1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மித்ர மாளிகை..!

Discussion in 'Stories in Regional Languages' started by Rajeni, Oct 8, 2014.

  1. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Interesting characters. Nice plot rajeni
     
    1 person likes this.
  2. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks a lot for your FB and appreciation Ramya! Keep reading :)
     
  3. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Dear Kithu,
    Thanks a lot for your continuous encouragement!
     
  4. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks a lot for such immediate FB dear Periamma!!
     
  5. cherrybud

    cherrybud Silver IL'ite

    Messages:
    151
    Likes Received:
    110
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Rajeni dear,

    Thangal ezhuthu migavum arumai.... solla vaarthaigale illai....

    I couldn't resist myself from giving a FB... you are such an awesome writer dear.... I don't know what else to say....

    I am a die hard fan of your writing....

    All my prayers....

    Thank you.... God Bless...

    Love,
    S.
     
    1 person likes this.
  6. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    story is getting interesting. ur writing style is very nice and ur introduction of characters is gud. keep going.

    andal
     
    1 person likes this.
  7. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Dear S, Am really awed by your FB, thanks for such appreciation and special thanks for your prayers:Bow:!!
     
  8. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks a lot for your appreciation and FB dear Andal!!
     
  9. Nivee

    Nivee Bronze IL'ite

    Messages:
    145
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Great start, loved the way and style of writing! Way to go, best wishes
     
    1 person likes this.
  10. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    4. மித்ர மாளிகை – என் அறை!

    மித்ரா ரெசிடென்ஸ்.
    அந்த விசாலமான உணவருந்தும் அறையின் ஒருபுறச்சுவரை பெரும்பாலும் ஆக்கிரமித்திருந்த ஃப்ரென்ச் முறையிலான கண்ணாடி சன்னல் பசுமையான தோட்டத்தை பார்வைக்குத் தந்து மாலை 5 மணி இளவெயிலை அள்ளி உள்ளே வீசியது. அந்த சுவரின் அருகிலிருந்து மேலேறிய கண்ணாடி படிகளில் கவனமாக ஏறினாள் அவள். முதல் தளத்தில் கூடத்தைத் தாண்டி இடதுபுறமிருந்த அந்த அறையின் கதவைத்திறந்து உள்ளே சென்றாள். திரைச்சீலைகள் அனைத்தும் மூடியிருக்க அறை இருண்டிருந்தது. அருகிலிருந்த சுவிட்சு போர்டிலிருக்கும் சுவிட்ச்களை முயன்றவள் இரண்டு முறைத்தோற்று பின் விளைக்கை உயிர்ப்பித்தாள்.

    இந்த அறைக்கு இதுவரை அவள் வந்ததேயில்லை! வர அனுமதியில்லை! அவள் உயிர்ப்பித்திருந்த மாஸ்டர் சுவிட்ச் அந்த அறையின் அனைத்து விளக்குகளுக்கும் உயிர் கொடுத்திருந்தது. இத்தனை பெரிய அறையை அவள் சினிமாக்களில் கூடப்பார்த்ததில்லை. அறைக்கு மட்டும் பிரத்தியேகமாக செய்யப்பட்டிருந்த மையப்படுத்தப்பட்ட காற்றுச்சீரமைப்புக் கருவி (centralized ac) மெலிதான குளிரைப்பரப்ப துவங்கியிருந்தது. பொய்க்கூரையிலிருந்து ஒளிர்ந்த எல்.ஈ.டி விளக்குகள் கண்களை உருத்தாத வெளிச்சத்தை உமிழ்ந்தன. கதவிற்கு நேரே கண்ணடியிலான ஒரு வட்ட காபி மேஜையை சுற்றி மூன்று வெள்ளைனிற முட்டை வடிவ நாற்காலிகள் அதில் கருப்பு குசங்கள், எதிர் சுவற்றில் மித்ரா கருப்பு புடவையில் மோனலிசா அளவு சிரித்திருந்தாள்.

