குலதெய்வம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Discussion in 'Religious places & Spiritual people' started by Bhaskaran, Feb 10, 2018.

  1. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    MESSAGE OF IMPORTANCE OF KULA DEVATHA PRAYER BY SRI PARAMACHARYA OF KANCHI




    [​IMG]



    A wedding hall. Nadaswarams and Melams were playing auspicious notes; the pleasant sound of kids running about here and there and playing could be heard. People were busy with their errands typical in a wedding.



    The Mapillai started off on the Kashi Yathrai and when the parents of the girl whispered something into his ears, he returned. The ‘Oonjal’ ceremony happened where in coloured rice balls were thrown over the shoulders of the couple.



    After that, the bride and the groom proceeded to the ‘Medai’ and sat down, hand in hand.



    All of a sudden, in one stroke all these happy scenes came to an abrupt end. What happened ?

    The bride who was sitting in the Medai suddenly collapsed and fainted. Simultaneously, an attack of ‘fits’ started. Her hands and legs were thrashing around and foam started appearing in her mouth. Her parents were in a panic. Both families were at a loss as to what to do next. A relative called for a doctor and she was carried away so that first aid could be rendered.



    What to do next ? Will the wedding proceed ? Everybody was just stunned.

    Oh God, what kind of a test is this ? This is the first time the girl has suffered an attack of fits. Does she even have a future now ?



    Both families were devotees of MahaPeriyava. Even before even printing the card, the Anugraham of MahaPeriyava was obtained. Then how come something like this is happening ?

    The Vadyar who was conducting the wedding came up with a suggestion which came as a huge relief to everybody.



    “Look here, nobody needs to panic. There is a lot of time yet for the Muhurtam. MahaPeriyava is the saviour for people like us. Just have somebody explain to Periyava what has happened and request for directions. We will do just as He says” No sooner said than done – the SriMatam manager was informed and he informed MahaPeriyava in turn.



    Periyava was silent for a few moments. “The Kuladeivam of the girl’s family is Mahamaayi. Let them pray to Her and fix some Veppalai leaves to her head; most probably she will become allright”



    The manager conveyed this over phone to the girl’s family. The girl’s mother prayed to Mahamaayi, who was her Kuladeivam and placed a bunch of Vepallai leaves to the bride’s head. Miraculously, the girl regained consciousness and sat up !



    Since the groom’s family were true devotees of MahaPeriyava, they did not express any objection and the wedding happened within the Muhurtam time.



    After all the rituals were completed, both familes rushed to Kanchipuram.

    “The wedding happened smoothly due to Periyava’s Anugraham”, the parents told Periyava humbly.

    Periyava replied “Say it happened due to Mahamaayi’s Anugraham”, with a smile.



    The girl’s father began “Periyava, my girl has never got an attack of fits like this….”



    “She is FIT now”, said Periyava with His benign grace. “She will be fine” and blessed her with His Holy Hand. What more is needed ?



    Fits was caused due to DeivaKuttam and she became FIT due to Periyava Anugraham



    Source : Sage of Kanchi (Sage of Kanchi)
     
    sangeethakripa likes this.
  2. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    குடும்பத்தை பாதுகாக்கும் கன்னி தெய்வ வழிபாடு

    ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மனம் முடிக்காமல் கன்னியாக மறைந்தால் அவளை வழிபடும் பண்பாடு நம் கிராமங்களில் தொடர்ந்து வருகிறது.

    [​IMG]


    பெண்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் நமது பாரத தேசத்தில் பழங்காலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடந்து வருகிறது. சக்தி வழிபாடு என்பது தாய்வழி வழிபாடுதான். ரிக் வேதத்திலும் மார்க்கண்டேய புராணத்திலும், காளிதாசரின் குமார சம்பவத்திலும், விஷ்ணு தர்மோத்தர புராணத்திலும், தேவி பாகவதத்திலும் கன்னிமார்களின் வரலாறு போற்றப்படுகிறது. மிக பிரபலமாக கன்னி தெய்வங்கள் போற்றப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.

    இன்பத்தை கருவாக்கினாள் பெண். உயிருக்குள் உயிர் சுமந்து மனித குலத்தை விருத்தி அடையச் செய்தவளும் பெண்தான். இந்த காரணத்தினாலேயே பெண்ணை மகாசக்தியாகப் பார்த்திருக்கிறான் ஆதிமனிதன். தன்னைவிட பலம் குன்றிய பெண்ணைப் பார்த்து பயந்திருக்கிறான். அவளைக் கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறான். அந்தப் பழங்கால மரபுக்கும் வரலாறுக்கும் இன்றும் நிலவும் சான்று தான் தமிழர்களின் கன்னி வழிபாடு.

    ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மனம் முடிக்காமல் கன்னியாக மறைந்தால் அவளை வழிபடும் பண்பாடு நம் கிராமங்களில் தொடர்ந்து வருகிறது.

    இந்தக் கன்னிகள் பெரும்பாலும் தங்களின் சராசரி வாழ்வைத் தவற விட்டவர்கள். அல்லது துச்சமாகத் தூக்கியெறிந்தவர்கள். கன்னித்தன்மையைக் கொடுத்து தாய்மையைப் பரிசாகப் பெறாமலேயே இறந்தவர்கள். இதனாலேயே சராசரி பெண்கள் ரட்சிக்கும் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள்.

    சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் யோகம் கைகூடும் என்று பொதுவான நம்பிக்கை இருப்பதாலே கன்னியை வணங்கும் வழக்கம் கிராமத்தில் துவங்கி பட்டணம் வரை தொடர்ந்து வருகிறது.

    இந்த தெய்வங்களுக்கு ஆடி மற்றும் தை மாதங்களில் சிறப்பான பூஜைகள் செய்வது வழக்கம். பெரும்பாலும் செவ்வாய்கிழமை தான் கன்னிக்கு ஏற்ற நாள். எனவே அந்த நாளில் வணங்குவதை பலர் கடைபிடித்து வருகின்றனர். மேற்கண்ட மாதங்களில் வணங்க முடியாதவர்கள் தை மாதம் இரண்டாம் நாளில் கன்னிக்கு பூஜை வைத்து வணங்குவார்கள். தங்கள் குலதெய்வத்தினை பங்குனி உத்திரத்தில் வணங்கும் போது கூட மறவாமல் வீட்டில் உள்ள கன்னிகளையும் வணங்கும் வழக்கம் நம் நாட்டில் காணப்படுகிறது.

    பொதுவாக ஒரு வீட்டின் திசைகளைக் கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை, ஈசான மூலை என பிரித்துக் கூறுவதுண்டு. அதில், வடகிழக்கு மூலை இறைவனுக்குரிய ஈசான மூலை என்றால், தென்மேற்கு மூலை கன்னி தெய்வத்துக்குரிய கன்னி மூலை என தனி மூலை இருப்பதே... கன்னி வழிபாட்டின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் விதமாக உள்ளது. பெரும்பாலும் இறைவழிபாட்டுக்கு இணையான வழிபாடாக கன்னி தெய்வ வழிபாடுகள் போற்றப்படுகின்றன.

    தமிழர் குடும்பங்களில் நோயாலோ, விபத்தாலோ மடிந்து விட்ட கன்னியரை தெய்வமாகக் கருதி வணங்குகின்றனர்.

    குடும்ப ஒற்றுமைக்கு கன்னிதெய்வ வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பத்தில் பலருக்கு மனஸ்தாபம் இருந்தாலும் கூட கன்னியை வணங்க அனைவரும் கூடிவிட வேண்டும். இது குடும்பத்தில் எழுதப்படாத சட்டமாகும். ஏன் என்றால் குடும்ப ஒற்றுமை தான் கன்னிக்கு மிக பிடிக்கும். அனைவரும் குடும்பத்தோடு நின்று வணங்கினால் கன்னி மனம் குளிர்ந்துவிடும்.

    இறந்த பெண் வயதுக்கு ஏற்ப அவர்களுக்கு உடை எடுத்து வைப்பார்கள். சிறுமிகளுக்கு அதற்கேற்ற ஆடைகளும், இளம் பெண்ணுக்கு பாவாடை சட்டை தாவணியும், அதை விட பெரிய பெண்ணுக்கு சேலை சட்டையும் வாங்கி வைத்து வணங்குவார்கள்.

