குலதெய்வம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Discussion in 'Religious places & Spiritual people' started by Bhaskaran, Feb 10, 2018.

  1. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    5ஆம் வீட்டுக்கு உரிய கிரகம்

    1ஆம் வீட்டில் இருந்தால்: மிகவும் நல்லது. அதோடு நல்ல சேர்க்கையும், பார்வையும் பெற்றிருந்தால் தலைமைப் பதவி தேடிவரும். நிறைய வேலை ஆட்கள் இருப்பார்கள். அமைச்சராகக் கூட ஆகலாம், நீதிபதியாகவும் ஆகலாம். (அது பத்தாம் இடத்துடனும் சம்பந்தப்பட்ட தாகையால், நான் ஆணிபிடுங்கும் கம்பெனியில் டீம் லீடராக இருக்கிறேன். எனக்கு எப்படி நீதிபதி பதவி தேடி வரும் என்று கேட்க வேண்டாம். அந்த டீம் லீடர் பதவி கூட தலைமைப் பதவிதானே!) அதே நேரத்தில் 5th lord ஒன்றில் அமர்ந்தும், தீய கிரகங்களின் பார்வை, அல்லது சேர்க்கை பெற்றிருந்தால் மேலே கூறியவற்றிற்கு எதிரான பலன்களே நடைபெறும் சராசரி சேர்க்கை என்றால் மிக்சட் ரிசல்ட்!

    ஐந்தாம் அதிபதி 2ஆம் வீட்டில் இருந்தால்: If favourably disposed as said in the earlier paragraph: அழகான மனனவியும், அன்பான குழந்தைகளும் கிடைப்பார்கள்.படித்தவராக இருப்பார். அரச மரியாதை கிடைக்கும். If not favourably disposed: தரித்திரம் தாண்டவமாடும், தன் குடும்பத்தை வழி நடத்தவே சிரமப் படுவார். மற்றவர்களின் எரிச்சலுக்கும், அவமரியாதைகளுக்கும் ஆளாக நேரிடும்.


    ஐந்தாம் அதிபதி 3ஆம் வீட்டில் இருந்தால்: If favourably disposed: நல்ல குழந்தைகளும், நல்ல சகோதரன்,நல்ல சகோதரிகள் கிடைப்பார்கள். இங்கே நல்ல என்ற வார்த்தையில் எல்லாம் அடக்கம்! If not favourably disposed: Loss of chidren, misunderstanding with brothers and sisters, troubles in work or in business.

    ஐந்தாம் அதிபதி 4ஆம் வீட்டில் இருந்தால்: If favourably disposed: நல்ல, நீண்ட நாட்கள் உயிர் வாழும் தாய் கிடைப்பார். அரசுக்கு (வருமானவரி) ஆலோசகராக இருப்பவர். அல்லது அது சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர். If not favourably disposed: பெண் குழந்தைகள் மட்டும் உடையவராக இருப்பார்.

    ஐந்தாம் அதிபதி 5ஆம் வீட்டில் இருந்தால்: If favourably disposed: அதிகமாக ஆண் குழந்தைகளை உடையவர். அவருடைய செயல்களில் தொழிலில் மேன்மை அடைபவராக இருப்பார்.பல சாஸ்திரங்களில் ஈடுபாடு உடையவர்.எல்லோரிடமும் நட்பாக இருப்பவர். கணக்கில் கெட்டிக்காரர். If not favourably disposed: எதிர்பார்த்தது எதுவும் நடக்காமல் அவதியுறுவார். குழந்தைகள் இறக்கும் அபாயம் உண்டு. வார்த்தைகள் தவறுபவர். சலன மனம் உடையவர்.

    ஐந்தாம் அதிபதி 6ஆம் வீட்டில் இருந்தால்: பெற்ற பிள்ளைகளுடனேயே விரோதம் உண்டாகும். குழந்தை பாக்கியம் குறைவு. தத்துப் பிள்ளை எடுத்து வளர்க்க வேண்டியவர்.

    ஐந்தாம் அதிபதி 7ஆம் வீட்டில் இருந்தால்: If favourably disposed: நல்ல குழந்தைகளை உடையவர்.அதிகமான குழந்தைகளை உடையவர். அவர்களால் பொன்னும், பொருளும் , செல்வமும் பெறக்கூடியவர். செழிப்பான வாழ்க்கை அமையும். குருபக்தி மிக்கவர்.வசீகரத்தோற்றமுடையவர். If not favourably disposed: குழந்தைகளைப் பறிகொடுக்க நேரிடும். பெயரும், புகழும் பெற்ருத்திகழும் குழந்தைகளைக்கூட பறி கொடுக்க நேரிடும்

    ஐந்தாம் அதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால்: மூதாதையர் சொத்துக்கள் கிடைக்காது.அப்படியே கிடைத்தாலும் அவற்ரைக் கடனுக்காக இழக்க நேரிடும். Lungs Problem உண்டாகும். மகிழ்ச்சி இல்லாதவர் Unhappy man but not poor!

