1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் ரோஜாவே !

Discussion in 'Stories in Regional Languages' started by yevanoOruvan, Sep 18, 2013.

  1. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    1. அவளை பிடிச்சிருக்கு டா..
    [justify]
    இந்த கதையை முழுக்க முழுக்க நான் தான் சொல்லப்போகிறேன். அதனால் முதலில் உங்களுக்கு என்னை பற்றி சொல்லியாக வேண்டும். எங்கள் வீட்டில் நான் தான் பெரியவன். சின்னவனும் நான் தான். என்ன புரியவில்லையா.. நான் ஒரே பையன் தாங்க. சென்னை நங்கநல்லூரில் ‘பிரின்ஸ்’ மெட்ரிகுலேஷன் பள்ளியை பற்றி கேள்விபட்டு இருப்பீர்கள். அங்கு தான் எல்.கே.ஜி யில் இருந்து படிக்கிறேன். அது என்னவோ சின்ன வயதில் இருந்தே எல்லாருக்கும் என் மேல் ஒரு ‘நல்ல பையன்’ அபிப்ராயம். அந்த நல்ல பையன் இமேஜையும், நல்லா படிக்கிற பையன் இமேஜையும் நானும் நன்றாகவே மெயின்டைன் செய்துவிட்டேன். இதோ, இப்பொழுது பிளஸ் 2. இன்னும் நான்கு மாதங்களில் பப்ளிக் எக்ஸாம். எல்லாருடைய பார்வையும் என் மீது தான். நான் எத்தனை மார்க் எடுப்பேன், என்ன கல்லூரியில் சேருவேன் என்று என்னை விட மற்றவர்கள் தான் அதிகமாக விவாதித்தார்கள் ( ரொம்ப ஓவர் இன்ட்ரோ வா இருக்கோ? சரி நிறுத்திக்கிறேன்)

    ஆனால், என் பார்வையும் கவனமும் வேற ஒரு விஷயத்துல இருந்துச்சு. இந்த பாழாப்போன மனசுல, அதுவும் பதினாறு வயசுல இப்படி ஒரு எண்ணம் ஏன் வந்துச்சு னு தெரியல. ஆனா, என் வாழ்கையே மாத்தி போட்டுடுச்சு. அந்த கதை தான் இந்த கதை.. என் சொந்த கதை !!

    இந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகள், குறிப்பாக கொஞ்சம் பேர் வாங்கி விட்ட பள்ளியில் படிப்பதே பெரும் பாவம். நீங்க உங்களுக்காக படிக்கிரிங்கலோ இல்லையோ, அவர்களின் பெயருக்காக மாடாக படிக்கவேண்டும். நீங்க சுமார படிக்கிற ஆள்னா தப்பிசிங்க. சுத்தமா படிக்க மாட்டிங்கனா படிக்கவைக்கிறேன் பேர்வழி’ன்னு உங்க உயிரா எடுத்துடுவாங்க. நூறு சதவிகிதம் ரிசல்ட் வரணுமே. அட அவங்க கூட பரவாயில்லை. எக்ஸாம் ல, சொல்லிக்குடுத்தோ இல்லை பிட் குடுத்தோ பாஸ் பண்ண வச்சிடலாம். இந்த கிளாஸ் டாப்பர்ஸ் இருக்காங்க பாருங்க. அவங்க நிலைமை தான் ரொம்ப மோசம். நம்ம கௌதம் மேனன் ஸ்டைல்’ல சொன்னா, அவங்க எல்லாம், காஆஆஆஆலி. ஏனா ஸ்கூளோட அந்த வருஷ கவுரவம் இவங்க மார்க்ல தான் இருக்காம். டெய்லி அதை படி, இதை படி, சைக்கில் டெஸ்ட், எக்ஸ்ட்ரா கிளாஸ் னு சாவடிப்பாங்க.

    இந்த சோ-கால்ட்-டாப்பர்ஸ் லிஸ்ட் ல ரெண்டு பேர். மோஸ்ட் எக்ச்பெக்டட், பையாலாஜி குருப், டென்த் டாப்பர் லாவண்யா. லாவண்யா மேக்ஸ் ல புலி. கெமிஸ்ட்ரி ல எல்லா ஈக்வேஷனும் விரல் நுனில வச்சிருப்பா. அவ பேப்பர் ல ஒரு மிஸ்டேக் கூட உங்களால கண்டுபிடிக்க முடியாது. சூப்பர் பர்பெக்ட். எல்லாருக்கும் தெரியும், அவ தான் பிளஸ் 2 ல பர்ஸ்ட் வரபோறான்னு. ஆனாலும் எப்பவும் இந்த மாதிரி ஆளுக்கு காம்பெடிஷன் தர ஒரு கேரக்டர் இருக்கும் இல்லையா.. அதான் நான்!!! என்ன பத்தி சொல்லன்னுமுன்ன அதுக்கு இன்னொரு கதையே எழுதணும். அதனால நாம அந்த பார்ட்டை விட்டுடலாம். ஓ.. பேர சொல்ல மறந்துட்டேனா.. விடுங்க.. அது ஒன்னும் அவ்வுளோ முக்கியம் இல்லை.

