1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வானவில்

Discussion in 'Regional Poetry' started by Rrg, Nov 19, 2017.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    ‘வானவில்’ தலைப்பில்சமீபத்தில்நடந்தஒருகவிதைபரிமாற்றம்.


    நட்புகளே,
    நான்ஒருதமிழ்இலக்கியப்பித்தன்; உண்மைதான். ஆயின்பித்தர்கள்எல்லாம்பேரரறிஞர்ஆவதில்லை.

    பிடித்தவகையிலெல்லாம்பாட்டுக்கள்வடித்ததில்லை.
    கவியென்றுஅழைக்கயான்அருகதையற்றவன்; ஆயின்
    கவிமழையில்நனைவதற்கோமுதலில்நிற்பவன்.

    நண்பரின் விருப்பத்திற்காய்இக்கவிதைவரித்தனன்.
    நான்எழுதும் ‘கவிதைகள்’ என்மனதைநிறைத்திடும்.
    என்னைஉணர்தோரின்உள்ளம்நனைத்திடும்.
    இதுவேஎன்கவிதைகளின்நோக்கம்.
    போட்டிக்காய்நான்வடித்தபாடல்கள்பலப்பல.
    அதுஅக்காலம்;
    போட்டிகளைத்தாண்டிபெருந்தூரம்வந்துவிட்டேன்.
    பொழுதோட்டநான்வரையும்கவிதைகள்இக்காலம்.
    பலஇடையூறுகளுக்குஇடையே (இக்கவிதை) எழுததலைப்பட்டேன்;
    தவறிருப்பின்மன்னிக்க; தாழ்மையுடன்விண்ணப்பம்.
    அன்புடன்,
    ராஜகோபாலன்


    வானவில் - ஒருகவிதை


    வீராசாமிஅண்ணன்விளையாட்டாய்விரும்பியதால் ‘வானவில்’ வந்துதித்தாள்வெவ்வேறுபடைப்புகளாய் !

    *வைதாவின்கவிதையோவர்ணங்களின்ஜாலமென்றால்
    விரைந்துவந்தமறுகவிதைரகு* செய்தமாயம்!
    (பரிமாற்றத்தில்வந்தபிறகவிதைகள்)*

    இவர்கண்டவானவில் -
    மேகமலர்சொரியல்மெல்லியபூங்காற்றில்
    காளைகதிர்வீச்சோடுகலவியதால்வந்துதித்தாள்.
    இவள்
    ‘அந்திகிழக்கே, அதிகாலைமேற்கில்வரின்’
    அன்னைமழையாளேஅலங்கரிக்கவந்திடுவள்.
    இதுபழமொழி.

    இவளை
    இந்திரதனுசுஎன்பர், இயற்கைஅன்னைவித்திட்ட
    தந்திரத்தின்விளைவென்பர் - சங்கத்தமிழ்க்காவியத்தில்
    தலைவன்கழுத்தில்தவழ்ந்திருந்தமாலைஎன்பர்
    தலைவியின்தாபத்தால்தரைமீதில்உதிர்ந்ததென்பர்.
    வானத்தேஉதிக்குமிவள்விழிகளுக்குவிருந்தவாள்
    உள்ளவரைஉள்ளத்திற்குஉவப்பளிக்கும்மருந்தவாள்.
    வரிவரியாய்கோலமிடும்வண்ணாத்திபூச்சியிவள்
    அழகுமிகுந்தவள்தான் - ஆயுளோசொற்பம்.

    நான்நிதம்காணும்வானவில்லோ (சில)
    நிமிடங்களில்மறைவதில்லை.
    இவள்தோன்ற
    ஆதவனும்தேவையில்லை; அடைமழையும்தேவையில்லை;
    சூரியனும்தேவையில்லை; துளிர்சாரல்தேவையில்லை.
    பல்லாண்டுஉடனிருந்துபரவசமாய்ஆக்கிடுவாள். என்
    படைப்பினிலேஉதித்தஒருஇணையற்றகவிதையவள்.
    அவள்பெயரைச்சொன்னாலேஆனந்தம்பெருக்கெடுக்கும்


    வானவில்என்றாலேவண்ணக்குவியல்அன்றோ?
    இவளைபலவண்ணங்களில், பலகோணங்களில்
    பேதையாய், பெதுவையாய் , மங்கையாய், மடந்தையாய்,
    அரிவையாயும்கண்டுநான்ஆனந்தம்கொண்டேன்தான்.

    தற்போதுதெரிவையாய்காண்கிறேன். இருதேன்மழலை
    சிட்டுகளின்தாயாகஒளிர்கின்றாள். காலப்போக்கில்
    பேரிளம்பெண்ணாகிபேரோடும்புகழோடும்
    வாழ்ந்திடுவாள்என்பதும்நான்காணும்ஒளிவண்ணம்.
    ஆம்! என்மகளைத்தான்சொல்லுகின்றேன். இப்போதும்

    கண்ணைமுடினினும் காட்சியாய் நின்றிடுவாள்
    கனிமொழிபேசிகவலைஎல்லாம்ஓட்டிடுவாள்.
    இறைகொடுத்தநல்முத்து; யான்பெற்றபெரும்சொத்து.
    மங்கையரின்எழுபருவம்வானவில்லின்ஏழு நிறம்;
    வண்ணங்கள்பலவானாலும்வெண்மைதான்அடிப்படை - வானவில்லில்
    வடிவுகள்பலவானாலும்அன்புதான்அடிப்படை- பெண்மையில்.
    பெண்மையைப்போற்றுவோம்; பெண்களைப்போற்றுவோம்.
    வாழ்கவளமுடன், வளர்கதமிழ்மொழி, வாழியபாரதமணித்திருநாடு.

