1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தனியொரு மனிதனுக்கு உணவு இல்லையென்றால்

Discussion in 'Posts in Regional Languages' started by strangerrr, Oct 16, 2013.

  1. strangerrr

    strangerrr Gold IL'ite

    Messages:
    175
    Likes Received:
    601
    Trophy Points:
    173
    Gender:
    Male

    னியொரு மனிதனுக்கு உணவு இல்லையென்றால் என துவங்கும் முண்டாசு கவியின் முரட்டு வரிகளை கடைபிடிப்பதென்றால் அனுதிமும் அகிலஉலகத்தை 84 கோடி முறையாவது அழித்திட வேண்டும்.

    இன்று உலக உணவு தினமாம்!

    உணவு என்றதும் உணவு பிரியனாய் வளர்ந்த, கொளுத்த காரியங்களையும்; சொந்தஊர் தின்பண்டங்களின் பெருமைகளையும்; உணவு சம்பந்த்தமாய் பெற்ற ஒருசில பட்ட-பட்டய படிப்புகளையும்; அறுசுவைகளின் எச்சுவையையும், பலதேசத்து உணவுகளையும் நினைத்த வேளையில் சமைக்கவும், ருசிக்கவும் வாய்ப்பு-திராணி உள்ளதையும் ஜம்பம் பேச எண்ணினாலும்,

    இந்திய நகரங்களில் பாலத்துக்கு அடியில் படுத்திருப்போரையும்; நட்சத்திர ஹோட்டல்களின் குப்பை பெட்டிக்குள் பெருவாரி உணவுகள் புகுவதையும்; ஒரு ஆப்பிரிக்க நாட்டின் குப்பை தொட்டியிலிருந்து உண்ணக்கூடிய குப்பை (edible garbage) பிரித்தெடுக்க சில பதின்வயதினர் போட்டிப்போடுவதையும் பார்த்த காட்சிகள் தடுக்கிறது.

    அரசியல் ஆதாயத்திற்கும், சுயபிரஸ்தாபதிற்கும் பட்டினி நாடகங்களும், குறுநாடகங்களும் ஒருநாள்/டுவன்டிடுவன்டி கிரிக்கெட்போல பொழுதுபோக்குக்காக நம் சின்னதிரையில் வந்துபோகும் அதே நாளில், பல லட்ச பேருக்கு மூன்றுவேளை உணவு என்னும் முதலாம் அத்தியாவசிய தேவை-அடிப்படை மனித உரிமை ஒரு ஆடம்பரம் என்பது நாம் அதிகம் அலட்டிக் கொள்ளாத விரும்பாத ஒரு யதார்த்தம்.

    பயிர் செய்தல், விவசாயம் என்னும் கலைகளை நாகரிகத்தின் முதலாம் அத்தியாயத்தில் அற்புதமாய் கற்ற ஹோமோ சாபியன் (Homo sapiens) என்னும் சமுக விலங்காகிய நம்மை தவிர வேறு எந்த விலங்கு ஜாதியிலும் இத்தனை பசிபட்டினி கதைகளும், அதின் சரித்திரத்தின் நெடுகே இவ்வளவு பட்டினி சாவுகளும் நிகழ்திருக்குமா என்பது ஐயமே.

    நமது பரிணாம வளர்ச்சியும் உச்சகட்ட பட்டங்களான நவீன பொருளாதாரத்திலும், ரசாயன ஆயுதத்திலும் நாம் தேர்ச்சி பெறுவதற்கு நாம் கொடுத்து விட்ட விலையோ, நம் முதலாம் அத்தியாத்தின் அப்பியாசத்தை நாம் மறந்துவிட்டது?

    சட்டைப்பையிலுள்ள கடைசி பத்து ரூபாய் தாளை வடாபாவிற்கு செலவிட விரும்பாமல் பசியுடன் படுத்து தூங்கிய ஒருசில நாட்கள் உணவின் அருமையையும், பசியின் தாக்கத்தையும் எனக்கும் பாடமெடுத்த படலங்கள்.

    ஈகை, கொடை, தானம் என்ற வார்த்தைகள் கவர்ச்சியாகி போன காலத்தில் வாழும் நாம், கொடுத்தல் என்பதற்கு பவுடர்புசி, பூச்சுடி அதை தலைகனம் தரும் காரணிகளாக்காமல், உண்பது உடுப்பதுபோல் அதையும் வாழ்வின் அனுதின இயல்பாகவே செய்ய வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். இதற்கு என் சிறுவயதிலேயே என் பெற்றோர்கள் வித்திட்டது எனக்கு கிடைத்த பாக்கியம்.

    வாரம் ஒருவேளையாவது (குறைந்த பட்சம் மாதம் ஒருமுறையாவது) நம் உணவை தேவையுள்ள ஒருவருடன் பகிர்ந்திடுவோம்.

    விரதம், நோம்பு, உபவாசம் என்னும் மத கடமைகளில் நாம் மிச்சம்பிடிக்கும் உணவு, பணம் முழுவதையும் இல்லாதோரை போஷித்தலுக்கு பயனாக பயன்படுத்துவோம்; இதை சகமனித உறவின் ஒரு பரிணாபமாக கருதி அதற்கு நம்மை கட்டாய படுத்துவோம்!
     
    3 people like this.
  2. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    எழுத்து பிழையை தவிர குறை ஒன்றும் இல்லை


    முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
     
    1 person likes this.
  3. strangerrr

    strangerrr Gold IL'ite

    Messages:
    175
    Likes Received:
    601
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Thanks for the fb; will try to minimize that :)
     
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    :thumbsup: nalla sindhai..nadaimuraikku vandhaal/konduvandhaal innammum :thumbsup:

    Sriniketan
     

Share This Page