1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    whatsapp நண்பர்கள் குரூப்ஸ் ல தினமும் எனக்கு ஏதாவது மெஸேஜ் வரும். எனக்கு வந்த இந்த மெசேஜ் என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.

    ~~~~~~~~~~~~~~~~~~
    கிச்சுகிச்சு மூட்டும் போது வரும் அடக்கமுடியாத சிரிப்பு...
    கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு...
    சட்டைக்குள் போட்ட ஐஸ் கட்டி...
    Belt போட்டு இறுக்கி கட்டிய வேட்டி...
    மொட்டமாடி தூக்கம் ..
    திருப்தியான ஏப்பம்...
    கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை...
    நாம் செய்யும் மொக்க மேஜிக்கை வியந்து ரசிக்கும் குழந்தை..
    7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி..
    பாட்டியிடம் பம்மும் தாத்தா ...
    தலைவர் படம் First day first show ticket கிடைத்தவுடன் விடும் பெருமூச்சு ...
    தாகம் தணித்த bore well pipe தண்ணி ..
    பத்து ரூவா change குடுங்கனு, கடைக்காரன் மூஞ்சிய காட்டும்போது , எப்பவோ purse ல வெச்ச இத்து போன பத்து ரூவா...
    Notebookன் கடைசிப்பக்கம்...
    கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத makeup இல்லா அழகி ...
    பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத ஆசிரியர் ...
    தூங்க தோள் கொடுத்த சக பயணி ....
    எரிந்து முடிந்த computer சாம்பிராணி ..
    பாய் வீட்டு பிரியாணி ..
    பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய நண்பன்..
    இப்பவும் டேய் என அழைக்கும் தோழி ..
    இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா ...
    கோபம் மறந்த அப்பா..
    சட்டையை ஆட்டய போடும் தம்பி..
    அக்கறை காட்டும் அண்ணன்..
    அதட்டும் அக்கா ...
    மாட்டி விடாத தங்கை ..
    சமையல் பழகும் மனைவி ...
    Sareekku fleets எடுத்துவிடும் கணவன்..
    இதுவரை பார்த்திராத பேப்பர் போடும் சிறுவன்..
    Horn அடித்து எழுப்பிவிடும் பால்காரர்...
    வழிவிடும் ஆட்டோ காரர்...
    High beam போடாத lorry driver...
    ஊசி போடாத doctor..
    சில்லறை கேட்காத conductor..
    சிரிக்கும் police...
    முறைக்கும் காதலி..
    உப்பு தொட்ட மாங்கா..
    அரை மூடி தேங்கா..
    12மணி குல்பி..
    Atm a / c ..
    sunday சாலை ...
    மரத்தடி அரட்டை...
    தூங்க விடாத குறட்டை...
    புது நோட் வாசம்..
    மார்கழி மாசம்..
    ஜன்னல் இருக்கை..
    தும்மும் குழந்தை..
    கோவில் தெப்பகுளம்..
    Exhibition அப்பளம்..
    முறைப்பெண்ணின் சீராட்டு ...
    எதிரியின் பாராட்டு..
    தோசைக்கல் சத்தம் ..
    எதிர்பாராத முத்தம் ...
    பிஞ்சு பாதம்..
    இதை எழுதும் நான்..
    படிக்கும் நீங்கள்..
    இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..
    வாழ்க்கைய வெறுக்க high heels அளவுக்கு பெருசா 10 காரணம் இருந்தாலும்
    அதை ரசிக்க , mini meals மாதிரி வெரைட்டியான விஷ்யங்கள் நிறைய இருக்கு ..
    அதையெல்லாம் water tank அளவுக்கு வாய திறந்து ரசிக்கனும்னு இல்ல ...
    water packet அளவுக்கு மனச திறந்து ரசிச்சாலே போதும்....
    கவலை காலி ஆயிரும்
    வாழ்க்கை ஜாலி ஆயிரும்
    Face fresh ஆயிரும்
    ...SO...
    வாங்க ... வாங்க..
    வாழ்க்கைய ரசிங்க ..
     
    Sairindhri and PavithraS like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    YT - ஒனக்காக பொறந்தேனே - பண்ணையாரும் பத்மினியும்

    பாடல் காட்சி அமைப்பு தூக்கல். கவிஞர் வாலியின் வரிகளுக்கு மிகவும் பொருத்தமான பாடல் காட்சிகள். கண்ணை மூடிட்டு பாடல் ரசிக்கலாம் என்று சொல்வாங்க. ஆனால் இந்த பாடலை கண்ணை திறந்து வைத்து ரசிக்கலாம்.
     
    cinderella06, jskls and Sairindhri like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பசுமை நிறைந்த நினைவுகளே என்று பாட தோன்றுகிறதா .தமிழ் கவிதை தளத்திற்கு யாரும் வருவது இல்லை .நான் மட்டும் விடாது தொடர்கிறேன் .புதிதாக வந்த இரண்டு பேர் தொடர்ந்து எழுதுகிறார்கள்.தமிழ் என்றும் அதே நிலையில் உள்ளது
     
