1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மித்ர மாளிகை..!

Discussion in 'Stories in Regional Languages' started by Rajeni, Oct 8, 2014.

  1. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Mithrama engamma poiteenga. Missing in heart mattum fill paneenga, mithravaiyum koncham kooti kondaangapa.
     
  2. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Rajeni dear, hope everything is fine with you. Missing your stories, please come soon
     
  3. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ohh please post next episode soon :scream::scream::scream::scream::scream::scream::crybaby2::crybaby2::crybaby2::crybaby2::crybaby2::crybaby2::crybaby2::crybaby2::crybaby2:
     
  4. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மித்ர மாளிகை – டைரி!

    கௌதம் தன்னை கேள்வியோடு பார்த்த இரு பெண்களையும் கவனியாமல் தன் போக்கில் சென்று சோஃபாவில் அமர்ந்தான். அவன் முகம் தீவிர சிந்தனையில் இறுகியிருந்தது. அவன் சிந்தனையையை இடவெட்ட மனமின்றி இருவரும் அமைதியாய் ஆவரவர் சிந்தனை ஓட்டத்தில் ஆழ்ந்தனர்.

    எத்தனை நிமிடங்களோ நொடிகளோ இப்படி அமர்ந்திருந்தனர் என்று மூவரும் உணராத நிலையில் சஞ்ஜை வந்து சேர்ந்தான்.

    “பாஸ்..”

    அவன் அழைப்பில் உயிர்பெற்றவனாய் கௌதம் அவனை ஏறிட்டான்.

    “பாஸ்.. மனோவ ஜாமின்ல எடுக்கறத்துக்கு பேப்பர்ஸ் ரெடி பண்ணிட்டேன்.. நாளைக்கு ஃபைல் பண்ணிடலாம்” என்றான்

    “வேண்டாம் டா..” என்றான் கௌதம்.

    “ஏன்?” என்றாள் மித்ரா தவிப்பாக.

    “இல்ல மித்ரா.. மனோவ ஃப்ரேம் பண்ண ட்ரை பண்ணிருக்காங்க.. அத போலிஸும் நம்பளும் நம்பிட்டதா காட்டிகனும்.. இட் வில் கிவ் அஸ் டைம்.. உங்க ரூம்ல என்ன இருக்குனு தெரியனும்.. எத எடுக்க தான் அன்னைக்கு அந்த உருவம் வந்துச்சு.. ராஜிய பொறுத்தவரைக்கும் ஷி ஸீம்ஸ் டு பீ இன்னொசன்ட்..” என்று துவங்கி அவளுடன் நடந்த பேச்சை சுறுக்கமாக சொன்னான்.

    “ஸோ.. நம்ப இந்த கேஸ விட்டுட மாதிரி கிரியேட் பண்ணனும்.. அதுக்கு மனோ கொஞ்ச நாள் உள்ள இருக்கனும்.. நான் இது பத்தி டி.சி.கிட்ட பேசறேன்.. ட்ரஸ்ட் மீ மித்ரா.. ஐ வில் ப்ரூவ் ஹிம் இன்னொசென்ட்..” என்றான் தீவிரமாக.

    “இட்ஸ் ஓ கே கௌதம்.. பண்ண அழிச்சாட்டியத்துக்கு கொஞ்சம் உள்ள இருக்கட்டும்..” என்றாள் மித்ரா. குரலில் கோபமும் ஆறுதலும் கலந்திருந்தது.

    “மேகா.. ஒரு பேப்பர் பென் குடு” என்றான் கௌதம்.

    மேகா அலுவலக அறையிலிருந்து எடுத்து வந்து தந்த நோட்பேடில் அவன் எழுத துவங்கினான் –

    மார்ச் 15 – ஏ.பி.யின் ஆக்ஸிடென்ட்.

    மார்ச் 16 – ஏ.பி வில்லை ராஜிக்கு மாற்றுகிறார்.

    மார்ச் 22 – ஏ.பி வில்லை பற்றி மனோவிடம் சொல்கிறார். அதை ராஜியும் கேட்டுவிடுகிறாள்.

    ஏப்ரல் 19 – ஏ.பி.யின் மரணம்

    மே 2 – மித்ரா வருகை

    மே 5 – மித்ரா ஏ.பி வீட்டுக்கு போகிறாள்

    மே 8 – ஏ.பி. அறையில் மாத்திரை கண்டிபிடிப்பு

    மே 9 – லேப் ரிசல்ட்

    மே 11 – இரவு மித்ரா அறையில் திருடன்

    மே 12 – மீனா கொல்லப்படுகிறாள்

    மே 13 – மனோ கைது

    என்று இதுவரை நடந்தவற்றை எழுதி அதை பார்த்தவண்ணம் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தான். மேகா அவனருகில் அமர்ந்திருக்க மித்ராவும் சஞ்ஜையும் அவனுக்கு பின் நின்று அவன் எழுதுவதை பார்த்தனர்.

