1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நான் கடந்த வாரம் பார்த்த ஒரு புது படத்தில் இருந்து எனக்கு பிடித்த பாடல்..

    ஆவி/பேய்/பிசாசு படம் இதுவரை ஒன்று கூட நான் பார்த்ததில்லை..அதனால் இந்த படம் பார்க்கவா வேண்டாமா என்று கொஞ்சம் யோசித்தேன்..படத்திற்கு review ரொம்ப நல்லா இருந்ததால் படத்தை பார்த்தேன்..படத்தில் ஆவிகள் வந்தாலும் எல்லாமே ஜாலியான ஆவிகள்..முனீஸ்காந்த் க்கு காமெடி நன்றாக வருகிறது..கொஞ்சம் வித்யாசமான கதை..காமெடிக்கு பஞ்சமே இல்லை..வில்லன் வரும் சீன்கள் கூட சிரிப்பை வரவழைக்கும்..கண்டிப்பாக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்..காமெடியை ரசிக்க திரும்பவும் ஒரு முறை பார்க்கலாம்..கதாநாயகிக்கு ஒரு ட்விஸ்ட் இருக்கு..கதாநாயகன் ஆதி அரவான் படத்தில் நடித்தவர்..பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறார்..இவரும் இவரது நண்பரும் சேர்ந்து செய்யும் காமெடி கலக்கல்..

    YT - நீ கவிதைகளா கனவுகளா - மரகத நாணயம்

    காற்றோடு பரவும் உன் வாசம்
    தினமும் புது போதை தானே
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    யார் யாருக்கு எந்த படிப்பில் விருப்பமோ அந்த படிப்பு படித்தால் தானாகவே முன்னுக்கு வந்து விடுவார்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறேன். எந்த படிப்பையும் கிண்டல் பண்றதுக்காக இதை போஸ்ட் பண்ணவில்லை..படிப்பின் அருமை எனக்கு நன்றாகவே தெரியும்..

    வாழ்க்கையில் நான் இதுவரை எடுத்த முடிவுகளில் பெஸ்ட் என்று நான் சொல்லிக்கொள்வது எனக்கு பிடித்த படிப்பை நான் விரும்பி விரும்பி படித்தது தான். வாழ்க்கையில் என்றெல்லாம் சறுக்கலை சந்திக்கிறேனோ அப்போதெல்லாம் எனது படிப்பை நினைத்து கொள்வேன்..உடனே ஒரு புத்துணர்ச்சி எனக்குள் பிறந்து விடும்..சறுக்கலில் இருந்து எழுந்து விடும் தன்னம்பிக்கையும்/துணிச்சலும் தானாகவே வந்து விடும்..

    இந்த வீடியோக்களில் படிப்பை கலாய்த்து இருக்கிறார்கள்..படித்த படிப்பு இதுவாகவே இருந்தாலும் இந்த வீடியோ பார்த்து சீரியஸ் ஆகாமல் கொஞ்சம் சிரிங்க ப்ளீஸ்..:smile::smile:

    YT - MBA - FedEx Ad
    YT - Engineer's life - RJ Balaji
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    முதல் முறையாக இன்று தான் இந்த பாடலை கேட்கிறேன்..இந்த பாடல் கேட்டவுடனே பிடித்து விட்டது..வரிகளில் கிராமத்து வாசம்..

    இன்று எனக்கு தோன்றிய "Feb 2018 - Theme"

    இளம் வயது பசங்க தனக்கு பிடித்த பெண்ணுக்காக ஏங்கி பாடும் பாடல் வரிகள் கொண்ட பாடல்கள் வைத்து ஒரு youthful collection போடலாம்..அது மட்டும் அல்ல..அந்த பாடல் வரிகள் எதற்காக உங்களை கவர்ந்தது என்பதற்கு கண்டிப்பாக ஒரு பின்னணி வேணும்..:wink::wink:
    அந்த பின்னணி உண்மையாகவும் இருக்கலாம், கற்பனையாகவும் இருக்கலாம்..இதை பற்றி எந்த கேள்வியும் கேட்க பட மாட்டாது..

