1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மித்ர மாளிகை..!

Discussion in 'Stories in Regional Languages' started by Rajeni, Oct 8, 2014.

  1. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Rajeni
    Neenga rajesh kunaraye thorkadichiduveenga pola eruku.... My god.... tilwistuku melaku twist... Ur Writing is amazing. .... Again mouth opened to know what next.
    Yaaru pa antha culprit....
     
    Rajeni likes this.
  2. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Naanum firstla irundhu storya read panni paathuten Ramya.. :) Ennenna miss panirukenu enake therila :p
     
  3. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Dear Sachini, Again nice observations.. Neenga storya mudikarathukulla naan mudichudren ;)
     
  4. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks dear SB.. The guilty will be Convicted :p (adhu engalukku theriyadhanu neenga ninaikradhu kekudhu ;) )
     
  5. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks Aarthi! Naan Rajeshkumar padichadhilla.. but I am flattered for being compared with such writers.
     
  6. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    30. மித்ர மாளிகை – மித்ராவின் அறை!

    கௌதமும் மேகாவும் அங்கு அமர்ந்திருந்த மற்றொரு ஜோடியை கவலையோடு பார்த்தார்கள். மித்ராவின் முகத்திலிருந்தே விக்ரம் சொன்ன செய்தி அவளை எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதை யூகிக்கமுடிந்தது. மேலும், மித்ராவின் குணம் இதை இலகுவாக மன்னிக்காது என்பதும் புரிந்தது. இதை விக்ரமும் அறிந்திருக்கிறான் என்பதை அவன் கண்களின் வெறுமை எடுத்துரைத்தது.

    அவரவர்கள் தங்கள் சிந்தனையில் மூழ்கியிருக்க அவர்கள் கவனத்தை ஈர்த்தது அழைப்புமணியின் ஒலி. கௌதம் எழுந்து சென்று கதவைத் திறக்க வெளியே சஞ்சை நின்றிருந்தான். அவன் பின் முகமெங்கும் குற்றவுணர்ச்சியை அப்பிக்கொண்டு மனோ நின்றான்.

    உள்ளே நுழைந்த மனோ எதிர்பாராமல் அங்கே விக்ரமை கண்டதில் ஆச்சரியப்பட்டு பின் அவனைக்கண்டு சங்கோஜமாய் தலையசைத்து புன்னகைத்தான். அந்த புன்னகை விக்ரமிற்கு தேவையாயிருந்ததோ பதிலுக்கு மனோவைக்கண்டு சினேகமாய் புன்னகைத்து பின் கௌதமை பார்த்து சொன்னான், “ஆல்ரெடி ஜாமின்ல எடுத்தாச்சா.. தாங்க்ஸ்.. நானே அதபத்தி கேக்கனும்னு நினச்சேன்”

    “யெஸ்.. நம்ப தேட்ற ஆளு ஆல்ரெடி அலெர்ட்டா தான் இருக்கான்.. மனோ இதுக்கு மேல உள்ள இருந்து யூஸ் இல்ல.. ஸோ சஞ்சைய அந்த வேலைய பாக்க சொல்லிட்டேன்” என்றான் கௌதம்.

    மனோ தயக்கமாக தன் சகோதரியின் அருகில் சென்று நின்று அவளைப்பார்த்தான். மித்ரா நிமிர்ந்து அவனைப்பார்த்தாள். விழிகளில் கோபம் கனன்றது. மெதுவாக அவளருகில் மண்டியிட்டு அவளை அன்னார்ந்து பார்த்து பேசினான்,

    “அக்கா.. ப்ளிஸ்க்கா.. நான் செஞ்சது தப்புதான்க்கா.. ஆனா நான் ப்ளான் பண்ணியெல்லாம் பண்ணலக்கா.. ஏதோ அந்த நிமிஷத்துக்கோவத்துல அப்படிபண்ணிட்டேங்க்கா.. ஆனா, கார் அப்பா கிட்ட போனதுமே.. அப்பாவ பாத்ததுமே.. நான் என்ன முட்டாள்தனம் பண்ணப்போறேன்னு புரிஞ்சு கார திருப்பிட்டேங்க்கா.. சத்தியமா அப்பாவ என்னால கொல்லமுடியாதுக்கா.. ப்ளீஸ் நம்புக்கா.. ப்ளீஸ்க்கா.. எனக்குவேற யாருமே இல்லக்கா.. அப்பா இல்லன்னா என்ன ஆகும்னு எனக்கு புரிஞ்சுடுச்சுக்கா.. ப்ளீஸ்க்கா.. ப்ளீஸ்க்கா..” என பாதிக்குமேல் குரல் உடைந்து கதறினான்.