    ஐந்தாம் அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால்: If favourably disposed: கோவில், குளம் என்று திருப்பணிகள் செயக்கூடியவர். சொற்பொழிவாளர், பெரிய கவிஞர் அல்லது எழுத்தாளர், பேராசான். If not favourably disposed: அதிர்ஷ்டமில்லாதவர். முயற்சிகள் எல்லாம் தட்டிக்கொண்டு போய்விடும். நடக்காது போய்விடும்


    ஐந்தாம் அதிபதி 10ஆம் வீட்டில் இருந்தால்: If favourably disposed: ராஜயோகம்.ஏராளமான சொத்துக்கள் (Landed properties) சேரும். அரச மரியாதை கிடைக்கும். அவருடைய குடும்ப உறவுகளில் அவருக்குத்தான் முதல் மரியாதை கிடைக்கும். If not favourably disposed: மேலே கூறியவற்றிற்கு எதிர்மறையான பலன்கள்.

    ஐந்தாம் அதிபதி 11ஆம் வீட்டில் இருந்தால்: எடுக்கும் காரியம் எல்லாவற்றிலும் வெற்றியும், நன்மையும் கிடைக்கும். செல்வந்தராகி விடுவார். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வார். அதிகமான குழந்தைகள் இருக்கும்!

    ஐந்தாம் அதிபதி 12ஆம் வீட்டில் இருந்தால்: எதிலும் பற்றின்மை உண்டாகும், வேதாந்தியாகிவிடுவார். பல இடங்களிலும் அலைந்து திரிபவர். பிடிப்பு இல்லாதவர்
     
  2. Saro2781996

    Saro2781996 New IL'ite

    Messages:
    9
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Male
    [​IMG]
    my name is saravanan
    Dob:27/08/1996
    Tob:12:10pm
    My elder sister name is rajeshwari
    Dob:31/07/1994
    Tob:9.30am
    மேலே என் அக்காவின் ஜாதகம் உள்ளது.என்னுடைய குலதெய்வம் எது என்று கூறுங்கள்
     
  3. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    குலதெய்வம் தெரியாதவர்கள் அதனை அறிந்துகொள்வது எப்படி?

    ‘திரைகடல் ஓடி திரவியம் தேடு’ என்ற வாக்கியத்துக்கு ஏற்ப, நமது முன்னோர்கள் வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களுக்குச் சென்று கடந்த காலங்களில் குடியேறி விட்டனர். சொந்த ஊருக்கு வர வாய்ப்பில்லாமலேயே அநேக குடும்பங்கள் வெளிநாட்டிலேயே தங்கி விட்டனர். தலைமுறை இடைவெளி வந்துவிட்ட காரணத்தாலும், முன்னோர்கள் தங்களது குலதெய்வம் எதுவென்று தங்கள் வாரிசுகளுக்கு குறிப்பிட்டுச் சொல்லாத காரணத்தாலும் பெரும்பகுதியினர் தங்களுக்குரிய குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருந்து வருகின்றனர்.

    சில குடும்பத்தில் குடும்பப் பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து குலதெய்வம் பற்றித் தெரிந்துகொண்டு பரிகாரம் செய்து வழிபடலாம்.

    சில குடும்பத்துப் பெரியவர்களுக்குக்கூட அவர்களின் குலதெய்வம் எது என்று தெரியாது. அவர்கள் என்ன செய்வது? இங்கேதான் அவர்களுடைய ஜாதகம் உதவுகிறது. ஜாதகத்தை வைத்து குல தெய்வம் கண்டுபிடிக்க முடியுமா? நிச்சயமாக முடியும்.

    நம்முடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 5ஆம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும். இதே வீடு பொதுவாக புத்திர பாக்கியம் நமது தூய்மையான எண்ணங்கள், புத்தி சாதுர்யம், வித்தை, கல்வியில் திறமை, சத்சங்கம், மகான்களின் நட்பு, யோகங்கள், பதவி, உயர்வு,அந்தஸ்து முதலிய விஷயங்களையும் அறிய உதவும். குலதெய்வம் அறியாதவர்கள் லக்னத்துக்கு 5ஆம் வீட்டிற்குரிய கிரகம் எங்கு வருகின்றது என்பதைப் பார்த்து, அதனைக் கொண்டு தங்கள் குலதெய்வத்தை அறியலாம். நல்ல ஜோதிடர்களிடம் ஜாதகத்தைக் காட்டி, 5ஆம் வீட்டின் வாயிலாக குலதெய்வத்தை அறியலாம்.