    அந்திக் கருக்கலில் கன்னியை வணங்க துவங்குகிறார்கள். இளநார்பெட்டி ஒன்றில் மஞ்சள் கிழங்கு, சிற்றாடை அல்லது சேலை, கண்ணாடி, சீப்பு, வளையல் வைத்து, பிச்சிப்பூ அல்லது மரிக்கொழுந்து படைத்து, சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி, முற்றத்தில் நீர் தெளித்து கன்னியை வரவேற்று வழிபடுகிறார்கள். இந்த நார்ப்பெட்டிக்கு கன்னிப்பெட்டி என்று பெயர்.

    கன்னிப்பெட்டியை வைக்கும்போது அந்தக் குடும்பத்தில் உள்ள பூப்படைந்த பெண்ணுக்கு அருள் வந்து மூச்சிரைக்கும். அவரிடம் தங்களது குறைகளை முறையிட்டு தீர்க்குமாறு குடும்பத்தினர் வேண்டுவர். தன்னை மறக்காமல் வழிபட்டால் துயரத்தைப் போக்கி குடும்பத்தை தழைத்தோங்கச் செய்வதாக அவரிடமிருந்து அருள்வாக்கு கும்பிடுபவர்களுககு கிடைக்கும். பின்னர் கன்னி மூலையில் உயரமான இடத்தில் இளநார்பெட்டியை வைத்து விடுவார்கள்.

    முதலாண்டு வைத்து படைத்த கன்னிப்பெட்டியை மறு ஆண்டுதான் எடுப்பார்கள். கன்னி பெட்டியை அதிகாலையில் எடுக்கும் போது வீட்டை சுத்தம் செய்வார்கள். கன்னிப் பெட்டியைத் திறக்கும் போது, அதில் கடந்த ஆண்டு வைத்த மஞ்சள் முளை விட்டிருந்தால், கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை. அதற்குள் வைத்திருந்த துணியை குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு உடுத்தக் கொடுப்பார்கள். இந்தக் கன்னிப் பொங்கல் தமிழகத்தின் பல பகுதிகளில் அவரவர்கள் பாணிக்கு ஏற்ப கொண்டாடப்பட்டு வருகிறது.

    [​IMG]

    துணியை தனது வீட்டில் மணமாகாத பெண்ணுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அவர்கள் திருமணம் முடித்து சென்று விட்டால் வேறு வீட்டு பெண். எனவே அவர்களுக்கு கன்னிக்கும்பிட்ட துணி கிடைக்காது. வீட்டுக்கு வந்த மருமகளுக்கு கன்னிக்கு வணங்கிய துணியை கொடுக்கலாம். ஏன் என்றால் அவர் அந்த குடும்பத்தின் பெண். தனது பொருள் கூட தனது குடும்பத்தில் வசிக்கும் ஒருவருக்கே கிடைக்க வேண்டும் என்று கன்னி தெய்வங்களின் எழுதப்படாத சட்டம்.

    குடும்ப ஓற்றுமைக்கு இந்த கன்னி வழிபாடு ஒரு சான்றாகும். இன்றைய நவீனயுகத்தில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் பொருள் தேட திரைகடல் தாண்டி தேடி ஓடி விடுகிறார்கள். எப்போதாவது கல்யாணம், கோயில் கொடை என்றால் கூட அவர்கள் ஒன்று சேருவது கடினம். ஆனால் கன்னி தெய்வம் குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர்க்கும் வழிபாடாகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் படையல் தயார் செய்யவேண்டும்.

    பனியாரம், அதிரசம் என இனிப்பு பலகாரம் கன்னிகளுக்கு மிகவும் பிடிக்கும். எனவே படையலில் நிச்சயம் பனியாரம், அதிரசம் என இனிப்பு வகைகள் கண்டிப்பாக இடம்பெறும். அதன் பின் வடை பாயாசத்துடன் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள். குடும்ப தலைவி அனைவருக்கும் பரிமாறிவிட்டு தானும் ஒரு இடத்தில் இலையை போட்டு அனைவருடன் அமர்ந்து சாப்பிடுவார்கள். இந்த சமபந்தி விருந்து கன்னி வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த வழிபாட்டிற்காகவே வருடத்துக்கு ஒரு முறை குடும்பத்தினரை ஒன்று சேர்த்துவிடுகிறாள். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உறவை தேடி ஓடி வருகிறார்கள். பெரும்பாலுமே ஒரு பெண்ணுக்கு எப்போதுமே தான் பிறந்த வீட்டின் மீது பற்று உண்டு. இதுபோன்ற கன்னிகளுக்கும் அதுபோலதான் ஆசை. தன் வீட்டில் அண்ணன் தம்பி என்று உறவு முறைகள் அனைவரும் ஒன்றாக நின்று தம்மை வணங்க வேண்டும் என ஆசைபடுவாள். அப்படி வணங்கும் போது மனம் குளிர்ந்து அவர்களுக்கு வேண்டும் வரம் கொடுப்பார். இப்போது பல மாநிலங்களில் வசிப்பவர்கள், தங்கள் இடத்துக்கே கன்னியை கொண்டு சென்று வைத்து வணங்கி வருகிறார்கள்.

    பெரும்பாலுமே ஒரு கன்னி ஒரு வீட்டில் துடியாக இருக்கிறார் என்றால் அவ்வீட்டில் செய்வினை கோளாறு நீங்கி விடும். பேய் பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும். பிறந்த குழந்தை திடிர் திடிரென அழுதால் கூட கன்னிக்கு பூஜை வைக்கவில்லை என்று கன்னி பயங்காட்டுகிறது என கிராமத்தில் பெரியவர்கள் சொல்லுவதை தற்போதும் காணலாம்.கன்னி தன் தேவைகளை குழந்தை மூலமாக பூர்த்தி செய்து கொள்கிறது.

    குழந்தைகளுக்கு கல்வி செல்வம் கிடைக்கவும் கன்னியை வணங்கும் வழக்கம் உள்ளது. ஒருவர் தனது வீட்டில் கன்னியை வணங்கினால் அவர் வேறு எந்த தெய்வத்தினையும் தேடிப்போய் வணங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது பெரியோரின் கருத்து.

    கன்னிகளில் கதை பலவாறாக பேசப்பட்டு வருகிறது. அதில் பல கதை மனதை உருககுவதாகவே உள்ளது. ஒரு குடும்பத்தில் தாய்க்கு தலைமகளாய் இருந்த சிறுமி ஒருவர் இறந்து விட்டாள். வருடம் தோறும் இறந்த அந்த பெண்ணுக்கு பாவடை சட்டை எடுத்து வைத்து கும்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். 23 வருடங்கள் கழிந்தது. ஒரு நாள் அந்த பெண் தாயின் கனவில் தோன்றி, ‘தாயே.. எனக்கு 23 வயதாகி விட்டது.. இன்னும் எனக்கு பாவடை சட்டைதானா... போதவில்லையே’ என கண்ணீர் மல்க கேட்க அந்த ஆண்டு முதல் அவளுக்கு சேலை சட்டை வாங்கி வைத்து வணங்க ஆரம்பித்தனர். அந்த அளவுக்கு கன்னிதெய்வம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மறைந்து வாழும் குழந்தையாகவே வணங்கப்படுகிறது.

    ஒரு வீட்டில் கன்னி தெய்வத்தினை வணங்கவே மறந்து விட்டனர். அவ்வீட்டில் பிறந்த குழந்தை தினமும் இரவு பயந்து அழுது கொண்டே இருந்தது. ஒரு நாள் வைத்தியர் ஒருவர் உங்கள் கன்னி தெய்வத்தை வணங்குங்கள் எல்லாம் சரியாகி விடும் என கூற, கன்னியை வணங்கி கன்னிமூலையில் குழந்தையை கிடத்தி எடுத்த பிறகு அழுகை நின்று விட்டதாம்.

    இதுபோல் கன்னி தெய்வங்கள் இந்த நவீன யுகத்திலும் பிரதான தெய்வமாக விளங்கி வருகிறது. பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து கொண்டிருக்கிறது.

