1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இது காதலின் சங்கீதம்!!!

Discussion in 'Stories in Regional Languages' started by shinara, Apr 25, 2014.

  1. lucisasi

    lucisasi New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    1
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hi shinara,
    Where are you ma? Please update soon. Eagerly waiting.
     
    shinara likes this.
  2. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hiiiii after a loooooong time.... hope all r doing good...
    have come to IL after some years.. etho poorva jenma nyabagam madri iruku... sorry guys for the long delay. will come up with the remaining episode soon..
     
  3. Bhoonzee

    Bhoonzee Gold IL'ite

    Messages:
    117
    Likes Received:
    184
    Trophy Points:
    100
    Gender:
    Female
    Hi Shinara,

    Welcome back. How are you? How things are going?

    We miss you and your story.

    Thanks
    Bhuvana
     
  4. Chocolatey

    Chocolatey Gold IL'ite

    Messages:
    171
    Likes Received:
    247
    Trophy Points:
    100
    Gender:
    Female
    Hi shinara!!! Glad to see you!!! Will eagerly wait for remaining episodes. Thanks for coming back!!!
     
  5. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Hey Shinara!! Welcome back!! Hope you are doing great!
    Really am very happy to see you come back! and double glad that you are going to continue the story!
     
    shinara likes this.
  6. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Hi Shinaara
    Lovely story line and very different too. Really could not understand the Hero character , but the attraction of the same towards him by the Heroine. Very Very different story line.
    Though you started in 2014 and now only I had chance to read it, but lucky that you have come back after your marriage. I know you will be busy, but please continue and finish the story.
    Kathalin Sangeetham kekka avalodu erukirom.
     
    shinara likes this.
  7. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    குருவிடமிருந்து விலகி ஆயிஷாவின் அருகில் சென்ற உத்ரா அவளை துரிதப்படுத்தி அங்கிருந்து கிளம்பினாள். குருநாதரிடம் விடைபெற்று செல்லலாம் என்று ஆயிஷா கூறிய போது உத்ரா வர மறுத்து காரில் ஏரிக் கொன்டாள். காரில் இருந்த உத்ராவின் கண்கள் அவளையே அறியாமல் குருநாதனை நோக்கிய போது , அங்கே அவனோ மற்றவர்களுடன் சகஜமாக பேசி கொண்டிருந்தான் . அதை பார்த்த போது உத்ராவின் மனதில் கனமான ஒரு இறுக்கம் பரவியது.

    அன்றிலிருந்து ஒரு வாரம் குருநாதன் உத்ராவை நேரிலோ தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளவில்லை . பகல் பொழுது வேகமாக அலுவலகத்தில் கழிந்தாலும் மாலை முதல் மறுநாள் வரை பொழுதை போக்குவது மிகவும் கடினமாக இருந்தது உத்ராவிற்கு. சும்மா இருக்கும் மனது சாத்தானின் உலகம் என்று ஒரு பழமொழி உண்டு . அது போல் சும்மா இருக்கும் சமயங்களில் உத்ராவின் மனது
    பலதையும் எண்ணியது . அதில் அதிகமாக இடம் பெற்றது குருநாதன் பற்றிய சிந்தனை தான். ஆனால் உத்ராவின் வாழ்வில் ஒரு மோசமான திருப்பு முனையாக வந்த அவனைப் பற்றி எண்ணங்கள் ஏன் தன் மனதில் அடிக்கடி வருகின்றன என்று தன்னையே கடிந்து கொன்டாள்.

    அன்று மாலை வேலை முடிந்து உத்ரா தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள். அன்றோ வெள்ளிக்கிழமை.சனி ஞாயிறு விடுமுறை. ஏற்கனவே ஆயிஷா ஏதோ ப்ராஜெக்ட் விஷயமாக தன் சொந்த ஊருக்கு சென்றிருந்தாள். இரு நாட்களும் வெறுமனே எப்படி பொழுதை போக்குவது என்று எண்ணியவள் வழியில் ஒரு புத்தக கடையில் இறங்கி ஒரு புதினத்தை வாங்கினாள். பணம் எடுப்பதற்காக பையை திறந்த சமயத்தில் சரியாக அலை பேசியும் ஒலித்தது. எடுத்தவள் அதிலிருந்த குருநாதனின் புகைப்படத்தை காணவும் சற்று குழப்பமானாள்.