    அன்புடன்,
    ராஜகோபாலன்
     
    periamma and PavithraS like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஐயா,வணக்கம் ! தமிழ்க்கவிதைப் பகுதியில் தங்களின் பதிவைப் படிப்பது இதுவே எனக்கு முதல்முறை. பகிர்ந்தமைக்கு நன்றி ! :)
    தமிழைக் குறுமுனிக்கருளியவரே ஒரு பித்தன் தாமே ! பேரறிஞர்க் குழாத்தில் இல்லாது போனாலும், அம்மொழியின் பிள்ளைகள் நாமும் பித்தராயிருப்பது பொருத்தமேயல்லவோ !
    தங்களின் நேர்மையானப் பிரகடனத்தை இரசித்து வரவேற்கிறேன்.
    மேகமலர்ச்சொரியலும் கதிர்வீச்சும் கலவியுற்றதெனும் வரிகள் வானவில்லை மேலும் வசீகரமாக்குகின்றன.
    வண்ணத்தில் ஏழு காட்டும் நொடிநேர வானவில்லினும் மேலாம் ஏழ்ப்பருவப் பெண்மையென்னும் வாழ்வொளிர் செய் வர்ணவில். இறைவன் உங்களுக்களித்த நற்குழவியைப் பற்றிய இக்கவிதை அழகொளிர்கின்றது.
    வண்ணங்களின் அடிப்படை எப்படி வெண்மையோ, அதைப் போன்றே வாழ்வில் வண்ணங்கூட்டும் எண்ணங்களின் அடிப்படை உண்மையன்பு . எவ்விடம் அன்பும் ,பெண்மையும் போற்றி நடத்தப்படுகின்றனவோ,அவ்விடம் தெய்வம் உறையும்/நிறையும். இக்கருத்தைத் தாங்கி வந்தத் தங்கள் வரிகளுக்கு நன்றி !

    என்றும் அன்புடன்,

    பவித்ரா

    பி.கு. இணையத்தின் தமிழ்த் தட்டெழுத்து மென்பொருளின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தங்களின் இப்பதிவில் சொற்கள் ஒன்றோடொன்று இடைவெளியின்றித் தொடர்ந்து பதிவாகியிருக்குமென்று எண்ணுகிறேன்.
     
    Rrg and periamma like this.
  3. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    பவித்ரா அவர்களுக்கு,
    தங்களது சிறப்பான கருத்துக்களுக்கு எனது நன்றி. மிக நன்றாக விமர்சித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்!
    நான் இங்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. இதற்கு முன்பும் சில கவிதைகளை இத்தளத்தில் வழங்கியுள்ளேன்.
    அந்நாளில் கவிதைகளைவிட என் சிறுகதைகள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. கிட்டத்தட்ட 100 சிறுகதைகள், மற்றும் பழமொழி விளக்கங்கள் இத் தளத்தில் பதிவாகின.
    உங்களது பதிவு என்போன்றோரை வெகுவாக ஊக்குவிக்கும் பாணியில் உள்ளதே அதன் தனிச் சிறப்பு.
    வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    ராஜகோபாலன்.

    பி கு: நான் உள்ளிடும் போது தனித்தனியாய் இருந்த வார்த்தைகள் யாவும், உள்ளிட்ட பிறகு கூடியதன் மர்மம் எனக்கு இன்னும் புரியவில்லை. இம்முறை என்ன ஆகுமோ?
     
    PavithraS likes this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஐயா - நான் வயதிலும்,அறிவிலும் மிக மிகச் சிறியவள். தங்கள் மகளையொத்தவள். இந்த விளிக்கு நான் தகுதியற்றவள். என்னைப் பெயரிட்டு அழைத்தால் சங்கடம் தீர்ந்து மகிழ்வுறுவேன். புரிதலுக்கு நன்றி!
    தங்களைப் போன்றோரின் பதிவுகளை விமர்சிக்கும் தகுதியும் எனக்கில்லை.இரசிக்க உரிமையுண்டு.அதை வெளிப்படுத்தும் நோக்கமுமுண்டு.அதன் விளைவே என் பின்னூட்டம்.
    தங்களது ஆசிக்கு மிக்க நன்றி !
    தாங்கள் இங்கு முன்னம் பதிவிட்டவற்றைப் படிக்கவும் ஆர்வமாயிருக்கிறேன்,முயல்கிறேன். இனியும் இயன்ற போதில் தாங்கள் இத்தளத்திற்கு வருகை தருவீர்கள் என்று எண்ணுகிறேன்.

    என்றும் அன்புடன்,

    பவித்ரா

    பி.கு. சில சமயங்களில் கணிப்பொறிக்கும் களைப்பு ஏற்படும் போலும்.அதன் காரணமாய், செய்யும் பணியில் சற்றுச் சறுக்கல்,தொய்வும் அடைந்திருக்கலாம். அல்லது உங்கள் சொற்களை வேகமாய் வெளியுலகிற்குச் சொல்லும் ஆவலில் தடுக்கியடித்துக் கொண்டு பதிவேற்றம் செய்திட்டது போலும்,அதன் தொழில்நுட்பம் ! எப்படியாயினும்,இப்பதிவு சரியாகவே இடைவெளிவிட்டு வந்திருக்கின்றது,கவலை வேண்டாம். :)
     

Share This Page