    தற்போது பனை தொழில் முழுவதும் குன்றி விட்டது. நார் பெட்டி போன்ற பொருள்கள் காட்சி பொருளாக மாறிவிட்டது. நவீன யுகத்தில் கன்னி நார் பெட்டி மட்டும் தாயரிக்கும் பணி நடந்து வருகிறது. பல கிராமங்களில் பல வீடுகளில் இந்த நார் பெட்டி பல வண்ணத்தில் தொங்கி கொண்டிருப்பதை நாம் இப்போதும் காணலாம். பழமையை பறைசாற்றும் இந்த வழிபாடு, பல வரலாறுகளை சுமந்து கொண்டு தமிழரின் பண்பாட்டை இன்றும் பறைசாற்றிக் கொண்டு தான் இருக்கிறது.
     
  3. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி ?

    ஒரு சில குடும்பங்கள் எதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர் . இதன் காரணமாக 2 அல்லது 3 தலை முறைகள் குலதெய்வக்கோயில் வழிபாடு பற்றி அறியாமலே வாழ்ந்திருப்பர் . அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும் . சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது குலதெய்வத்தின் உதவி கூட ஒரு சிலர்க்கு கிடைக்கவிடாத கர்மவினை காரணமாக எது குலதெய்வம் என்றே தெரியாத சூழல் ஒரு சிலர்க்கு ஏற்பட்டு விடுகிறது . சரி குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம் ?

    உங்களுக்கு ஜாதகம் இருந்தால் , லக்கனத்திலிருந்து ஐந்தாம்வீடு , ஐந்தில் உள்ள கிரகம் , ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றை பாருங்கள் . அவற்றின் அடிப்படையிலேயே உங்கள் குலதெய்வம் இருக்கும் . உதாரணத்திற்கு ஐந்தாம் வீட்டிற்கு குருவும் சூரியனும் சம்பந்தப்பட்டு இருந்தால் சிவாம்சம் பொருந்திய குருஸ்தானத்தில் உள்ளவர் உங்கள் குலதெய்வமாக இருக்கலாம் . ஐந்தில் ஒரு நீச கிரகமோ அல்லது ஐந்தாம் வீட்டிற்குரியவர் நீசமாகவோ இருந்தால் உங்கள் குலதெய்வத்தை நீங்கள் கண்டுகொள்ளவேயில்லை என்று அர்த்தம் . உங்கள் தாத்தா காலத்திலேயே அதை ஒரு பொருட்டாக மதித்து வணங்கவில்லை என்று அர்த்தம்.

    குலதெய்வத்தை வீட்டுக்குள் அழைக்கும் வழி

    மஞ்சள் , மண் , சந்தனம் , குங்குமம் , விபூதி , சாம்புராணி , அடுப்புக்கரி இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து , ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் மையத்திற்கு மேல் சுவரில் ஆணி அடித்து அதில் முடித்துவைத்த துணியை ஆணியில் மாட்டி பத்தி சூடம் காண்பித்து வந்தால் ஒரு வாரத்தில் உங்களது குலதெய்வம் வீட்டிற்குள் வரும் .

    வெட்டிவேர் , பச்சை கற்பூரம் , ஏலக்காய் ,இவை அனைத்தும் சிறிதளவு எடுத்து ஒரு கலச செம்பில் போட்டு , பன்னீர் எந்த அளவோ அதே அளவு தண்ணீர் ஊற்றி , கலச செம்பை சுற்றி நூல் சுற்றதெரிந்தவர்கள் சுற்றலாம் . தெரியாதவர்கள் பட்டு துணியை சுற்றலாம் . பூஜை அறையில் ஒரு பலகையை வைத்து , அதன்மேல் வாழையிலை வைத்து அதில் பச்சரிசி பரப்பி அதன் மேல் கலச செம்பை வைத்து அதன் மேல் மாவிலை அல்லது வெற்றிலை வைத்து அதன் மேல் வாழைப்பூ ( நுனி பகுதி மேல்நோக்கி இருக்க வேண்டும் . வாழை ப்பூவுக்கும் கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைத்து அதன் மேல் வாழைப்பூவை) வைக்கவேண்டும் .

    வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ அர்ச்சனை செய்யவும் . வாழைப்பூ மூன்று நாட்கள் வரை தாங்கும் .பூஜை மூன்று நாட்களே போதுமானது . மேலும் தொடர்ந்து செய்ய விரும்புவர்கள் வாழைப்பூவை மட்டும் மாற்றினால் போதுமானது .பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும் , வாழைப்பூவை வடை செய்தும் சாப்பிடலாம் . அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம் .

    கலசத்தில் உள்ள நீரை வீட்டில் தெளித்துவிட்டும் குளிக்கும் தண்ணீரில் விட்டு குளித்துவிடவும் .

    பூஜைக்குரிய மந்திரம்

    ஓம் பவாய நம ஓம் ; சர்வாய நம ஓம் ;
    ருத்ராய நம ஓம்; பசுபதே நம ஓம் உக்ராய நம ;
    ஓம் மஹாதேவாய நம ஓம்; பீமாய நம ஓம்
    ஈசாய நம .


    தினம் 108 தடவை காலையும் மாலையும் கூறி பூஜை செய்து வந்தால் , நாம் எண்ணியதை நம் குலதெய்வம் நிச்சயம் தரும் .
     
    Last edited: Mar 27, 2018
  4. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    பங்குனி உத்திரமும் - குலதெய்வ வழிபாடும்


    பங்குனி உத்திரம் சிறப்புகள்

    மாதம்தோறும் உத்திர நட்சத்திரம் வருகிறது என்றாலும் பங்குனியில் வரும் உத்திரத்திற்கு பெருமை அதிகம் . ஏனென்றால் தெய்வங்களே தேர்வு செய்துகொண்ட நட்சத்திரம் அந்த திருநாள் .

    பார்வதி - சிவன் திருமணம் , முருகன் - தெய்வானை திருமணம் , ஆண்டாள் -ரெங்கமன்னார் திருமணம் , மீனாட்சி -சுந்தரேஸ்வர் திருமணம் என தெய்வீகத்திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தில் தான் நிகழ்ந்தன என்று புராணங்கள் கூறுகின்றன .

    இவை மட்டுமா ? ராமாயண சகோதரர்கள் நால்வருக்கும் மிதிலையில் இத்திருநாளில் தான் திருமணம் நடைபெற்றது . ராமன் -சீதா ,பரதன் -மாண்டவி ,லக்ஷ்மணன் -ஊர்மிளா , சத்ருகன்-சுருதகீர்த்தி என நான்கு இதிகாச ஜோடிகளும் திருமணத்தில் சேர்ந்தது பங்குனி உத்திரத்தில்தான் .

    ஐயப்பன் பந்தள ராஜாவிற்கு மகனாக பிறந்ததும் ,பாண்டவர்களில் அர்ச்சுனன் தோன்றியதும் ,முருகப்பெருமானை தேடிச்சென்று மணந்த வள்ளி அவதாரமும் பங்குனி உத்திரமே .

    பங்குனி உத்திர விரதத்தை சிறப்பாக கடைபிடித்தே மஹாவிஷ்ணுவின் மார்பில் ஸ்ரீமஹாலட்சுமி இடம்பிடித்தாள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது .
    சிவபெருமானுக்கு முருகன் பிரணவ உபதேசம் உரைத்து அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையாவாக ஆனதும் , நெற்றிக்கண் நெருப்பில் மாண்டுபோன மன்மதனை சிவபெருமான் மீண்டும் எழுப்பித்தந்ததும் , பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்ததுதான்.

    .ஸ்ரீபிரம்மா வே கொண்டாடிய முதல் உற்சவம் பங்குனி உத்திரத்திருவிழா என்கிறது தலபுராணம் .ஸ்ரீ ராமானுஜர் பெருமாளின் திருவடியை அடைய தேர்வு செய்ததும் இந்தப்புண்ணிய நாளைத்தான் . காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்ததும் பங்குனி உத்திரத்தில் தான் .

    தமிழில் 12 வது மாதமான பங்குனியும் ,12 வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் தான் பங்குனி உத்திரம் .சந்திரன் 27 நட்சத்திர கன்னியர்களை மனைவிகளாக ஏற்றுக்கொண்ட தினமும் பங்குனி உத்திர திருநாள் தான் .