    பின்னணி இருக்கறவங்க - அதுக்கு ஏத்த பாடல் வரிகள் மட்டுமே இப்போவே தேட ஆரம்பிங்க..
    பின்னணி இல்லாதவங்க - பாடல் வரிகள் தேடி பிடித்து அதற்கு என்ன கதை விடலாம் என்று கற்பனை பண்ணவும் ஆரம்பிங்க..

    இப்போ என்னை விட்டால் குறைந்தது 7 பாடல்கள் பின்னணியுடன் போடுவேன் - இன்னும் கொஞ்சம் யோசிச்சா அந்த எண்ணிக்கை உயரும் - அது எல்லாம் உண்மையா கற்பனையா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்..:grinning::grinning:

    Feb 2018 - Theme - Okay vaa?

    YT - என் கண்ணு குள்ள - அப்புச்சி கிராமம்

    என் காதுல எசை போல
    பேசுர உன் கொரலாலே
    எசை போல நீயும் பேசவே
    எப்போவுமே ரசிக்கிறேன் நானே
    ஏதோ ஏதோ பாடுறேன் நானே

    குத்தாலத்து சாரல போல் நல்ல‌ சிரிக்க என் தேன்மொழி
    கன்னங்குழி போதாதுன்னு என்ன மயக்கும் உன் மைவிழி
     
    Last edited: Jun 29, 2017
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று இந்த பாடல் கேட்டதால் எனக்கு Feb 2018 தீம் தோன்றியது..இந்த பாடல் படம் பிடித்து இருக்கும் விதமும் சூப்பர்!!

    YT - அலுங்குறேன் குலுங்குறேன் - சண்டி வீரன்

    அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
    அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல

    பந்த நீ, பந்தல தாங்குற காலு நான்
    பந்து நீ, பந்துல நிரம்பி நிக்கும் காத்து நான்
     
    jskls likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று WA ல படித்து சிரித்தது..

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    ஒரு பல் மருத்துவரின் கேள்வி :

    டூத் ப்ரஷுக்கு எப்போ ரிடையர்மெண்டு குடுக்கணும் ..?!?

    சீனாக்காரன் : ஒரு வாரம்

    இங்கிலீஷ்காரன் : ரெண்டு வாரம்

    அமெரிக்காகாரன் : ஒரு மாசம்

    இந்தியன் : டூத் ப்ரஷுக்கா ..?!? ரிட்டையர்மெண்டா ..?!?
    கிடையவே கிடையாது ..!!

    டாக்டர் : அது ஏன் ..?!?

    எங்கூர்ல டூத் ப்ரஷ் முதல்ல பல் தேய்க்கிறதுக்கு ..

    அதோட முடியெல்லாம் விரிஞ்ச பிறகு தலையில டை அடிக்கிறதுக்கு ..

    அப்புறம் பாத்திரம் தேய்க்கிறதுக்கு

    அதுக்கப்புறம் ..வாஷ் பேசின் கழுவுறதுக்கு ..இல்லாட்டி கேஸ் அடுப்பு கிளீன் பண்ணுறதுக்கு ..

    கால் கொலுசு தேய்ச்சு க்ளீன் பண்ணுறதுக்கு ..

    அதோட முடியெல்லாம் தேஞ்சு கொட்டிப் போன பிறகு
    பாவாடை நாடா கோர்க்குறதுக்கு ..

    இதெல்லாம் முடிஞ்ச அப்புறம் தான் ரிடையர்மெண்டு..!!

    டாக்டர் பொத்துன்னு மயங்கி விழுந்துட்டாரு ..!!

    #எங்கவந்து_யாருகிட்ட

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    WA ல எனக்கு வந்த வீடியோஸ்..பார்த்தவுடன் அவ்ளோ பாசிட்டிவ் ஆக உணர்ந்தேன்..

