1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மித்ர மாளிகை..!

Discussion in 'Stories in Regional Languages' started by Rajeni, Oct 8, 2014.

  1. minjagan

    minjagan Gold IL'ite

    Messages:
    242
    Likes Received:
    392
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Congratulations Rajeni.. Hearty best wishes.....
     
    1 person likes this.
  2. StrangerLady

    StrangerLady Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    855
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Hi @rajeni

    Congrats, Happy married life.
     
    1 person likes this.
  3. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Hope you are doing good and enjoying your married life.... My best wishes to you dear.

    Waiting for your update eagerly... post when you get time. Take care.
     
  4. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female


    11. மித்ர மாளிகை – விஷம்!



    “கௌதம் இதுக்கு என்ன அர்த்தம்?” என்று ராமசந்திரனின் உதடுகள் முணுமுணுத்தாலும் அவர் மூளை தன் கையிலிருக்கும் காகிதங்கள் எதை குறிக்கின்றன என்பதை புரிந்து அதிர்ந்துப்போயிருந்தது.


    அவர் கண்கள் தன் கையிலிருந்த அந்த ஆய்வக அறிக்கையிலேயே பதிந்திருந்தன. அந்த அறிக்கையோடு இணைக்கப்பட்டிருந்த காகிதத்தில் அது ஏ.பி.யின் அறையிலிருந்து கண்டெடுத்த கேப்ஷூலின் உட்பொருட்க்களை அலசிய ஆய்வக அறிக்கை என்று சுருக்கமாய் விளக்கியிருந்தது கௌதமின் கையெழுத்து.


    மீண்டும் தன் பார்வையை அறிக்கையின் அந்த வரியில் ஓட்டினார். “அலார்மிங் டோஸ் ஆஃப் டைஜாக்சின்” (alarming dose of Digoxin). டைஜாக்ஸினின் விளைவுகளை பற்றி ராமசந்திரன் கேள்விப்பட்டதுண்டு படித்ததுண்டு.



    மெல்ல விழிகளை உயர்த்தி கௌதமை பார்த்தார். அவர் முகத்தின் சொல்ல முடியாத பாவனை இது அவருக்கு மற்ற வழக்குகளைப்போல் அல்ல என்பதை உணர்த்தியது. இது அவரின் நாற்பது ஆண்டுகால நெருங்கிய நண்பனின் மரணம் தொடர்பானது.



    “உங்களுக்கு தெரியாதது இல்ல அங்கிள். டைஜாக்ஸின் இதய நோய்களுக்கான மருத்துவத்துல பயன்படுத்துர ஒரு உட்பொருள். ஆனா அதுவே அதிகமான அளவுல பயன்படுத்தும் போது இதயத்த செயலிழக்க செய்யும்.” என்றான் நிதானமாக.



    “ஏ.பி. இதனால தான் இறந்தான்னு சொல்றிங்களா? யாரு இத அவனுக்கு குடுதிருப்பா? இது அவனோட ரெகுலர் மெடிசின்ஸ் ல இருக்கா?.. ஆயிரம் கேள்விகள் எனோட மனசுல வருது.. காட்ட்ட்” என்றார் சோர்வு சலிப்பு கோபம் எல்லம் கலந்த உணர்வில்.



    “ரிலாக்ஸ் அங்கிள்.. அதே ஆயிரம் கேள்விகள் சொல்லப்போனா இன்னும் அதிகமா எனக்கும் இருக்கு.. அந்த கேள்விகளின் பதில்கள்ல தான் இந்த வழக்கோட முடிவு இருக்கு” என்றான் ஏதோ யோசனையில் பேசுபவனைப்போல.


    “சரி சொல்லுங்க எங்கிட்ட இப்போ வந்ததுக்கு காரணம் என்ன? நான் என்ன பண்ணனும்?” தன் முகத்தில் வீசப்பட்டிருக்கும் உண்மையை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் அவர் திணறுவது தெரிந்தது.


