்டு வருடம் ஒரு முறை அதை உபயோகித்து கூரை போடுவார்கள்.தினமும் கூரை திண்ணையில் சில்லென்று காற்றில் ஈச்சம் பாயில் படுத்து உறங்குவது அலாதி சுகம்.
    பெரிய மட்டையை இரட்டை கீற்றாக நெருக்கமாக முடைந்து சட்டத்தில் கயிறு போட்டுக் கட்டினால் அழகான மறைப்புத் திரை தயார்.பாத்ரூம் என்ற கான்செப்ட் இல்லாதபோது இதுதான் மறைப்பாகப் பயன்படும்.இதை எல்லாம் சொன்னால் என் பேரன்,'சும்மா கப்ஸா விடாதே பாட்டி'என்று நம்பவே மறுக்கிறான்.1970க்குப் பிறகு இந்த வேலை எல்லாம் ஒவ்வொன்றாக நின்று போய்விட்டது.
    பழமை நினைவுகள். போர் அடித்து விட்டேன். மன்னிக்கவும்.

    ஜெய்சால 42
     
    PavithraS likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jayasala42 மலரும் நினைவுகள் மிக இனிது .திரிகைகல்லில் உளுந்து உடைக்கும் போது அழுத்தம் கொடுக்காமல் சுற்ற வேண்டும் .இப்படி எல்லாம் சொல்லி கொடுத்தார்கள் .ஆசைப்பட்டு சுற்றி விட்டு உளுந்து தூள் ஆகும் போது திட்டு வாங்கியதும் உண்டு .என்ன அருமையான பாடங்கள்
     
  7. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    உளுந்தின் மகிமை தனி. அனுமாருக்கு படைக்கும் கறுப்பு உளுந்து,மிளகு வடையின் ருசியே தனி.கறுப்பு உளுந்து லட்டு சுவையான தின்பண்டம்.
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Padhmu நன்றி உஷா
     

Share This Page