1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொங்கல் பண்டிகை

Discussion in 'Stories in Regional Languages' started by periamma, Jan 13, 2018.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கதையில் உலா வரும் பாத்திரங்கள்

    ராமன் லக்ஷ்மி தம்பதியர்
    அவர்கள் மகள் தேவி மருமகன் சிவா
    தேவியின் மகன் ஹரி மருமகள் வர்ஷினி
    தேவியின் மகள் அம்ருதா மருமகன் கிரி


    அந்த ஊரின் பெருந்தனக்காரர் ராமன் .அவர் மனைவி லக்ஷ்மி .இவர்களது ஒரே புதல்வி தேவி .தேவியை லக்ஷ்மியின் அண்ணன் மகன் சிவாவுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள்
    .மகளுக்கு பொங்கல் சீர் கொடுத்து விட்டு வந்த ராமன் தன மனைவியிடம் நம் வீட்டில் பொங்கல் வைக்க என்ன வாங்க வேண்டும் என்று சொல்லு போ.ய் வாங்கி வருகிறேன் என்று சொன்னார்
    .அதற்கு லக்ஷ்மி நாம் இருவரும் தானே இருக்கிறோம் அதனாலே எல்லா காய்கறிகள் கிழங்கு எல்லாம் ஒவ்வொரு கிலோ வாங்குங்க .நம் வயலில் விளைந்த கரும்பு நெறைய வெட்டி கொண்டு வர சொல்லுங்க
    .அப்படியே பனங்கிழங்கும் தோண்டி எடுத்து வர சொல்லுங்க .நம்ம வீட்டுக்கு பொங்கல் அன்று வரவங்களுக்கு கரும்பும் கிழங்கும் கொடுக்கணும்னு சொல்லிட்டு இருக்கும்போது வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது
    .இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி இந்த நேரத்தில் யார் வராங்கன்னு யோசிச்சாங்க .வாசலை பார்த்து கொண்டு இருக்கும் போது அவர்கள் மகள் வயிற்று பேரன் ஹரியும் அவன் மனைவி வர்ஷிணியும் உள்ளே நுழைந்தார்கள்
    .இருவர் கைகளிலும் பெரிய பைகள் இருந்தன .பேரனை பார்த்ததும் தாத்தா பாட்டிக்கு சந்தோசம் வாய்யா ஹரி வாம்மா வர்ஷினி என்று வரவேற்றார்கள்
    .உடனே ஹரி வர்ஷினி பாட்டி தாத்தா எப்டி இருக்கீங்க என கேட்டு விட்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள் .பின் தாங்கள் கொண்டு வந்த பைகளை விளக்கு முன் வைத்தார்கள்
    .பின்னாலே வந்த கார் டிரைவர் ஒரு சிறிய சாக்கு மூட்டையை கொண்டு வந்து விளக்கு முன் வைத்தான் .ராமனுக்கும் லக்ஷ்மிக்கும் ஒன்றும் புரியவில்லை .ராமன் ஹரியிடம்
    என்னப்பா இது எல்லாம் என்ன கொண்டு வந்திருக்கேன்னு கேட்டார்.அதற்கு ஹரி தாத்தா உங்களுக்கு பொங்கல் சீர் கொண்டு வந்திருக்கோம்னு சொல்லி விட்டு சிரித்தான்

    .உடனே லக்ஷ்மி ஏம்பா நாங்க பெரியவங்க தான் உங்களுக்கு குடுக்கணும் அப்டின்னு சொன்னாள் .ஏன் பாட்டி நீங்க எங்களுக்கு தான் நெறைய கொடுத்திருக்கீங்களே அதுவே போதும்
    .இப்ப நாங்க சின்னவங்க உங்களுக்கு குடுக்கணும் அது தான் முறை .வாங்கிட்டே இருக்க கூடாது பாட்டி .கொடுக்கவும் செய்யணும் அதிலே எல்லாருக்கும் சந்தோசம் கிடைக்கும்னு ஹரி சொன்னான்
    .பாட்டி நீ எங்க குடும்பத்துல பிறந்தவங்க எங்க தாத்தாவுக்கு தங்கை அப்ப நாங்களும் பொங்கல் சீர் குடுக்கனும்ல .தாத்தாவுக்கு பதில் பேரன் கொண்டு வந்திருக்கேன்னு சிரிச்சுகிட்டே சொன்னான்
    .லக்ஷ்மிக்கு கண்ணீர் வந்து விட்டது .எத்தனை வயது ஆனாலும் பிறந்த வீட்டு சீர் வந்தா பெண்களுக்கு பெருமையாக இருக்கும் .