    எனக்கும் ஆசை தான், நல்லா படிச்சு பர்ஸ்ட் வரணுமுன்னு, ஆனா லாவண்யா தான் பர்ஸ்ட் வருவான்னு எனக்கு நல்லாவே தெரியும். சின்ன வயசிலே இருந்தே என் பிரண்ட். எவ்ளோ சின்சியரா படிப்பா’ன்னு பாத்துருக்கேன். அது மட்டும் இல்லாம, கொஞ்ச நாளா எனக்கு வேற ஒரு பிரச்சனை.

    நவம்பர் 30, 2004

    “என்ன ஆச்சு உனக்கு.. நானும் பாத்துகிட்டே தான் இருக்கேன். எப்ப பார்த்தாலும் தனியாவே உட்காந்துக்கிற. எங்க யார்கிட்டயும் பேச மாட்டேன்கிற..” சட்டையை பிடிக்காத குறையாக கேட்டான் சாரதி.

    சாரதி, டாப்பர்ஸ் கேங்கில் இருப்பவன். என்னோடைய பள்ளி வாழ்கையின் சாரதியும் இவன் தான். பெஸ்ட் பிரண்ட்., லாவண்யாவையும் விட நெருங்கிய நண்பன். சேர்ந்தே படிப்போம், சேர்ந்தே மற்ற பசங்களை கிண்டல் அடிப்போம் (பெண்களிடம் அவன் வாயாடும் போது மட்டும் நான் கழண்டு கொள்வேன், எல்லாம் அந்த ‘நல்லா பையன்’ இமேஜை காப்பாற்றிக்கொள்ள தான்). அடிக்கடி ஆசிரியர்களிடம் சேர்ந்தே திட்டு வாங்குவோம்.

    “அதெல்லாம் இல்லை டா.. இந்த எக்ஸாம் டென்ஷன் தான்.”

    “இந்த கதையெல்லாம் என்கிட்டே விடாதே. என்னனு சொல்லப் போரியா இல்லையா..”

    நான் யோசித்தேன். எத்தனை நாள் தான் எனக்குள்ளே வைத்திருப்பது. இவனிடமாவது சொல்லி தொலைக்கலாம். “சரி சொல்றேன்..”

    “சொல்லு..”

    “ஒரு பொண்ண பிடிச்சிருக்கு..”

    “...”

    “டேய்...”

    என் சட்டையினை கொத்தாக பிடித்தான், “கதை விடாத.. மரியாதையா உண்மைய சொல்லு.”

    சை.. என் மீது நானே நொந்து கொண்டேன். இப்படி எல்லாமா இமேஜ் பில்ட் அப் இருக்கு என்மேல.. “நெஜமா தான் சொல்றேன்..”

    “நம்ம ஸ்கூலா..?”

    “நம்ம க்ளாஸ் தான்.”

    “டேய்.. லாவண்யா வா..?” அவன் அதிர்ந்தான். ஸ்கூலில் பல பேருக்கு இந்த சந்தேகம் இருந்திறுக்கிறது. சில பேர் என்னிடமே கேட்டிருக்கிறார்கள். ஆனால் லாவண்யா என் தோழி. தோழி மட்டுமே.

    “ம்ஹ்ம்.. ஏண்டா இப்படி.. நீயுமா..?”

    “நீ வேற யார்கிட்டயும் பேசமாட்டியே..”

    நான் அமைதியாக இருந்தேன். உண்மை தான். லாவண்யாவை தவிர வேறு யாரிடமும் அதிகம் பேச மாட்டேன். என்ன என்றால் என்ன.. அவளிடமும் கூட பேசியது இல்லை. ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளிற்கு ஒரு ட்ரேயில் சாக்கிலேட் கொண்டு வந்து நீட்டுவாள். அப்பொழுது அவளுக்கு ஹேப்பி பர்த்டே சொன்னது கூட நினைவில்லை.

    “ம்ம்.. பேசினது இல்லை தான். ஆனா பிடிச்சிருக்கே..”

    “எப்போலேர்ந்து நடக்குது இது..” வேறு வழி இல்லை.. அவனுக்கும், நம்பினான்.

