1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு நாள் போதுமா? Mother's day special

Discussion in 'Regional Poetry' started by PushpavalliSrinivasan, May 10, 2014.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    பத்துமாதங்கள் வயிற்றிலே சுமந்து
    பத்தியம் இருந்து பகலும் இரவும் கண்விழித்து
    பாசத்தைப் பொழிந்து வளர்த்த தாயைப் போற்றிட*
    அன்னையர் தினம் என்ற ஒருநாள் போதுமா?

    அரும்பாடுபட்டு நல்லதோர் பள்ளியில் சேர்த்திட
    கால்கடுக்கக் க்யூவில்நின்று கட்டடநிதிக்குப் பணம் தந்து
    பின்னர் காபிடேஷன் பணம்தந்து நல்லதோர் கல்லூரியில் படிக்கவைத்த
    தந்தைக்கு நன்றி சொல்ல தந்தையர் தினம் என்ற ஒரு நாள் போதுமா?

    தான் மட்டும் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு
    மற்றவரை உயரத்தில் ஏற்றிவிடும் ஏணியைப்போல*
    தானறிந்த யாவற்றையும் தளராது கற்பிக்கும் ஆசிரியரைச்
    சிறப்பிக்க ஆண்டிற்கு ஒரு நாளாம் ஆசிரியர் தினம் போதுமா?

    திராவகத்தை வீசியும் வரதக்ஷிணை கேட்டும்
    பச்சிளங் குழந்தையையும் மூதாட்டியையும்கூட*
    பாலியல் கொடுமைக்கு தினம் தினம் உட்படுத்திட்டு
    ஆண்டிற்கு ஒரு நாள் மகளிர் தினம் கொண்டாடினால் போதுமா?
     
    8 people like this.
    Loading...

  2. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு சகோதரி புஷ்பவல்லி,

    பாசத்தைப் பொழிந்து வளர்த்த தாயைப் போற்றிட*
    அன்னையர் தினம் என்ற ஒருநாள் போதுமா?

    போதாது!

    நல்லதோர் கல்லூரியில் படிக்கவைத்த
    தந்தைக்கு நன்றி சொல்ல தந்தையர் தினம் என்ற ஒரு நாள் போதுமா?

    போதாது.

    தானறிந்த யாவற்றையும் தளராது கற்பிக்கும் ஆசிரியரைச்
    சிறப்பிக்க ஆண்டிற்கு ஒரு நாளாம் ஆசிரியர் தினம் போதுமா?

    போதாது.

    பாலியல் கொடுமைக்கு தினம் தினம் உட்படுத்திட்டு
    ஆண்டிற்கு ஒரு நாள் மகளிர் தினம் கொண்டாடினால் போதுமா?

    போதாது. போதாது. ஆனால்....

    ஒரு நாளேனும் அன்னையரை அன்புடன் நினைக்க வைத்தாயே ஆண்டவனே நன்றி.

    ஒரு நாளேனும் தந்தையரை அன்புடன் நினைக்க வைத்தாயே
    ஆண்டவனே நனறி.

    ஒரு நாளேனும் ஆசிரியரை அன்புடன் நினைக்க வைத்தாயே
    ஆண்டவனே நனறி.

    ஒரு நாளேனும் மகளிரை நினைக்க வைத்தாயே
    ஆண்டவனே நன்றி.

    அடியோடு வறண்ட கிண்ணத்தில் அடியில் சிறு துளி நீரை நிரப்பி வைத்தாயே ஆண்டவனே நன்றி! ஆண்டவனே நன்றி!
     
    7 people like this.
  3. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அன்புள்ள சூர்யகலா,
    நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்களின் பின்னூட்டத்தைப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம், காதலர் தினம் இன்ன பிற தினங்கள் மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றி தற்போது ந்மது நாட்டிலும் கொண்டாடப் படுகிற்து. எந்த கலாசாரத்திலும் உள்ள நல்ல பண்பாட்டினை ஏற்றுக்கொள்ளுவதில் தவறேதும் இல்லை.


    நீங்கள் கூறியுள்ளது போல அந்த ஒரு நாளிலாவது நினைக்க வைப்பது மிகவும் மகிழ்ச்சிக்குறிய விஷயமே.

    Ps
     
    1 person likes this.
  4. GaythriV

    GaythriV Platinum IL'ite

    Messages:
    1,365
    Likes Received:
    1,045
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Pushpavalli mam,

    மிக அருமை

    Suryakala Siater

    மிக மிக அருமை
     
    1 person likes this.
  5. nvathsala

    nvathsala Silver IL'ite

    Messages:
    174
    Likes Received:
    73
    Trophy Points:
    75
    Gender:
    Female
  6. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Gayathri and Vathsala,

    Thank you both for your appreciation.

    Viji dear,

    Thanks for liking my poem.

    PS
     
  7. Amma15

    Amma15 Gold IL'ite

    Messages:
    676
    Likes Received:
    327
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Dear PS mam and Suryakala sister,

    WOW! Too good!

    NEVER thought of it that way. Thanks.

    Usha.
     
    1 person likes this.
  8. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Usha,
    Thanks for your sweet words of appreciation.
    These modern days celebration in a way helps in increasing consumerism. Hence the merchants selling gifts and those who receive the gifts are benefited.
    PS
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    புஷ்பவல்லி அம்மா நல்ல கேள்வி .மறக்காமால் இருந்தால் நினைப்பதற்கு என்று ஒரு நாள் வேண்டியதில்லை .வர்த்தகர்களின் நன்மைக்காக இப்படி எல்லாம் கொண்டாடுகிறார்கள் .
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு சகோதரி சூர்யகலா எப்படி இருக்கிறீர்கள் .நீண்ட நாள் கழித்து உங்கள் எழுத்துக்களை கண்டு மிக்க மகிழ்ச்சி .ஆண்டவனுக்கு நன்றி சொன்ன விதம் மிக அருமை .
     

Share This Page