1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அடுக்களை மருந்து- தோல் நீக்கப்படாத உளுந்து

Discussion in 'Posts in Regional Languages' started by periamma, Jan 27, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    உளுந்துக்கு இருக்கும் மருத்துவ குணம் மிக அதிகம் .இதுவும் பெண்களின் கர்ப்பப்பையை பாதுகாப்பதில் மிக முக்கியமானது.பருவம் எய்திய நாட்களில் தினமும் உளுந்து வடை கொடுப்பார்கள் .உளுந்தங்களி கொடுப்பார்கள் .அந்த காலத்தில் தோல் நீக்கப்படாத உளுந்து தான் உபயோகித்தார்கள் .இட்லிக்கும் கருப்பு உளுந்தம் பருப்பை பயன் படுத்தினார்கள் .உளுந்தம் பருப்பை இரண்டு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும் .அப்போது தான் தோல் நீக்க எளிதாக இருக்கும் .கல்யாண வீடுகளில் இந்த உளுந்தம் பருப்பை அந்த தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுத்து அனுப்புவார்கள் .அவர்கள் தங்கள் வீட்டு ஆட்டு உரலில் அரைத்து கொடுப்பார்கள் .இது போலவே ஊற வைத்த அரிசியும் அரைத்து வாங்கப் படும் .அப்போது கிரைண்டர் கிடையாது .இன்று நாம்உளுந்து கழுவி சுத்தப்படுத்துவதற்கு ்சோம்பல் பட்டு தோல் நீக்கிய வெள்ளை உளுந்து பயன் படுத்துகிறோம்.ஒரு வீட்டில் கல்யாணம் என்றால் ஊரே உதவி செய்யும் .இது நம் பண்பாட்டின் எடுத்துகாட்டு .

    உளுந்தம் பருப்புடன் பச்சரிசி சேர்த்து பொடித்து களி மாவு தயார் செய்ய வேண்டும் .பின் அடுப்பில் அடி கனமான பாத்திரம் வைத்து கருப்பட்டி அல்லது வெல்லம் தட்டி போட்டு கொதிக்க விடவும் .நீரில் கருப்பட்டி கரைந்ததும் இன்னொரு பாத்திரத்தில் வடி கட்டி வைத்து கொள்ளுங்கள் .பின் அடி கனமான பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்து வடி கட்டிய கருப்பட்டி பாகை கொதிக்க விடவும் .நன்கு கொதித்தவுடன் சிறிது சிறிதாக களி மாவை சேர்த்து கிளறவும் .பாகும் மாவும் ஒன்று சேர்ந்து கெட்டியானவுடன் நல்லெண்ணெய் ஊற்றி கிளறுங்கள் .இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கி விடுங்கள் .இந்த களியை பருவம் எய்திய பெண்களுக்கு கொடுத்தால் கர்ப்பப்பையில் இருந்து வெளியே வர வேண்டிய உதிரம் அனைத்தும் வெளியேறிவிடும் .எந்த கெட்ட உதிரமும் தங்காது .மாத விடாய் காலங்களில் வயிறு வலி இருந்தால் உளுந்தங்களி சாப்பிடலாம் .நல்ல பலனை கொடுக்கும் .உளுந்து நார்ச்சத்து கொண்டது .நம் எலும்புகளை வலிமையாக்கும் கால்சியம் கொண்டது .இது பல்வகை சத்துக்கள் கொண்ட சிறந்த தானியமாகும் .

    கைகால் முறிவுக்கு உளுந்த மாவுடன் முட்டையை சேர்த்து நன்கு அடித்து பசை செய்து ,அடி பட்ட இடத்தில் பூசி விடுகிறார்கள் .அதன் மேல் வெள்ளை துணி கொண்டு கட்டு போடுகிறார்கள் .பின் தினமும் அந்த கட்டின் மேல் நல்லெண்ணெய் ஊற்றி வர வேண்டும்.இது போல் மூன்று அல்லது ஐந்து தடவை கட்டி விடுகிறார்கள் .இந்த முறையில் எலும்பு முறிவு சரி செய்யப்படுகிறது .இவை என் அனுபவத்தில் கண்ட உண்மைகள் .மருத்துவம் படித்தவர்கள் தவறாக என்ன வேண்டாம் .எங்கள் குடும்பத்திலும் மருத்துவர்கள் உள்ளனர் .யாரையும் புண் படுத்த வேண்டும் என்று எழுத வில்லை


    (This dal is one of the richest sources of proteins and Vitamin B. Urad dal is also good for women as it has iron, folic acid, calcium, magnesium, potassium which makes it a healthy pulse. Urad dal is also rich in fibre which makes it easy to digest).This one taken from google.
     
    Rajijb, sindmani, kaniths and 3 others like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உளுந்தின் உன்னத மருத்துவ குணங்கள் பற்றித் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி,பெரியம்மா !
     
    Last edited: Jan 27, 2017
    periamma likes this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிகவும் உபயோகமான தகவல். Dal makhani செய்யும் போது கருப்பு உளுந்து தான் பயன்படுத்துகிறேன்
     
    periamma likes this.
  4. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS படித்தமைக்கு நன்றி
     
    PavithraS likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls லக்ஷ்மி உளுந்து சாதம் கூட பண்ணலாம் .நான் அங்கு எழுத மறந்து விட்டேன் .
     
    PavithraS and jskls like this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @GoogleGlass இவை எல்லாம் இந்த தலைமுறைக்கு சொல்ல வேண்டியது முந்தய தலை முறையினரின் கடமை அல்லவா.
     
    GoogleGlass, PavithraS and jskls like this.
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இதுல சொல்லுங்க மா.
    உளுத்தம் பொங்கல் எள்ளு சட்னி செய்வேன் நீங்க அதையும் சொல்லலாம்
     
    PavithraS likes this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஒரு கப் அரிசி கால் கப் உளுந்தம்பருப்பு .இது கூட வெந்தயம் சேர்க்கலாம் .இஞ்சி பூண்டு பொடிப் பொடியாக அரிந்து சேர்த்து சாதம் செய்யலாம் .இதற்கு கத்திரிக்காய் கொத்சு சூப்பரா இருக்கும் .இதை தான் நீங்கள் உளுந்து பொங்கல் என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்
     
    jskls likes this.
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆமாம் மா ! தாளிக்க வெந்தயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் உபயோகிப்பேன்
     

Share This Page