1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நாடோடி மன்னன் ஒபாமா

Discussion in 'Stories in Regional Languages' started by Geetha Iyer, Jan 21, 2009.

  1. Geetha Iyer

    Geetha Iyer New IL'ite

    Messages:
    385
    Likes Received:
    19
    Trophy Points:
    0
    Gender:
    Female
    Friends,

    This is another comic writing from my friend I am sharing with you here.

    வாஷிங்டன் டி.ஸி. வெள்ளை மாளிகைக்கு முன் பெரும் திரளாக மக்கள் கூடியிருக்கின்றனர். ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் வைபவம் நடை பெற உள்ளது. எப்படியோ முண்டியடித்துக் கொண்டு மேடையின் அருகாமைக்கு முன்னேறுகிறேன் நான். எங்கு பார்த்தாலும் பாதுகாப்பு வீரர்கள். வானில் ஹெலிகாப்டர்கள் ரோந்து வருகின்றன. அருகில் உள்ள பொட்டோமாக் ஆற்றிலும் படகுகள் ரோந்து வருகின்றன பாதுகாப்பிற்காக. ஆங்கில பாடகர் ஒருவர் பாப் இசை வழங்கி கூட்டத்தை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார்.

    பல மணி நேரங்கள் காத்திருந்த பிறகு ஓபாமா தனது குழந்தைகளின் கைகளைப் பற்றியவாறு மேடை ஏறுகிறார். அவர் பின்னால் அவரது மனைவி பதவியை விட்டு விலகும் அதிபர் புஷ் ஒபாமாவுக்கு பதவி பிரமாணம் செய்ய அமெரிக்க தலைமை நீதிபதி ஆகியோரும் மேடை ஏறுகிறார்கள். அனைவருக்கும் மலர் செண்டுகள் கொடுத்து வரவேற்ற பின் தலைமை நீதிபதி கையில் கிரீடமும் செங்கோலும் எடுத்துக் கொண்டு ஒபாமாவிற்கு பதவி பிரமாணம் செய்ய வருகிறார். பதவிக்கான உறுதி மொழிகளை கூறிய பின் ஒபாமாவிற்கு கிரீடம் அணிவிக்க இருக்கும் தருணத்தில் 'நிறுத்துங்கள் நிறுத்துங்கள்' என்று கூறிய வண்ணம் மேடை ஏறுவது யார்? என் கண்களை நம்ப முடிய வில்லை. மற்றொரு ஒபாமா தான் அது. என்னை மாதிரி காவலர்களும் செய்வதறியாது நிற்க புது ஒபாமா மைக்கின் மூலம் தான் தான் நிஜமான ஒபாமா என்றும் வாஷிங்டனுக்கு பதவி ஏற்க ரயிலில் வந்து கொண்டிருந்த போது இந்த போலி ஒபாமா மயக்க மருந்து கலந்த இனிப்பை வழங்கி மயங்கிய அவரை டாய்லெட்டில் அடைத்து விட்டு வந்ததாக கூற மேடையிலிருந்த போலி ஒபாமா அதை மறுக்க பெரும் களேபரம் ஆகியது.

    அருகிலிருந்த புஷ் முகத்தில் திடிர் பிரகாசம். வெள்ளை மாளிகைக்கு தான் திரும்ப போவதாக உடன் கனவு கண்டு பரவசம் அடைகிறார் என்பதை நான் பார்க்கிறேன். எனக்கு ஆச்சரியம் அளிக்கும் அளிக்கும்வகையில் புஷ் பி.எஸ். வீரப்பா குரலில் சபாஷ் சரியான போட்டி என்று கூறுகிறார். குழப்பத்தை தீர்க்க ஒபாமாவின் மனைவி காவலர்களிடம் ஏதோ கூற அவர்கள் இரு ஒபாமாக்களின் சட்டையை நீக்கி பார்த்ததில் புதிதாய் வந்த ஒபாமாவின் தோளில் இருந்த மச்சத்தை வைத்து அவர் தான் உண்மையான ஒபாமா என்று கண்டறிகிறார்கள். போலி ஒபாமா கைது செய்யப் பட்டு கொண்டு செல்லப் படுகிறார். அதன் பின் தலைமை நீதிபதி ஒபாமாவிற்கு கீரிடம் அணிவித்து கையில் செங்கொலும் கொடுத்து பதவி ஏற்பை பூர்த்தி செய்கிறார். இதையெல்லாம் உலகெங்கிலும் டி.வி. மூலம் மக்கள் கண்டு களிக்கிறார்கள். ஒபாமாவின் மனைவி பானுமதி குரலில் "காடு விளைந்தென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்" என்று பாட ஒபாமா எம.ஜி.ஆரைப் போல " நாளை போடப் போறேன் சட்டம் பொதுவில் நன்மை விளைந்திடம் திட்டம்" என்று பாட பரவசமைடைந்த நான் "நாடோடி மன்னன் ஒபாமா வாழ்க" என்று கத்துகிறேன். ஆனால் இது என் பக்கத்திலிருப்பவர்கள் என்னுடன் சேர்ந்து கத்தாமல் இருக்கவே கோபம் வந்து அவர்களை எத்துகிறேன். என்னை ஒருவர் உலக்கு உலக்கு என்று உலக்குவதை உணர்ந்து கண் விழித்து பார்க்கையில் நடந்தது அனைத்தம் கனவு என்று உணர்ந்தேன். என்னிடமிருந்து உதை வாங்கிய எனது மனைவி என்னை திட்டுகிறாள் " ஆமாம் ராத்திரி கண் விழிச்சு லேட் நைட் ஷோல நாடோடி மன்னன் படம் பார்த்துட்டு அப்புறம் கடைசி செய்திகள்ல ஒபாமா பதவி ஏற்பு பத்தி கேட்டட்டு கனவு கண்ட இப்படி என்னை உதைக்க வேண்டாம்".
     
    Last edited: Jan 21, 2009
  2. Geetha Iyer

    Geetha Iyer New IL'ite

    Messages:
    385
    Likes Received:
    19
    Trophy Points:
    0
    Gender:
    Female
    I am pained to see the lack of sense of humour among the ILites. Or is it that this piece has been posted by me?. Why there is no feedback of appreciation to a purely original humour of a high standard? Is it that the humour written by Cheeniya sir is the humour?
     
  3. kalaisiva

    kalaisiva Senior IL'ite

    Messages:
    105
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Ridiculous Couldnt laugh!!!Sorry
     
  4. Geetha Iyer

    Geetha Iyer New IL'ite

    Messages:
    385
    Likes Received:
    19
    Trophy Points:
    0
    Gender:
    Female
    With the conditions in U.S. being so bad, I only pity your sick mentality.
     

Share This Page