    எழுதி முடித்து அதை ஒருமுறை பார்த்தவன் “மார்ச் 22க்கு அப்புறம் ஏப்ரல் 19க்குள்ள தான் எதுவோ நடந்திருக்கு” என்றான்.

    பின் மித்ராவிடம் சொன்னான் “நீங்க ஊருக்கு கிளம்புங்க மித்ரா”

    திகைத்து நோக்கியவளிடம் “ஐ மீன் நீங்க கிளம்பற மாதிரி ஏற்பாடு பண்ண ஆரம்பிங்க.. உங்க வீட்ல இருந்து கிளம்பி ஹோட்டல் போங்க.. கிளம்பும் போது மனோதான் கொலகாரன்னு வீட்டு வேலக்காரங்ககிட்ட சொல்லுங்க..” என்றான்.

    பின் சட்டென நினைவு வந்தவனாக, “மேகா அந்த ஏ.பி.யோட டைரி எடு” என்றான்.

    “சஞ்ஜை நீ கோர்ட்டுக்கு போ.. நான் ப்ரேம்குமார மீட் பண்ணிட்டு அங்க வந்துட்றேன்” என்று சஞ்ஜை அனுப்பிவிட்டு மேகா நீட்டிய டைரியை வாங்கி புரட்டினான்.

    டைரியில் ஏ.பி. தான் அந்ததந்த நாளில் சந்திக்க வேண்டிய ஆட்கள் செய்ய வேண்டிய காரியங்கள் பற்றி சுருக்கமாய் தன் கிறுக்கல் கையெழுத்தில் குறித்திருந்தார்.

    மார்ச் 16 அன்று மதியம் ஒரு மணிக்கு நேராக ராமசந்திரனை சந்திக்க வேண்டுமென குறித்திருந்தார். ஏற்கனவே இந்த டைரியை அவனும் மேகாவும் பார்த்திருந்தனர். எனவே, சற்று வேகமாக தனக்கு வேண்டிய பக்கத்திற்கு புரட்டினான். இதை பற்றி விசாரிக்கவேண்டுமென நினைத்து பின் நடந்த திருட்டு கொலை என்ற களேபரத்தில் மறந்து போனது நினைவுவந்தது. எப்படி மறந்தோம் என்று தன்னைக்குள் யோசித்தவனாக மித்ராவிடம் அந்த பக்கத்தை காட்டினான்.

    ஏப்ரல் 2 ஆம் தேதி பக்கத்தில் “மீட் ஹிம்” என்று மட்டும் குறித்திருந்தார். கேள்வியும் குழப்பமுமாய் அவனை ஏறிட்டாள் மித்ரா.

    “பெயர் எதுவுமே இல்லாம இப்படி எழுதிருக்கறது சந்தேகமா இருக்கு.. ஏன்னா மத்த எல்லா குறிப்புகளும் தெளிவாக புரியற மாதிரி இருக்கு.. அவரு யார சந்திச்சாருனு தெரியனும்.. அதுல நமக்கான க்ளு இருக்குமோனு தோணுது.. பட் எங்க யார எங்க மீட் பண்ணாரு.. இன்ஃபாக்ட் அந்த மீட்டிங் நடந்துச்சானு எப்படி தெரிஞ்சுக்கறதுனு தான் யோசிக்கறேன்..” என்றான் யோசனையோடு.

    “கௌதம்.. அப்பா யூஸ்வலா தாஜ்ல தான் அவரோட ஃபெரென்ட்ஸ மீட் பண்ணுவாரு.. அங்க அப்பா அன்னைக்கு டேபிள் புக் பண்ணிருக்காரானு விசாரிச்சுப்பாக்கலாமா?”

    “குட்.. விசாரிச்சுடலாம்..” என்றவன் மேகாவிடம் திரும்பி “ மேகா.. நான் ப்ரேம்குமார மீட் பண்ணி அவர்கிட்ட இது பத்தியும் சொல்லிட்டு தாஜ் வந்துட்றேன்.. நீயும் மித்ராவும் கிளம்பி நேரா அங்க வந்துடுங்க..” என்று எழுந்து நடந்தவன் சட்டென விரைந்து சென்று அந்த டைரியை எடுத்து புரட்டி பின் மேகாவிடம் அந்த பக்கத்தை அவசரமாய் காட்டி “மேகா.. இத எப்படி கவனிக்காம விட்டோம்” என்று ஏறக்குறைய கத்தினான்!


    தாஜ் கொரமண்டல் – நுங்கம்பாக்கம்.

