1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அடுக்களை மருந்து -சீரகம்

Discussion in 'Posts in Regional Languages' started by periamma, Feb 5, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சீர் என்பதன் பொருள் ஒழுங்கு .அகம் என்பதன் பொருள் உள் .

    நம் உள் உறுப்புகளை செம்மை படுத்துவதால் இதற்கு சீரகம் என்று பெயர் வந்ததோ என்னவோ தெரியவில்லை .மழைகாலங்களில் ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து ,ஆறியதும் குடிக்கலாம் .தொண்டைக்கும் இதமாக இருக்கும் .குளிரினால் வரும் கபத்தையும் கட்டு படுத்தும் .கேரளாவில் ஒரு பெரிய பானையில் நீர் ஊற்றி சீரகம் போட்டு அடுப்பின் மேலே வைத்திருப்பார்கள் .அடுப்பில் இருக்கும் தணல் சூட்டில் நீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்கும் .இப்போது அந்த வழக்கம் உள்ளதா என்று தெரியவில்லை .மலையாளக்கரை மங்கைகளே உங்களுக்கு தெரிந்தால் பகிரவும் . பொதுவாக தேங்காய் சேர்த்தால் கொழுப்பு சக்தியின் அளவு கூடும் என்று சொல்வார்கள் .தேங்காய் அரைத்து விட்டு வைக்கும் குழம்புகளில் ,தேங்காயுடன் சீரகமும் சேர்த்து அரைத்து பயன்படுத்துங்கள் இது கொழுப்பை கட்டு படுத்தும் .இன்றும் நாங்கள் இந்த செயல்முறையை கடைபிடிக்கிறோம் .காய்கறி பொரியலில் தேங்காய்துருவல் போட்டு கிளறி அதனுடன் சீரகப் பொடியையும் சேர்த்து கிளறி சாப்பிடவும் .இதன் ருசி மிக அருமையாக இருக்கும். குழம்பு அல்லது பொரியல் வகைகள் இவற்றுக்கு தாளித்து கொட்டும் போது கடுகு உளுத்தம்பருப்புடன் சிறிது சீரகமும் சேர்த்து தாளித்தால் குழம்பின் மணம் கூடும் .முறுக்கு மாவுடன் சீரகம் சேர்க்க வேண்டும் .வெறும் மாவு சாப்பிடவே அவ்வளவு ருசியாக இருக்கும் .வீட்டில் முறுக்கு செய்யும் போது ஒரு உருண்டை மாவை யாருக்கும் தெரியாமல் அபேஸ் பண்ணி சாப்பிட்டது உண்டு .ஐயோ இன்னும் ருசி நாக்கில் தெரிகிறதே.ஆகசீரகம் சுவை ,மணம் ,குணம் நிறைந்த ஒரு சமையலறை வஸ்து
     
    Thyagarajan, ksuji, Rajijb and 5 others like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இனிமேல் தேன்குழல் செய்யும் போதெல்லாம் உங்கள் சார்பாக சிறிது மாவை (சீரகம் சேர்த்துத்தான்) வாயில் போட்டுக்கொள்கிறேன்,பெரியம்மா !:)

    நான் தினப்படி சமையலில் மிளகுடன் சீரகம் பயன் படுத்துகிறேன். அவ்வப்போது சீரக சாதமும் செய்வேன். எங்களூரில் சம்பா சாதம் என்று சொல்வோம்- நடராஜருக்கு இதுவும் கத்திரிக்காய் கொஸ்தும் நைவேத்தியம் - காரத்திற்கேற்ப மிளகு சீரகத்தைத் தனித்தனியே வாணலியில் வறுத்தெடுத்து, சற்றே கொறகொறப்பாகப் பொடித்து,நெய்யில் பொறித்துக் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வடித்த சாதத்தில் (புழுங்கலரிசி/பச்சரிசி) இந்தத் தாளிதத்தை சேர்த்து உப்பிட்டுப் பிசைந்து உண்ணலாம். சளி இருமல் ஜ்வர நேரத்தில் சூடாக இந்த சம்பா சாதம் செய்து சாப்பிட்டால் அவ்வளவு இதம் !
    கத்திரிக்காய் கொஸ்து எங்கள் ஊர் சிறப்பு உணவு. இவ்விடம் அதற்கான செய்முறை விளக்கம் பதியப்பட்டுள்ளது .
     
    ksuji, Thyagarajan and kaniths like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா சம்பா சாதமும் கொத்சும் அருமையான ருசி .அதன் செய்முறையை பகிர்ந்தமைக்கு நன்றி .நான் வெண்பொங்கலுக்கு கத்திரிக்காய் கொத்சு பண்ணுவேன் .கொத்சு பொடி சேர்ப்பது இல்லை .அதற்கு பதில் சாம்பார் போடி சிறிது சேர்த்து கொள்வேன் .இனி நீங்கள் பகிர்ந்த கொத்சு பொடி செய்து வைத்து கொள்வேன் .
     
    Thyagarajan likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இந்த பகுதிக்கு வந்து இந்த பதிவை படித்து விரும்பிய அனைவருக்கும் நன்றி .எல்லா ஊரிலும் கோயில் திருவிழாக்களின் போது இப்படி ஏதாவது ஸ்பெஷல் உணவு வகைகள் இருக்கும் .பவித்ரா பகிர்ந்ததை போல் நீங்களும் உங்கள் எண்ணங்களை பகிர்ந்தால் நல்லது .கலாசாரம் என்பது ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்வதே.மறந்து போன தமிழ் பண்பாடுகளை வெளி கொணர உதவ வேண்டும் .இது என் விருப்பம்
     
    Thyagarajan and kaniths like this.
  5. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    The aroma of seerakam is extremely nice.During night hrs,this seeraka podi satham with a few drops of ghee is amritam.
    I am reminded of 'Sarva Roga nivarani'-a recipe that was given in Health section of Indian Express and it was much popularised in Chennai circles in 1995.
    You have to roast 200gms of vendayam, 50gms of cheerakam, 50 gma of karum cheerakam and 50 gms of omam to be roasted separately in a dry pan.Then grind them into a fine powder and preserve in a dry bottle.Take half spoon of this powder daily in empty stomach.All your gastric problems 'gone' for ever.Though it is stated to be a 'sarva roga nivaaranai' I don't think so.It definitely helps in digestive disorders.
    Jayasala 42
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jayasala42 Thanks for sharing additional value of Jeeragam
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அருமையான பகிர்வு, மிக்க நன்றி .........ம்ம்.. நீங்கள் சொல்வது வாஸ்தவம் தான், கைமுறுக்கைவிட , கைமுறுக்கு மாவு மிகவும் நன்றாக இருக்கும் :)
     
    Thyagarajan likes this.
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    கண்டிப்பாக இங்கு பகிர்ந்து கொள்கிறேன் :)
     
  9. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    நானும் என் கணவரும் பல வருடங்களாக சீரகதண்ணீர் தான் அருந்துகிறோம். சூடான சீரக சாதத்திற்க்கும், முறுக்கு மாவுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
     
    Thyagarajan likes this.
  10. Thenmozhi39

    Thenmozhi39 Bronze IL'ite

    Messages:
    58
    Likes Received:
    42
    Trophy Points:
    38
    Gender:
    Female

    In empty stomach it at bedtime.. .Pls sollunga. .Am suffering from serious digestive disorders.. I prepared I and had at night got pudicha smell feel in next day.. So stopped it
     

Share This Page