    பழனியில் காவடி உற்சவம் , மயிலாப்பூரில் அறுபத்துமூவர் உற்சவம் ,சுவாமி மலையிலும் ,திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம் ,திருப்பரங்குன்றத்தில் தெய்வானை கல்யாணம் , காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம் , மதுரையில் மீனாட்சி திருமணம் என பங்குனி உத்திர நாளில் விழாக்களின் சங்கமம் மிக மிக அதிகம் .

    சைவ வழிபாடுகளிலும் ,வைணவ வழிபாடுகளிலும் பங்குனிஉத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது . இந்த இரு சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் போல வேறு எந்த மாதத்திலும் இவ்வளவு சிறப்பான விழா வருவது இல்லை .

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா பங்குனிஉத்திர திருவிழாதான் . பெருமாளுக்கும் , தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து , பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான் .எனவே , பெருமாளும் , தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிப்பர் . இது ஆலய 5-வது திருச்சுற்றில் , பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும் .

    பங்குனி உத்திரப்பெருவிழா தினத்தன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தை கண் குளிர தரிசித்தால் ,திருமணப்பேறு உண்டாகும் , பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது ஐதீகம் . இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள் மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை .

    பங்குனி உத்திரத்தன்று கன்னிப்பெண்கள் கல்யாண விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களை தரிசித்தால் அவர்களுக்கு கல்யாண வைபோகந்தான் .அது போல திருமழபாடியில் நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்தான் .

    பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாக க் காட்சி தருகின்றனர் . அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி , பகை அகற்றி புண்ணியம் பெறலாம் .

    பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி , எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும் .குலதெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும் .

    பலர் தங்களுக்கு விருப்பமான திருப்பதி கோவில் போன்ற பிரபல கோவில்களுக்கு மட்டுமே செல்வது வழக்கம் . எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான் . மூலவரை வழிபடாமல் அங்குஇருக்கும் சுவர் சித்திரங்களை வழிபட்டு வருவது போல்தான் பிற வழிபாடுகளை செய்வது .
     
  5. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    • “ குலதெய்வத்தை எப்படித் தெரிந்து கொள்வது” .

      எளிமையான விளக்கத்தின் மூலம் உங்கள் குலசாமியை அறிந்துகொள்ளலாம்.

      உங்கள் ஜாதகத்தில் 5 ம் இடம் உங்கள் குலதெய்வத்தை குறிக்கும் இடமாகும்.

      அதாவது லக்னம் என்னும் கட்டம் ஒன்று என எண்ண ஆரம்பித்து கடிகாரச் சுற்றுப்படி எண்ணி வர 5ம் இடம் குலதெய்வத்தைக் காட்டும்.

      சரி, கட்டம் தெரிந்து கொண்டோம். தெய்வத்தை எப்படி அறிவது?

      5 ல் சூரியன் இருக்க, சிவன் சம்பந்தபட்ட தெய்வம் குலதெய்வம் என்பதாகச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.

      சந்திரன் இருக்க சாந்த சொரூப சக்தி வடிவ அம்மன், குலதெய்வமாக இருக்கிறாள் என்று அர்த்தம்.

      செவ்வாய் இருந்தால் முருகப் பெருமான் குலதெய்வம் என்றும், மற்றும் சக்திவடிவான அம்மன் தெய்வங்கள் குலதெய்வம் என்றும்,

      புதன் இருக்க மகாவிஷ்ணு தொடர்புடைய ஆலயம், குலதெய்வக் கோயில் என்றும் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.

      குருபகவான் இருந்தால் சித்தர்கள், ஞானிகள் தொடர்புடைய ஆலயங்கள்,

      சுக்கிரன் இருந்தால் மகாலக்ஷ்மி, பெருமாள் தொடர்பான ஆலயங்கள்,

      சனிபகவான் இருந்தால் எல்லைத் தெய்வங்கள், ஐயனார், ஐயப்பன், சாஸ்தா முதலான தெய்வங்கள் குலதெய்வம் என்று அறிந்து உணரலாம்.

      ராகு இருக்க ரத்தபலி கேட்கும் தெய்வங்கள், உக்கிரமான பெண் தெய்வங்கள், எல்லை தெய்வங்கள் முதலான தெய்வங்களில் ஒன்று, குலதெய்வமாக நம்மை வழிநடத்துகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

      கேது இருக்க எல்லை பெண் தெய்வங்கள், கூரைகூட இல்லாத வெட்ட வெளியில் உள்ள தெய்வங்கள்,ஊருக்காக தியாகம் செய்து சாமியாக மாறியவர்கள்,சித்தர் பீடங்கள், ஜீவசமாதி அடங்கிய ஆலயங்கள் குலதெய்வ தலம் ஆகும்.

      எனவே உங்கள் பூர்வீகத்திலிருந்து இதை ஆராய்ந்தால் எளிதாக உங்கள் தெய்வத்தை இனம்காண முடியும்.

      5ம் இடத்தில் கிரகம் இல்லாவிட்டால் அந்த வீட்டின் அதிபதி கிரகம் அமர்ந்த இடம் பார்க்கப்பட வேண்டும்.

      அந்த கிரகம் யார்? அதன்படி எப்படி தெய்வத்தை அறிவது.

      உங்கள் ஜாதகத்தில் 5ஆம் அதிபதி கிரகம் அமர்ந்த இடம்.

      மேஷம் என்றால்:- வறண்ட, கரடுமுரடான பாறைகள் நிறைந்த பகுதியில் கோயில் இருக்கும்.

      ரிஷபம் :- வயல் பகுதியில் இருக்கும்.

      மிதுனம்:- வாரச்சந்தை அல்லது வருடச் சந்தை ஊரின் எல்லைப் பகுதி ஆகியவற்றில் இருக்கும்,

      கடகம்:- கடல், ஆறு, குளக்கரை பகுதியில் இருக்கும்.

      சிம்மம்:- நகரின் மையப்பகுதி, ஊரின் தலைநகர், அல்லது சிவனின் பெயரில் அமைந்த நகரம்(உதாரணம்:- திருவண்ணாமலை) அமைந்திருக்கும்.

      கன்னி:- சுற்றுலாத்தலம், மக்கள் ஒன்று கூடும் இடம். உதாரணம் திருப்பதி, நாகப்பட்டினம், கன்யாகுமரி, குற்றாலம்...

      துலாம்:- இதுவும் மக்கள் ஒன்று கூடும் இடம்தான், சந்தைப்பகுதி, வியாபாரநகரம், என்று இருக்கும். உதாரணம் ஈரோடு, கள்ளக்குறிச்சி ....

      விருச்சிகம்:- துணி துவைக்கும் துறை, கிளை ஆறு ஓடும் இடம், சுடுகாட்டுப்பகுதி, முட்புதர் உள்ள பகுதியில் இருக்கும் ஆலயம்.

      தனுசு:- அனைவராலும் வணங்கும் தெய்வம், உதாரணம் சென்னை காளிகாம்பாள்- இந்த தலம் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமானது ஆனாலும் அனைவராலும் வணங்கப்படும் அம்மன் இவள். பிள்ளையார்பட்டியும் இந்த வகைதான். இது போன்ற தெய்வ ஆலயங்கள், சித்தர்கள், ரிஷிகள் வாழ்கின்ற இடம்.

      மகரம்:- சுடுகாட்டுப்பகுதி, வறண்ட நிலப்பகுதி, சதுப்பு நிலப்பகுதி, உபயோகமற்ற மரம், செடிகொடி உள்ள காட்டுப்பகுதி.

      கும்பம்:- புகழ் பெற்ற கோயில் உள்ள நகரப்பகுதி, உதாரணம்:- காஞ்சிபுரம், கும்பகோணம், மதுரை... இதன் சுற்றுவட்டாரப் பகுதி.

      மீனம்:- கடற்கரை ஊர், நகரம் உள்ள பகுதி, ஞானிகள், மகான்கள் இருந்த பகுதி.

    • ,
     
  6. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    ( உங்கள் ஜாதகத்தில் 5ஆம் அதிபதி கிரகம் அமர்ந்த இடம்.