    மேனேஜர் சுஷாந்த் ஷர்மா தன் எதிரில் அமர்ந்திருந்த மூவரையும் பார்த்து ஆண்டுகளாய் பழகி வைத்த புன்னகையை உதிர்த்தார்.

    “சொல்லுங்க சார்.. வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?”

    “ஐ ஆம் அட்வக்கேட் கௌதமன் அண்ட் ஷி இஸ் மை வைஃப் அட்வக்கேட் மேகா.. அண்ட் ஷீ இஸ் மை கிளைன்ட் மிஸஸ் மித்ரா.. எம். எம். குரூப்ஸ் சேர்மேன் லேட் அருள் பிரபாகரோட டாட்டர்..” என்று அறிமுகப்படுத்த, கௌதமுடன் கை குலுக்கி பெண்களைப் பார்த்து தலையசைத்து புன்னகைத்தார். எம்.எம் குரூப்ஸ் என்ற பெயரில் அவர் பாவனையில் சற்று மரியாதை கூடியிருக்க, “ஐ ஆம் சாரி அபௌட் யுவர் லாஸ்.. மை ஹார்ட் ஃபெல்ட் கண்டோலன்ஸஸ்” என்றார் மித்ராவை நோக்கி.

    “ஏ. பி. சார் விஷயமா தான் உங்கள பாக்க வந்தோம்” என்று துவங்கி கௌதம் தொடர்ந்தான், “ஏ. பி. யோட வில் எக்ஸிகூஷன்ல சில சிக்கல்கள் மிஸ்டர் ஷர்மா.. அவரோட அக்கவுன்ட்ஸ்ல இருந்து சரியான காரணங்களில்லாம பெரிய தொகைகள் காணாம போயிருக்கு.. சுருக்கமா சொல்லப்போனா அவர யாரோ மிரட்டிருக்கறத்துக்கான க்ளூஸ் கிடச்சிருக்கு.. அந்த மர்ம்ம நபரும் அவரும் உங்க ஹோட்டல்ல சந்திச்சுக்கிடாங்களோனு ஒரு சந்தேகம்.. ஏப்ரல் 2 அன்னக்கு ஏ.பி. இங்க டேபிள் புக் பண்ணிருக்காரானு தெரியனும்” என்று முடித்தான்

    “பட் மிஸ்டர் கௌதம் தட்ஸ் அவர் கஸ்டமர்ஸ் பர்சனல் இன்ஃபோ அத நாங்க ஷேர் பண்ண முடியாதே..” என்றான் ஷர்மா வருந்தும் பாவணையில்.

    “லுக் மிஸ்டர் ஷர்மா.. ஏ.பி இப்போ உயிரோட இல்ல.. அன்ட் ஷீ இஸ் ஹிஸ் டாட்டர்.. வீ கேன் இன்வால்வ் டி.சி. இன் திஸ் மாட்டர் இஃப் யூ ப்ரிஃபர்..” என்றான் அழுத்தமாக.

    சற்று தயங்கி யோசித்தவர் “சரி” என்று தன் முன் இருந்த கணினிக்கு உயிரூட்டிக்கொண்டு கேட்டார், “எந்த தேதினு சொன்னிங்க”

    “ஏப்ரல் 2” என்றான் கௌதம்.

    சரியாக இரண்டு முழு நிமிடங்களுக்கு பிறகு அவர் தன் கணிணி திரையை இவர்கள் புறம் திருப்பி காட்டிக்கொண்டே சொன்னார் “யெஸ்.. ஈவ்னிங் 6 க்கு ஏ.பி. ஹாஸ் புக்குட் அ டேபிள்!”


    (தொடரும்)
     
  5. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
  6. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Naan vandhutenu sollu.. Thirumba vandhutenu sollu.. 3 maasathuku munadi odipona madhiriye thirumbi vandhutenu sollu.. (No apdilaam kaduppaga koodathu.. :D )

    As usual I came back friends.. Hope you will continue your support!!
     
  7. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    HEY supero super Rajeni...
    Wow you are back and looking to get all the stories their life back. All were eagerly waiting.
    Pls post soon dear....
     
  8. Deepu04

    Deepu04 IL Hall of Fame

    Messages:
    2,857
    Likes Received:
    1,484
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Wonderful update
     
  9. meepre

    meepre Gold IL'ite

    Messages:
    549
    Likes Received:
    974
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Rajeni as usual episode super da. Thanks a lot for coming back and updating. Waiting for more such thrilling episodes. Rajeni apadiye thirumbi vanthachu, inime kalakal dan........
     
  10. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    super super adutha post podama thirumbi gap vitrathinga pa :(:(:(:(:(
     

Share This Page