    Sairindhri likes this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கடலூர்க்காரரின்(ஜெயகாந்தன்) சிறுகதைப் பகிர்வுக்கு நன்றி ! நான் தமிழ்த் திரைப்படங்கள் பார்ப்பது அருகிவிட்டது. பணியிலிருந்த காலத்தில் , பணி வழித்தடத் தனியார்ப் பேருந்து ஊழியர்களின் உபயத்தில் ( உபத்திரவத்தில் ) தமிழ்ப் பாடல்கள் தினமும் கேட்பேன்/பார்ப்பேன். இப்போது வெளிவரும் படங்களும் ,பாடல்களும் ,இப்படி யாரவது நன்றாக உள்ளது எனக் கேட்கச் /பார்க்கச் சொன்னால் தான் கவனத்திற்கு வருகின்றன. உங்கள் பாடல் தெரிவுகள் சில கேட்டேன். நன்றாக இருந்தன. நன்றி.

    இளையராஜாவின் இசையில் அமைந்த பூங்காற்று திரும்புமா பாடல்.... காட்சியின் யதார்த்தம், பாத்திரங்களின் புரிந்துணர்வு, வார்த்தைகளின் எளிமை, எனப் பல்வேறு காரணங்களுக்காகப் பிடிக்கும்.

    கவிதை நயமிக்க வரியென எதைச் சொல்வது ? .... குயில் பாடலாம் , தன் முகம் காட்டுமா ?
     
    jskls, suryakala and Sairindhri like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Periamma,

    பசுமை நிறைந்த நினைவுகளே என்று ஒரு பாடல் ஆரம்பிக்கும் என்று தெரியும் ஆனால் நேற்று வரை அந்த பாடலை நான் கேட்டதில்லை. இன்று தான் முதல் முறையாக அந்த பாடலை கேட்டேன். கவிஞர் கண்ணதாசனின் வரிகள் அப்படியே கல்லூரி மாணவர்களின் கல்லூரியின் கடைசி நாள் உணர்வை இயல்பாக பிரதிபலித்தது. ஒரு நிமிடம் எனது கடைசி நாள் கல்லூரி நினைவுகளும் வந்து போனது.

    நிச்சயமாக நான் கவிதை தளத்தையும், குறிப்பாக நமது நண்பர்களின் கலாட்டாக்களையும் மிஸ் பண்றேன். அவர்கள் எல்லோரும் பப்ளிக் தளம் என்று தங்கள் எண்ணங்களுக்கு தாழ்ப்பாள் போடாமல், பெரும்பான்மையாக உண்மையாகவே மனதில் தோன்றியதை எழுத்துக்களின் வாயிலாக வெளிப்படுத்தியதால் தான் அவர்களின் நினைவுகள் அழுத்தமாக எனது மனதில் பதிந்து இருக்கிறது என்று நினைக்கிறேன். பசுமையான நினைவுகளை அள்ளி தந்த நமது கவிதை தளத்து நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    YT - பசுமை நிறைந்த நினைவுகளே
     
    Sairindhri likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Pavithra,
    Welcome to the thread!

    உங்களது பதிவில் இருந்த யதார்த்தம் உங்களது பதிவை இரண்டு முறை படிக்க தூண்டியது. தொடர்ந்து உங்களுக்கு பிடித்த பாடல்களையும், அதனை சார்ந்த நினைவுகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பூங்காற்று திரும்புமா பாடல் - செம பாட்டு. இன்று 'முதல் மரியாதை' படத்தில் இருந்து அத்தனை பாடல்களையும் கேட்டேன். தேவ அமிர்தம்!

    உங்களது பதிவை படித்தவுடன் எனது நினைவிற்கு வந்தது:

    கல்லூரி படிப்பு முடித்தவுடனே நான் பணி புரிந்த காலத்தில், பண்டிகை நேரம் விடுமுறை எடுத்துக் கொண்டு, நண்பர்களுடன் நீண்டடட ரயில் பயணம் செய்து பணி புரியும் இடத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோம். பயண நேரத்தில் பாடல்கள் கேட்போம். சீட்டு விளையாடுவோம். செமயா கடலை போடுவோம். பயண அலுப்பு தெரியவே தெரியாது.
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    TP - அந்த நிலாவ தான் - முதல் மரியாதை

    பூவு ஒன்னு காண்ணடிச்சா
    வண்டு வரும் பின்னால

    TP - ராசாவே உன்ன நம்பி - முதல் மரியாதை

    காதுல நறச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
    சூழியிலே படகு போல என் மனசு சுத்துது சுத்துது

    TP - வெட்டி வேரு வாசம் - முதல் மரியாதை

    கைய கட்டி நிக்க சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது
    காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
     
    jskls, PavithraS and Sairindhri like this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you !

    இயன்ற போது அவ்வண்ணமே செய்கிறேன் !
     
  9. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    jskls likes this.
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Beautiful song! Karthik / Shreya 's mesmerizing voice along with wonderful lyrics definitely makes one listen multiple times. Thanks for sharing
     
    GoogleGlass likes this.

Share This Page