    வலப்புறம் நீண்டது அறை. சற்று தள்ளி அமைந்திருந்த ராட்சச அளவு வெள்ளைனிற கட்டில், வெள்ளையில் சாம்பல் வண்ணமும் சிறிது கருப்புமாய் ஆன விரிப்பை அணிந்திருந்தது. அதற்கு முன்புறம் கீழே அதன் அகலத்திற்கு வெள்ளை மிதியடி எபோனி(ebony) வண்ண மர தரையில் பவித்திரமாய் விரிந்திருந்தது. கட்டிலிற்கு நேர் மேல் கூரையில் பதிந்திருந்த கண்ணாடி கட்டிலை பிரதிபலித்தது. எதிர் சுவற்றில் தொலைக்காட்சி திரை ஒட்டியிருக்க அதன் அடியில் இரண்டு அடி அளவில் கட்டிலின் அகலத்திற்கு வெள்ளை மேஜை அதில் வலப்புற ஓரங்களில் மட்டும் மெல்லிய சாம்பல் மற்றும் கறுப்பு வண்ணங்களில் சிறிதும் பெரியதுமாய் சதுர வடிவங்கள். சற்றுத்தள்ளி அதே சுவற்றில் அமைந்திருந்த அலமாரியிலும் (wadrobe) அதே வண்ணமும் வடிவமைப்பும்.

    அலமாரிக்கு நேராக, கட்டிலைத் தாண்டி வலப்புறம் கருப்பு குஷங்கள் கொண்ட வெள்ளை சோபாக்கள். கட்டிலை பார்த்தவாறு அமைந்திருந்த பெரிய சோபாவின் பின்புறம் சில அடிகள் இடைவெளிவிட்டு அடர் கருப்பில் வெள்ளை சதுரங்களிட்ட திரைச்சீலைக்குப்பின் ஃப்ரென்ச் முறையிலான கண்ணாடிக்கதவுகள். வெளியே எட்டு அடிகளுக்கு மேற்கூரையிட்ட பால்கனியையும் அதை தாண்டி இருந்த அகண்ட பால்கனியையும் வெறும் கண்ணாடிகளாலான சுவர் பிரித்தது. அந்த கூரையிட்ட பால்கனியில் சில மூங்கில் நாற்காலிகளும் சில உட்புற தாவரங்களும் இருக்க கண்ணாடிப்படிகள் இரண்டாம் தளத்திற்கு சென்றது.

    மீண்டும் அறைக்குள் வந்தவள் தனக்கு வலப்புறம், அலமாரிக்கு எதிரே மெசனைன் (messanaine) தளம் போல் ஐந்து கண்ணாடிப்படிகளுக்கு மேல் ஒரு சிறிய அறை வெளியே நீள்வதைக்கண்டாள். கணினி மற்றும் புத்தக அலமாறிகள் கொண்டிருந்த அந்த படிக்கும் அறையிலும் வெள்ளை நாற்காலிகளும் மேஜைகளும் அமைந்திருக்க வலப்புற சுவரின் பெரிய ஜன்னல்களுக்கு மேல் கருப்பு சட்டமிட்ட புகைப்படத்திற்குள் ஏ.பி. சிரிக்க அவர் தோள்களைக்கட்டிக்கொண்டு கன்னத்தோடு கன்னம் வைத்து மித்ரா சிரித்தாள்.