    எத்தனை பாடுபற்று அவள் தன் சிந்தனைகளை கட்டுப்படுத்துகிறாள். ஆனால் பலனில்லையே. இப்படி திடீர் திடீர் என அவன் அழைக்கும் போதோ அல்லது அவன் பெயரைக் கேட்கும் போதோ மீண்டும் அவனைப் பற்றிய எண்ணங்கள் அல்லவா மனதில் குடியேறி கொள்கிறது. அலுப்புடனே அழைப்பை உயிர்ப்பித்தாள்.

    "ஹலோ "

    "ம்... வீட்டிற்கு போய் கொண்டிருக்கிறேன்"

    "இல்லை அரை மணிநேரத்தில் போய்விடுவேன். ஏன் ?"

    "ப்ச்ச்.." அழைப்பை துண்டித்துவிட்டான்.

    என்ன ஏதென்று எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டான். திமிர் ! எல்லாம் திமிர் !! அவனை கடிந்தவாறே உத்ரா வண்டியை கிளம்பினாள் .

    அரைமணி நேரம் என்று சொன்னாலும் சென்னை 'ட்ராபிக்'கை கடந்து செல்ல கூட பத்து இருபது நிமிடங்கள் ஆகியிருந்தது.

    அவளது வீட்டு தளத்தில் இறங்கியவள் வீட்டை திறப்பதற்காக கைப்பையில் கைவிட்டு சாவியை தேடிக் கொண்டிருந்த போதே வீடு திறந்திருப்பது தெரிந்தது.

    ஆயிஷா வந்துவிட்டாளா ? அதற்குள்ளாகவா? எப்படியும் ஓரிரு வாரங்கள் வரை ஆகலாம் என்று சொல்லியிருந்தாளே ! யோசனையுடன் உள்ளே சென்றவளை கையில் ஒரு தேநீர் கோப்பையுடன் வரவேற்றான் குருநாதன்.

    "வா உத்ரா "

    "நீ நீங்கள் ??"

    "ம் ... நானே தான் . என்ன அப்படி ஆச்சர்ய படுறே ? எப்படி உள்ளே வந்தேன்னா?"

    "ப்ச்... ஆயிஷா சாவி கொடுத்திருப்பாள்"என்று முணுமுணுத்தாள் உத்ரா.

    அலட்சியமாக தோள்களை குலுக்கியவன் "இது என் வீடு. இதன் 'மாஸ்டர் கீ' என்கிட்ட இருக்கு "என்று சிரித்தான் குருநாதன்.

    "என்ன புரிகிறதா!" என்று மீண்டும் குறும்பாக சிரிக்க அவன் சொல்வதின் பொருள் உணர்ந்த உத்ரா அவனை முறைத்தாள் .

    "இரண்டு பெண்கள் தனியாக உள்ள வீட்டின் சாவி கையிலிருப்பதில் பெருமையா?"என்று உதாசீனத்துடன் கேட்க மீண்டும் தோள்களை குலுக்கியவன் "அவர்களிடம் எனக்குள்ள உரிமை " என்று கூறி புன்னகைத்தான் .

    "உரிமையா ? என்னை என்ன வென்று நினைதீர்கள்" என்று கோபமாக தொடங்கியவளை கவனியாதவன் போல் "வேண்டுமானால் ஆயிஷாவிடம் கேள். நான் தான் அவளை விலக்கியே வைத்திருக்கிறேன் " என்று பெருமையாக கூறினான் குருநாதன்.

    பெரிய ஆணழகன் என்ற நினைப்பு ! இவனை போல் நிறத்தில் அழகில் எத்தனை பேர் இருக்கின்றனர். திமிர் ! எல்லாம் தற்பெருமை என்று மனதினுள் புலம்பிக் கொண்டாள் உத்ரா.

    கடிகாரம் ஆறுமுறை அடித்தது.

