1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் ரோஜாவே !

Discussion in 'Stories in Regional Languages' started by yevanoOruvan, Sep 18, 2013.

  1. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    2. முதல் பார்வை

    இன்னிக்கு,, இந்த நிமிஷம் வரைக்கும் கூட தெரியாது, எனக்கு ஏன் அவளை பிடிச்சுதுன்னு. ஒன்னும் தெரியாது அந்த வயசுல என் கண்ணுக்கு அவள் அழகா தெரிஞ்சா. முதல் முதல்ல நான் பார்த்த அழகி. அவளை விட அழகான பொண்ண நான் இன்னும் பார்க்கவே இல்லை. அது சரி, அப்படி இருந்தா தானே பார்க்க முடியும்.

    எங்க கிளாஸ்’ல இருக்கிற பொண்ணுங்க எல்லாரும் வாய்க்கு பெயர் போனவங்க. வாய தொறந்தா மூடவே மாட்டங்க. அதும் சாரதிக்கும் இன்னொரு பொண்ணுக்கும் சண்டை வந்தா நோட் புக் எல்லாம் பறக்கும். அந்த வானர கும்பலுக்கு நடுவுல பூ மாதிரி ஒரு பொண்ணு எப்பவுமே அமைதியா இருந்தா... பிடிக்குமோ? அவள் அப்படிதான். ப்ரியா.. தமிழ் ல நான் அதிகமா எழுதி பார்த்த வார்த்தை, அவளோட பெயர் தான். நல்லா உயரமா இருப்பா. கிளாஸ் பொண்ணுங்க’லே அவள் தான் உயரம் (நான் லாவண்யா விட உயரம் கம்மி.. ஐயோ). அது என்னமோ அவளோட முகம் நிலாவை எனக்கு ஞாபக படுத்தும். நல்லா கலரா இருப்பா, அந்த கண்ணத்துல ரோஜா மொட்டு மாதிரி சின்ன சின்ன பரு. இப்போ நெனச்சா கூட ஜில்’னு அவளோட முகம் மனசுக்குள்ள வருது போங்க. ரெட்ட ஜடை போட்டு, சிகப்பு ரிப்பன் கட்டி, ஒரு ஜடை முன்னாடி, ஒரு ஜடை பின்னாடி, அந்த ஜடையோட ஓரத்தில டெய்லி ஒரு ரோஜா.. அவளை போல ஒரு அழகான மஞ்சள் ரோஜா. அவள் பின்னாடி உக்காந்துகிட்டு அவளோட ரோஜாவையே பர்த்துக்கிட்டுருப்பேன். இப்போ கூட எனக்கு முழுசா சொல்ல தெரியல, அவளோட அழகை பத்தி. அவ்வ்வ்வ்வ்வ்ளோ அழகு..

    அவள் மேல ஏற்பட்ட ஈர்ப்பு, கொஞ்சம் கொஞ்சமா என்னையே மீறி ஒரு விதமான பைத்தியம் ஆகிடுச்சி.. மோசமான விளைவு அந்த மாசத்தோட டெஸ்ட் ரிசல்ட்’ல வந்துச்சு.

    “என்ன படிக்கிற..”

    கையில் கோனார் தமிழ் உரையை வைத்துக்கொண்டிருந்த என்னிடம் இந்த கேள்வியை கேட்டது எங்கள் கரஸ்பாண்டன்ட். எனக்கு கொஞ்சம் கடுப்பாக வந்தது. கோனார் உரையை வைத்து கெமிஸ்ட்ரியா படிப்பாங்க.

    “சார்.. சிலப்பதிகாரம்.”

    “ம்ம்.. நாளைக்கு சைக்கில் டெஸ்ட் பிசிக்ஸ் இருக்கே. அதுக்கு படிக்கலையா..”

    “நைட் கிளாஸ் ல படிப்பேன் சார்..”

    “நீ ஏன் எப்ப பாத்தாலும் தமிழ் படிக்கற.. என்ட்ரன்ஸ் எக்ஸாம் ல தமிழ் வருமா.. இல்லை பப்ளிக் ல சென்டம் போடுவாங்களா..?”

    “சார்.. வந்து..”

    “உன்னோட பெர்பார்மான்ஸ் சுத்தமா போயிடுச்சு.. நீ ஸ்டேட் ரேங்க் வாங்குவேன்னு பார்த்த ஸ்கூல் ரேங்க் கூட வரமாட்ட போலருக்கு.. ஒரு சென்டம் கூட இல்லை. எங்க போயிட்ருக்கு உன்னோட ஸ்டடீஸ்.”

    அமைதியாக இருந்தேன். இவருக்கு என்ன வந்துச்சாம். ஸ்டேட் ரேங்க் வேண்டுமென்றால் லாவண்யா விடம் சொல்லுங்களேன்.