    சற்று நேரம் அந்தப் புகைப்படத்தை வெறித்தவாறு நின்றவள், கண்ணாடிப்படிகளை நொந்தவாறு மெல்ல இறங்கிச்சென்று அந்த பெரிய அலமாரியை திறந்து ஒரு நொடி அதிர்ந்தாள், அது குளியலறைக்கு செல்லும் கதவு! உள்ளே மேலும் ஒரு சிறிய கண்ணாடி அலமாறியில் இரவு ஆடைகள், துண்டிகள், உள்ளாடைகள் இருக்க, நீள்வட்டக்கண்ணாடிப் பதித்த மரக்கதவுக்குள் குளியல் தொட்டியுடன் பிரம்மாண்டமான குளியலறை. வெளிவந்து மேலும் ஒரு அலமாரிக்கதவை திறந்தாள். மேலும் மேலும் என எல்லா அலமாரிக்கதவுகளையும் திறந்தவள் கண்ட காட்சியில் மலைத்துப்போனாள். புடவைகளும் சல்வாரும் ஜீன்ஸ்களும் என ஒரு சிறு துணிக்கடையே இருக்க, அதிலிருந்த ஒவ்வொரு துணியும் அதன் தரத்தை விலையை விளம்பரப்படுத்தின!

    ஒரு பிங்க் வண்ணப்பட்டுப்புடவையை கையில் எடுத்தவள் தன் தோளில் வைத்து டிரெஸ்ஸிங் டேபிலோடிருந்த ஆளுயரக்கண்ணாடியில் பார்த்தாள். அழகாக இருப்பதுபோல் தான் தோன்றியது. இதைக்கட்டிப்பார்க்க வேண்டுமென எண்ணும் போதே அந்தப்புடவையில் மித்ராவின் உருவம் கற்பனையில் தோன்ற சட்டென புடவையை சோபாவில் எரிந்துவிட்டு நிமிர்ந்தவளுக்கு சுவரிலிருந்த மித்ரா தன்னைக்கண்டு நகைப்பது போலிருந்தது.
    வெளியே கார் வரும் ஓசைக்கேட்க மனோதான் வருகிறானோ என பயந்து பால்கனிக்கு சென்ற ராஜி அங்கே அந்த பெரிய காரின் கதவைத்திறந்து இறங்கியவளைக் கண்டு ஆடிப்போனாள். சற்றுமுன் புகைப்படத்திலிருந்து தன்னைக் கண்டு நகைத்தவள் இப்போது நேரில் வந்து நிற்கிறாள்.

    சட்டென ராஜிக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. மித்ரா வரக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏ.பி இறந்தப்போது இருந்தாலும் இத்தனை நாட்கள் கழித்தும் வருவாளென்று ராஜி எண்ணவில்லை. உயிலின் விவரமறிந்து வந்திருப்பாளோ? இவளுக்கும் எதாவது சந்தேகம் வந்திருக்குமோ? என்று பலதையும் எண்ணிய மனதை முயன்று திடப்படுத்திக் கொண்டு கீழே சென்றாள்.
    ராஜி கூடத்தை அடைந்தபோது அங்கே கதவருகில் ஏ.பி.யின் புகைப்படத்தைப் பார்த்தபடி மித்ரா உறைந்துப்போய் நின்றிருந்தாள். கண்களில் மட்டும் கண்ணீர் பெருகி கன்னம்தாண்டி வழிந்தது. சற்று நேரம் அப்படியே நின்றவள் இவளின் அசைவை உணர்ந்து சுதாரித்து கண்ணைத்துடைத்துக்கொண்டு இவளைப்பார்த்து மெலிதாய் புன்னகைத்தாள்.

    “வா.. வாங்க மித்ரா..”
    “நீங்க ராஜி தானே? சாரி நான் உங்கள பாத்ததில்ல.. சின்ன வயசுல பாத்திருப்போம்” என்றாள் மித்ரா

    “ஆமா..” இரண்டிற்கும் பொதுவாக ஒரு பதிலை சொன்னவளுக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை.

    சட்டென நினைவு வர, “நீங்க வந்துடுவிங்கனு எதிர்ப்பாத்தோம்” என்றாள் பொதுவாக.

    “ம்.. நான் ஒரு பிஸ்னெஸ் ட்ரிப் ல இருந்தேன். என் ஹஸ்பண்டும் ஔட் அஃப் டவுன். நாங்க திரும்பி வந்தப்பறம் தான் தகவல் தெரிஞ்சுது. உடனே கிளம்பி வந்தேன்.”