    "மை காட் . மணி ஆறா? உன்னோட வீணாக செலவு செய்ய எனக்கு நேரமில்லை உத்ரா. கமான் கெட் ரெடி. வெளியே போகணும்"

    ஏற்கனவே எரிச்சலுற்றிருந்தவளுக்கு அவன் மேலும் கட்டளை இடுவது போல் பேச மேலும் கோபமுற்றவளாய் " நான் எங்கேயும் வரலை" என்றாள் வெடுக்கென.
    '
    "கம் அகைன்.வரலையா?" ஹாஹா " என்று பலமாகச் சிரித்தான் அவன் "என்னிடம் அந்த வார்த்தையை பயன்படுத்தும் உரிமையை என்றோ இழந்துவிட்டாய் உத்ரா. மறந்திருக்க மாட்டாய் என்று நினைக்கிறேன்"என்று அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.

    ஆனால் உத்ராவின் முகம் சாதாரணமாகவே இருந்தது. "என்ன ?இனிமேல் என்ன செய்துவிட முடியும் உன்னால்? அதான் அக்காவுக்கு கல்யாணமாயிடுச்சே" என்று நிதானமாக உத்ரா கூறியபோது குரு நாதனின் முகம் கோபத்தில் சூடேறியது.

    "கல்யாணம் முடிந்தால் என்ன? எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தாயா?"

    "ஆமாம் இனி உன்னால் என்ன செய்ய முடியும்?அக்காவும் அத்தானும் காதலித்து கல்யாணம் செய்திருகாங்க.இனி உன் பேச்சை எல்லாம் அத்தான் காதிலேயே வாங்க மாட்டாங்க"என்று புன்னகையுடன் உத்ரா கூறியபோது பலமாக சிரித்தான் குரு நாதன்.

    "சரி அவன் என் பேச்சை கேட்கவில்லை என்றே வைத்துக்கொள். நான் என்ன செய்வேன் தெரியுமா? எங்கள் வீட்டிலுள்ள விலை உயர்ந்த நகைகளை எடுத்து உன் அக்காவின் அறையில் வைத்துவிட்டு அவளே திருடியதாகக் கூறுவேன். திருட்டுப் பட்டத்துடன் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் உன் அக்காவால்? ஏன் விஸ்வா கூட அவளை வெறுக்கலாம்" என்று கண்களில் கோபமும் வெறியுமாக குரு நாதன் கூறியபோது உத்ராவின் சப்த நாடியும் அடங்கியது.

    இப்படியும் நடக்குமா? இப்படி கூடவா மனிதர்கள் இருப்பார்கள்? என்ன குரூரம்" ஆ... அப்படி என்றால் இவனிடமிருந்து தனக்கு விடுதலையே இல்லையா... கடவுளே!!

    உத்ரா மௌனமாக கவுச்சில் அமர்ந்தாள்.

    "கூல் உத்ரா! இப்படி எதுவுமே நடக்காது. எப்போதும் உன் அக்கா எங்கள் வீட்டில் சந்தோஷமாகவே இருக்கணும்னு நீ நினைத்தால் என்னை கோபப்படுத்துவதை விட்டு விட வேண்டும். சும்மா இப்படி தப்பு தப்பாக யோசித்து என்னையும் கோபபடுத்தாதே. நீயாக உன் அக்கா வாழ்க்கையை கெடுக்காத வரையில் அவர்கள் நன்றாக தான் இருப்பார்கள்"என்று முடித்தான் குரு நாதன்.

    அப்பாடா என்றிருந்தது உத்ராவிற்கு. அடிபட்டு அழுது கொன்டிருக்கும் குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து சமாதானம் செய்வது போல் ஏதோ சொன்னாலும் அந்த சமயத்தில் உத்ரா நிதானமடைந்தது உண்மை தான்.

    ஆனால் இனி உத்ராவால் அவனிடம் மறுத்து பேச முடியுமா? அதன் பின் எந்த மறுப்பும் சொல்லாமல் குரு நாதனுடன் கிளம்பினாள் உத்ரா.அவர்கள் சென்றது ஒரு துணிக்கடை. நேராக பெண்கள் பகுதிக்கு சென்றவன் பணியாளர்களிடம் உத்ராவைக் காண்பித்து ஏதோ கூறினான்.