    வாழ்க்கை அதன் போக்கிற்கு கன்னா பின்னா வென்று இழுக்கும்போது, எதிர்த்து எதிர் நீச்சல் போடும்போது நிறைய பாசிட்டிவ் டானிக் தேவைப்படும்..:grinning:

    YT - Gift song
    YT - Black Dot - White Question Paper
     
    Raniz likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பாடல்: கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
    இசை: MSV

    கவியரசரின் வரிகள் - சுவாரசியமான ஒன்றை கவனித்தேன். இந்த பாடலை அந்தாதி முறையில் அற்புதமாக எழுதி இருக்கிறார். பல்லவி 'ஓரம்' என்று முடிகிறது. முதல் சரணம் 'ஓரக் கண்ணில்' என்று ஆரம்பித்து 'வேதம்' என்று முடிகிறது. இரண்டாவது சரணம் 'வேதம்' என்று ஆரம்பித்து 'நாடும்' என்று முடிகிறது. இப்படியே மூன்றாம் சரணமும், நாலாம் சரணமும், ஐந்தாம் சரணமும் அந்தாதியில் இருக்கிறது.

    இந்த பாடலில் எனக்கு ஜெயச்சந்திரன் அவர்களின் குரல் வளம் ரொம்ப ரொம்ப பிடித்தது..அவ்ளோ பாந்தமா பாடி இருக்கிறார். நாள் முழுவதும் இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம்.

    வாணி ஜெயராம் - இவரும் நன்றாக பாடி இருக்கிறார். இதுவரைக்கும் இவரது பாடல்களில் ஒன்றோ ரெண்டோ தான் கேட்டு இருக்கிறேன். நிறைய பாடல்கள் கேட்டு கொண்டே இருந்தால் இவரது குரலும் பிடிக்க ஆரம்பித்து விடும்.

    இப்போதைக்கு, ஒரு தலை பட்சமான எண்ணமாக இருந்தாலும், பழைய பாடல்கள் என்றால் எனக்கு PS அவர்களின் குயில் குரலில் கேட்டால் தான் திருப்தி.

    டைரக்டர் KB யின் இந்த படத்தில் வரும் கோணலான உறவுமுறை சிக்கலை பற்றி யோசித்தால் இந்த பாடல் கேட்கும் மூட் போய்டும்.

    YT - ஆடி வெள்ளி தேடி உன்னை - மூன்று முடிச்சு

    ஓரக் கண்ணில் ஊற வைத்த
    தேன் கவிதைச் சாரம்
    ஓசையின்றிப் பேசுவது
    ஆசை என்னும் வேதம்
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    PBS, AM Raja அவர்களின் பாடிய பாடல்கள் கேட்டால் நிதானமாக போதை ஏறும் என்று நினைக்கிறேன்.
    TMS அவர்களின் பாடலை கேட்டால் இன்ஸ்டன்ட் போதை என்று நினைக்கிறேன்.

    TMS - இந்த பாடலை எவ்ளோ ஒன்றி போய் பாடி இருக்கிறார்..பாடி இருப்பவர் இவ்ளோ ரசனையாக பாடினால் ரசனையோடு பாடல் கேட்பவர்களின் ரசனை இன்னும் ஒரு படி உயராதா என்ன? அதுவும் பாடல் வரிகள் தூக்கலாக இருந்து விட்டால் இந்த பாடலை கேட்ட பிறகு வரிகள் தேர்ந்து எடுத்து போஸ்ட் பண்ணும் தெளிவு இருக்குமா? :wink::wink:

    TT - மன்னிக்க வேண்டுகிறேன் - இரு மலர்கள் - Vaali/TMS/PS
     
  9. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - நெஞ்சத்திலே நெஞ்சத்திலே - பிரிவோம் சந்திப்போம்
    இப்பாடலின் ஒவ்வொரு வாக்கிய முடிவும் அடுத்த வாக்கியத்தின் முதல் வார்த்தையாக அமைந்திருக்கும்

    நீ பேசியும், நான் பேசியும் தீராதம்மா பொழுதுகள்
    பொழுதுகள் தீரலாம். மாறாதென்றும் இனிமைகள்
    இனிமைகள் முளைத்தன ஆதாம்-ஏவாள் தனிமையில்!
    தனிமையில் இருவரும் பேசும் மௌனம் இள வெயில்!
    வெயில் சாரலடிக்கும். மழை கூடி அணைக்கும்!
    அணைக்கும் ஆசை ஆயிரம். அழைக்கும் பாஷை பா சுரம்!
    சுரம் ஏழிலும், சுவை ஆறிலும் கூடும் இன்பம் நெஞ்சத்திலே!
     
  10. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female

Share This Page