    “ஓ..” அவள் குரலில் அடைப்பட்டுக்கிடக்கும் வேதனையை இவளால் உணரமுடியவில்லை.

    “இங்க இருக்கற வரைக்கும் நான் இங்க தங்கலாமா ராஜி?” என்று கேட்கும் போதே மித்ராவின் இதயத்தில் சுரீரென வலித்தது. ஐயோ! இது என் வீடு! என்று கத்தவேண்டும் போல உள்ளே பொங்கியதை ஒரு புன்னகையில் மறைத்து அவள் பதிலுக்குக் காத்திருந்தாள்.

    மித்ராவின் கேள்வியில் ராஜியும் அதிர்ந்து போனாள். இங்கே தங்குவதா? கூடாது என்ற பதில் தான் ராஜியின் எண்ணத்தில் சட்டென உதித்தது. ஆனால் சொல்லமுடியாது. இந்த சொத்து என்னுடையது வெளியே போ என சொல்லலாம் தான். ஆனால் அது தேவையில்லாத சந்தேகத்தை அல்லவா உருவாக்கும்! இத்தனை நாட்கள் பொருத்துவிட்டு இப்போது அவசரப்படக்கூடாது. என்றது அவள் மனம். இவள் யோசித்து முடிக்குமுன்,

    “உங்களுக்கு சிரமமா இருந்தா நான் ஹோட்டலயே தங்கிக்குவேன்.. நோ ப்ராப்லெம்” என்றாள் மித்ரா.

    “சே சே.. நீங்க தாரளமா தங்கலாம். எனக்கென்ன சிரமம்.. அதெல்லாம் இல்ல” என்று அவசரமாய் சொன்னாள்.

    “தேங்ஸ் ராஜி”

    “எதாவது சாப்பிட்றிங்களா”

    “இல்ல இப்போ எதுவும் வேணாம்.” என்றவள் பேச்சுமுடிந்தது என்பது போல எழுந்து மறுபடியும் ஏ.பி.யின் புகைப்படத்திற்கு அருகில் சென்று நின்றாள்.

    என்ன செய்வதென்று தெரியாமல், “ஏதாவது வேணும்னா சொல்லுங்க” என்றுவிட்டு உள்ளே சென்றாள்.

    உள்ளே சென்றவளை பதினெட்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் எதிர்க்கொண்டாள். அவளிடம்,

    “மித்ரா வந்திருக்கா” என்றாள் ராஜி.

    இந்த செய்தி பார்க்க வேலைக்காரப் பெண் போலக்காட்சியளித்த அந்த பெண்ணையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    “சரி சரி சீக்கிரம் பேசி அனுப்பிடுங்க” என்றாள்.

    “இங்க தங்க வந்திருக்கா..”

    “என்ன! எதுக்காம்? அதான் இங்க எதுவும் இல்லைனு தெளிவாய்டுச்சுல்ல..” என்றவள்,

    “எதாவது ப்ளானோட வந்துருப்பாளோ?” என்றாள் சந்தேகமாக. பின் அவளே தொடர்ந்து,
    “ஆனா, அவகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா நடங்க. அதே சமயம், இங்க நீங்க தான் மொதலாளினு தெளிவாக்காட்டிடுங்க. அதிகமா ஆடவிட்டிங்கன்னா அப்பறம் அவள இங்கயிருந்து கெளப்ப முடியாது” என்று ஆலோசனை வழங்கினாள்.

    மித்ரா என்ன செய்கிறாள் என்று பார்க்கலாம் என வந்தவள் சாப்பாட்டு அறையில் சட்டென நின்றாள். அங்கே மித்ரா இவள் பயந்து பயந்து ஏறிய படிகளை தன் ஹீல்ஸ் கால்களால் ஒரு அசட்டையுடன் கட கடவென ஏறிக்கொண்டிருந்தாள்.