    “இதோ பார், நீ ஒழுங்க படிச்சு ஒழுங்க மார்க் எடுத்தா தான் நீ விருப்ப படுற காலேஜ் போக முடியும்..”

    எனக்கு சுரீர் என்றது. என்னோட வீக் பாயிண்டில் அல்லவா அடித்து விட்டார்கள். எனக்கு அப்துல் கலாமை போல் வரவேண்டும் என்று ஒரு ஆசை. அதானால் தான் அவர் படித்த எம்.ஐ.டி யில் படிக்கவேண்டும் என்ற கனவோடு இருந்தேன். இவர் இப்படி சொன்னதும் நிஜமாகவே கொஞ்சம் கலங்கினேன்.

    “இனிமே கவனமாக படிக்கிறேன் சார்.”

    அவர் சென்றதும் சற்று நேரத்தில் பெல் அடித்தது. அனைவரும் கிளம்பினர் வீட்டிற்கு. நான் மட்டும் அமைதியை என் பெஞ்சில் உட்கார்ந்து அவள் இல்லாத அவளுடைய பெஞ்சை முறைத்து பார்த்துகொண்டிருந்தேன். சில விஷயங்களை எனக்குள் முடிவு செய்து கொண்டேன்.

    _______________________________________


    “என் டா, நேத்து நைட் கிளாஸ் வரலை..” கிளசிற்கு வந்ததும் கேட்டான் சாரதி.

    “சும்மா தான்.” என் புத்தக பையை இறக்கி வைத்தேன். உள்ளே இருந்த பேடையும், வெள்ளை பேப்பரையும் எடுத்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் சயிக்கில் டெஸ்ட்.

    “இந்த கதையெல்லாம் என்கிட்டே விடாத.. சொல்லு.. ஏன் வரலை..” என் பேடை பிடிங்கிகொண்டான்

    “இனிமே வரமாட்டேன் டா..” சற்று குரலை தாழ்த்தினேன், “கரஸ் கிட்ட கூட சொல்லலாமுன்னு இருக்கேன்.”

    “அதான் ஏன்.”

    “இல்லை டா.. எனக்கு ரொம்ப டிச்டர்பன்ஸா இருக்கு .. அதெல்லாம் வேண்டாம், ஒழுங்கா படிக்கனுமுன்னு நெனைக்றேன்.”

    சற்று நேரம் என்னையே தீர்க்கமாய் பார்த்தான், “ப்ரியா வை சொல்றியா..”

    “ம்ம்..” எங்கோ திரும்பி கொண்டு பதில் சொன்னேன். அவள் பக்கம் பார்வை போகவில்லை. அவள் வந்தாளா என்பது கூட தெரியவில்லை. இனிமேல் எனக்கு அது தேவையும் இல்லை.

    “சரி உன் இஷ்டம். ஒழுங்கா படிச்சா சரி தான்.. வா போகலாம். டெஸ்ட் அரமிக்க போகுது.” இருவரும் டெஸ்ட் பேடை எடுத்து கொண்டு கிளம்பினோம். அவள் இடத்தை பார்க்க வேண்டுமென எழுந்த ஆசையை கஷ்டப்பட்டு தடுத்தேன்.

    டெஸ்ட் ஒரு மணி நேரத்தில் முடிந்தது. எனக்கு மிகுந்த திருப்தி. கண்டிப்பாக சென்டம். இந்தி வேகம் இருந்தால் போதும், எம்.ஐ.டி கண்டிப்பாக கிடைக்கும். எனக்கு நானே சபாஷ் போட்டுக்கொண்டேன். அன்று சுத்தமாக அவள் பக்கம் தலையை திருப்ப வில்லை. அவள் மீது அனிச்சையாக கூட பார்வை விழக்கூடாது என என் இடத்தையும் மாற்றி கொண்டேன்..

    மதியம் முழுவதும் பிசிக்ஸ் பிராக்டிகல் செய்ய வேண்டுமென அணைத்து பீரியட்’கலையும் பிசிக்ஸ் சார் வாங்கிகொண்டார். அனைவரையும் பேட்ச் பேச்சாக பிரித்து எக்ச்பீரிமென்ட் களை செய்ய சொன்னார். என் பேச்சின் லீடர் நான் என்பதால் இதை அப்படி செய் என்று மற்றவர்களிடம் சீன் போட்டு கொண்டிருந்தேன். அப்பொழுது நாங்கள் போட்டேன்ஷியோ மீட்டர் எக்ச்பீரிமென்ட் செய்து கொண்டிருந்தோம். சின்ன சின்ன வயர்களை எடுத்து இணைப்பை குடுத்து கொண்டிருந்தோம்.

    இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். அவளை இத்தனை நாளாக நான் பார்த்து கொண்டிருந்தேனே தவிர, அவள் ஒரு நாளும் என்னை பார்த்ததே இல்லை. அவளை நான் பார்கிறேன் என்பது கூட அவளுக்கு தெரியாது. இன்று அவள் பேட்ச் எங்கள் பேச்சின் அருகில் இருந்து டியூநிங் போர்க் செய்து கொண்டிருந்தது. அவளை பார்க்க கூடாது என்ற என் சங்கல்பத்தை மறந்து எதேட்சியாக அவளை பார்த்தேன்.

    ஜன்னலின் அருகில் கையில் டியூநிங் பொற்கை பிடித்து கொண்டு நின்று கொண்டிருந்தாள். மாலை நேர சூரிய கதிர்கள் அவள் மீது பட்டு, அவள் பருக்குளின் மீது மின்னி கொண்டிருந்தது. அவள் பேட்ச் லீடர் விஜி, அவளிடம் ஏதோ சொல்லிகொண்டிருக்க அவளது அழகான கழுத்தை ஆட்டி கவனமாய் கேட்டு கொண்டிருந்தாள். அவள் கழுத்தில் சுற்றியிருந்த தங்க செயின் அவள் அழகை இன்னும் மெருகேற்றியது. என்னையே மறந்து அவளை கண் கொட்டாமல் பார்த்துகொண்டிருந்தேன்.

    அவள் சில நொடிகளுக்கு பின் அதனை உணர்ந்தாள். சட்டென்று அவள் என் பக்கம் திரும்பி என்னை பார்த்தாள். அன்று தான், அப்பொழுது தான், முதல் முறையாக அவள் கண்களை நேருக்கு நேராய் பார்த்தேன். இன்று வரை அந்த கனத்தை தோற்கடிக்கும் நினைவு என்னிடம் இல்லை. அவள் கண்களில் இருக்கும் மின்சாரத்தை முதன் முறையாக உணர்ந்த நாள் அது. அவள் என்னை பார்த்துவிட்டாள் என்ற செய்தி எனக்கு புரியும் பொழுது அவளும் பார்வையை வேறெங்கோ நகர்த்தினாள். என்னை நானே நொந்து கொண்டேன், ‘ச்சே.. ஏன் அவளை பார்த்தோம், அவள் வேறு பார்த்துவிட்டாளே.. இனி பார்க்க கூடாது.. பார்க்கவே கூடாது..”

    அந்த சபதம் எடுத்து முழுதாய் ஒரு நிமிடம் ஆவதற்குள் மீண்டும் அவள் பக்கம் பக்கம் பார்வையை திருப்பினேன். அதே நொடி, சற்று தயக்கத்துடன், அவளும் அவள் பார்வையை என் மீது திருப்பினாள்.

    அந்த முதல் பார்வை சந்திப்பு.. ஒரு வரம் :)
     
    Last edited: Oct 16, 2013
  2. surya1992

    surya1992 New IL'ite

    Messages:
    18
    Likes Received:
    9
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi friend

    Again it was awesomatic ...:2thumbsup:
    Very naturalistic:) and I would be as it is a non-fiction :)
    The way your're taking it off is nice.
    Go ahead friend.

    Plz give ur next update soon.. (Ippo thaane update koduthen udane kekkurangale nu enna kandapadi thitreenga.. kadhula vizhuguthu but konjam kadupagama update i seekiram koduthurunga Bow) he he :)

    Cheers
    Surya.
     
  3. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ..
    nice update...

    priya va parka koodadhu nu decide pannadhu half-a-day la parandhu poiruchu..
    romba nalla narrate panreenga..
     
  4. vidhya3b

    vidhya3b IL Hall of Fame

    Messages:
    2,502
    Likes Received:
    1,074
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Ha Ha.. story going very good.. Eagerly waiting..
     
  5. vidukarth

    vidukarth Platinum IL'ite

    Messages:
    2,444
    Likes Received:
    1,091
    Trophy Points:
    283
    Gender:
    Female
    nice write up.. keep writing more
     
  6. surya1992

    surya1992 New IL'ite

    Messages:
    18
    Likes Received:
    9
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hello friend

    Next update eppo?
    Waiting...


    Surya :)
     
  7. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    Thank u surya. Anaalum na rombave late paniten next update ku.. sry for tat :)
     
  8. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    Thanks for the feedback. pls keep reading
     
  9. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    Thank u vidya and vidukarth
     
  10. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    [​IMG] Originally Posted by vidhya3b [​IMG]
    Ha Ha.. story going very good.. Eagerly waiting..
    Thank u vidya and vidukarth
     

Share This Page