    தன்னையும் அறியாமல் மித்ராவின் விழிகளிலும் கண்ணீர் வழிந்தது. அனிச்சையாய் அவள் கைகள் எழுந்து அவன் கன்னத்தை வருட மண்டியிட்டபடியே அவள் மடியில் முகம் புதைத்து இன்னும் அதிகமாக கண்ணீர்விட்டான் மனோ.

    அவர்களிருவரையும் ஒரு திருப்தியுடன் பார்த்தனர் மற்ற நால்வரும். விக்ரம் முகம் இளகி சிறிதாக புன்னகைத்தான்.

    மனோ மெல்ல ஆசுவாசப்பட்டு எழுந்து சற்று விலகினால் மித்ரா மறைந்துவிடுவாளோ என்று அஞ்சியவன் போல அவளருகில் அமர்ந்துகொண்டான்.

    கௌதம் மெல்ல தொண்டையை செருமிக்கொண்டு துவங்கினான், “ஸோ நீங்க அந்த லெட்டர ஏ.பி.கிட்ட குடுத்துட்டிங்க?” என்றான் கேள்வியாக விக்ரமை நோக்கி.

    “ஆமா”

    “அதுல என்ன இருந்துதுன்னு நீங்க படிக்கலயா?” என்றான் சந்தேகமாக.

    “இல்ல.. அந்த லெட்டர் ஒட்டியிருந்துச்சு.. ஸோ, நான் படிக்க கூடாதுனு அப்பா ஒட்டிருக்காருன்னு அத மதிச்சு நான் அத ஓப்பன் பண்ணால..” என்றான். படிக்காமல் விட்டதற்காக வருந்தியது குரல்.

    “ஸோ.. அந்த லெட்டர் ஏ.பி.கிட்ட தான் இருக்கு.. ஐ மீன் ஏ.பி. வீட்ல இருக்கலாம்.. முதல் தடவ மீனா கொல்லப்பட்ட போதும் சரி, அதுக்கப்புறம் ராஜி தாக்கபட்டபோதும் சரி அந்த கொலகாரன் எதையோ தேடிதான் ஏ.பி. வீட்டுக்கு வந்திருக்கான்.. ஒரு வேளை அவன் தேடி வந்தது இந்த லெட்டரையா கூட இருக்கலாம்” என்றான் கௌதம் யோசனையாக.

    “அப்போ அவன் ஏன் ஏ.. ஐ மீன் மாமாவ கொன்னப்போவே அத எடுத்திருக்கலாமே?” என்றான். அவன் ஏ.பியை மாமா என்று திருத்தியதைக்கண்டு மித்ராவின் இதழ்கள் மில்லிமீட்டர் அளவு ஏளனமாய் வளைந்தன.

    “கிடைச்சிருக்காது! அன்ட், நம்ப இன்வஸ்டிகேட் பண்ண ஆரம்பிச்சதுக்கப்புறம் அந்த லெட்டர் நம்ப கைக்கு கிடைச்சுடக்கூடாதுன்னு வேகமா செயல்பட்டிருக்கலாம்... அண்ட் தட் மீன்ஸ் தட் லெட்டர் மஸ்ட் ஹாவ் சம் க்ளூ” என்றான் கௌதம்.

    “ஓ.கே. புறப்படுங்க மித்ரா.. எவ்ரி மினிட் கவுன்ட்ஸ்.. உங்க வீட்ட மறுபடியும் சர்ச் பண்ணனும்!” என்று எழுந்தான் கௌதம். “நானும் வரேன்” என்று விக்ரமும் எழுந்துகொள்ள அனைவரும் புறப்பட்டனர்.

