1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மூத்த குடிமகற்கான முத்தான மொழிகள் சில.

Discussion in 'Regional Poetry' started by Rrg, Jan 3, 2020.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    மூத்த குடிமகற்கான முத்தான மொழிகள் சில:

    சந்தர்ப்பம் நேர்கையில் நல் நண்பருடன்
    கூடும் வாய்ப்பினை நழுவ விடாதே;
    நேரம் இருப்பதோ வெகு குறைவு. அதை
    நன்றாய் உணர்ந்து செயல் படுவாய்.

    பணத்தை வங்கியில் முடக்காமல் நன்கு
    செலவிடவும் நீ கற்றுக்கொள்.
    செலவிடும் வேளையில் செலவழிக்காமல்
    முடங்கியது உனதில்லை. ஒத்துக்கொள்.

    உண்ண விரும்பு வதை உண்டுவிடு; அதை
    அளவொடுண்டு திருப்தி பெரு.
    அளவுக்கு மிஞ்சிடின் அமிர்தமும் நஞ்சு என்ற
    அறிவுரை உணர்ந்து செயல் படுவாய்.

    உடல் நலம் கெடுக்கா உணவை அதிகமாய்
    உண்ணுவதற்கு பழகிக்கொள்.
    மற்ற பிடித்தவை முற்றிலும் தவிர்க்க
    தேவை இல்லை; அளவாய் சேர்த்துக்கொள்.

    உடல் நலக்குறைவு, பாதிப்புகளை
    நம்பிக்கையுடனே சந்திப்பாய்.
    மூப்புக்கும் பிணிக்கும் விதிவிலக்கு இங்கு
    எவரேனும் உண்டோ சிந்திப்பாய்.

    காலன் வருவது நெருங்குவ தெண்ணி
    கவலைப் படுவதால் பலனில்லை.
    நிலுவையில் உள்ள பிரச்சினை தீர்ப்பின்
    வருந்திட எதற்கும் தேவையில்லை.

    மனநிலை சிறப்பாய் அமைந்து விட்டாலே
    வாழ்வும் சிறப்பாய் அமைந்து விடும்
    கவலைப் படுவதால் பயனுண்டு எனில்
    கவலைக் கடலினுள் தொலைந்துவிடு.

    தற்போது வாழ்க்கையில் உன்னைத் தாங்குபவை நான்காகும் -
    தளர்ந்த உடல்- நலம் பேணிக்காத்திடு;
    நீயேதான் பொறுப்பாளி; நம்பிட வேறொருவர் இலை.
    தான் சேர்த்த ஓய்வு நிதி- கவனமாய்ச் செலவிடு;
    உன் தேவைக்கு முன்னுரிமை கொடு;
    வாழ்க்கை துணை- வெகுவாக நேரம் கொடு;
    யார் முதலில் போவாரோ எவரும் அறிவதில்லை.
    இருக்கும்போது இதை உணர்ந்தால் என்றைக்கும் வறுத்தமில்லை
    காலத்தால் அழியா நட்பு - போற்றிடு.
    கூடும் வாய்ப்பினை நழுவிடல் வேண்டா.
    நாட்கள் கழிகையில் வாய்ப்புகள் குறைந்திடும்.
    இந்த நான்கையும் நன்கு பேணி வந்தால்
    எந்த நாளும் நல்ல நாளாகும்.

    சிரித்து வாழ்ந்திட கற்றுக்கொள்;
    சோகம் உனக்கில்லை ஒத்துக்கொள்.

    ஓடையில் ஓடும் நீர் போன்றதே நாட்களும்;
    போனவை என்றும் திரும்புவதில்லை.
    இதை உணர்ந்து பொழுதை வீணடிக்காமல்
    இனி வரும் நாட்களில் மகிழ்ந்திடுவாய்.

    அன்புடன்,
    RRG
    02/10/2020

    (நான் கேட்ட ஒரு ஆங்கில சொற்பொழிவின் உந்துதலால் விளைந்ததிது).
     
  2. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    இலக்கணப் பிழை திருத்தம்:

    “உண்ண விரும்பு வதை உண்டுவிடு; அதை
    அளவொடுண்டு திருப்தி பெறு.”
     

Share This Page