    மேஷம் என்றால்...: ) இந்தக் குறிப்புகளையும் ( சூரியன் இருக்க, சந்திரன் இருக்க என தகவல் தந்தேன் அல்லவா! அந்த பகுதியையும்) இணைத்துப் பார்த்தால் உங்கள் தெய்வத்தை நீங்களே அறிந்து கொள்ள முடியும்,


    முதலில் குலதெய்வம் என்பவர் யார்? அவர் ஆகாயத்தில் இருந்து வரவில்லை.

    அவர் உங்கள் குலம் காக்க உயிர்த் தியாகம் செய்த உங்கள் குடும்பத்தின் முன்னோர் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

    அல்லது உங்கள் குலம் தழைக்க அல்லது ஊரைக் காக்க தன் உயிர் கொடுத்து காப்பாற்றியவர் ஆவார்.

    என்ன இருந்தாலும் இறந்தவர் ஆவியானது ஊருக்குள் வரக்கூடாது என்ற கோட்பாட்டின் படி, எல்லையில் தங்கி உங்கள் ஊரை அல்லது உங்கள் குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்.

    சரி எப்போதெல்லாம் குலதெய்வத்தை வணங்க வேண்டும்?

    ‘அதான் வருடத்துக்கு ஒருமுறை திருவிழாவின் போது நாங்கள் முறையாக வழிபாடு செய்கிறோமே... அப்புறம் என்ன?’ என்பவர்களுக்கு...

    உங்கள் இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியும் உங்கள் குலதெய்வத்தின் ஆசியுடன்தான் நடைபெற வேண்டும்.

    உங்கள் குழந்தை அல்லது பேரன் பேத்திகளுக்கு முதல் மொட்டை, காதுகுத்து உங்கள் குலதெய்வத்தின் ஆலயத்தில் தான் நடக்கவேண்டும்.

    நீங்கள் வீடு கட்டியவுடன் அல்லது வாங்கியவுடன் நீங்கள் செல்ல வேண்டிய இடம் உங்கள் குலதெய்வக் கோயில்.

    உங்கள் பிள்ளைகள் உயர்கல்வி கற்கச் செல்கிறார்களா? குலதெய்வ வழிபாடு செய்த பிறகு
    துவக்குங்கள்.

    பதவி உயர்வு, சம்பள உயர்வு வந்துள்ளதா. அட... வரவே இல்லை என அலுத்துக் கொள்கிறார்களா? உடனே உங்கள் தெய்வத்தைப் பார்த்து வாருங்கள்.

    புதிய தொழில் தொடங்க இருக்கிறீர்களா? அனுமதியை உங்கள் குலதெய்வத்திடம் பெறுங்கள்.

    பெண் பிள்ளை பூப்பெய்து விட்டாளா? நல்ல வாழ்வு அமைய வேண்டும் என உங்கள் சாமியிடம் வேண்டுங்கள்.

    இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் குலதெய்வத் தொடர்பை உறுதிபடுத்திக்கொண்டே இருங்கள். எல்லா நலமும், வளமும், அருளிக்கொண்டே இருப்பார் அந்தக் கண்கண்ட தெய்வம்.

    ஒருசிலர் எங்கள் குலதெய்வம் திருப்பதி, ஶ்ரீரங்கம் எனச் சொல்கிறார்கள். அது இஷ்ட தெய்வம். இருந்தாலும் குலதெய்வம் தெரியாதவர்கள் இப்படி இஷ்ட தெய்வ வழிபாடு செய்து இந்த “வணக்கத்தை என் குலசாமியிடம் சேர்த்துவிடு” என வேண்டிக் கொள்ளலாம். அந்த வழிபாடு அனைத்தும் உங்கள் குலதெய்வத்தைச் சென்றடையும்.

    நம்பிக்கைதான் வாழ்க்கை. எனவே நம்பிக்கையோடு செய்யப்படும் எந்தச் செயலும் எந்த வகையிலும் நமக்கு நன்மையே தரும்.

    உங்கள் குலம் தழைக்கச் செய்யும் குலதெய்வ வழிபாட்டைத் தொடர்ந்துகொண்டே இருங்கள்
    இன்னும் துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்துதான் அறிந்து கொள்ள முடியும்.

    ஒரு நல்ல ஜோதிடரை அணுகி உங்கள் குலதெயவத்தை அறிந்து கொள்ளுங்கள்.
     
    Last edited: Oct 24, 2018
  7. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    குலதெய்வம் தெரியாதவர்கள் அதனை அறிந்துகொள்வது எப்படி?

    ‘திரைகடல் ஓடி திரவியம் தேடு’ என்ற வாக்கியத்துக்கு ஏற்ப, நமது முன்னோர்கள் வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களுக்குச் சென்று கடந்த காலங்களில் குடியேறி விட்டனர். சொந்த ஊருக்கு வர வாய்ப்பில்லாமலேயே அநேக குடும்பங்கள் வெளிநாட்டிலேயே தங்கி விட்டனர். தலைமுறை இடைவெளி வந்துவிட்ட காரணத்தாலும், முன்னோர்கள் தங்களது குலதெய்வம் எதுவென்று தங்கள் வாரிசுகளுக்கு குறிப்பிட்டுச் சொல்லாத காரணத்தாலும் பெரும்பகுதியினர் தங்களுக்குரிய குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருந்து வருகின்றனர்.

    சில குடும்பத்தில் குடும்பப் பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து குலதெய்வம் பற்றித் தெரிந்துகொண்டு பரிகாரம் செய்து வழிபடலாம்.

    சில குடும்பத்துப் பெரியவர்களுக்குக்கூட அவர்களின் குலதெய்வம் எது என்று தெரியாது. அவர்கள் என்ன செய்வது? இங்கேதான் அவர்களுடைய ஜாதகம் உதவுகிறது. ஜாதகத்தை வைத்து குல தெய்வம் கண்டுபிடிக்க முடியுமா? நிச்சயமாக முடியும்.

    நம்முடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 5ஆம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும். இதே வீடு பொதுவாக புத்திர பாக்கியம் நமது தூய்மையான எண்ணங்கள், புத்தி சாதுர்யம், வித்தை, கல்வியில் திறமை, சத்சங்கம், மகான்களின் நட்பு, யோகங்கள், பதவி, உயர்வு,அந்தஸ்து முதலிய விஷயங்களையும் அறிய உதவும். குலதெய்வம் அறியாதவர்கள் லக்னத்துக்கு 5ஆம் வீட்டிற்குரிய கிரகம் எங்கு வருகின்றது என்பதைப் பார்த்து, அதனைக் கொண்டு தங்கள் குலதெய்வத்தை அறியலாம். நல்ல ஜோதிடர்களிடம் ஜாதகத்தைக் காட்டி, 5ஆம் வீட்டின் வாயிலாக குலதெய்வத்தை அறியலாம்.

    ஒருவரது ஜாதகத்தில் தெய்வ ஸ்தானம் என்பது 5-ம் இடமும் 9-ம் இடமும் ஆகும். 5-ம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம். தந்தை வழி பாட்டனார்களைச் சொல்லுமிடம். அதன் 5-ம் இடம் ஜாதகத்தின் 9-ம் பாவமாகும். அவர்களின் இஷ்ட தேவதையைச் சொல்லுமிடம். 9-ம் இடத்துக்கு 9-ம் இடம் 5-ம் பாவமாகும். அதாவது தந்தை வழிபட்ட தெய்வத்தைச் சொல்லுமிடமாகும். ஆகவே இந்த இரு இடங்களைக் கொண்டு குல தெய்வத்தைக் கண்டுபிடிக்கலாம்.

    இந்த இடங்கள் ஆண் ராசியா, பெண் ராசியா எனக் கண்டுபிடித்து, அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா எனத் தெரிந்து கொள்ளலாம். மேலும் அது நில ராசியில் (ரிஷபம், கன்னி, மகரம்) உள்ளதா, நீர் ராசியில் (கடகம், விருச்சிகம், மீனம்) உள்ளதா, என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த தெய்வம் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கலாம்.