    “நீங்க சில உண்மைகள சொல்லனும் அப்பா.. எந்த சூழ்னிலையில ஏ.பி வில்ல மாத்தினாரு? அப்போ அவர் என்ன மனநிலையில இருந்தாரு? வில் சம்மந்தமா நடந்த எல்லாத்தையும் சொல்லனும். அவரு இப்டி ஒரு முடிவ சொல்லும் போது கண்டிப்பா நீங்க ஒரு ஃப்ரெண்டா காரணம் கேட்டிருப்பிங்க.. அவரு என்ன சொன்னாரு? அப்பா, அவரு வில் தான் இந்த கேஸோட ஆரம்பம். அத சுத்திதான் எல்லாமே நடக்குர மாதிரி இருக்கு.. அண்ட் இந்த ரிப்போர்ட்ட பார்க்கும் போது ஏ.பி. கொல்லப்பட்டிருக்காருனு 99 சதவிகிதம் உறுதியாகுது. ஸோ ப்ளீஸ் நல்லா யோசிச்சு நடந்தத சொல்லுங்க..” என்றாள் மேகா.


    புருவங்கள் யோசனையில் நெறிய சற்று நேரம் அமர்ந்திருந்தவர் பின் தொடர்ந்தார், “மார்ச் 16 ஆம் தேதி காலையில ஒரு பத்து மணியிருக்கும். ஏ.பி எனக்கு கால் பண்ணி மீட் பண்ணனும்னு சொன்னான். நான் கோர்ட் வேலைகள முடிச்சிட்டு மதியம் வரதா சொன்னேன். எப்பவும் மதிய நேரங்கள்ல சந்திக்க நேர்ந்தா லன்ச்சுக்கு வான்னு சொல்ரவன் அன்னைக்கு எதுவுமே சொல்லல. அப்ஸட்டா இருக்கான் போலனு அன்னைக்கு நான் நினச்சது இப்பவும் நியாபகமிருக்கு.


    மதியானம் அவன நேர்ல சந்திச்ச போது தான் வில்ல மாத்தனும்னு சொன்னான். மொதல்ல நான் கூட கோபம் தணிஞ்சு மித்ராவையும் வில்ல சேக்கபோறான்னு தான் நினச்சேன். ஆனா அவனோட முடிவ கேட்டப்போ ஆசந்துபொயிட்டேன். நீ சொன்ன மாதிரி இது முட்டாள்தனம்னே அவங்கிட்ட சொன்னேன். மதன் மேல நம்பிக்கை இல்லைன்னா மித்ரா பேர்ல எழுது அதவிட்டுட்டு இது என்ன புது கதைனு கேட்டேன்.. அதுக்கு அவன் மித்ரா பத்தி பேசாதேனு கோபமா சொன்னான். எனக்கும் நல்ல கோபம்.. ‘உன்னோட பிஸ்னஸ பாத்துக்கனும்னே அவள எம்.பி.ஏ படிக்க வச்ச.. அவளும் அதுக்காவே எவ்ளோ தயார் படுத்திக்கிட்டா.. ஏதோ ஒரு தப்பு பண்ணிட்டானு இப்டி ஒதுக்கறது அநியாயம் டானு’ சொன்னேன். அதுக்கு அவன் விரக்தியா ஒரு சிரிப்பு மட்டும் தான் சிரிச்சான்.. வேற எந்த பதிலும் சொல்லல.. ‘நாம் சொல்றத செய்.. என்னோட செயல்களுக்கான காரணங்கள சொல்ற நாள் வரும் அப்போ சொல்றேன்னு’ சொன்னான். ஆனா அப்டி ஒரு நாள் வரவேயில்ல..” என்றார் இறுதி வரிகளில் விரக்தியாக.


    “முடிச்ச அவிழ்ப்பிங்கனு பாத்தா நீங்க மேல ஒரு முடிச்சு போட்றிங்களேப்பா..” என்று சன்னமாய் சிரித்தாள் மேகா.



    “அங்கிள் ஏ.பி.க்கு நடந்த ஆக்ஸிடென்ட் பத்தி உங்களுக்கு தெரியுமா?” என்றான் கௌதம்.



    “ஆக்ஸிடென்டா? அது எப்போ? எனக்கு தெரிஞ்சு அப்டி ஒண்ணும் ஆகலையே” என்றார் குழப்பத்துடன்.



    “ஓ.கே அங்கிள்.. உங்களுக்கு வேறே ஏதாவது நியாபகம் வந்தா கால் பண்ணுங்க.. நாங்க கெளம்பறோம்” என்றவாறு எழுந்தான்.