    அந்த கண்ணாடிப்படிகளுக்கென்றே செய்ததுபோல் அவளிருப்பதை ஒரு வெறுப்பும் ஏக்கமும் கலந்த விழிகளால் இவள் வெறித்தாள். படியேறியவள் நேரே தன் அறைக்கு செல்வது தெரிந்தது. சற்றுமுன் ராஜி ஒரு பிரம்மிப்புடன் பார்த்த அறை! இனி அதை தன் அறையாக்கி கொள்ள வேண்டுமென எண்ணிய அறை! நினைத்த சில நிமிடங்களுக்குள் அதையெல்லாம் அழிக்க இவள் வந்துவிட்டாள். எத்தனை நாட்களாய் காத்து வந்த கனவு, எல்லாம் நல்லபடியாய் முடிந்தது என்று நினைக்கும் போது இப்படி நடக்கிறதே என அவள் மனம் கொதித்தது.

    மித்ரா தன் அறையின் உள்ளே சென்றபோது எரிந்த விளக்குகளும், சோபாவில் கிடந்த புடவையும் சமீபத்தில் அங்கு யாரோ வந்திருப்பதைக் காட்டியது. அந்த காட்சியில் கொதித்த தன் மனதை இது நியாயமில்லை இவை அனைத்தும் இன்று இன்னொருவருடையது என எண்ணி அடக்கியவள் சென்று குளித்து உடைமாற்றி வந்து கட்டிலில் அமர்ந்தாள். தன் அறைக்கு யாரோ வந்திருந்தாளும் அறையை இன்னும் உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை என்பது தெரிந்தது. அறை சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருவதும் தான் விட்டுச்சென்ற அனைத்தும் பாதுகாக்கப்பட்டிருப்பதும் தந்தையின் அடக்கிவைக்கப்பட்டிருந்த அன்பை பாசத்தைக்காட்ட இதுவரை அடக்கி வைத்ததெல்லாம் உடைய அழுதுத்தீர்த்தாள். சற்று நேரத்தில் சமாளித்து கட்டிலில் படுத்தவள் காலை கௌதமனின் அலுவலகத்தில் நடந்ததை அசைப்போட்ட துவங்கியபோது அங்கு பால் தம்ளருடன் வந்தாள் அந்த பெண்.

    “பால் குடுக்க சொன்னாங்க” என்றாள்

    “அங்க வச்சிடு” என்று படிக்கைக்கு அருகிலுள்ள சின்ன மேஜையைக்காட்டினாள் மித்ரா.

    சொன்னபடி வைத்தவள் மித்ராவை ஒரு பார்வைப்பார்த்துவிட்டு சென்றாள்.

    அவள் உள்ளே வந்ததிலிருந்து தன்னைப்பார்த்த விதத்தை மித்ராவும் கவனித்தாள். இவள் தன்னை எடைப்போட வந்திருக்கிறாள். ராஜி சொல்லி வந்திருப்பாளோ. இவளைப்பற்றி கௌதமிடம் சொல்லிவைக்க வேண்டும் என்று குறித்துக்கொண்டாள்.

    கௌதமன் தன் படுக்கையில் அமர்ந்து மடிக்கணினியில் பார்வைப்பதிந்திருந்தாலும் எண்ணமெல்லாம் காலை வந்து சென்றவளைச் சுற்றியிருந்தது.
    மேஜையின் மேல் கோர்த்திருந்த தன் அழகான மெனிக்கூர் செய்யப்பட்ட கை விரல்களைப் பார்த்த வண்ணம் தன் காரணத்தை மித்ரா தெரிவித்த நொடியில் கௌதம், மேகா இருவரின் புருவங்களும் ஒரு சேர ஏறியிறங்கியன!

    உடனேயே சட்டென நிமிர்ந்து கௌதமின் கண்களை அவள் சற்றே விரிந்த விழிகள் ஊடுருவி என்னை நம்பு என்று அழைத்தன!