    ஒருவரது ஜாதகத்தில் தெய்வ ஸ்தானம் என்பது 5-ம் இடமும் 9-ம் இடமும் ஆகும். 5-ம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம். தந்தை வழி பாட்டனார்களைச் சொல்லுமிடம். அதன் 5-ம் இடம் ஜாதகத்தின் 9-ம் பாவமாகும். அவர்களின் இஷ்ட தேவதையைச் சொல்லுமிடம். 9-ம் இடத்துக்கு 9-ம் இடம் 5-ம் பாவமாகும். அதாவது தந்தை வழிபட்ட தெய்வத்தைச் சொல்லுமிடமாகும். ஆகவே இந்த இரு இடங்களைக் கொண்டு குல தெய்வத்தைக் கண்டுபிடிக்கலாம்.

    இந்த இடங்கள் ஆண் ராசியா, பெண் ராசியா எனக் கண்டுபிடித்து, அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா எனத் தெரிந்து கொள்ளலாம். மேலும் அது நில ராசியில் (ரிஷபம், கன்னி, மகரம்) உள்ளதா, நீர் ராசியில் (கடகம், விருச்சிகம், மீனம்) உள்ளதா, என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த தெய்வம் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கலாம்.

    நீர் ராசி என்றால், ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடங்களுக்கு அருகில் இருக்கும். நில ராசியில் நின்றால், வயல்வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் (மேஷம், சிம்மம், தனுசு) நின்றால், மலை மேல் இருக்கும். குலதெய்வம் பற்றி வீட்டின் மூத்த பிள்ளையின் ஜாதகத்தில் இருந்து கண்டுபிடிக்கலாம்.

    ஒரு குடும்பத்துக்கு குல தெய்வம் ஒன்றும், அதன் பரிவார தெய்வங்கள் இரண்டும் சம்பந்தம் கொள்ளும். ஒருவரின் பூர்வீகத்தில் அதாவது உங்களுக்கு முன்பு ஏழு தலைமுறைப் பங்காளிகள் மூன்று தலைமுறையாக ஒன்றுசேர்ந்து எங்கு வாழ்ந்திருக்கிறார்களோ அந்த ஊரில் இருக்கும். இதை குடும்பத்தில் உள்ள மூத்த பெரியவர்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
     
  4. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    குல தெய்வம் தொியாதவா்கள் எப்படி குலதெய்வத்தினை அறிவது?

    ஒருவருடைய பிறந்த லக்னத்திற்கு 5ம் வீட்டில் ராகு கேது இருந்தால்

    ஒருவருடைய பிறந்த லக்னத்திற்கு 3ம் வீட்டில் ராகு கேது இருந்தால்

    ஒருவருடைய பிறந்த லக்னத்திற்கு 7ம் வீட்டில் ராகு கேது இருந்தால்

    அவா்களுக்கு குல தெய்வ வழிபாடு மறந்து போகும்

    ஜோதிடத்தில் இறை வழிபாட்டினை அடையாளம் காட்டுவது 5ம் வீடு என்னும்
    பூா்வ புண்ணியமே.

    மேஷ லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு சூாியன்

    ரிஷப லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு புதன்

    மிதுன லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு சுக்கிரன்

    கடக லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு செவ்வாய்

    சிம்ம லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு குரு

    கன்னி லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு சனி

    துலாம் லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு சனி

    விருச்சிகம் லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு குரு

    தனசு லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு செவ்வாய்

    மகரம் லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு சுக்கிரன்

    கும்பம் லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு புதன்

    மீன லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு சந்திரன்

    ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் 5ம் வீட்டுக்குாியவா் எந்த வீட்டில்
    அமா்ந்திருக்கறாரோ அந்த வீட்டு அதிபதியினை கொண்டு குல தெய்வம்
    அறிந்து கொள்ள வேண்டும்.

    5ம் வீட்டுக்குாியவா் ஆண் ராசி வீடுகளில் அமா்ந்திருந்தால் ஆண் குலதெய்வம்

    மேஷம் மிதுனம் சிம்மம் துலாம் தனசு கும்பம்

    5ம் வீட்டுக்குாியவா் பெண் ராசி வீடுகளில் அமா்ந்திருந்தால் பெண் குலதெய்வம்

    ரிஷபம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம்

    5ம் வீட்டுக்குாியவா் எந்த திக்கினை அடையாளம் காட்டுகிறதோ அந்த
    திக்கில் அவா்களுடைய குல தெய்வம் இருக்கும்