    “கௌதம்.. அந்த மருந்து அவனோட யூசுவல் மெடிசின்ஸ்ல கலந்து இருக்கா? அவன் என்ன மெடிக்கேஷன்ல இருந்தான்னு நம்ம டாக்டர்ட கேட்டிங்களா?”


    “அவரு யூசுவலா சப்பிட்ற ஒரு மாத்திரைல டைஜாக்ஸின் கண்டென்ட் இருக்கு பட் அது மைல்ட் அனுமதிக்கப்பட்ட டோஸ்..அது தெரிஞ்சவங்க தான் இந்த வேலைய பாத்திருக்கனும். ஏன்னா அதுனால தான் அவங்க டைஜாக்ஸின்ன சூஸ் பண்ணிருக்காங்க.. ஸோ அவரு வீட்டுக்குள்ள நுழைய அனுமதியோ இல்ல வாய்ப்போ உள்ள ஒரு ஆள்.. அப்போதான்.. அவரு யூசுவலா சாபிட்ற மாத்திரைய மாத்தி வைக்க முடியும்”


    “ஹ்ம்ம்.. ஆல் தி பெஸ்ட்.. போத் ஆஃப் யூ.. என்ன உதவி வேணும்னாலும் எங்கிட்ட கேளுங்க.. யாருன்னு தெரியனும்.. ஏ.பி. டிசெர்வ்ஸ் ஜஸ்டிஸ்..” என்றார்



    ஆமோதிப்பாய் தலையசைத்து அவர்கள் செல்ல எத்தனிக்க ஏதோ யோசித்தவராய் “ஒரு நிமிஷம்” என்றார் ராமசந்திரன்.




    -(தொடரும்)

     
    Adharv, Sweetynila, Caide and 5 others like this.
  5. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Dear all,

    After long I am continuing this story...

    Its been 1 year and 4 days since I last updated this story.. after this long time it wasnt easy to continue the story.. kadhai maandhargal ellam apdiye freeze aaitaanga.. avangala marupadiyum surusuruppa iyanga vaikka padaatha paadupattuten..
    Hope you all will show the same support as before..!

    @sreeram .. ungalala dhan naan inaiku ezhudha aarambichene sollalaam.. ur interest and comment after these many days has compelled me to continue my story... Thanks a ton for ur support..
     
    Preetii and sreeram like this.
  6. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Thank you so so much Rajeni... Am being overwhelmed by your gesture. Update romba suspense oda eruku... all the previous updates slowly came to my mind...

    Unmaiya sollanum na romba naala ve kekanum nu erunthen but then ippa thaane kalyanam aachu so disturb panna nalla erukathunu thaan kekala... nethuthan edarchiya neenga online la erukartha paarthen... so thought to ask...

    And more over unga kathai oda suspense apadi pa... atha therinjukama eppadi erukarthu... sollunga...
     
    Rajeni likes this.
  7. chellammu

    chellammu Silver IL'ite

    Messages:
    225
    Likes Received:
    178
    Trophy Points:
    93
    Gender:
    Female
    @Rajeni, Welcome back! Never give up and stay strong, wishing you good luck. :thumbup:

    Good i subscribed to the story, i got an alert today. Surprised to see your update.
    Am sure many would felt the same. Expecting regular updates. :tongueclosed::tongueout::tonguewink:
     
    Rajeni and sreeram like this.
  8. shrivni

    shrivni Silver IL'ite

    Messages:
    268
    Likes Received:
    173
    Trophy Points:
    93
    Gender:
    Female
    intha oru updatekaka...evlo naal waiting theriyuma....Rajeni....Welcome Back Dear!
     
    Rajeni likes this.
  9. Bhoonzee

    Bhoonzee Gold IL'ite

    Messages:
    117
    Likes Received:
    184
    Trophy Points:
    100
    Gender:
    Female
    Hi Rajeni,

    Welcome back to IL. Hope you are enjoying your marriage life. We are happy for you dear...

    Excellent come back with great a suspense.

    Pls post the next episode ASAP.

    Enjoy ur life.....

    Thanks
     
    Rajeni likes this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Hi Rajeni congrats ma.ungalukku kalyanam aanathu enakku theriyathuma .Accept my Heart felt wishes for a Happy married life.
     
    Rajeni likes this.

Share This Page