1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அக்னிக்குஞ்சு

Discussion in 'Stories in Regional Languages' started by prana, Dec 15, 2011.

  1. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female

    உண்மைதான் தேன்..அவர்கள் படும் இன்னல் சொல்லி மாளாதது...
    thanks for stepping in here..
     
  2. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    அன்புள்ள தோழி..

    ஒவ்வொரு முறை படிக்கும்போதும், கேள்வியுறும் போதும் மனதைக் கசக்கிப்போடுவது போன்ற வலியை ஏற்படுத்தும் ஒரு விஷயம்.

    நம் இனத்தார்...உலகத்தின் தொல் இனத்தார்...இப்படி அனுவனுவாய்ச் சாவது கண்டும் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் நாமிருப்பது குறித்து நினைக்கத்துவங்கினால் உறக்கம் தொலைகிறது.
    சமீபத்தில் புலம் ஈழம் திரைப்படம் பார்த்தேன். நெஞ்சு கனத்துப்போனது. அந்தத் திரைப்படம் கூட மேலோட்டமாய்ச் சொல்லப்பட்டதே..
    என் நண்பன் ஒருவன் சில வருடங்கள் முன்பு(வேலுப்பிள்ளை இறப்புக்கு முன்) இலங்கையில் உள்ள புலிகள் முகாம் பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்றதைப் பற்றி விளக்கமாய் எழுதியிருந்தான். அதைப் படித்த பின் எனக்கு சரியாய் உணவு கொள்ள ஒரு வாரம் பிடித்தது.
    சொந்த நாட்டிலேயே அகதியாய் வாழ்வது எத்தனை கொடுமையான விஷயம்?

    முன்பொரு நாள் யூ-டியூபில் ஒரு காணொளி கண்டேன். அதிலே போரினால் குடும்பம், மானம் என்று அனைத்தும் இழந்து பெருந்துயர் பட்ட ஒரு இளம்பெண்ணிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு இப்படி பதில் சொன்னாள் அப்பெண்.
    “I am alive, but not living".
    மனது நெக்குருகிப்போனது.

    சில நாட்கள் முன்பு கனடா நாட்டின் மத்திய மந்திரியாய் பதவியேற்றிருந்த ராதிகாவின் பதவியேற்பு உரையில் அவர் தமிழில் பேசக்கேட்ட போது கண்கள் நீர்த்துப்போனேன். அது குறித்து அகநூலில் கூட கிறுக்கிவைத்தேன்.
    சொந்த நாட்டில் அகதி. வேற்று நாட்டில் தான் மேடையேறுகிறது தமிழன் பேச்சு. என்ன செய்வது?

    கதையைப் படிக்கப் படிக்க கனத்த மனது முடிவில் தத்தரிகிட தித்தரிகிடத் தித்தோமென்றுக் குதிக்கத் தான் செய்தது. ஆனாலும் அப்துல் கலாம் சொன்னது போல இதிலும் கூட கனவு மட்டும் தான் காண முடியும் போலிருக்கிறது நம்மால்.
     
  3. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அந்தத் தோழியின் வலி மிகுந்த வார்த்தைகள் என்னை ரொம்பவே வருத்தப்பட செய்கிறது மலர்..

    இதுப் போன்ற சில இயலாமைகளை அப்படியே கடக்கையில்தான் மனம் கனக்கத் துவங்கிவிடுகிறது..
    ஏதேனும் ஒரு பிரம்மாண்ட சக்தி நமக்கு வந்துவிடாதா..இதுப் போன்ற அப்பாவிகளைக் காக்க முடியாதா என்றெல்லாம் நினைக்கத் தோன்றிவிடுகிறது..

    நம்பிக்கைதானே வாழ்க்கை..பார்ப்போம்..நல்லதே நடக்கும் என்று உளமார நம்புவோம்..
     

Share This Page