    இப்போதும் அவள் விழிகளின் ஆழம் அவனுக்கு நினைவிருந்தது. அடர் நிற விழிகளிலும் இத்தனை ஆழமிருக்குமா என வியந்தது நினைவிருந்தது. அதன்பின் அவளின் சந்தேகத்திற்கான காரணத்தைக் கேட்டான்.

    “காரணம்.. காரணம் என் அப்பாவோட வில்(will)”

    “விவரமா சொல்லுங்க மித்ரா..”

    “அப்பா அவரோட சொத்தையெல்லாம் அவரோட அண்ணன் மகளுக்குனு வில் எழுதிருக்காரு. அது நம்பற மாதிரியில்ல.”

    “வில் ஃபொர்ஜெரினு சொல்றிங்களா?”

    “அப்படி சொல்லல.. ஆனா அப்பா அப்படி வில் எழுதிருக்காருன்னு நம்ப முடியல. அப்படியெழுதி ரெண்டு மாசத்துல அவர் இறந்துப்போனது ஏதோ நெருடலா இருக்கு. இது தான் காரணம்னு தெளிவான காரணம் எங்கிட்டயில்ல பட் ஐ ஃபீல் சம்திங்க் ஃபிஷி(fishy)” என்றாள்.

    “பட் உங்க ப்ரதர்க்கும் ஃபாதர்க்கும் டெர்ம்ஸ் சரியில்லைனு கேள்விப்பட்டோமே”

    “ஆமா.. மனோவோட பழக்கவழக்கம் சரியில்ல. பேட் ஃப்ரென்ட்ஷிப். சரியான செலவாளி ஆனா எதுவும் உருப்படியான செலவில்ல. அப்பாவுக்கு ஆப்வியஸ்லி அவன் போக்கு பிடிக்கல. அதுல எப்பவும் சண்டை. ஆனா அவன் மாறல.”

    “ஓ.கே. இஃப் யூ டோன்ட் மைன்ட் மீ ஆஸ்கிங்க் உங்க அப்பாக்கு உங்க மேல என்ன கோபம்?”

    “அவர் விருப்பத்திக்கு மாறா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்பா அவ்ளோ ஸ்ட்ராங்கா எதிர்ப்பாருன்னு நான் எதிர்ப்பாக்கல. அவர் என்ன ஃபுல் ஃப்ரீடம் குடுத்து வளத்தாரு. என்னுடைய எல்லா முடிவுகளயும் நாந்தான் எடுப்பேன் இந்த விசயத்துல இப்படி ரியாக்ட் பண்ணுவாருனு நான் நினைக்கல.”

    “உங்க கல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆச்சு?”

    “த்ரீ யியர்ஸ்”

    “இடையில உங்க அப்பாவ கான்டாக்ட் பண்ணவோ கன்வின்ஸ் பண்ணவோ ட்ரை பண்ணிங்களா?”

    “அஃப்கோர்ஸ் யெஸ்.. பட் அவர் என்னோட பேசவே மறுத்துட்டாரு. அந்த ஒரு விசயத்துல மட்டும் நான் பாத்த அப்பாவே வேற. கடைசிவரைக்கும் என்னப்பாக்கல அவர்” குரல் பிசிறியது.

    “ஸோ.. உங்க மேலயும் உங்க தம்பி மேலயும் இருக்கற கோபத்துல அவர் அப்படி வில் எழுதிருக்கலாமில்லயா”