    அழகாக ஒப்பனை செய்திருந்த ஒரு பெண் உத்ராவிடம் வந்து " வாங்க மேடம். இந்த 'சேர்'ல உட்காருங்க நான் 'கேட்லாக்' எடுத்துட்டு வர்றேன்"என்று கூறி உள்ளே சென்றவள் கையில் ஒரு பெரிய "கேட்லாக்'குடன் வந்தாள்.

    என்ன நடக்கிறது என்று எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த உத்ராவிடம் அதை நீட்டியவள் "மேடம் இதில் நிறைய டிசைன் இருக்கு. நீங்கள் தேர்வு செய்றதை நேரில் எடுத்து காட்டுறேன்" என்று பணிவாக கூறினாள் அந்த பெண்.

    எதுவும் புரியாமல் குரு நாதனைப் பார்த்தாள் உத்ரா .

    "பார் உத்ரா உனக்கு பிடிச்சதை சொல்லு"என்றான் அவன்.


    உத்ரா புத்தகத்தை திறந்தாள். 'லெஹங்கா கலெக்ஷன்ஸ்' என்றிருந்தது. எப்போதுமே அந்த வகை துணியில் உத்ராவிற்கு ஒரு ஆசை உண்டு. 'லக்னவ் லெஹங்கா...அக்கா திருமணம்...' நினைக்க நினைக்க கண்கள் பனித்தது.அதை பார்த்த குரு நாதன் ஒரு நாற்காலியை இழுத்து அவளருகில் போட்டு அதில் அமர்ந்தான்.

    " நேரம் இப்போதே எட்டாகிவிட்டது. சீக்கிரம் பார் உத்ரா. இது உனக்கில்லை. என் பீ ஏ பூஜாவிற்கு. அவள் பிறந்த நாளுக்கு சர்ப்ரைசாக இருக்கட்டுமே என்று! ஆயீஷா இருந்திருந்தால் அவளையே அழைத்து வந்திருப்பேன். ம்..சரி பாரு. உன் ரசனையையும் பார்ப்போமே!" என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.

    'இது வேறா' என்ரு மனதினுள் எண்ணியவள் சரி யாருக்காக இருந்தால் என்ன நல்லதாகவே தேர்வு செய்வோம் என்று பார்த்து பார்த்து ஒரு சந்தனமும் இளம் ரோஜா இதழ் நிறமுமாக இருந்த ஒன்றை தேர்வு செய்தாள். குருனாதனும் அதை ஆமோதிப்பதாக தலை ஆட்ட பணிப்பெண் அந்த புகைப்படத்திற்கான துணியை எடுத்து வந்து காட்டினாள்.

    "வாங்க மேடம். 'ட்ரையல்' காட்டறேன்" என்று அழைக்க "இல்லை வேண்டாம்" என்று மறுத்தாள் உத்ரா.

    "சும்மா போ உத்ரா" என்று குரு நாதனும் கூறிய போது அவனை முறைத்துவிட்டு அந்த பெண்ணுடன் சென்றாள் உத்ரா. அருகிலிருந்த கண்ணாயின் அருகில் சென்று தைக்கப்படாத அந்த துணியை உத்ராவிற்கு அணிவித்துக் காட்டினாள் அந்த பெண்.

    உத்ராவின் உயரத்திற்கும் மெல்லிய உடல் வாகிற்கும் அவளது சந்தன நிறத்திற்கும் அந்த உடை மிகவும் அழகாக இருந்தது.


    "வாவ் சூப்பர் மேடம். ரொம்ப அழகா இருக்கு" என்று அந்த பெண் கூறிய போது இது தனக்கில்லை வேறொருவருக்கு என்று கூறி அவளை தர்ம சங்கடப் படுத்தாமல் அமைதியாக புன்னகைத்தாள் உத்ரா.

    உடையை கழற்றும்முன் தன்னையே அதில் ரசித்தவாறு உத்ரா கண்ணாடியை பார்த்தபோது குரு நாதனும் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இருவர் பார்வையும் கண்ணாடியில் ஒன்றாக மோதிய போது சட்டென பார்வையை திருப்பினாள் உத்ரா. ஆனால் தன் ரசனை விழிகளால் உத்ராவை அளந்து கொண்டிருந்தவன் உத்ராவின் பார்வையைக் கண்டு உள்ளூர ரசித்துக் கொண்டிருப்பதை பாவம் உத்ரா அறியவில்லை.