    வெளியே வர விக்ரம் தயங்கி நிற்பதை சிறிது லட்சியம் செய்யாமல் மித்ரா சென்று கௌதமின் காரின் பின் கதவைத் திறந்து ஏறிக்கொண்டாள். அவள் போவதையும் விக்ரம் முகம் கருத்து நிற்பதையும் கண்ட மனோ அவர்களுக்குள் ஏதோ வேறுபாடு என்று மட்டும் யூகித்தவனாய் தாமதியாமல் விக்ரம் அருகில் சென்று, “போலாமா அத்தான்?” என்றான்.

    தன்னை சுதாரித்துக்கொண்டு தனக்காக காத்திருந்த ஹோட்டலின் காரில் மனோவோடு விக்ரம் ஏறிக்கொண்டான். மற்ற நால்வரும் கௌதமின் காரில் ஏறிக்கொள்ள மித்ரா ரெஸிடென்ஸ் நோக்கி இரு கார்களும் விரைந்தன.


    ன் அருகில் எதுவோ சொல்லதுடிப்பவன் போல அமர்ந்திருந்த விக்ரமை நோக்கி மனோவே கேட்டான், “அக்காக்கு என்ன கோவம் அத்தான்?”

    எப்படித்துவங்குவது என யோசித்துக்கொண்டிருந்த விக்ரமும் கிடைத்த வாய்ப்பில் தான் யார், எதற்காக மித்ராவை திருமணம் செய்தான் என எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.

    விஜய்நந்தன் பற்றியோ கடந்தகாலத்தில் நடந்ததைப்பற்றியோ எதுவுமே தெரியாத மனோ அதிர்ச்சியில் உரைந்துப்போய் கேட்டுக்கொண்டிருந்தான்.

    விக்ரமே தொடர்ந்து சொன்னான், “உங்க அப்பாவ நான் பழிவாங்க நினைச்சது உண்மைதான்.. பட் மனோ.. மித்ராவ நான்.. ஐ மீன் அவள மீட் பண்ணதும் பழக ஆரம்பிச்சதும் வேண்ணா ப்ளாண்ட்டா இருக்கலாம் பட் ஐ ட்ரூலி ஃபெல் இன் லவ் வித் ஹர்.. ஷி இஸ் மை எவ்ரிதிங்க்” என்றான். கடைசி வரிகளில் காற்றாக வெளிவந்தது குரல்.

    அவனை கவலையோடு பார்த்தான் மனோ. விக்ரம் சொல்வது உண்மையே எனினும் அதை தன் அக்கா நம்ப வேண்டுமே என்றிருந்தது அவனுக்கு. அவள் நம்புவதும் மன்னிப்பதும் கடினமே என்றும் தோன்றியது. அவன் எண்ண ஓட்டத்தை படித்தவன் போல விக்ரம் சொன்னான், “ஐ வில் வெய்ட்” என்று.


    மித்ரா ரெசிடென்ஸை அடைந்து இவர்கள் உள்ளே விரைய சாமிநாதனும் மதுரமும் இவர்கள் அனைவரையும் ஒன்றாகக் கண்டு கலவரத்தோடு வரவேற்றனர். இடையில் வீட்டிற்கு யாரெல்லாம் வந்தார்கள் என்ற விசாரனையோடு அவர்களை கடந்து சென்றான் கௌதம். சஞ்சை அவர்களிடம் மேலும் ஏதோ விசாரித்துக்கொண்டிருந்தான்.

    தேடிவந்தது கடிதம் தான் என்றறிந்து அவரவர் தேடத்துவங்கினர்.

    மனோ முன் கூடத்தில் சுவரோட ஒட்டுயிருந்த தொலைக்காட்சியின் கீழிருந்த இழுப்பறைகளை திறந்து ஆராய்ந்துகொண்டிருந்தான். விக்ரம் ஏ.பி. அறையைப்பற்றி கேட்க அந்த அறையை தாங்கள் ஏற்கனவே பார்த்துவிட்டதாக சொன்னான் கௌதம்.