    “மனோ மேல அவருக்கு கோபம் இருந்தது ஆனா அது அவன் மாறனும்ற ஆசையும் ஏக்கமும் தானே தவிர அப்பா அவன வெறுத்ததில்ல.. அதுமட்டுமில்ல.. அப்பாக்கு அவர் பிசினஸ் மேல பற்று ஜாஸ்தி.. ஹி வொர்ஷிப்ட் இட்.. எங்களுக்கு சமமா அத நேசிச்சாருன்னு சொல்லலாம்.. அதயும் அவர் அந்தப்பொண்ணுக்கிட்ட விட்டது நம்பமுடியல.. ஷி ஸ் நாட் ஈவன் அ க்ராஜுவேட் (graduate).. அண்ட் நோ எக்ஸ்பீரியென்ஸ்.. நோ எக்ஸ்போஸர்.. அவங்களால பிசினஸ ரன் பண்ணமுடியும்னு அப்பா நிச்சயம் நம்பிருக்க மாட்டாரு. ஸோ அப்படி ஒரு ஆள்கிட்ட பிசினஸ எப்படி ஹான்டோவர் பண்ணிருப்பாரு?”

    “இந்த பிக்சர்ல உங்க பெரியப்பா பொண்ணு எப்படி வந்தாங்க?”

    “நான் வெளிய போனதுக்கப்புறம் அந்த ஷாக்ல அப்பவுக்கு கொஞ்ச நாள்ல ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.. அப்பவும் என்ன அவர் பிடிவாதமா உள்ளயேவிடல.. அப்போ அவருக்கு ஹெல்ப் பண்ணதான் அவங்க வந்தாங்க”

    “நீங்க யாரையாவது பர்டிகுலரா சந்தேகப்பட்றிங்களா? ஐ மீன் இந்த உங்க பெரியப்பா பொண்ண?”

    “இல்ல.. இது ஒரு உருத்தல். எதுவோ சரியில்லன்ற நெருடல். பட் ஒதுக்கவோ இக்னோர் பண்ணவோ முடியாத ஸ்ட்ராங்கான நெருடல்”

    “உங்க ஃபேமிலி லாயர் அட்வக்கேட் ராமச்சந்திரன் தானே? அவர் கிட்ட உங்க சந்தேகத்தப் பத்தி பேசினிங்களா?

    “இல்ல.. அவரோட பெர்சப்சன் பையாஸ்டா இருக்கலாம். எனக்கு வெளியில இருந்து நியூற்றலான(neutral) ஒருத்தர் வேணும் இத இன்வெஸ்டிகேட் பண்ண.. அதான் உங்ககிட்ட வந்திருக்கேன்.”

    “ஓ.கே. மித்ரா.. எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும். நாளைக்கு நானே உங்களுக்கு கால் பண்றேன்”

    “ஸ்யூர்”

    “பை த வே நீங்க இப்போ எங்க ஸ்டே பண்ணியிருக்கிங்க?”

    “ஹோட்டல்ல..”

    “உங்க வீட்ல நீங்க ஏன் தங்கக்கூடாது? இன் கேஸ் இத நாம ப்ரோசீட் பண்றோம்னா தட் வில் பீ பெட்டர்”

    “அங்கயா.... ஓ.கே.. நான் அங்கப்போறேன்”

    “தேங்க்ஸ் மித்ரா”

    மேகா வெளிர் ஆகாய நிற இரவு உடையில் கையில் இரு கோப்பைகளில் பாலுடன் வந்து ஒன்றை அவனிடம் நீட்டி அவன் சிந்தனையை கலைத்துவிட்டு படுக்கையின் மறுபுறம் அமர்ந்தாள். பாலைக்குடித்தவாறு அவளைப்பார்த்து,

    “மித்ரா கேஸைப்பத்தி நீ என்ன நினைக்கிற மேகா?” என்றான்.

    “ஸிம்பில். ஹெர் டவுட் ஸ் ப்யூர்லி பேஸ்ட் ஆன் இன்ஸ்டிங்க்ட்(instinct).. பட்..”

    “பட்?”

    “சம்ஹவ் ஐ ஃபீல் ஹர் இன்ஸ்டிங்க்ட் ஸ் வொர்த் இன்வெஸ்டிகேட்டிங்”

    -தொடரும்
     
    Caide, Deepu04, sudhaparkavi and 2 others like this.

Share This Page