    5ம் வீட்டுக்குாியவா் சர லக்னத்தில் இருந்தால் வெகு தொலைவில் உள்ளது

    5ம் வீட்டுக்குாியவா் ஸ்திர லக்னமெனில் உள்ளுாில் உள்ளது

    5ம் வீட்டுக்குாியவா் உபக லக்னமெனில் 50 கிமி எல்லையில் உள்ளது

    குல தெய்வம் கிரகம் காட்டும் உண்மை

    சூாியன்
    தேவதை அக்னி
    பிரத்யதி தேவதை ருத்ரன்
    தி்க்கு கிழக்கு

    சந்திரன்
    தேவதை பாா்வதி
    பிரத்யதி தேவதை கெளாி
    திக்கு வடமேற்கு

    செவ்வாய்
    தேவதை காா்த்திகேயன்
    பிரத்யதி தேவதை பிருத்வி
    திக்கு தெற்கு

    புதன்
    தேவதை விஷ்ணு
    பிரத்யதி தேவதை நாராயணன்
    திக்கு வடக்கு

    குரு
    தேவதை இந்திரன்
    பிரத்யதி தேவதை பிரம்மா
    திக்கு வடகிழக்கு

    சுக்கிரன்
    தேவதை லக்ஷ்மி
    பிரத்யதி தேவதை இந்திரன்
    திக்கு தென்கிழக்கு

    சனி
    தேவதை யமன்
    பிரத்யதி தேவதை பிரஜாபதி
    திக்கு மேற்கு

    ராகு
    தேவதை பத்ரகாளி
    பிரத்யதி தேவதை சா்ப்பம்
    திக்கு தென்மேற்கு

    கேது
    தேவதை சித்திர குப்தன்
    பிரத்யதி தேவதை நான்முகன்
    திக்கு ஆகாயம் (வடமேற்கு)

    குல தெய்வத்தினை இந்த குறிப்புகளுடன் கண்டறிந்து கொள்ளுங்கள்.
     
  5. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    உங்கள் ஜாதகத்தில் 5 ம் இடம் உங்கள் குலதெய்வத்தை குறிக்கும் இடமாகும்.

    அதாவது லக்னம் என்னும் கட்டம் ஒன்று என எண்ண ஆரம்பித்து கடிகாரச் சுற்றுப்படி எண்ணி வர 5ம் இடம் குலதெய்வத்தைக் காட்டும்.

    சரி, கட்டம் தெரிந்து கொண்டோம். தெய்வத்தை எப்படி அறிவது?

    5 ல் சூரியன் இருக்க, சிவன் சம்பந்தபட்ட தெய்வம் குலதெய்வம் என்பதாகச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.

    சந்திரன் இருக்க சாந்த சொரூப சக்தி வடிவ அம்மன், குலதெய்வமாக இருக்கிறாள் என்று அர்த்தம்.

    செவ்வாய் இருந்தால் முருகப் பெருமான் குலதெய்வம் என்றும், மற்றும் சக்திவடிவான அம்மன் தெய்வங்கள் குலதெய்வம் என்றும்,

    புதன் இருக்க மகாவிஷ்ணு தொடர்புடைய ஆலயம், குலதெய்வக் கோயில் என்றும் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.

    குருபகவான் இருந்தால் சித்தர்கள், ஞானிகள் தொடர்புடைய ஆலயங்கள்,

    சுக்கிரன் இருந்தால் மகாலக்ஷ்மி, பெருமாள் தொடர்பான ஆலயங்கள்,

    சனிபகவான் இருந்தால் எல்லைத் தெய்வங்கள், ஐயனார், ஐயப்பன், சாஸ்தா முதலான தெய்வங்கள் குலதெய்வம் என்று அறிந்து உணரலாம்.

    ராகு இருக்க ரத்தபலி கேட்கும் தெய்வங்கள், உக்கிரமான பெண் தெய்வங்கள், எல்லை தெய்வங்கள் முதலான தெய்வங்களில் ஒன்று, குலதெய்வமாக நம்மை வழிநடத்துகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

    கேது இருக்க எல்லை பெண் தெய்வங்கள், கூரைகூட இல்லாத வெட்ட வெளியில் உள்ள தெய்வங்கள்,ஊருக்காக தியாகம் செய்து சாமியாக மாறியவர்கள்,சித்தர் பீடங்கள், ஜீவசமாதி அடங்கிய ஆலயங்கள் குலதெய்வ தலம் ஆகும்.

    எல்லை தெய்வம் என்றால் ஐயனார், ஐயப்பன், சாஸ்தா எனத் தந்திருந்தேன். இது ஒரு உதாரணம்தான். சுடலைமாடன், முனியப்பன், முனீஸ்வரன், காத்தவராயன், மதுரைவீரன் என இன்னும் பல பெயர்களும் உண்டு. சாமிகளும் உண்டு.

    பெண் தெய்வம் என்றால் காத்தாயி, வீரமாயி, வீரமாகாளி, மாரியம்மா, காளியம்மா, புடவைக்காரி, சேலையம்மா, கன்னியம்மா என இன்னும் பல தெய்வங்கள் இருக்கிறார்கள்.

