1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அந்நாள்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Oct 25, 2016.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    பொய்யாகிய மெய் என்னும்
    பை சுமந்து திரிகின்றோம்.
    செய்ய வேலை பல இருந்தும்
    பைய, புறம் பேசி உழல்கின்றோம்.

    நம் குறைகள் நிரம்பிய பை
    முதுகில் இருப்பதறியாது
    பிறர் குறித்து அவதூறாய்
    மொழிவதிலே மகிழ்கின்றோம்.

    புகழ் என்னும் மின்மினியை
    பிடித்திடவே அலைகின்றோம்.
    பகல் போன்று ஒளிர்வாரை
    புறம் தள்ளி வைக்கின்றோம்.

    எதைத் தேடி நாளெல்லாம்
    அலைந்தோமோ அவையெல்லாம்
    வீணென்றே ஒரு நாள் நாம் காண்போமே!
    அந்நாளும் விரைவில் வர அவனருளை வேட்போமே!
     
    PavithraS, jskls, ksuji and 1 other person like this.
    Loading...

  2. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Rgs,
    Very nice poem.
    Thanks for sharing.
    Vaidehi
     
    rgsrinivasan likes this.
  3. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    மனித மனத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டி இருக்கும் அழகான சிறிய கவிதை .
     
    rgsrinivasan likes this.
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Vaidehi for your quick appreciation and feedback. -rgs
     
    vaidehi71 likes this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks KSuji, for your appreciation. Happy to get a first from you here. -rgs
     
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆம்.புகழ் வெளிச்சம் மிகவும் ஆபத்தானது. முதலில் கவர்ச்சியாக இருந்தாலும், நம் பார்வையைக் குறுக்கி,புத்தியை மழுங்கச் செய்திடும்.

    ஆயிரம் கைகள் மறைத்தாலும், பகலைப் புறந்தள்ள முடியுமா ? பூனை கண்களை மூடிக் கொண்டால் பூலோகம் இருளுமா ? அறியாமையெனும் இருளால் குருடாகிய மனம் தான் அறிவாற்றலெனும் பகலைப் புறந்தள்ளும். ஆயினும் இருளைக் கிழிக்கும் வெளிச்சமாய், அறிவாற்றல் வெளிப்பட்டே தீரும்

    உண்மையே ! சும்மாயிரு, சொல்லற என்றதன் பொருளொன்றும் அறிந்திலோம். அந்தத் தெளிவு வாய்த்து விட்டால், அந்நாள் பிறந்திடும்.

    RGS, நீங்கள் ஆசைப்படும் அந்நாள் எல்லோர் வாழ்விலும் வர வேண்டும். உங்கள் மன ஆதூரத்தை வெளிப்படுத்தும் கவிதை. நன்று.
     
    rgsrinivasan, jskls and vaidehi71 like this.
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your to the point feedback Pavithra. I say to myself that I should not be one of those. Thats the intent rather than pointing anyone. Besides, there are many who always live in the darker confines, ultimately dragging those with a spark or a good intention too. This can be people with whom such good ones spend a lot of time rather unfortunately with. Its good to be like a sun, but if you are not wanted there, you won't be recognized no matter what you do. And if that matters to you, you will get hurt easily, unless you are strong willed and generous enough.
    -rgs.
     
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    As you said,
    நம் குறைகள் நிரம்பிய பை
    முதுகில் இருப்பதறியாது
    பிறர் குறித்து அவதூறாய்
    மொழிவதிலே மகிழ்கின்றோம்.

    இதுவே என் உரத்த சிந்தனையும் ! :)

    It is sad we all seek out some sort of inclusion every where. If it is not happening only some are courageous to accept the Truth and move on.
    Coming to the recognition part, I feel that, once somebody expects recognition, no matter what they do, end up belittling themselves, is not it ? We should go on doing our duties, as everybody has been sent with a mission. Instead of concentrating on finishing the mission and returning home, if we spend too much of time in the by products such as recognition, fame and name, we ourselves prolong our stay here. Not realizing and taking steps to correct our own mistake, we even find fault with that Supreme for our miseries. How pathetic, is it not ? Any ways thanks for sharing this and made me feel blissfully lost in some good thoughts. :)
     
    ksuji and rai like this.
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your inputs Pavithra. Alas, I am no saint and try writing what I experience and hear from others as well. -rgs
     
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Well , your words not only enthrall me but also enlighten. I can't comment on you being or being not a Saint, your words sure expose you as a good ,wise soul. Glad that I got a chance to know some one like you here. Best Wishes !
     

Share This Page