    நீர் ராசி என்றால், ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடங்களுக்கு அருகில் இருக்கும். நில ராசியில் நின்றால், வயல்வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் (மேஷம், சிம்மம், தனுசு) நின்றால், மலை மேல் இருக்கும். குலதெய்வம் பற்றி வீட்டின் மூத்த பிள்ளையின் ஜாதகத்தில் இருந்து கண்டுபிடிக்கலாம்.

    ஒரு குடும்பத்துக்கு குல தெய்வம் ஒன்றும், அதன் பரிவார தெய்வங்கள் இரண்டும் சம்பந்தம் கொள்ளும். ஒருவரின் பூர்வீகத்தில் அதாவது உங்களுக்கு முன்பு ஏழு தலைமுறைப் பங்காளிகள் மூன்று தலைமுறையாக ஒன்றுசேர்ந்து எங்கு வாழ்ந்திருக்கிறார்களோ அந்த ஊரில் இருக்கும். இதை குடும்பத்தில் உள்ள மூத்த பெரியவர்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
     
  8. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    குல தெய்வம் தொியாதவா்கள் எப்படி குலதெய்வத்தினை அறிவது?

    ஒருவருடைய பிறந்த லக்னத்திற்கு 5ம் வீட்டில் ராகு கேது இருந்தால்

    ஒருவருடைய பிறந்த லக்னத்திற்கு 3ம் வீட்டில் ராகு கேது இருந்தால்

    ஒருவருடைய பிறந்த லக்னத்திற்கு 7ம் வீட்டில் ராகு கேது இருந்தால்

    அவா்களுக்கு குல தெய்வ வழிபாடு மறந்து போகும்

    ஜோதிடத்தில் இறை வழிபாட்டினை அடையாளம் காட்டுவது 5ம் வீடு என்னும்
    பூா்வ புண்ணியமே.

    மேஷ லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு சூாியன்

    ரிஷப லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு புதன்

    மிதுன லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு சுக்கிரன்

    கடக லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு செவ்வாய்

    சிம்ம லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு குரு

    கன்னி லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு சனி

    துலாம் லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு சனி

    விருச்சிகம் லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு குரு

    தனசு லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு செவ்வாய்

    மகரம் லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு சுக்கிரன்

    கும்பம் லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு புதன்

    மீன லக்னத்தில் பிறந்தோருக்கு 5ம் வீடு சந்திரன்

    ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் 5ம் வீட்டுக்குாியவா் எந்த வீட்டில்
    அமா்ந்திருக்கறாரோ அந்த வீட்டு அதிபதியினை கொண்டு குல தெய்வம்
    அறிந்து கொள்ள வேண்டும்.

    5ம் வீட்டுக்குாியவா் ஆண் ராசி வீடுகளில் அமா்ந்திருந்தால் ஆண் குலதெய்வம்

    மேஷம் மிதுனம் சிம்மம் துலாம் தனசு கும்பம்

    5ம் வீட்டுக்குாியவா் பெண் ராசி வீடுகளில் அமா்ந்திருந்தால் பெண் குலதெய்வம்

    ரிஷபம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம்

    5ம் வீட்டுக்குாியவா் எந்த திக்கினை அடையாளம் காட்டுகிறதோ அந்த
    திக்கில் அவா்களுடைய குல தெய்வம் இருக்கும்

    5ம் வீட்டுக்குாியவா் சர லக்னத்தில் இருந்தால் வெகு தொலைவில் உள்ளது

    5ம் வீட்டுக்குாியவா் ஸ்திர லக்னமெனில் உள்ளுாில் உள்ளது

    5ம் வீட்டுக்குாியவா் உபக லக்னமெனில் 50 கிமி எல்லையில் உள்ளது

    குல தெய்வம் கிரகம் காட்டும் உண்மை

    சூாியன்
    தேவதை அக்னி
    பிரத்யதி தேவதை ருத்ரன்
    தி்க்கு கிழக்கு

    சந்திரன்
    தேவதை பாா்வதி
    பிரத்யதி தேவதை கெளாி
    திக்கு வடமேற்கு

    செவ்வாய்
    தேவதை காா்த்திகேயன்
    பிரத்யதி தேவதை பிருத்வி
    திக்கு தெற்கு

    புதன்
    தேவதை விஷ்ணு
    பிரத்யதி தேவதை நாராயணன்
    திக்கு வடக்கு

    குரு
    தேவதை இந்திரன்
    பிரத்யதி தேவதை பிரம்மா
    திக்கு வடகிழக்கு

    சுக்கிரன்
    தேவதை லக்ஷ்மி
    பிரத்யதி தேவதை இந்திரன்
    திக்கு தென்கிழக்கு

    சனி
    தேவதை யமன்
    பிரத்யதி தேவதை பிரஜாபதி
    திக்கு மேற்கு

    ராகு
    தேவதை பத்ரகாளி
    பிரத்யதி தேவதை சா்ப்பம்
    திக்கு தென்மேற்கு

    கேது
    தேவதை சித்திர குப்தன்
    பிரத்யதி தேவதை நான்முகன்
    திக்கு ஆகாயம் (வடமேற்கு)

    குல தெய்வத்தினை இந்த குறிப்புகளுடன் கண்டறிந்து கொள்ளுங்கள்.
     
  9. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    ஐந்தாம் வீடு

    5ஆம் வீட்டுக்கு உரிய உடற் பகுதிகள்: இரைப்பை, கணையம்.

    • குழந்தை
    • பாட்டன்
    • வம்சா வழி அத்துனையும்
    • பாட்டிகள்
    • பூர்வ புண்யம்
    • மனம்
    • எண்ணம்
    • காதல்
    • சந்தோஷம்
    • அதிர்ஷ்டம்
    • யோகம்
    • போட்டி
    • இஷ்ட தெய்வம்
    • சிற்றின்பம்
    • மந்திர உச்சாடனம்
    • உபாசனை (இஷ்ட தெய்வம்)
    • கற்பழிப்பு
    • வழிபாடு
    • திருவிழாக் கோலங்கள்
    • மன திருப்தி
    • ஸ்டாக் எக்சேஞ்ச் சூதாட்டம்
    • படைப்பாற்றல்
    • உளவியல் மனநிலை
    • ஊக்கம்
    • புலனாய்வு
    • வயிறு
    • வேடிக்கை
    • விளையாட்டுகள்
    • நடிப்பு
    • நாடகம்
    • திரையரங்குகள்
    • பொழுதுபோக்கு
    • மற்றும் நமது படைப்பு ஆற்றலை சரியாக அல்லது தவறாக பயன்படுத்துவதை இந்த இடம் சுட்டிக்காட்டும்
    • செக்ஸ்
    • மகிழ்ச்சி
    • நல்ல அல்லது கெட்ட ஒழுக்கம்
    • மந்திரம்
    • தந்திரம்
    • மத மனப்பான்மை
    • நடுத்தரக்கல்வி
    • அறிவுக்கூர்மை
    • ஆன்மீக முறைகள்
    • குழந்தைகள் உண்டு அல்லது இல்லை
    • சந்ததி
    • அங்கிகரிக்கப்பட்ட காதல்
    • அங்கிகரிக்கப்படாத காதல் விவகாரங்கள் அதன் செல்வாக்கு உற்சாகம் மற்றும் இன்பத்திற்காக ஏங்கும் ஒரு உணர்வு
    • முதலீடுகள்
    • சூதாட்டம்
    • குத்தகை
    • ஹோட்டல்
    • கட்டடங்கள்
    • விடுமுறைகள்
    • பங்குகள் மற்றும் முதலீடு
    • இதயம்
    • கல்லீரல்
    • மண்ணீரல்
    • பாரம்பரியமான ஜோதிடர்கள்
    • தூதுவர்கள்
    • பிரபுக்களின் ஹவுஸ்
    • பங்காளிகள்
    • மன அழுத்தம்
    • காயங்கள்
    • விபத்துகள்
    • தாயின் இளைய சகோதரர்
    • தொப்புள் கீழே உடல்


    ஐந்தாம் வீடு மூன்று பலன்களைத் தருவது. அவை
    • பூர்வ புண்ணியம்
    • குழந்தைபாக்கியம்
    • நுண்ணறிவு


    1. பூர்வபுண்ணியம் என்பது முன் பிறவியில் நாம் செய்த நன்மைதீமை களின்படி நமக்குக் காலன் கொடுக்கும் அமைப்பு. அந்த அமைப்பு வைத்துத்தான் இந்தப் பிறவியில் பல செயல்கள் நமக்கு நன்மை உள்ளதாக அமையும்!