    எனவே உங்கள் பூர்வீகத்திலிருந்து இதை ஆராய்ந்தால் எளிதாக உங்கள் தெய்வத்தை இனம்காண முடியும்.

    5ம் இடத்தில் கிரகம் இல்லாவிட்டால் அந்த வீட்டின் அதிபதி கிரகம் அமர்ந்த இடம் பார்க்கப்பட வேண்டும்.

    அந்த கிரகம் யார்? அதன்படி எப்படி தெய்வத்தை அறிவது என்பதை முத லி ல் தெரிவித்தேன்.

    உங்கள் ஜாதகத்தில் 5ஆம் அதிபதி கிரகம் அமர்ந்த இடம்.

    மேஷம் என்றால்:- வறண்ட, கரடுமுரடான பாறைகள் நிறைந்த பகுதியில் கோயில் இருக்கும்.

    ரிஷபம் :- வயல் பகுதியில் இருக்கும்.

    மிதுனம்:- வாரச்சந்தை அல்லது வருடச் சந்தை ஊரின் எல்லைப் பகுதி ஆகியவற்றில் இருக்கும்,

    கடகம்:- கடல், ஆறு, குளக்கரை பகுதியில் இருக்கும்.

    சிம்மம்:- நகரின் மையப்பகுதி, ஊரின் தலைநகர், அல்லது சிவனின் பெயரில் அமைந்த நகரம்(உதாரணம்:- திருவண்ணாமலை) அமைந்திருக்கும்.

    கன்னி:- சுற்றுலாத்தலம், மக்கள் ஒன்று கூடும் இடம். உதாரணம் திருப்பதி, நாகப்பட்டினம், கன்யாகுமரி, குற்றாலம்...

    துலாம்:- இதுவும் மக்கள் ஒன்று கூடும் இடம்தான், சந்தைப்பகுதி, வியாபாரநகரம், என்று இருக்கும். உதாரணம் ஈரோடு, கள்ளக்குறிச்சி ....

    விருச்சிகம்:- துணி துவைக்கும் துறை, கிளை ஆறு ஓடும் இடம், சுடுகாட்டுப்பகுதி, முட்புதர் உள்ள பகுதியில் இருக்கும் ஆலயம்.

    தனுசு:- அனைவராலும் வணங்கும் தெய்வம், உதாரணம் சென்னை காளிகாம்பாள்- இந்த தலம் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமானது ஆனாலும் அனைவராலும் வணங்கப்படும் அம்மன் இவள். பிள்ளையார்பட்டியும் இந்த வகைதான். இது போன்ற தெய்வ ஆலயங்கள், சித்தர்கள், ரிஷிகள் வாழ்கின்ற இடம்.

    மகரம்:- சுடுகாட்டுப்பகுதி, வறண்ட நிலப்பகுதி, சதுப்பு நிலப்பகுதி, உபயோகமற்ற மரம், செடிகொடி உள்ள காட்டுப்பகுதி.

    கும்பம்:- புகழ் பெற்ற கோயில் உள்ள நகரப்பகுதி, உதாரணம்:- காஞ்சிபுரம், கும்பகோணம், மதுரை... இதன் சுற்றுவட்டாரப் பகுதி.

    மீனம்:- கடற்கரை ஊர், நகரம் உள்ள பகுதி, ஞானிகள், மகான்கள் இருந்த பகுதி.

    இந்தக் குறிப்புகளையும் ( சூரியன் இருக்க, சந்திரன் இருக்க என தகவல் தந்தேன் அல்லவா! அந்த பகுதியையும்) இணைத்துப் பார்த்தால் உங்கள் தெய்வத்தை நீங்களே அறிந்து கொள்ள முடியும்,


    முதலில் குலதெய்வம் என்பவர் யார்? அவர் ஆகாயத்தில் இருந்து வரவில்லை.

    அவர் உங்கள் குலம் காக்க உயிர்த் தியாகம் செய்த உங்கள் குடும்பத்தின் முன்னோர் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

    அல்லது உங்கள் குலம் தழைக்க அல்லது ஊரைக் காக்க தன் உயிர் கொடுத்து காப்பாற்றியவர் ஆவார்.

    என்ன இருந்தாலும் இறந்தவர் ஆவியானது ஊருக்குள் வரக்கூடாது என்ற கோட்பாட்டின் படி, எல்லையில் தங்கி உங்கள் ஊரை அல்லது உங்கள் குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்.

    சரி எப்போதெல்லாம் குலதெய்வத்தை வணங்க வேண்டும்?

    ‘அதான் வருடத்துக்கு ஒருமுறை திருவிழாவின் போது நாங்கள் முறையாக வழிபாடு செய்கிறோமே... அப்புறம் என்ன?’ என்பவர்களுக்கு...

    உங்கள் இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியும் உங்கள் குலதெய்வத்தின் ஆசியுடன்தான் நடைபெற வேண்டும்.

