1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

How Did This Nataraja Get Installed Here?

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jun 23, 2018.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    [​IMG]


    ஆனி உத்தர அபிஷேகம் அநேக சிவன் கோவில்களில் நடந்தது. என்னைத்தேடி பூமீஸ்வரம் என்கிற திருநல்லத்திலிருந்து நடராஜ
    ர்
    தனது புகைப்படத்தை அலங்காரத்தோடு அனுப்பினார். அதுசரி
    ,
    பூமீஸ்வர
    ம்
    என்கிற திருநல்லம் எங்கே சார் இருக்கிறது என்று தேடினால் உங்களுக்கு கிடைக்காதே. பழைய பெயர்கள் எல்லாம் மறைந்து, இல்லை மறக்கப்பட்டு, புதிய தலைவர்கள் பெயர்களில் நமக்கு சென்னையிலேயே அண்ணாநகர், கேகே நகர் என்று பழக்கமாகவில்லையா அது போல
    த்
    தான் அந்தக்காலத்தில் ஒரு சோழன் திடீரென்று பேப்பரில் போடாமல் (பேப்பர் கிடையாது) ஆகவே உளியை எடுத்து எங்கோ செதுக்கி பூமீஸ்வரம் என்ற
    திருநல்லம் பேரை தனது பெயரில் மாற்றிக்கொண்டான்.
    அவன் பெயர் கோனேரிராஜனோ கோனேரிராயனோ, அதனால் கோனேரிராஜபுரம் ஆகிவிட்டது. நடராஜ
    ர்
    அங்கிருந்து ஒரு பக்தை மூலமாக எனக்கு வந்து சேர்ந்தார். இணைத்துள்ளேன் பாருங்கள். எவ்வளவு ஜம்மென்று இருக்கிறார்.
    சரி ஊரை சொல்லிவிட்டீர்கள், தெரிந்த பெயர் இப்போது. எங்கே இருக்கிறது? திருவிடைமருதூரிலிருந்து 10 கி.மீ. காரைக்கால்-கும்பகோணம் பாதையில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 22 கி.மீ. இது சோழமண்டலத்தில் 34வது புராதன சிவன் கோவில். காவிரிக்கரையில் இருக்கிறது. சிவன் பெயர் உமாமஹேஸ்வரர். அம்பாள் ஸ்ரீ தேஹஸுந்தரி, (அங்கவள நாயகி, மங்கள நாயகி) மேற்கு பார்த்த கோவில்.
    ராஜராஜ சோழன் பாட்டனார் கண்டராதித்த சோழர் மனைவி செம்பியன் மாதேவி பல சுண்ணாம்பு, காரைக் கோவில்களை கற்றளியாக்கினதில் இதுவும் ஒன்று. பெரிய அற்புத
    கோவில். ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்டது. அருமையான சிற்பவேலைப்பாடுள்ள பேசும் சிலைகள் உள்ள ஆலயம். பஞ்சலோக நடராஜரை ஸ்தபதியின் அருகில் இருந்து தனது மேற்பார்வையில் சிலை வடித்தாள் செம்பியன் மாதேவி. நடராஜர் உமை விக்ரஹங்கள் தத்ரூபமாக அமைந்ததற்கு நம்பமுடியாத ஒரு கதை உண்டு:
    ஸ்தபதி உருக்கி வார்த்த மூன்று சிலைகளும் சிவபக்தனான கண்டராத்தித்த சோழனுக்கு
    திருப்தி இல்லை. ''இது உனக்கு கடைசி சந்தர்ப்பம். சரியாக பண்ணிக்கொண்டு வா. இல்லையேல் உனக்கு தலை கிடையாது ''
    .
    கட்டளை இடப்பட்டதும் ஸ்தபதி நடுங்கினான். எப்படியோ பஞ்சலோகங்களை உருக்கி குழம்பாக்கி தான் கடைசியாக உருவாக்கிய சிலை வார்ப்படத்தில் ஊற்ற வேண்டும். அந்த நேரம் ஒரு கிழவன் கிழவி அவனை அணுகி ''ரொம்ப தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடு'' என, ஆத்திரமும் அவசரமுமாக இருந்த ஸ்தபதி ''தண்ணீர் இங்கே இல்லை, சூடாக இருக்கும் இதை வேண்டுமானால் குடியுங்கள் என்று உலோக குழம்பை
    க்
    காட்டினான். அவன் எங்கோ அருகில் சென்று திரும்புவதற்குள் அந்த இருவரும் அந்த உலோகக்குழம்பை பருகிவிட்டார்கள். ஸ்தபதி திரும்பி வந்து பார்த்தால் நடராஜா உமை சிலைகளாக அவர்கள் மாறியிருந்தார்கள். ஆச்சர்யத்தில் பயத்தில் நடுங்கிய ஸ்தபதி அலறி அடித்துக்கொண்டு ஓடி ராஜாவிடம் விஷயம் சொல்ல, இன்று நாம் பார்க்கும் நடராஜா உமை விக்ரஹங்கள் ஸ்தாபனம் ஆயின..

    Jayasala42
     
    sindmani, kaniths and periamma like this.
    Loading...

Share This Page