1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Lakshmi,

    Ungalai ingu sandhiththathil mikka magizhchchi.

    Kadavul ellorukkum oru dhinusaana question paper kudutthu iruppaar. Ennoda dhinusaana question paper kku ennoda unmayaina iyalbai maatri badhil ezhudha 'heart' use panninaen..sema flop aanadhu..suyamaana iyalbu nilaikku vandhu 'brain' use panni badhil ezhudha aarambiththaen..adhil irundhu sema superaa irukkaen..

    Neenga eppadi irukkeenga?

    Ungaloda manadhil odum paadalukkum enakkum indha janmathil endha sambandhamum irukka povadhilai..adhil enakku thuliyum varuththamillai..unmaiya solla ponaal, ennoda soolnizhaikku indha nilai enakku varam..
     
    jskls and suryakala like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    SKS best sweet, Grand sweets best sweet, A2B best sweet kalandha best assorted sweets pola IR's 80's sema romantic songs la irundhu best-o-best collection..eththanai varudangal kazhithu kettaalum, eththanai thadavai kettaalum thuliyum kuraiyamal kick tharum paadalgal..vaara irudhiyil paadalgal ketta baadhippu innum ennai vittu pogavillai..paadalgal ketkum onrarai mani nerangal sorkkathil payanikkalaam enru sonnaal migai aagaadhu..

    YT - Playlist - IR's best-o-best romantic songs
     
    suryakala likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடந்த வார இறுதியில் பார்த்த படத்தில் இருந்து ஒரு ரொமான்டிக் பாடல். பாடல் வரிகள், படம் பிடித்த விதமும் மனதிற்கு இதம்/பதம்.

    சென்டி ஆன "Family drama" படங்கள் என்னை பொதுவாக ஈர்க்காது. என்னவோ இந்த "Family drama" படம் முதல் பாதி என்னை கட்டிப்போட்டது. இரண்டாவது பாதி சில இடங்களில் இழுவை. தேவை இல்லாத வில்லன்/சண்டை காட்சிகள். ஆனாலும் மனதை ஊடுருவும் சில காட்சிகளுக்காக கண்டிப்பாக ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம்.

    படத்தில் அருமையான வசனங்கள், குறிப்பாக எனக்கு செமயா பிடிச்சது:
    • நமக்கு லிப்ட் குடுத்தாங்க என்பதற்காக நாம போக வேண்டிய இடத்தை மத்தவங்க முடிவு பண்ண கூடாது.
    • திருமணத்திற்கான காரணம் சொல்லும் ஹீரோ: இந்த உலகத்தில யாராவது ஒருத்தர் கிட்ட நூறு பெர்ஸன்ட் ஹானெஸ்ட்டா இருக்கணும்.

    YT - ஆத்தி யாரடி - சிவப்பு மஞ்சள் பச்சை
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வருடத்தில் கேட்டவுடனே என்னவோ செய்து திரும்ப திரும்ப திரும்ப கேட்க வைத்து மொத்தமாக மயக்கிய 2 பாடல்கள் இன்று போஸ்ட் பண்றேன்..கிராமத்து காதல் வரிகள் வாசம் தூக்கலோ தூக்கலாக தூக்கி வீசுது..

    YT - கத்தரிப் பூவழகி - அசுரன்
    வரப்பு மீசக்காரா
    வத்தாத ஆசக்கார


    (என்னவோ இந்த வரிகளை கேட்டவுடனே IL ல இந்த தீம் ல 2010 ல நண்பர்களோடு அமர்க்களம் பண்ணி அராஜகமாக கிறுக்கிய கிறுக்கல்களை படித்தேன்..நீண்ட வருடங்கள் கழித்து படித்தாலும் கிறுக்கிய கடந்த கால நினைவுகள் பசுமையாக (பச்சையாக) வந்தது.. ரசித்து ரசித்து படித்தேன்.. என்ன ஒரு கிக்..சத்தியமா முடியல!! மரணப்படுக்கையில் இருந்தால் பூமியில் வாழ்ந்த நிகழ்வுகளை அசைபோட்டு பார்த்தால் ஆசையுடன் என்னுள் எட்டிப்பார்க்கும் நிகழ்வுகளில் அந்த(ரங்க) thread க்கு ஒரு சிறப்பு சிம்மாசனம் இருக்கும்.. அன்றைய அனுபவஸ்தர்கள் கிறுக்கியதை எல்லாம்/அப்போ அனுபவம் இன்றி நான் கிறுக்கியதை அனுபவம் இருந்து இப்போ அனுபவித்து படிப்பது அலாதியான சுகம். :wink::wink:)

    YT - என் மினுக்கி - அசுரன்
    எந்த வரிகள் போடுவது எந்த வரிகள் விடுவது என்று தெரியல..வரிகள் அவரவர் கற்பனைக்கு..:wink::wink:
     
    suryakala likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தீபாவளிக்கு திரைக்கு வந்த இரண்டு படங்களும் தியேட்டரில் பார்த்தேன்..

    "கைதி" - கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.. சில இடங்களில் லாஜிக் செமயா இடித்தாலும் படம் பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருந்தது..இரண்டாவது முறையாக சொந்த காசு கொடுத்து வேணாலும் தியேட்டரில் பார்க்கலாம்..படம் முடிந்தது தெரியல..

    "பிகில்" - ஒரு தடவைக்கு ஏதோ தேவலாம்..இன்னொருவர் காசில் ஓசி டிக்கெட் எடுத்து கொடுத்தாலும் இரண்டாவது முறை தியேட்டரில் என்னால் பார்க்க முடியாது..எப்படா படம் முடியும் என்று பொறுமையை சோதித்தது..இந்த பாடல் மட்டும் பிடித்தது..