    உங்கள் குழந்தை அல்லது பேரன் பேத்திகளுக்கு முதல் மொட்டை, காதுகுத்து உங்கள் குலதெய்வத்தின் ஆலயத்தில் தான் நடக்கவேண்டும்.

    நீங்கள் வீடு கட்டியவுடன் அல்லது வாங்கியவுடன் நீங்கள் செல்ல வேண்டிய இடம் உங்கள் குலதெய்வக் கோயில்.

    உங்கள் பிள்ளைகள் உயர்கல்வி கற்கச் செல்கிறார்களா? குலதெய்வ வழிபாடு செய்த பிறகு
    துவக்குங்கள்.

    பதவி உயர்வு, சம்பள உயர்வு வந்துள்ளதா. அட... வரவே இல்லை என அலுத்துக் கொள்கிறார்களா? உடனே உங்கள் தெய்வத்தைப் பார்த்து வாருங்கள்.

    புதிய தொழில் தொடங்க இருக்கிறீர்களா? அனுமதியை உங்கள் குலதெய்வத்திடம் பெறுங்கள்.

    பெண் பிள்ளை பூப்பெய்து விட்டாளா? நல்ல வாழ்வு அமைய வேண்டும் என உங்கள் சாமியிடம் வேண்டுங்கள்.

    இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் குலதெய்வத் தொடர்பை உறுதிபடுத்திக்கொண்டே இருங்கள். எல்லா நலமும், வளமும், அருளிக்கொண்டே இருப்பார் அந்தக் கண்கண்ட தெய்வம்.

    ஒருசிலர் எங்கள் குலதெய்வம் திருப்பதி, ஶ்ரீரங்கம் எனச் சொல்கிறார்கள். அது இஷ்ட தெய்வம். இருந்தாலும் குலதெய்வம் தெரியாதவர்கள் இப்படி இஷ்ட தெய்வ வழிபாடு செய்து இந்த “வணக்கத்தை என் குலசாமியிடம் சேர்த்துவிடு” என வேண்டிக் கொள்ளலாம். அந்த வழிபாடு அனைத்தும் உங்கள் குலதெய்வத்தைச் சென்றடையும்.

    நம்பிக்கைதான் வாழ்க்கை. எனவே நம்பிக்கையோடு செய்யப்படும் எந்தச் செயலும் எந்த வகையிலும் நமக்கு நன்மையே தரும்.

    உங்கள் குலம் தழைக்கச் செய்யும் குலதெய்வ வழிபாட்டைத் தொடர்ந்துகொண்டே இருங்கள்
    இன்னும் துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்துதான் அறிந்து கொள்ள முடியும்.

    ஒரு நல்ல ஜோதிடரை அணுகி உங்கள் குலதெயவத்தை அறிந்து கொள்ளுங்கள்.
     
  6. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    குலதெய்வக் குழப்பமா? எளிய விளக்கம் இதோ! - ஜோதிடம் அறிவோம்

    ஜோதிடம் அறிவோம் 2 - 46: இதுதான்... இப்படித்தான்!

    ஜோதிடர் ஜெயம் சரவணன்

    வணக்கம் வாசகர்களே.

    குலதெய்வம் பற்றிய பதிவில் சில சந்தேகங்களைக் கேட்டிருந்தார் வாசகர் ஒருவர். எனவே மீண்டும் குலதெய்வம் குறித்து கொஞ்சம் விரிவாகவே பார்த்துவிடுவோம்.

    குலதெய்வம் குறித்த பதிவில், லக்னத்திற்கு 5 ம் இடம் குலதெய்வத்தைக் குறிக்கும் எனத் தெரிவித்திருந்தேன். அது எந்த ராசியோ அது தொடர்பான தெய்வங்கள் பற்றியும் விளக்கியிருந்தேன்.

    அதைப் படித்துவிட்டு வாசகர்கள் பலரும், 'ஆமாம். என்னுடைய ஜாதகத்தின் 5ம் இடத்தைப் பார்த்தேன். என்னுடைய குலதெய்வம் பெண் தெய்வம் என்று தாங்கள் குறிப்பிட்டது சரிதான்' என்றும் 'ஜோதிட சாஸ்திரக் கணக்கு பிரமிக்க வைக்கிறது. எங்கள் குலதெய்வம், முருகக்கடவுள் என்று தெரியும். என் ஜாதகப்படியும் அதுவே சொல்கிறது. எங்கள் குடும்பமே ஆச்சரியப்பட்டுப் போனது' என்றுமாகப் பலர் தெரிவித்திருந்தனர். ஆனால் அதேசமயம் வாசகர் ஒருவர், "எனக்கும் என் மகனுக்கும் வேறு வேறு லக்னம். உங்கள் கூற்றுப்படி குலதெய்வத்தை மாற்றிக் காட்டுமே... இது சரியா,? இதை எழுதுவது ஜோதிடர்தானா?' என்றெல்லாம் கேட்டிருந்தார்.