    சரிப்பா நான் போய் குடிக்க ஏதாவது கொண்டு வரேன்னு லக்ஷ்மி எழுந்தாள்
    .வர்ஷினி பாட்டி நீங்க இருங்க நான் போய் காபி போட்டு கொண்டு வரேன்னு அடுப்படிக்கு சென்றாள் .லக்ஷ்மியும் அவள் கூட சென்று காபி போட உதவி விட்டு முறுக்கு அப்பம் எல்லாம் எடுத்து கொண்டு வந்தார்கள் .பின் நால்வரும் பேசி கொண்டே சிற்றுண்டி சாப்பிட்டார்கள்

    ஹரி தன் தாத்தாவிடம் பொங்கல் பண்டிகை பற்றி வர்ஷினிக்கு சொல்லுமாறு கேட்டான் .ஏன் என்றால் வர்ஷினி நகரத்தில் வளர்ந்தவள் என்பதால் பொங்கலின் முழு சிறப்பும் தெரியாதவள் .ராமன் சொல்ல ஆரம்பித்தார்.

    பொங்கல் பண்டிகை நாம் நம் வாழ்க்கையின் ஜீவாதாரமான சூரியன் வாயு நீர் நிலம் வான் ஆகியவற்றுக்கு நன்றி சொல்லும் பண்டிகை ஆகும் .சூரியன் இல்லையேல் உலகம் இயங்காது .நீர் இல்லையேல் பயிர்கள் வளராது
    .காற்று இல்லையேல் நாம் உயிர் வாழ முடியாது .பூமி தாய் நமக்கு தேவையான தானியங்கள் காய்கறிகள் கொடுக்கிறாள் .மாசு பட்டிருக்கும் வான் வெளியை நாம் எரிக்கும் பனைஒலை புகை தூய்மைபடுத்தும்
    .இது தவிர நமக்காக உழைக்கும் வாய் இல்லா ஜீவன்கள் மாடுகளுக்கும் நன்றி செலுத்துகிறோம் .அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி கழுத்தில் மாலை அணிவித்து அழகு பார்க்கிறோம் .

    இது மனிதர்கள் மற்ற உயிர் இனங்களுக்கு நன்றி செலுத்தும் பண்டிகை என விளக்கமாக சொன்னார்.


    அனைவருக்கும் என் மனம் நிறைந்த பொங்கல் நலல்வாழ்த்துக்கள்
     
    Adharv, sindmani and joylokhi like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Moderators pl move this story to regional story thread
     
  3. GeetaKashyap

    GeetaKashyap IL Hall of Fame

    Messages:
    3,921
    Likes Received:
    9,220
    Trophy Points:
    460
    Gender:
    Female
    @periamma

    So many nice jalebis! Mmmm... Very nice.

    Happy Pongal to you and your family.:)
     
    periamma likes this.
  4. joylokhi

    joylokhi Platinum IL'ite

    Messages:
    1,727
    Likes Received:
    2,525
    Trophy Points:
    285
    Gender:
    Female
    Happy pongal wishes. Very nice story of meaning behind our festivities!
     
    periamma likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @GeetaKashyap Happy Pongal to you.
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @joylokhi Thanks for your wishes. Happy Pongal to you.
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
  8. Adharv

    Adharv Gold IL'ite

    Messages:
    810
    Likes Received:
    951
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Hi Ma'am, Ungalukkum Pongal thirunal nal vazhthukal.

    Miga arumaiyaga & surukamaga pongal pandigai pattri share seithadhukk mikka nandri. It was really nice and cute including the sweet exchanges :)

    Thank you and Happy festival once again.
     
    periamma likes this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Adharv Thanks for your wishes .
     

Share This Page