    பணம் செலுத்தி பொருளை வாங்கிக் கொண்டு இருவரும் கிளம்பினர்.

    அடுத்ததாக ஒரு 'இமிடேஷன்' நகை கடைக்கு அழைத்துச் சென்று அவளுக்கு பிடித்தவாறு அந்த ஆடைக்கு பொறுத்தமான ஆபரணங்களை வாங்கிக் கொண்டனர்.

    அடுத்ததாக கார் நின்ற இடம் ஒரு பத்தடுக்குக் கட்டடம். காரிலிருந்து இறங்கும்முன் தன் அலைபேசியை எடுத்தான் குரு நாதன்.

    "பூஜா எங்கிருகே! நான் ஆஃபிஸ் வந்துவிட்டேன்"

    "ஓகே இதோ வர்றேன்"

    "இறங்கு உத்ரா. பூஜாவிடம் கொடுத்துட்டே போகலாம்"

    பதில் பேசாமல் உத்ரா இறங்கினாள். நிமிர்ந்து அந்த கட்டடத்தைப் பார்த்தாள்.

    "இவ்ளோ பெரிய ஆஃபிஸா"என்று கண்கள் அகல விரித்தவளை நிறைவுடன் ரசித்தவன் "இவ்ளோ பெரிய கட்டடம் என்றோ எனக்கு சொந்தமாகி இருக்க வேன்டியது தான்.ஆனால்... " என்று தன் கண்கள் சிவக்க உத்ராவிடம் திரும்பியவன் " இன்று இதில் ஒரு தளம் மட்டுமே எங்களுக்குரியது" என்று மேலே நடக்கத் தொட்ங்கினான்.

    "ஏன் என்னாச்சு?" என்ற உத்ராவின் கேள்வியை கவனியாதவன் போல் படிகளில் இரண்டிரண்டாக ஏறி மேல் சென்றான். அவன் வேகத்தை சமன் செய்ய உத்ரா ஓடிச் சென்றாள்.

    அங்கே பூஜாவும் மற்றொரு பெண்ணும் மட்டுமே இருந்தனர். மற்றவள் புதியவள். நவ நாகரிக ஆடையில் அதிக ஒப்பனையுடன் அழகாக இருந்தாள். அவள் தன்னை உன்னிப்பாக கவனிப்பது போல் உணர்ந்தாள் உத்ரா.

    உத்ராவின் கையிலிருந்த துணி மற்றும் நகையை வாங்கி புஜாவிடம் கொடுத்தான் குரு.

    "வெல் ஓகே பூஜா அதிக நேரம் இங்கே இருக்க வேண்டாம். எல்லாம் பார்த்துக்கோ. வேலை முடிந்ததும் எனக்கு 'ஃபோன்' பண்ணு" என்றுவிட்டு வேகமாக திரும்பி நடந்தான் குருனாதன்.

    "ஹாப்பி பர்த்டே பூஜா" என்று உத்ரா கூறிய போது குரு நாதனைப் பார்த்து லேசாக சிரித்த பூஜா உத்ராவிடம் நன்றி தெரிவித்தாள்.

    "ஹாப்பி பர்த்டே பூஜா" என்று குரு நாதனும் புன்னகைத்தான்.

    அடுத்து எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் காரில் உட்கார்ந்திருந்தாள் உத்ரா. ஆனால் கார் நின்ற இடம் உத்ராவின் அடுக்ககம். காரை வெளியிலேயே நிறுத்தி தன்னை இறக்கிவிடுவான் என்று உத்ரா நினைத்ததற்கு மாறாக 'விசிடர்ஸ் பார்க்கிங்'கில் காரை நிறுத்திவிட்டு தன் ஓவர்கோட்டை காரிலேயே கழற்றிவிட்டு கையில் ஒரு சிறு பையுடன் உத்ராவிற்கு முன்னதாகவே மாடிப் படி ஏறத் தொடங்கினான் குரு நாதன்.