    கூடத்தை ஒட்டியிருந்த அறை அலுவலக அறைப்போலிருக்க அதற்குள் நுழைந்து மேஜை இழுப்பறைகள் துவங்கி அல்மிராக்களிலெல்லாம் தேடத்துவங்கினான் விக்ரம்.

    மித்ராவை தொடர்ந்து கௌதமும் மேகாவும் மேலே படியேறினர். மேகா முதல் தளத்தின் அறைகளுக்கு நடுவேயிருந்த கூடத்தை கண்களால் துழாவியவண்ணம் நடந்துகொண்டிருந்தாள்.

    மித்ரா தன் அறையை திறந்து விளக்குகளுக்கு உயிரூட்டிவிட்டு அந்த அறை தந்த நினைவுகளால் சற்று அயர்ந்து நின்றாள். கௌதம் தன் தேடுதலை துவங்காமல் கட்டிலின் ஓரத்திலமர்ந்து தன் கைரேகைகளை ஆராய்ந்து கொண்டிருந்தான். அவன் முகம் ஒரு நொடிக்கு ஒரு பாவமாய் மாறிக்கொண்டிருந்தது. அவன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருப்பதும் புரிந்தது.

    அதற்குள் அங்கு வந்து சேர்ந்த மேகா ஒரு நொடி அந்த அறையின் பிரம்மாண்டத்தைக்கண்டு விழிவிரித்து “வாவ்.. மித்ரா, யுவர் ரூம் இஸ் வெரி பியூட்டிஃபுல்” என்றாள். மித்ரா அவளைக்கண்டு மில்லிமீட்டர் அளவு புன்னகைத்தாள்.

    பின் திரும்பி கௌதமைப்பார்த்தவள் அவன் அப்படி அமர்ந்திருப்பதைக்கண்டு “என்னாச்சு?” என்றாள்.

    “நத்திங்.. ஜஸ்ட் திங்க்கிங்..” என்றான் பொதுவாக.

    அவனை விசித்திரமாய் பார்த்துவிட்டு மித்ராவிடம் திரும்பி, “நானும் உன் ரூம தேடலாம்ல?” என்றாள்.

    “ஷுர்.. அண்ட் லீகலி இப்போ இது என்னோட ரூமே கிடையாது” என்று ஒரு கசந்த புன்னகையை சிந்தினாள்.

    தர்மசங்கடமாக உணர்ந்தாள் மேகா. அதற்கும் சலமில்லாமல் அமர்ந்திருந்தான் கௌதம்.

    அதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியாமல் கௌதமைத் தாண்டி சென்று மித்ராவின் படுக்கையை ஒட்டியிருந்த பெட்சைட் டேபிளின் இழுப்பறைகளைத் திறந்து ஆராயத்துவங்கினாள்.

    மித்ரா மெல்ல நடந்து சென்று தன் வார்ட்ரோபை திறந்து தேடத்துவங்கினாள்.

    மேகா திறந்த இழுப்பறைகளில் ஒன்றில் மித்ராவின் டைரிகள் இருந்தன. அதை எடுத்து பக்கங்களை புரட்டாமல் கவிழ்த்துப்பிடித்து உள்ளே ஏதேனும் காகிதமோ கடிதமோ வைக்கபட்டிருந்தால் விழும்வண்ணம் விரல்களால் பக்கங்களை வேகமாக நீவினாள். அந்த ஒலிக்கேட்டு மித்ரா திரும்பிப்பார்த்த அதே நொடி ஏதோ ஒன்று அந்த டைரியிலிருந்து கீழே விழுந்தது.

    ஆர்வமாக மித்ரா அங்கு விறைய மேகா விழுந்ததை எடுத்தாள். அது விக்ரமின் புகைப்படம். அவர்கள் காதலித்தப்போது மித்ரா வைத்திருந்தது என்று விளக்கங்களில்லாமல் புரிந்தது. மேகா அதை கட்டிலில் போட்டுவிட்டு மற்றொரு இழுப்பறையைத்திறந்தாள். அதில் சில வார பத்திரிக்கைகளும் வாழ்த்து அட்டைகளுமே இருந்தன.