    YT - உனக்காக - பிகில்
     
    suryakala likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    திரைக்கு வரும் ஆனா எப்போ வரும் என்று யாருக்கும் உறுதியாக தெரியாத இந்த புதுப்படம் அடுத்த வாரம் திரையில் வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது..GVM 's ரொமான்டிக் "touch" பார்க்க ஆவலுடன் waiting..

    அசுரன் படத்தில் அசுரவதமாய் அப்படி இருந்த தனுஷா இப்படி என்று எண்ண தோணுது..

    YT - விசிறி - எனை நோக்கி பாயும் தோட்டா
     
    suryakala likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ENPT படம் வெளி வருவதற்கு முன்பு எனது மனநிலை: எப்படா படம் ரிலீஸ் ஆகும் ?

    படம் பார்த்த பிறகு எனது மனநிலை: ஏன்டா இந்த படம் ரிலீஸ் ஆச்சு?

    இந்த தண்டமான திருஷ்டி படத்தில் இப்படி ஒரு பாடலா என்று விசிறி பாடலுக்கு திருஷ்டி சுத்தி போடலாம்..

    இந்த பாடல் (மறு வார்த்தை) படமாக்கிய விதமும் சூழலும் ஆரம்பத்தில் மட்டும் செம..ஆரம்பம் தவிர்த்தால் படமாக்கிய விதம் சுமார் தான்..

    GVM படங்கள் பார்த்து கனவுலகில் மிதந்து இருக்கிறேன்.. இவ்ளோ கேவலமா GVM படத்தை பத்தி எழுதுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை..

    திரை அரங்கில் படம் பார்த்து கொண்டு ஒரு அஞ்சு பசங்கள் சீன் க்கு சீன் தமிழில் கழுவி கழுவி ஊத்தியதை ரசித்து சிரித்த அனுபவத்திற்கு டிக்கெட் பணம் குடுத்தது தகும்..
     
    suryakala likes this.
  8. nemesis

    nemesis Platinum IL'ite

    Messages:
    2,490
    Likes Received:
    2,517
    Trophy Points:
    283
    Gender:
    Male
     
    cinderella06 and suryakala like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    கடந்த வருடம் (2019) முதல் மாதம் எனக்கு சரியாக அமையவில்லை. நினைத்து நினைத்து கவலை படுவதை விட எப்படி எல்லாம் சந்தோசமாக இருக்கலாம் என்று இரண்டாவது மாதம் ஆரம்பத்தில் யோசித்து நினைத்ததை எல்லாம் தொடர்ச்சியாக அமல் படுத்தினேன். அதற்கு பிறகு அட்டகாசமான வருடமாக அமைந்தது. வாழ்வில் எனக்கு மறக்க முடியாத இனிமையான வருடம். "Shopaholic" தாரக மந்திரம் ஆக இருந்தது. கடந்த வருடம் கொடுத்த எனர்ஜி இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே புத்துணர்வை கொடுக்கிறது. இனிமேல் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு தாரக மந்திரம் வைத்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். "Workaholic" தாரக மந்திரம் இந்த வருடத்தில்.

    வருடம் முடியும் போது இந்த பாடலை தான் கேட்டேன். பாடலின் அர்த்தம் எனக்கு மொத்தமாக அனுபவத்தில் புரிந்தது.

    YT - நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
     
    cinderella06 and suryakala like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடந்த வருடத்தில் கடைசி கடைசியாக பார்த்து ரசித்து ரசித்து மயங்கி மயங்கி கிறங்கி கிறங்கி எங்கு எங்கோ என்னை பற பற என பறக்க வைத்த படம் - சில்லுக் கருப்பட்டி

    படத்தில் நான்கு கதைகள் காதலோடு செதுக்கி இருக்கிறார் பெண் இயக்குனர்..சீன் க்கு சீன் காதல் ஹைக்கூ, கூடை கூடையாக மயில் இறகுகள், வண்டி வண்டியாக இனிப்புகள், விட்டு விட்டு வரும் சாரல் மழை, மாத்தி மாத்தி MR/GVM படங்களில் வரும் ரசனையான ரொமான்ஸ், கேட்டு கேட்டு கிறங்க வைக்கும் IR ரொமான்டிக் பாடல்கள், போட்டு போட்டு தாக்கும் கவிஞர் வாலியின் ரொமான்டிக் பாடல் வரிகள், பக்கெட் பக்கெட் ஆக சாக்லட்ஸ், வகை வகை ஆக ஐஸ் க்ரீம், கொட்டு கொட்டு என்று கொட்டும் மழையில் சுட சுட மிளகா பஜ்ஜிகள்/இஞ்சி டீ (with dignity), அலை அலையாக வந்து கால்களை நனைக்கும் கடற்கரை ஓரங்கள், தக தக என மின்னும் பௌர்ணமி இரவுகள், வேணும் வேணும் என வாங்கிய மீசை முத்தங்கள் - இவை அத்தனையும் கலந்து கட்டின இனம் புரியா அனுபவத்தை வாரி வாரி கொடுத்தது இந்த படம்!!

    நான் வசிக்கும் இடத்தில இந்த படம் தியேட்டரில் வெளியாக வில்லை. தியேட்டரில் போய் இந்த படம் பார்க்க முடியலையே என்று என்னை ஏங்க ஏங்க வைத்த படம்.

    YT - அகம் தானாய் அறிகிறதே அறிமுகம் இனி எதற்கு - சில்லுக் கருப்பட்டி
     
    suryakala likes this.

Share This Page