1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    whatsapp ல எனக்கு வந்த மெசேஜ். படித்தவுடனே சிந்திக்க வைத்தது. ஓவரா சிந்திக்காம இருக்க தான் பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன். :grinning::grinning:

    *****************************

    "என்ன கற்றுக் கொண்டோம்? என்ன கற்றுக் கொடுக்கிறோம்?"

    எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை...

    ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம், அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான்.

    ரயில் வருகிற நேரம்...

    ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான்.

    பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான். அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான்.

    தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.

    காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள்.

    அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா.

    "அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான்.

    ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.

    முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்... நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...

    செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், "அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" என கதறி அழுகிறான்.

    ஆகவே நாம், நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!

    நல்லதையே கற்றுத் தருவோம்...
     
    PavithraS, periamma and deeprapriya like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இமான் இசையில் கிராமத்து மணம் கமழும் ஒரு அருமையான ரொமான்டிக் பாடல். பாடலை பாடி இருப்பவர்கள் ரசித்து ரசித்து கலக்கலா பாடி இருக்கிறார்கள்.

    Music Director: D. Imman
    Lyricist: Vairamuthu
    Singers: Vandana Srinivasan, Jithin Raj, Jayamoorthy

    YT - கருவக்காட்டு கருவாயா - மருது

    உசுரையும் மானத்தையும்
    உன்கிட்டே குடுத்திட்டேன் தலைவா
    ஏழு சென்மம் தீருமட்டும்
    எனக்கு இருக்கணும் உறவா
     
    Sairindhri likes this.
  3. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Vanakkam Singam. Neeeeeenda naatkal kazhithu santhippathu mikka mahizhchi. Nalam nalamariya aaval.
    Sema song that was! Naalai santhipom
     
  4. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    Singam...nam paartha padam ninaivukku varugirathu. Puthu natpukku vaazhthukkal!
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வணக்கம் AS.

    உங்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கு சந்தித்ததில் மிக்க மிக்க மகிழ்ச்சி. 'ஆயிரம் வாட்ஸ்' புன்னகை மட்டும் அல்ல, உங்களது போஸ்ட்ஸ் இங்கு பார்த்ததும் எனது முகமும் சந்தோசத்தில் 'ஆயிரம் வாட்ஸ்' பிரகாசமாக மிளிர்ந்தது.

    இந்த வருடத்தில் இங்கு C, APS மற்றும் உங்களை சந்தித்து விட்டேன். எனது கல்லூரி கால நண்பர்கள் சிலர் என்னை தேடிப் பிடித்து இந்த வருடம் போனில் தொடர்பு கொண்டார்கள். நட்பு ரொம்ப அழகான உணர்வு என்பதில் எனக்கு எப்பவும் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கு. நல்ல நண்பர்கள் கிடைப்பதும் வரம் தான். இந்த thread ஆரம்பித்தவர், நமது மற்றைய நண்பர்களின் வரவையும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். பார்ப்போம்! Thread புதுப் பொலிவுடன் மிளிரட்டும்.

    என்ன பாட்டு போடமா போயிட்டீங்க?
     
    AbhiSing likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்னும் வெளி வராத ஒரு புதுப்படத்தில் இருந்து ஒரு super romantic melody. இந்த பாடல் எனது இன்றைய loop song.

    MD: D. Imman
    Lyricist: Yuga Bharathi
    Singers: Haricharan, Vandana Srinivasan

    YT - அடடா இதுயென்ன - தொடரி

    ஆச மழ தூறுது தூறுது
    ஊரே நெறம் மாறுது மாறுது
    ஏதோ புது வாசன பூக்குதடி

    காதல் தலைக்கேறுது ஏறுது
    வேரா சொகம் ஊறுது ஊறுது
    ஜோரா அது வேலய காட்டுதடி

    வார்த்த ஏதும் பேசிட தோணல
    வாரேன் உன் பின்னால
    வேற ஒரு வார்த்தய தேடிட ஆகாதினி என்னால
    மொத்த சென்மம் ஓஞ்சி போச்சே ஒத்த பார்வையில
     
    PavithraS likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நீண்ட மாதங்களுக்கு பிறகு இன்று தான் இந்த பாடலை கேட்கிறேன். முதல் முறையாக இந்த பாடல் கேட்டபோது கிடைத்த பரவசம் ஆயிரம் தடவைக்கும் மேல் பாடல் கேட்ட பிறகும் துளியும் குறையவில்லை.

    மழை நேரத்து மண் வாசனையையும் மாலை நேரத்து மயக்கமும் மல்லிகை மணமும் ஒன்றாக சேர்த்த கலவை.


    YT - பொத்தி வச்ச மல்லிக மொட்டு - மண் வாசனை
     
    PavithraS likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @singapalsmile unga perai paarthathum inge odi vanthen .eppadi irukeenga.Romba naal aachu .carry on
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Periamma,

    நலம். நலம் விசாரிப்பிற்கு மிக்க நன்றி. நீங்கள் எப்படி இருக்கீங்க? நமது தமிழ் கவிதை தளத்திற்கு நான் வந்து எத்தனையோ வருடங்கள் ஆகிறது. ஆனாலும் நமது நண்பர்களின் கிறுக்கல்கள், உரையாடல்கள், பின்னூட்டங்கள் பற்றிய நினைவுகள் இன்னும் என்னுள் பசுமையாகவே இருக்கிறது.
     
    periamma likes this.

Share This Page