    2. பூர்வ ஜென்மத்தை முழுமையாக அறிந்து சொல்ல எந்தக் கொம்பனாலும் முடியாது. ஓரளவிற்குச் சொல்லலாம்!

    3. இந்த 5ஆம் வீட்டிற்குக் காரகன் குரு. அவர் அந்த 5ஆம் வீட்டிற்கு ஐந்தில் அதாவது லக்கினத்தில் இருந்து 9ல் இருந்தால் ஜாதகன் மிகவும் அதிஷ்டசாலி! புண்ணிய ஆத்மா! பெயரையும், புகழையும் குரு பெற்றுத்தருவார்.

    4. 1ஆம் வீடு லக்கினம், 5 ஆம் வீடு ஜாதகனுடைய குழந்தை, 9ஆம் வீடு ஜாதகனுடைய தந்தை. அந்த 9ஆம் வீட்டிலிருந்து 5ஆம் வீடு மீண்டும் ஜாதகனின் வீடாகவே இருக்கும். அதாவது 9ஆம் வீட்டுக் காரரின் மகன். ஒரு சுழற்சி!!

    5. ஐந்தாம் வீடு எண்ணங்களையும், உணர்வுகளையும் குறிப்பதாகவும் இருக்கும். ஐந்தாம் வீடு நல்ல அமைப்புக்களைப் பெற வில்லை என்றால் ஜாதகன் மோசமானவன் அல்லது குழப்பம் அல்லது கோபக்காரன்.

    6. ஐந்தாம் வீட்டைப் பற்றி அறிந்து கொள்ள முதலில் பார்க்க வேண்டிய மூன்று:
      - ஐந்தாம் வீடு
      - ஐந்தாம் வீட்டின் அதிபதி
      - ஐந்தாம் வீட்டின் காரகன் குரு
      அவைகள் நன்றாக இருந்தால் நல்லது. காரகனும், அதிபதியும் கேந்திர, கோணங்களிலோ அல்லது சுயவர்க்கத்தில் நல்ல பரல்களுடனோ இருத்தல் நலம்.

    7. அடுத்து உபரியாகப் பார்க்க வேண்டியது. 5 ஆம் வீட்டில் வந்து இடம் பிடித்து அமர்ந்திருக்கும் கிரகம், ஐந்தாம் வீட்டு அதிபதியோடு சேர்ந் திருக்கும் கிரகம், அல்லது காரகனோடு சேர்ந்திருக்கும் கிரகம். அவை களும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையே!

    8. மேஷம், சிம்மம், தனுசு ஆகிய வீடுகள் ஒருவருக்கு ஐந்தாம் வீடாக அமையப் பெற்றால் அவர் இயற்கையாகவே நேர்மையான வராக இருப் பார்.

      அவரை யாரும் சுலபமாக விலைக்கு வாங்க முடியாது ஜாதகத்தில் லக்கினதிபதி போன்றவர்கள் கெட்டிருந்தால் மட்டுமே அவர் நேர்மை தவற நேரிடும். இல்லையென்றால் இல்லை!

      அவர்களுடைய இந்த நேர்மை, சிலரை எரிச்சல் படுத்தவும் செய்யும். ஆனால் அவர்கள் அதைப்பற்றி சிறிதும் சட்டை செய்யாத அளவிற்கு மன உறுதியுடன் இருப்பார்கள்.

    9. ஐந்தாம் வீடு மனதிற்கும் உரிய வீடுதான் மனம், நெஞ்சம், இதயம் என்று எப்படி வேண்டுமென்றாலும் பொருள் கொள்ளுங்கள்!

    10. ஐந்தில் ராகு அல்லது கேது அல்லது சனி ஆகிய கிரகங்களில் ஒன்றிருந்தாலும் ஜாதகன் எப்போதுமே எதற்காவது கவலைப்பட்டுக் கொண்டிருப்பான்.

    11. ரிஷபம், கன்னி, மகரம். ஆகிய வீடுகள் ஒருவருக்கு ஐந்தாம் வீடாக அமையப் பெற்றால் அவர் கற்பனைத் திறன், ஆழ்ந்த உணர்வுகள், அதீத நினைவாற்றல் (memory) உள்ளவராக இருப்பார். இது பொது விதி. ஜாதகத்தின் வேறு கிரக சேர்க்கைகளை வைத்து இது மாறுபடும்.

    12. ரிஷப ராசி ஐந்தாம் வீடாக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கையை சுலபமாக எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள். காரணம் ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன். அதனால் எப்போதுமே சந்தோஷம்.

    13. மகர ராசியை ஐந்தாம் வீடாகப் பெற்றவர்கள் பொதுவாக கோபம் மற்றும் குழப்பமடையும் ஆசாமிகள் கரணம் அதிபதி சனி என்பதனால் ஆகும்.

    14. கன்னி ராசியை ஐந்தாம் வீட்டாகப் பெற்றவர்களுக்கு ரிஷபம் மற்றும் மகர ராசிகளின் பலன்கள் கலவையாக இருக்கும். காரணம் அதிபதி புதன் அவர்கள் எப்போது ஜாலியாக இருப்பார்கள், எப்போது சீரியசாகி விடுவார்கள் என்பது அவர்களுக்கு அன்றாடம் அமையும் சூழ்நிலை களைப்பொறுத்து மாறுபடும்!

    15. மிதுனம், துலாம், கும்ப ராசிகளை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்கள் அடுத்த பிரிவினர். வித்தியாசமான சிந்தனைகளைப் பெற்றவர்கள். இவர்களுடைய செயல்கள் ஊக்கப்படுத்துவனவாக இருக்கும். செயல் வீரர்கள். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் காரியங்களைச் செய்பவர்கள்.

    16. துலா ராசியை ஐந்தாம் வீடாகக் கொண்டவர்கள் யாதார்த்தமானவர் கள்.

    17. கும்பராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள். உண்மையான மனதுடையவர்கள். நம்பகத்தன்மை மிக்கவர்கள் (அவர்களை முழுதாக நம்பலாம்).

    18. மிதுன ராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள் தங்கமானவர்கள் அந்த ராசிக்காரக்களின் நட்பு கிடைத்தால் அவர்களை விட்டு விட வேண்டாம்.

    19. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்கொண்டவர்கள், அதிகமான தொல்லைகளுக்கு ஆளாவர்கள். ஆனால் அவற்றைப் பொறுமையுடனும், மன் உறுதியுடனும் தீர்க்ககூடிய வல்லமை பெற்றிருப்பார்கள்.

    20. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்கொண்டவர்கள் தத்துவஞானிகளாக இருப்பார்கள். உலகின் மிகப் பரபலமான தத்துவஞானிகள் எல்லாம் இந்த அமைப்பை உடையவர்களாகவே இருப்பார்கள்.

      இயற்கையாகவே இந்த அமைப்பைக் கொண்டவர்கள் தர்ம, நியாயங்கள் தெரிந்தவர்களாக இருப்பார்கள். யாரும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!

    21. கடகம், விருச்சிகம்,மீனம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்கொண்டவர்களைப் பற்றி இப்போது பார்ப்போம். இவர்கள் வித்தியசமானபார்வை கொண்டவர்கள். மற்றவர்களை விட இவர்கள் ஒன்றைப் பார்த்துஎடுக்கும் முடிவு. அற்புதமாக இருக்கும். அதுதான் சிறந்ததாகவும்இருக்கும்.

    22. இந்த அமைப்பினர் தலைமை ஏற்கத்தகுதியுடையவர்கள். அந்தமூன்றில் (கடகம், விருச்சிகம்,மீனம்) கடகம் மிகவும் சிறப்பானது. காரணம் அதிபதி சந்திரன்.

    23. மீனத்தை ஐந்தாம் வீடாகக் கொண்டவர்கள், ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் செயலை உடையவர்கள். அவர்களுடைய மன ஓட்டத்தை யாராலும் ஊகிக்க முடியாது.