    வாழ்த்து அட்டைகளில் அவள் கட்டுப்பாட்டை மீறி மித்ராவின் விழிகள் ஓடின. அதில் பல பல்வேறு தருணங்களில் அவள் தந்தை அளித்தது. இன்னும் சில விக்ரம் அவளுக்கு கொடுத்தது. தலையை சிலுப்பிக்கொண்டு மீண்டும் வார்ட்ரோபிற்கு சென்று தேடத்துவங்கினாள்.

    அவள் கவனம் தேடுவதில் முழுதாக பதியாமல் வாழ்த்து அட்டைகளையே சுற்றிக்கொண்டிருக்க ஏதோ உறுத்தலில் சட்டென திரும்பி கட்டிலில் மேகா போட்டிருந்த அட்டைகளைப் பார்த்தாள். பின், யோசனையோடு நடந்து சென்று அதிலிருந்த ஒரு சிகப்பு அட்டையை கையிலெடுத்தாள். “ஹாப்பி பர்த்டே டியர் டாட்டர்” என்றது அட்டையின் முன்புறம். இந்த அட்டையை ஏ.பி. அவளுக்கு தந்ததாக அவளுக்கு நினைவில்லை. மேலும், ‘அப்பாவிற்கு சிகப்பு பிடிக்காதே’ என்று யோசித்தவண்ணம் அட்டையை பிரித்தாள்.

    உள்ளே வலதுபுறம் வழக்கமான வாழ்த்து அட்டையின் அச்சடித்த வார்த்தைகளிருக்க இடதுபுறம் ஏ.பி.யின் கையெழுத்தில் வரிகள் பளிச்சிட்டன.

    Happy Birthday My Princess!
    You know what’s your birthday gift?
    A Vacation at Mount Christ Island!
    Start Packing!!

    With Love,
    Dad

    (“ஹாப்பி பர்த்டே மை பிரின்ஸஸ்! யூ நோ வாட்ஸ் யூவர் பர்த்டே கிஃப்ட்? எ வெக்கேஷன் அட் மௌன்ட் கிறைஸ்ட் ஐலாண்ட்! ஸ்டார்ட் பேக்கிங்!! வித் லவ், டாட்”)

    யோசனையில் புருவங்கள் நெரிய அந்த வரிகளையே பார்த்துக்கொண்டிருந்தாள் மித்ரா. இப்படி சில பிறந்த நாட்களுக்கு அவள் தந்தை வெளி நாட்டுப்பயணங்களை பரிசளித்ததுண்டுதான். ஆனால் இதில் குறிப்பிட்டிருக்கும் இடத்திற்கு சென்றதாக அவளுக்கு நினைவில்லை. அத்தோடு இந்த இடம் எங்கிருக்கிறது என்று கூட தெரியவில்லையே என்று யோசித்தவண்ணம் “மௌன்ட் கிறைஸ்ட்! மௌன்ட் கிறைஸ்ட்” என்று உச்சரித்தவள் சட்டென நிறுத்தினாள். ஆச்சரியத்தில் அவள் விழிகள் விரிந்தன. மெல்ல சொன்னாள், “நாட் மௌன்ட் கிறைஸ்ட்! மான்ட் கிரிஸ்டோ! (Not Mount Christ! Monte Christo!)”

    (தொடரும்)
     
    Sweetynila, Deepu04, periamma and 3 others like this.
  7. Suzanne

    Suzanne New IL'ite

    Messages:
    2
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Arumai Rajeni.. Ungal ezhuthukkaluku naan adimai:)
     
    Rajeni likes this.
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Rajeni tension eri kitte poguthe .super narration
     
    Rajeni likes this.
  9. ramyarajan

    ramyarajan Bronze IL'ite

    Messages:
    77
    Likes Received:
    34
    Trophy Points:
    38
    Gender:
    Female
    E
     
    Rajeni likes this.
  10. niriha

    niriha Bronze IL'ite

    Messages:
    44
    Likes Received:
    44
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Yaaruda andha culprit nu manda pichikudhu :thinking:, therinja story mudinjidumaenu varuthamavum irukudhu :shakehead:.... Nice narration and story....

    Regards,
    Niriha
     
    Rajeni likes this.

Share This Page