    அவரைப் போலவே இப்படியான சந்தேகம் பலருக்கும் கூட இருக்கலாம். இதில் தப்பேதுமில்லை.

    அந்தப் பதிவில் நான் தந்த தகவல் பொதுவானது. அதாவது குலதெய்வம் குறித்து ஜோதிட சாஸ்திரம் இப்படித்தான் விவரிக்கிறது. குலதெய்வமே தெரியாத பலரும் இதுவொரு துருப்புச் சீட்டு போல, அதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, மிகத் துல்லியமாக குலதெய்வம் எது என்பதை அறிந்துகொள்ளமுடியும்.

    குலதெய்வம் அறியும் முறையை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

    இந்தக் குறிப்புகள் மிக மிக முக்கியமானவை. எனவே கவனமாக குறித்துக் கொள்ளுங்கள்.

    மேஷம், சிம்மம், தனுசு:- நெருப்பு ராசி

    ரிஷபம், கன்னி, மகரம்:- நில ராசி

    மிதுனம், துலாம், கும்பம்:- காற்று ராசி

    கடகம் ,விருச்சிகம், மீனம்:- நீர் ராசி

    இந்த பஞ்ச பூத தத்துவம் குலதெய்வத்தின் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்காகச் சொல்லப்பட்டிருக்கிறது.

    ஆண் ராசிகள்:- மேஷம், மிதுனம் சிம்மம், துலாம், தனுசு, கும்பம்

    பெண் ராசிகள்:- ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்

    இது... நம்முடைய குலதெய்வம் ஆணா பெண்ணா என்பதை அறிந்துகொள்வதற்காக ஜோதிடக் கணிதம் வகுத்துத் தந்திருப்பது!

    ஆண் கிரகங்கள்:- சூரியன், செவ்வாய், குரு

    பெண் கிரகங்கள்:- சந்திரன், சுக்கிரன்

    இரட்டைத் தன்மை:- புதன், சனி, ராகு, கேது

    சூரியன், செவ்வாய், கேது :- ‍ நெருப்பு

    சந்திரன், சுக்கிரன் :- நீர்

    குரு, புதன் :- நிலம்

    சனி, ராகு:- காற்று

    சனி:- கூடுதலாக நிலத் தத்துவத்தையும் பெறுவார்.

    இப்போது மேஷ லக்னம் என்று எடுத்துக் கொண்டு பார்ப்போம். இதுவும் 75 சதவீதம் வரை மட்டுமே பொருந்தும்.

    அப்படியானால் 100 சதவீதம் அறிவதற்கு என்ன வழி?

    கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரம் மற்றும் நட்சத்திர பாதம் தெரிய வேண்டும்.

    மேஷம் :- 5ம் இடம் சிம்மம்--: -

    சூரியன் இருக்க = சிவன், லிங்கம்,

    சந்திரன் இருக்க= சக்தி வடிவான அம்பாள்

    செவ்வாய் = அக்னி , முருகன், தீ மிதித்தல் முக்கியம் எனக் கொண்ட தெய்வங்கள்.

    புதன்= சூரிய நாராயணர் , மீனாட்சி, வீரராகவர்

    குரு= தட்சிணாமூர்த்தி, விஸ்வகர்மா, முனிவர்கள்

    சுக்கிரன்= ஆண்டாள், பார்வதி, சக்தி, விஷ்ணு துர்கை

    சனி= முனீஸ்வரன், ஐயப்பன், சுடலைமாடன்

    ராகு= முனி, காட்டேரி, அங்காளம்மன்

    கேது= முனிவர்கள், ஜீவ சமாதி அடைந்தவர்கள். மேலும் சவுக்கு,புடவை, ஆயுதங்கள் இவற்றை வைத்து வணங்குதல்.

    இப்படி 12 லக்கினங்களுக்கும் பார்க்கப்பட வேண்டும்.

    இன்னும் புரிந்து கொள்ள எளிய உதாரணம்... இது தந்தை ஒருவரின் ஜாதகம்-



    [​IMG]


    இதில் லக்னம் கடகம் , 5ம் இடம் விருச்சிகம், அங்கே செவ்வாய் ஆட்சிபலத்தோடு இருக்கிறார். விருச்சிகம் என்பது பெண் ராசி. செவ்வாய் கோப கிரகம். அது நீர் ராசியில் இருப்பதால் கோபம் தணிந்த செவ்வாயாக இருக்கிறார்.

    இப்போது பலன்:- கோபம் தணிந்திருக்கும் பெண் தெய்வம். அதாவது உக்கிரத்துடன் இல்லாத தெய்வம். எனவே மாரியம்மன் எனத் தெளிவாகக்காட்டுகிறது.

