1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அலுவலகத்தில் புது டீம். நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. அலுவலகத்தில் இன்று எனக்கு 'mentor' கிடைத்து விட்டார். இவரை பற்றி நான் இந்த வாரம் தான் இங்கு எழுதினேன். இன்று பேசும்போது தனக்கு 53 வயதாகிறது என்று குறிப்பிட்டார். இந்த வயதிலும் இவருக்கு வேலை மீது இருக்கும் ஈர்ப்பு என்னை கட்டிப்போட்டது. கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மாலை வேளையில் வீட்டிற்கு கிளம்பும் முன்னர் இவருடன் உரையாடி விட்டு தான் வந்தேன்.

    அலுவலகத்தில் இவரது இருப்பிடத்திற்கு பக்கத்து இடம் தான் என்னுடையது. தினமும் பேசி கொண்டிருந்தால் இவர் கடுப்பாகி விடுவாரோ என்று நினைத்து இன்று மாலை நான் பேசாமல் தயங்கி நின்றேன். இவரே என்னிடம் வந்து இன்று எந்த சந்தேகமும் இல்லையா? என்று என்னிடம் வழிய வந்து கேட்டார்.தொழில்/துறை சார்ந்து நான் சந்தேகங்கள் எழுப்புவதும், துருவி துருவி கேள்விகள் கேட்பதும், நான் படித்ததை பகிர்ந்து கொள்வதும் இவருக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது என்று நினைக்கிறேன். இன்று ஒன்றரை மணி நேரங்கள் பேசி இருப்போம். இவரிடம் இருந்து நான் நிறைய கற்று கொள்கிறேன். Intellectual கிக்!!

    வேலை சார்ந்து எனக்கு mentor இதுவரை யாருமே இருந்தது இல்லை. இப்போ நீங்க தான் என்னுடைய mentor என்று நான் சொன்னவுடன் இவரது முகத்தில் அவ்வளவு பூரிப்பு. தினமும் 'evening class' வைத்து கொள்வோம்; எந்த கேள்வி/சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் என்னிடம் கேள் என்று இவரே சொன்னார். இதெல்லாம் எனக்கு ஒரு புது வித அனுபவம். கடவுளுக்கு மனமார்ந்த நன்றி!!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    இந்த வீடியோ எனது most favorite ஸ்கூல் மிஸ் என்னிடம் WA ல பகிர்ந்து கொண்டது. அவ்ளோ பிடித்தது!!

    இந்த வீடியோ பார்த்ததும் எனது அலுவலகத்து mentor தான் எனது நினைவிற்கு முதலில் வந்தார்.

    YT - VS Jithendra - படிப்பது எப்படி?

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Bestie WA ல அனுப்பியது. தத்துப் பித்துவம் அத்தனையும் அருமையோ அருமை. இரண்டு முறை நிதானமாக படித்தேன். சில நிஜங்கள் சுடுகிறது! வேறு வழி இல்லாமல் ஒத்துக்கொள்ளும் போது வலி குறைகிறது!!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    ஆறுதலே கூற முடியாத
    சில கஷ்டங்களுக்கு
    நிச்சயமாக அழுகை
    ஒரு மருந்தாக இருக்கும்

    நாளை என்பதே நமக்கு
    உறுதியில்லை
    நாளும் அது புரிவதில்லை

    பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
    பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்

    இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்
    ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை!

    நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

    நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது

    நம்மில் பெரும்பாலானோர்
    சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட
    இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம்

    வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்
    மனஅமைதியையும் தேடுங்கள்
    மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்
    ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை

    இனி எதற்கும் "ஏன்" என கேள்வி கேக்காதே என்று சொன்னால்
    அதற்கும்
    "ஏன்" என்று தான் கேட்பாள் இந்த பெண் .

    அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே
    இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

    சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது.
    15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

    கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

    வேலை இல்லாதவனின் பகலும்
    நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

    வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...

    மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால்
    அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான்

    எத்தனை காலம் கடந்தால் என்ன
    சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை

    இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்
    வாழ் நாட்கள் போதாது
    ஏனெனில்
    இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம்

    பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
    எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.


    தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும்,
    நேர்மையான வழியில் சென்று தோற்பவனை
    தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
    குற்றங்களுக்கு காரணம்!

    சிரித்துக்கொண்டே
    உன்னோடிருந்து
    உனைசீரழிக்கும்
    துரோகியை விட
    முறைத்துக்கொண்டே
    உன்
    முன்னிருக்கும்
    எதிரி_மேலானவன் !!

    அவ்வளவு
    எளிதாக யாரிடமும் இருந்து
    பிரிந்து விட
    இயலவில்லை
    பிரிவு என்ற பெயரில்
    கொஞ்சம்
    ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

    உனக்காக
    தன் மீதான
    நியாயமான வாதத்தைக்
    கூட நிறுத்திக் கொள்ளும்
    பெண் கிடைத்தால்
    ஒருபோதும் இழந்து விடாதே

    அலைகளில் கால்களை
    நனைக்கும் சுகம்
    கப்பலில் கடல்
    நடுவில்
    பயணப்படும்போது
    கிடைப்பதில்லை
    பேரின்பம் வேண்டாம்
    சிறுசிறு சந்தோஷங்கள்
    போதும் வாழ்வை அனுபவிக்க

    நூறு பேரின் வாயை
    மூட முயற்சிப்பதை
    விட நம் காதுகளை
    மூடிக்கொள்வது
    சிறந்தது

    வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்

    புன்னகை பிரச்சினைகள் வருவதை தள்ளி போடும்
    மெளனம் பிரச்சினைகளே வராமல் தடுக்கும்
    எல்லா பிரச்சினைகளுக்கும் இந்த வாய் காரணம்..!!!

    அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்
    உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும்
    விலை கொடுத்து வாங்க
    முடியாது

    வாழ்வோடு போராடிச்
    சாவதிலும்
    சாவோடு போராடி
    வாழ்வதிலுமே
    வாழ்க்கை முடிந்துவிடுகிறது

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
    PavithraS and jskls like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பழைய பாடல்கள் ரிசர்ச் பண்ண நேரம் கிடைக்கவில்லை. கிடைத்த கொஞ்ச நேரத்தில் இப்போ நான் தேடிப்பார்த்ததில் என்னை மயக்கிய பாடல். இந்த பாடல் கேட்டு கொண்டிருக்கும்போதே மயக்க நிலைக்கு இழுத்து சென்று விட்டது..வரிகளை கடைசி வரை கவனிக்கவே முடியவில்லை..எனது அபிமான கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கிக் வரிகள் + TMS/PS அவர்களின் கிக் குரல்களில்..:wink::wink:

    நம்ம TMS/PS collection ல கண்டிப்பாக இருக்க வேண்டிய பாடல் இது!!

    இதற்கு முன்னர் சொல்லி இருக்கிறேன் -> இங்கு ஒருத்தரை ராகிங் பண்றதுக்கு நான் ஆவலுடன் வெய்டிங் என்று..அவர் யார் என்று இந்த thread follow பண்றவங்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும்..அவருக்கு இந்த ragging assignment - இந்த பாடல் வரிகளுக்கு அர்த்தம் கண்டுபிடித்து விளக்கம் சொல்ல வேண்டும். :wink::wink:

    YT- நாணமோ இன்னும் நாணமோ - ஆயிரத்தில் ஒருவன் - MSV-TKR

    நாணமோ இன்னும் நாணமோ
    இந்த ஜாடை நாடகம் என்ன
    அந்த பார்வை கூறுவதென்ன
     
    suryakala and jskls like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Blue Whale game - விபரீதமான சைக்கோ விளையாட்டு. 50 நாட்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு கேனத்தனமான செயலில் இறங்க வேண்டும் - அர்த்த ராத்திரியில் தனியாக பேய் படம் பார்ப்பது, கைய கால பிளேடு ல வைத்து கீறி படம் வரைவது என்று தொடங்கி கடைசி நாளில் suicide ல முடிக்கணும். அந்த ரூல்ஸ் படிச்சதுக்கே எனக்கு பகீர் என்று இருந்தது. கொஞ்சம் கூட சுய புத்தி இல்லாம அவ்ளோ அறிவு கேட்டா இந்த இளம் வயதினர் இந்த விளையாட்டை விளையாடி உயிரை விடுவார்கள்? இளைய தலைமுறையினர் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள்??

    எவ்ளோ சீரியஸ் ஆக போய்ட்ருக்கும்போது இதை வைத்து ஒரு WA மெசேஜ் எனக்கு வந்தது. படித்ததும் சிரித்து விட்டேன்..

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    Husband silently downloaded the blue whale game on his wife's phone.
    .
    .
    .
    .
    .
    50 days later the blue whale committed suicide.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    என்னை பொறுத்தவரை
    Like மட்டும் தெரிவிப்பது புன்னகைப்பது போல.
    பதிவிட்டால் பேசுவது போல.

    இங்கு Like தெரிவித்து புன்னகை புரிந்த அனைவர்களுக்கும் நன்றி என்ற வார்த்தை சொல்லி கொள்கிறேன். :smiley:

    புன்னைகையோடு நிறுத்தாமல் ஒன்று இரண்டு வார்த்தைகள் பேசவும் செய்யலாமே? :smiley:
     
  6. chithirainilavu

    chithirainilavu Gold IL'ite

    Messages:
    724
    Likes Received:
    814
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Mam,

    I am a silent reader and admirer of this thread. I love all the songs u post and the description also. Keep rocking


    shara
     
  7. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    My like was for the video.
     
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அந்த நபர் இவரா ? @kaniths :)
    வேதா,நலமா ? நீ...ண்ட நாட்களுக்குப் பிறகு இத்திரிக்கு வந்தேன். வரிசையாக விருப்பம் தெரிவித்தபடியிருந்த போதில் உங்களது விருப்ப விளக்கமும், ஒரு வரிப் பேச்சுக் கோரிக்கையும் பதிவிட்டிருந்ததைப் படித்தேன்,இரசித்தேன்,பதிலிடப் புகுந்தேன்.
    எனக்குப் பிடித்தக் கருப்பு வெள்ளைப் பாடல்கள் பலவற்றுள் ஒரு பாடலைப் பதிகிறேன். வீர அபிமன்யூ திரைப்படத்தில் இடம்பெற்ற கே.வி.மஹாதேவன் அவர்களது காத்திரமான தேனிசை , கண்ணதாசனின் தேந்தமிழ் , பி.பி.ஸ்ரீநிவாஸ் -பி.சுசீலா இருவரது தேன் குரல்,தேனிலவினிரவில் காதலர் பாடுவதாக அமைந்தக் காட்சியமைப்பில் ஏ.வி.எம்.இராஜன் - காஞ்சனா இருவரது நடிப்பு - இவையாவுமிணைந்த
    -பார்த்தேன்.. சிரித்தேன்... பக்கம் வரத் துடித்தேன்...
     
    singapalsmile, kaniths and jskls like this.
  9. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Pathungi kolungal!! Abathu andha pakkam erukirathu!! :facepalm:
     
    singapalsmile, PavithraS and jskls like this.
  10. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    singapalsmile, PavithraS and jskls like this.

Share This Page