1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நாதநாதம் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Oct 27, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உடுக்கை யொத்த இடியொலியும்,மிடுக்காய் அந்த
    விடையேறும் அரனின் மூன்றாம் கண் தீப்பொறியாய்
    கண் பறிக்கும் மின்னலொளியும்,சடாமுடியில் தங்கும்
    தண்ணென்ற கங்கை ஒத்துக் கொட்டுகின்ற மழையும்,
    சேர்ந்திசை வழங்குகையில் எழுப்புகின்ற தாள இலயம்,
    ஆர்ப்பரிக்கும் மனதிற்குள் மௌனத்தைக் கொண்டு தரும் !

    ஈசான்யம் மட்டுமல்ல திசையாவும் கேட்கும் வண்ணம்,
    ஈசானுபவத்தின் ஒலி பிரணவத்தோடு மனதில் புகும் !
    மெதுவாய்க் கேட்குமொலி மெல்ல,மெல்ல வேகமேறி
    அதுவே நாடியெங்கும் நர்த்தனிக்கத் தொடங்கும் போது ,
    ஐம்புலன்கள் செயலிழந்து மனதின் ஆட்டம் நின்றுவிடும் !
    அம்புலியைச் சூடியவன் தாண்டவமே தொடர்ந்து விடும் !

    எங்கும் நிறையொலியை நம் செவிகளாலே கேட்பதில்லை!
    பொங்கும் அவனொளியைக் கண்கள் மூலம் பார்ப்பதில்லை !
    மழையாய்க் கொட்டும் அவனருள் தனையும் உணர்வதில்லை !
    குழைகின்றக் கருணையில் நனைய மனம் நினைப்பதில்லை !
    இப்படியே இருந்துவிட்டால் பிறவி பெற்றும் பெருமையில்லை
    அப்பனவன் பொன்னடிக்கீழ் பணிந்து விட்டால் துன்பமில்லை !

    வேட்கின்ற அன்பர்க்கெலாம் பார்ப்பதெலாம் அவன் உருவம் !
    கேட்கின்ற ஒலியிலெல்லாம் நிறைவதுவும் இறைவன் நாதம் !
    புறத்தெழும் ஆசையொலி நிறுத்திக் கொஞ்சம் உள்ளிருக்கும்,
    அறத்திலுள்ள அன்பினொலி நாம் கேட்கத் தொடங்கிவிட்டால்,
    உருவிலே உறைவதும், அருவமாய்த் திரிவதும், ஆதியந்தமிலா
    பரஞ்சோதியாய் ஒளிர்வதும்,பரமனேயென்பது நன்கு புரியுமே !

    Regards,

    Pavithra
     
    knbg, rai, periamma and 4 others like this.
  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நான் மௌனமுற்றேன் என்று முதலில் சொன்னதும்,
    நன்று உங்களின் 'ஐந்து' ப(க்)(த்)திமுத்து என்றதும்,
    அங்கணன் குறிப்பினை உணர்ந்தே,நற்றமிழ்க் கவியே !
    எங்கேனுமோர் குறிப்புண்டு, செந்தேனாம் உம் கவியில் !
    அதைத் தேடிப் பி(ப)டிப்பதே வாசகர் எமக்குத் தொழில்!
    புதையலைத் தேடுதல்,அதை அடைவதினும் மேலன்றோ?

    இப்பத்தியை எழுதத் தூண்டியமைக்கு என் நன்றி ! :)
     
    periamma and rgsrinivasan like this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Lovely one Pavithra. சிலருக்கு அகக்கண்ணில் காட்சி அளிக்கிறான். சிலருக்கு ஒலியில் உணர்த்துகிறான். விழிப்புடன் இருந்துவிட்டால் அவனருளோடு ஒலியிலோ ஒளியிலோ அவனை காண முடியும். நமச்சிவாய வாழ்க !
     
    PavithraS likes this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, லக்ஷ்மி !

    ஆம். ஒளியிலும்,ஒலியிலும் ,மழைத் துளியிலும்,வெளியிலும், உள்ளிலும் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைத்தன்மையை, நமக்கேற்ற வழியைத் தேர்ந்தெடுத்துப்,பயணம் செய்தால் நாமும் உணரமுடியும், அடைய முடியும் .

    நிலையில்லாத நம் சுயத்தைப் பற்றிய எந்த நினைவுமின்றிக் ,கனவுமின்றி, சிவத்தைப் பற்றியே சிந்திக்கும் ஆழ்நிலை உறக்க நிலை வாய்த்துவிட்டால் , அப்பேரொளி(லி)யைப் ,பார்க்கவும் கேட்கவும், வழிவகுக்கும் விழிப்புநிலை எய்திடலாம்.
     
    rai, periamma and jskls like this.
  5. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Hi,
    Very good poem. Your signature says it all.
    Thanks for sharing this lovely spiritual poem.
    Vaidehi
     
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you, Vaidehi ! My signature is my dad's favorite quote of Thirumoolar.
     
    vaidehi71 likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா எங்கும் அவன் .எதிலும் அவன் .அவன் அன்றி ஓர்அணுவும் அசையாது .படித்தேன் .இறையை உணர்ந்தேன்
     
    PavithraS likes this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆம் பெரியம்மா, அவனின்றி ஏதுமில்லை ! தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !
     
  9. rai

    rai Platinum IL'ite

    Messages:
    290
    Likes Received:
    559
    Trophy Points:
    205
    Gender:
    Female
    PavithraS,
    யாதுமாகி நிற்க்கும் இறைவனை காண முடிகிற‌து!
     
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மகிழ்ச்சி !
     

Share This Page