    சரி... ஏன் காளியாக இருக்கக் கூடாது? அல்லது அங்காளம்மன் போன்ற தெய்வமாக ஏன் இருக்கக் கூடாது? என்கிற கேள்வி எழலாம்.

    ஆனால் ராகுவின் தொடர்பு இருந்தால் கோபம் தணியாத தெய்வம் என்று சுட்டிக்காட்டும். ஆனால் இங்கு செவ்வாய் தனித்து இருக்கிறார்.

    ஆனால் மகன் ஜாதகத்தில் ராகு தொடர்பு உண்டு, ஆனாலும்..... நீங்களே பாருங்கள்....

    அப்பாவின் ஜாதகத்தைப் பார்த்தோம். இது அவருடைய மகனின் ஜாதகம் -



    [​IMG]


    மகன் ஜாதகத்தில் கும்ப லக்னம், 5ம் இடம் மிதுனம். அங்கே கிரகம் எதுவும் இல்லை. ஆனால் 5 ம் அதிபதி பாக்ய ஸ்தானமான துலா ராசியில் இருக்கிறார்.

    புதனோடு குரு, ராகு, சுக்கிரன் இணைந்திருக்க

    இப்போது பலன்... 5ம் அதிபதியாக புதன் வருவதால் திருமால் அவதாரங்களில் ஏதாவது ஒன்று வர வேண்டும். ஆனால் புதன் துலாம் என்னும் பெண் ராசியில் நட்பு வீட்டில் இருக்கிறார்.

    அங்கு ராகு இருப்பதால் மற்ற கிரகங்களான குரு, சுக்ரன்,புதன் இவர்கள் என்ன பலன் தர வேண்டுமோ அதை ராகுவே தீர்மானிப்பார். மற்ற பலன்கள் பார்க்க வேண்டாம். குலதெய்வம் பற்றி மட்டும் பார்ப்போம்.

    ஆக, ராகு வருவதால் உக்கிரமான தெய்வம். ஆனால் அது பெண் வீடு என்பதால் - பெண் தெய்வம்.

    ராகுவுக்கு துலா வீடு நட்பு வீடு. சுக்ரன் ஆட்சியாக இருந்தாலும், புதனுக்கு நட்பு வீடாக இருந்தாலும், குருவுக்கு அது பகைவீடு. எனவே தன் பலத்தை முற்றிலுமாக ராகுவிடம் இழந்து விட்டார்.

    ஆக பலம் அடைவது ராகு, சுக்ரன், புதன்.

    துலாம் பெண் வீடு, சுக்ரன் பெண், புதன், ராகு(அலி கிரகம்) இரட்டைத் தன்மை.

    ஆக தெய்வம் பெண் என்பது உறுதியாகிறது

    ராகு உக்கிரமான கிரகம். ஆனால் நட்பு வீட்டில், நண்பர்களோடு இருப்பதால் தன் உக்கிரத்தைக் காட்ட மாட்டார். (உதாரணமாக என்கவுண்ட்டர் போலீஸாக இருந்தாலும் வீட்டிலும் நண்பர்களிடத்திலும் தன் போலீஸ் கறார்த்தனங்களையெல்லாம் காட்டமாட்டார். அப்படித்தான் இதுவும்... இங்கேயும்!)

    ஆக உக்கிரம் தணிந்த பெண் தெய்வம் குலதெய்வம் அது "மாரியம்மன்" என்பது உறுதி ஆகிறது (காளியம்மன் என்றுதானே இருக்கவேண்டும் என்பவர்களுக்கு... சென்னையில் பாரிமுனையில் உள்ள சத்ரபதி சிவாஜியும் மகாகவி பாரதியாரும் வழிபட்ட காளிகாம்பாள் கோயில் உள்ளது. இவள், உக்கிரதெய்வமில்லை. சாந்த சொரூபினி. கனிவும் கருணையுமாக சிரித்த முகத்துடன் காட்சி தருகிறாள் இங்கே!)

    இதை எழுதவும் படிக்கவும் சில நிமிடங்களாகியிருக்கலாம். ஆனால் ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்த சில நொடிகளில் அவரின் குலதெய்வம் எப்படியான தெய்வம் என்றும் எந்தப் பகுதியை இருப்பிடமாகக் கொண்டது என்றும் உறுதியாகச் சொல்லமுடியும்.

    கேள்வி எழுப்பிய அந்த வாசகருக்குத்தான் நாம் நன்றி சொல்லவேண்டும். இப்போது அவருக்கு மட்டுமின்றி ஏனைய வாசகர்கள் எல்லோருக்குமே ஜாதகம், 5ம் இடம், குலதெய்வம் குறித்தெல்லாம் ஓர் தெளிவு பிறந்திருக்கும் என நம்புகிறேன். எனவே மீண்டும்... அந்த வாசக அன்பருக்கு நன்றி!

    - தெளிவோம்
     

Share This Page