    ஒன்றும் புரியாமல் என்ன கேட்பதென்ன தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்தாள் உத்ரா. வீட்டினுள் சென்ற குரு நேராக குளியலறைக்குச் சென்று இரண்டு நொடிகளில் டீஷர்ட்டும் ஜீன்ஸுமாக வந்தான்.

    உத்ரா அமைதியாக 'ஹாலி'லேயே நின்றாள். மணி பத்து. குரு நாதனோ குளிர்சாதனப் பெட்டியிலிருந்து ஒரு தண்ணீர் பாட்டிலுடன் சோஃபாவில் வந்து அமர்ந்தான்.

    பொறுமையை இழந்த உத்ரா "மணி பத்து" என்றாள்.

    "ஸோ வாட்?" என்று தோள்களைக் குலுக்கினான் குரு நாதன்.

    "இது நல்லா இல்லை. நான் மட்டும் தனியாக இருக்குமிடத்தில் நீங்கள் வந்திருப்பது சரி இல்லை" என்றாள் உத்ரா.

    "அதனால்"

    "அதனால் வேறென்ன? சீக்கிரம் கிளம்புங்க"என்றாள் தயக்கத்துடன்.


    உரக்கச் சிரித்தவன் "என் வீட்டிலிருந்து என்னையே போகச் சொல்றியா?" என்றுவிட்டு வீட்டின் வாயிற் கதவை அடைத்து உட்புறமாக தாழிட்டான்.

    உத்ராவின் இதயம் தொண்டைக்குள் வந்து துடித்தது. தன்னை சமாளிக்க முயன்ற உத்ரா மௌனமாக அடுத்த அறைக் கதவை திறந்து உள்ளே சென்றாள். இது போல் முன்னொரு நாள், ஊரில் குரு நாதன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டது நினைவு வந்தவளாய் 'இந்த முறை மட்டும் அப்படி ஏதும் நடக்க நினைக்கட்டும்,அவனது கன்னம் பழுத்துவிடும்'என்று மனதினுள் எண்ணிக் கொண்டாள்.

    "என்ன உத்ரா என்னைப் பார்த்தால் பயமாய் இருக்கிறதா?" என்றபடி உத்ராவைத் தொடர்ந்து வந்தான் குரு நாதன்.

    எதிர்பாராமல் மிக அருகில் கேட்ட குரலால் திடிக்கிட்டு திரும்பிய உத்ரா கால்கள் தடுமாறி பின்புறமாக சுவரில் சாய்ந்தாள்.அவள் தலை சுவரில் அழுத்தியதில் ' நைட்லாம்ப்' ஒன்று ஒளிர்ந்தது. அதன் மெல்லிய ஒளி வெளிச்சம் அறையின் இருளை அரைகுறையாக போக்கியது.


    அந்த மெல்லிய வெளிச்சத்தில் உத்ராவின் மிக அருகில் நின்று கொண்டிருந்திருந்தான் குரு நாதன். உத்ராவின் இதயம் பன்மடங்கு வேகத்தில் துடித்தது. பயத்தில் உறைந்திருந்த அவள் முகத்தையும் சீரற்று வெளிவரும் மூச்சினால் உடலின் அசைவையும் மிக அருகில் நின்று ரசித்துக் கொண்டிருந்தான் அவன்.

    தன் நீளமான விரல்களால் உத்ராவின் நெற்றியில் இருந்த முடிக்கற்றையை விலக்கி அவள் காதருகில் செருகினான். உத்ராவின் படபடப்பு அதிகமானது. முன்னிருந்த மன நிலை முற்றிலுமாக‌ மாறி உத்ராவின் உள்ளிருந்த சலன மனது வெளிப்பட்டது. குரு நாதன் உத்ராவின் கன்னங்களில் தன் விரல்களால் நிமிண்ட கண்களை மூடிச் சிலையனாள் அவள்.


    தொடரும்...
     
  8. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi aarthi thanks for your lovely words.. ini kaadhalin sangeetham thodarum
     
  9. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    My dear Rajeni how r u... happy to see you after a loong gap.. mithra maligai complete panitengala... ipove poi read panren...
     
    Rajeni likes this.
  10. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    hey shinara very glad you came back. super update, enjoyed reading it.
     
    shinara likes this.

Share This Page