1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நேற்று இந்த thread க்கு நெருங்கிய தொடர்பு உள்ள ஒரு நண்பரிடம் நான் போனில் பேசினேன். பேசும்போது அவர் என்னிடம் இதை குறிப்பிட்டபோது எனக்கு அவ்ளோ சந்தோஷம் - "முன்பெல்லாம் பாடல்கள் கேட்கும்போது சும்மா அப்படியே கேட்டுட்டு போயிடுவேன்..இங்கு வந்த பிறகு பாடல் வரிகளை உன்னிப்பாக கவனித்து ரசிக்க ஆரம்பித்து விட்டேன்."

    இதே கருத்தை தான் இந்த thread க்கு தொடர்பு உள்ள எனது இன்னொரு நெருங்கிய நண்பரும் என்னிடம் சொன்னார்.

    பாடல் வரிகளை ரசிப்பத்தில் உள்ள சுவையை எனக்கும் எனது நண்பர்களுக்கும் உணர்த்திய இந்த thread க்கு எனது மனமார்ந்த நன்றி.
     
    anushri and stephanchennai like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று தான் முதல் முறையாக இந்த பாடல் கேட்கிறேன்/பார்க்கிறேன். ரொம்ப பிடித்தது!
    YSR பாடிய பாடல்களில் சில பாடல்கள் என்னை அதிகம் ஈர்த்து ஈர்க்கிறது. இந்த பாடலில் YSR குரலில் ஏதோ ஒரு மயக்கம். :wink::wink:

    Singers: YSR, Chinmayi
    MD: YSR
    Lyricist: PA. Vijay

    YT - நான் இனி காற்றில் - யாக்கை

    மெல்லிய சாரலும் மஞ்சளாய் வெய்யிலும் சேர்ந்தது போல்
    உந்தன் வெட்கமும் கோபமும் சேர்ந்ததடி
    தெத்துப்பல் கீறலும் கொஞ்சலடி
    காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடலில் ரொமான்டிக் ரசம் பொங்கி வழிகிறது..TMS/PS modulation - அம்மம்மா! கவியரசரின் வரிகள் - அப்பப்பா!

    தென்றல் தாலாட்டுதா? கடல் அலைகள் காலை நீராட்டுதா? எண்ணம் ஏக்கத்தில் ஏங்குதா?

    ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்க்குதா?


    இந்த வரிகள் எல்லாம் கேட்ட பிறகு, சிந்திக்கறதா? அப்படினா என்ன? :wink::wink:

    Lyricist: Kannadasan
    Singers: TMS, PS
    MD: MSV

    YT - முத்துக்களோ கண்கள் - நெஞ்சிருக்கும் வரை

    சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
    தந்துவிட்டேன் என்னை
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கொஞ்சிட்டே கெஞ்சறாங்களா? கெஞ்சிட்டே கொஞ்சுறாங்களா? :wink::wink:

    எப்படி இவ்ளோ கவித்துவமான வரிகள் எழுத முடியுது என்று அசந்து போய் நிற்கிறேன்!!

    கவியரசர்/PBS/PS - போட்டி போட்டு கொல்றாங்க!!

    Lyricist: Kannadasan
    Singers: PBS, PS
    MD:MSV-TKR

    TT - பால் வண்ணம் பருவம் கண்டு - பாசம்
     
  5. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hi veda

    காதலி காதலனை பிரிந்து அவனை காண முடியாமல் இருந்தால் பசலையால் இடை மெலியும் .
    இங்கு காதலன் காதலியை பார்த்து கொண்டே இருப்பதால் நாணத்தால் இடை மெலிந்தது.


    :clap2::clap2::clap2:
     
    Last edited: May 26, 2017
  6. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    stephanchennai likes this.
  7. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Last edited: May 26, 2017
  8. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT- அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி - பார்த்திபன் கனவு - MLV

    ஏக்கத்தால் படிந்து விட்ட தூக்கமில்லாத் துன்பத்தை
    ஒத்தி எடுத்திடவே மயிலே
    ஒத்தி எடுத்திடவே உதடவரைத் தேடுதடி

    This is one of my fav song. In this Kamala Lakshman Dance was super.
    This flim is based on Amarar Kalki's Parthiban kanavu.
     
    stephanchennai likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi APS,

    நாணத்தால் எப்படி இடை மெலியும்?

    திரைப்பட பாடல் வரிகளை எழுதுவது அவ்ளோ சுலபமான விஷயம் இல்லை. கற்பனை திறன் இருந்தால் மட்டும் போதாது. வார்த்தை வளமும்/ஜாலமும் வேண்டும். டைரக்டர் விவரித்த கதைக்கு ஏற்ப கவிஞர் கற்பனையில் மூழ்கி ரசனையுடன் பாடல் வரிகள் எழுதினாலும் மெட்டுக்கு பொருந்தவில்லை என்றால் வரிகளை/வார்த்தைகளை மெட்டுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும்.

    என்ன பார்வை உந்தன் பார்வை
    இடை மெலிந்தாள் இந்தப் பாவை


    இந்த வரிகளில் 'மெலிந்தாள்' என்பதை விட 'நெளிந்தாள்' என்பது மிக பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மெட்டுக்காக 'மெலிந்தாள்' என்று எழுதி இருக்க வாய்ப்பில்லை. மெட்டுக்கு 'நெளிந்தாள்' என்ற வார்த்தையும் அழகாக பொருந்தும். 'நெளிந்தாள்' இருந்தால் பாடலில் பொருள் தூக்கலாக இருந்து இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. :wink::wink:
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    APS,
    நீங்க போஸ்ட் பண்ண மூணு பாடல்களிலும் கண்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறது. பாடல்களில் கவிஞர்கள் கண்களுக்கு எவ்ளோ முக்கியத்துவம் தருகிறார்கள். கண்களை ஆராதித்து விட்டு தான் அடுத்த கட்டம் நோக்கி செல்கிறார்கள். :wink:

    நம்ம ஊர் கோயில் சிற்பங்கள் பார்த்து எத்தனையோ முறை நான் அசந்து போயிருக்கிறேன். இந்த பாடலில் ஆடுபவரின் நடனத்தில் இருந்த நளினம், பாவனைகள், அவரின் அழகு அப்படியே ஒரு சிலை உயிர் பெற்று ஆடியது போல இருந்தது. நான் பார்த்த கருப்பு வெள்ளை பாடல்களில் வரும் ஹீரோயின்கள் பெரும்பாலும் அழகு பதுமைகளாக இருக்கிறார்கள். உணர்வுகளை கவித்துவமாக வெளிப்படுத்துகிறார்கள். இயல்பாக நடிக்கிறார்கள்.
     

Share This Page