    24. ஜாதகத்தில் லக்கினம், ஒன்பதாம் வீடு ஆகியவ்ற்றிற்கு நிகராக 5ஆம் வீடும் அதி முக்கியமானது. அதனால் அவை மூன்றிற்கும் திரிகோணம்எனப்படும் முதல் நிலை அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.

    ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 5 வது இடத்தை புத்திரஸ்தானம் என்று கூறுவர் . பொதுவாக இந்த இடத்தில் எந்த கிரகம் இருந்தாலும் அவரவர் ஜெனன ஜாதகத்தின் கிரக நிலைகள் பொறுத்து ,

    அதன் திசை அல்லது புத்தி வரும் கால நேரம் பொறுத்து தோஷத்தை ஏற்படுத்தும் .இந்த 5 ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் தந்தைக்கு தோஷத்தையும் , சந்திரன் இருந்தால் தாய்க்கு தோஷத்தையும் , சனி இருந்தால் தனது குழந்தைகளுக்கும் , புதனிருந்தால் தாய் வர்கத்தினருக்கும் , குருவிருந்தால் தந்தை வர்கத்தினருக்கும் , ராகு இருந்தால் பிள்ளைகளுக்கும் , செவ்வாய் இருந்தால் தாய்மாமனுக்கும் தோஷம் உண்டாகும் .



    புத்திரர்கள் உண்டாகுதலும் குரு கிரகமும்

    குரு கிரகம் ஐந்தாம் இடமாகிய புத்திர ஸ்தானத்தில் இருந்தால் புத்திரர்கள் உண்டாக தடைகளை உண்டு பண்ணும் .ஆனால் மீனா லக்கினத்திற்கு மட்டும் ஐந்தாம் இடத்தில் குரு உச்சமாக இருந்தால் இந்த தடை வெகு காலத்திற்கு நீடிக்காது. ஆனாலும் ஆண் பிள்ளைகள் உண்டாவதிர்க்கு பதிலாக பெண் பிள்ளைகளே அதிகம் உண்டாக்கும்.
     
  10. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    பொதுவிதி. தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள கிரகஅமைப்புக்களை வைத்து இந்தப் பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம் கிரக சேர்க்கைகள், மற்றும் கிரக பார்வைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும்

    கேது கிரகம் ஐந்தாம் இடமாகிய புத்திர ஸ்தானத்தில் இருந்தால்: குழந்தைகள் இழப்பு.(வயதில் எந்த வயதில் வேண்டுமென்றாலும்) வயிற்று உபாதைகள் உடையவர். வித்தியாசமான உணர்வு (உணர்ச்சி) அனுபவங்கள் ஏற்படக்கூடியவர். வயதான காலத்தில் ஆன்மீகம், வேதங்களில் ஈடுபாடு உண்டாகும். வயதான காலத்தில் துறவுச் சிந்தனை மேலோங்கி வரும். சிலர் ஆசிரமங்களில் போய்ச் சேர்ந்துவிடுவார்கள்

    சந்திரன் கிரகம் ஐந்தாம் இடமாகிய புத்திர ஸ்தானத்தில் இருந்தால்: தெளிவான மனதை உடையவர். அறிவு ஜீவி,(highly intelligent) குழந்தைகளால் இன்பம், இடம் சொத்துக்களின் சேர்க்கை, படித்தவர், உண்மையானவர் என்ற நிலைப்பாட்டை உண்டாக்கும். மிகுந்த இறை நம்பிக்கை உள்ளவர். இவருடைய குழந்தைகளின் ஒன்று மிகவும் புகழ் பெற்று, வயதானகாலத்தில் இவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்

    சனி கிரகம் ஐந்தாம் இடமாகிய புத்திர ஸ்தானத்தில் இருந்தால்: குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்கக்கூடியவர். அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் மாறி மாறி ஏற்படும். நண்பர்களிடமும், உறவினர்களிடமும் வாதிட்டு சண்டையிடக் கூடியவர் குடும்ப வாழக்கையில் துயரங்கள் நிறைந்தவர். பாவ சிந்தனைகள் உடையவர். மூடர், வறியவர், மற்றவர்களால் வெறுக்கப்படக்கூடியவர் (Evil minded and Stupid. sickly and week, poor and hated by others) இந்த குணங்களில் எல்லாக் குணமும் இருக்கலாம். அல்லது ஜாதகத்தின் வேறு அமைப்பை வைத்து சிலது மட்டும் இருக்கலாம்.

    சுக்கிரன் கிரகம் ஐந்தாம் இடமாகிய புத்திர ஸ்தானத்தில் இருந்தால்; கவிஞர். உள்ளத்தில், சிலர் எழுத்தில். செல்வம் சேரக்கூடியவர். அழகான குழந்தைகளை உடையவர். எப்போதும் மகிழ்ச்சியை உடையவர். அரசமரியாதை கிடைக்கக்கூடியவர் அதிகமாகப் பெண் குழந்தைகளை உடையவர். பங்குவணிகம், ஊகவணிகங்களில் வெற்றி பெறக்கூடியவர்.

    சூரியன் கிரகம் ஐந்தாம் இடமாகிய புத்திர ஸ்தானத்தில் இருந்தால்: குழந்தைப் பேறைக்குறைக்கும். மகிழ்ச்சியைக் குறைக்கும். இதய நோய்களை உண்டாக்கும். குழந்தைகள் பிறந்தாலும் அவர்களிடமிருந்து பிரிவை உண்டாக்கும் காடுகளிலும், மலைகளிலும் சுற்றித்திரிய வைக்கும். மொத்தத்தில் பார்வை, ஐந்தாம் வீட்டு அதிபதி சென்று அமர்ந்த இடம் போன்ற வேறு நல்ல அமைப்புக்கள் இந்த வீட்டிற்கு இல்லாதபோது, சூரியனின் அமர்வு நல்லதல்ல!

    செவ்வாய் கிரகம் ஐந்தாம் இடமாகிய புத்திர ஸ்தானத்தில் இருந்தால்:மனைவிக்கு துயரங்கள் ஏற்படும். மனைவிக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் அது ஏற்படும்.தொல்லை தரும் சிந்தனைகளை உடையவர், மகிழ்ச்சி இல்லாதவர், அதிரடியானவர், பலகீனமான மனதுடையவர். தன்னுடைய குழந்தைகளால் துரதிர்ஷ்டங்களைச் சந்திக்க உள்ளவர். "அந்த" விஷயத்தில் மிகவும் ஆர்வமுடையவர் "அந்த" விஷயத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இது பெண்ணின் ஜாதகம் என்றால் குழந்தை பிறப்பில் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

    புதன் கிரகம் ஐந்தாம் இடமாகிய புத்திர ஸ்தானத்தில் இருந்தால்:மிகவும் படித்தவர், கல்வியாளர், மகிழ்ச்சி நிரம்பியவர். அதிகக் குழந்தை களை உடையவர். அரசு ஆலோசகராக அல்லது நிறுவனங்களில் ஆலோசகராக இருக்கக் கூடியவர். அதீத புத்திசாலியாகவும், சாஸ்திரங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் இருப்பார். "அந்த" விஷயங்களில் ஆதீத ஆர்வம் உடையவராக இருப்பவர். அதே நேரத்தில் அதற்குத் தேவையான் சக்தி (vitality) குறைபாடு களும் உடையவர்.

    ராகு கிரகம் ஐந்தாம் இடமாகிய புத்திர ஸ்தானத்தில் இருந்தால்: கல்மனது உடையவர். நட்பிற்கு லாயக்கில்லாதவர். மற்றவர்களால் எப்பொதுமே தவறாகக் காட்சியளிப்பவர். சமூக நடப்பிற்கு ஒத்துவராதவர். இதயநோய் உண்டாகலாம் குழந்தைகளைப் பறிகொடுத்துத் துயரங்களை அனுபவிக்கவும் நேரலாம். மொத்ததில் வேறு நல்ல அமைப்பு ஜாதகத்தில் இல்லை என்றால் இந்த ராகுவின் அமர்வு ஆளைப் படுத்தி எடுத்துவிடும்!
     

Share This Page