    இது எனக்குமே பதில் தெரியாத கேள்வி. அவள் எப்போதில் இருந்து என் கூட படிக்கிறாள் என்பது கூட எனக்கு நினைவில் இல்லை. வகுப்பில் பெண்களை விட பசங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், பெண்கள் வரிசையின் பின்னாலும் இரண்டு பெஞ்சகளை போட்டு நாங்கள் அமர்ந்திருப்போம். திடீர் என்று ஒரு நாள் அவள் என்னை பார்த்த சிரிப்பதாக உணர்ந்தேன். அப்பொழுது தான் அவளை கவனித்தேன். அவள் உண்மையாகவே என்னை பார்த்து தான் சிரித்தாள். அந்த நொடி, அந்த சிரிப்பு இன்னும் என் மனதில் பதிந்திருக்கிறது.

    “டென்த்’ல இருந்து ..”

    “அட பாவி.. டென்த்’ஆ.. அதான் டென்த் ல மார்க் கொட்டைய விட்டயா..”

    “என்னடா கோட்டை விட்டேன்”

    “அதான் லாவண்யா பர்ஸ்ட் வந்தாளே”

    “போடா.. இல்லாட்டியும் அவ தான் வந்துருப்பா”

    “சரி விடு.. என்ன சொல்ல வர.. லவ் பண்றியா”

    நான் சிலிர்த்தேன். தெரியவில்லையே. தினம் க்ளாசிற்கு வருவேன். அவளை பார்க்க ஏதுவான இடத்தில் உட்கார்ந்து கொள்வேன். அவள் எதாவது படிப்பாள், அல்லது எழுதுவாள். நானும் அவளையே பார்த்துகொண்டு இருப்பேன். அவள் லேட்டாக வந்தாலோ, இல்லை வரவில்லை என்றாலோ பைத்தியம் படித்துவிடும். அவள் தோழிகளிடம் பேசும்போது அவள் உதட்டின் அசைவை ரசிப்பேன். அவள் முனுமுனுபாய் படிக்கும் பொழுது அவள் காதில் ஆடும் தோடின் அழகாய் ரசிப்பேன். கிட்ட தட்ட எல்லாம் சின்ன பிள்ளை தனமாய் தான் இருக்கும். ஆனால் யோசித்து பாருங்கள். அந்த வயதில் எனக்கு என்ன தெரியும்.

    “தெரியல.. ஆனா அவளை ஒரு நாள் பார்க்கலான, பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு டா.. இது தப்பு ன்னு தெரிது. ஆனா முடியல..”

    “தப்பு தான். நானும் சொல்றேன். தேவை இல்லாம உன்ன நீயே வீணாக்கிகாத.. புரியுதா.?”

    “ம்ம்...”

    சற்று நேரம் இருவரும் அமைதியாக இருந்தோம். The charge of light brigadier மனப்பாட பாடலை எழுத ஆரம்பித்தேன்.

    “டேய்..” மெதுவாக கிசுகிசுத்தான் சாரதி..

    “ம்ம்..”

    “எந்த பொண்ணு டா..”

    எனக்கு குப்பென்று முகம் சிவந்தது. கண்களை மூடி ஒரு கணம் அவளை நினைத்தது பார்த்தேன். அவள் கண்கள் பளிச்சென்று மனக்கண்ணில் தோன்றியது. ச்சே.. இவள் ஏன் இத்தனை அழகாய் இருக்கிறாள்..

    கஷ்டப்பட்டு என் வெட்கத்தை மறைத்துவிட்டு, அவள் பெயரை சொன்னேன். ‘ப்ரியா..’
    [/justify]
     
    7 people like this.
  2. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
  3. vidhya3b

    vidhya3b IL Hall of Fame

    Messages:
    2,502
    Likes Received:
    1,074
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Very good update after a long time.
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பெண்ணின் உணர்வுகளையே அதிகமாக எடுத்து சொல்லும் காதல் கதைகளுக்கு மத்தியில் ஓர் ஆண் மனம் காதல் கொண்டால் எப்படி இருக்கும் என்று உங்கள் வரிகள் உணர வைப்பதைப் படிக்கையில் வித்தியாசமாக இருக்கிறது!! மகிழ்ச்சியாகவும் கூட!
    வாழ்த்துக்கள்!



     
    1 person likes this.
  5. surya1992

    surya1992 New IL'ite

    Messages:
    18
    Likes Received:
    9
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi

    Just nw read fully.
    Nice start and good going.
    Plz do update the next one soon.
    Waiting eagerly.

    Cheers
    Surya :)
     
    Last edited: Oct 15, 2013
  6. knithyabe

    knithyabe Junior IL'ite

    Messages:
    28
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    very interesting ...waiting for next update
     
  7. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    Thanks very much suganya :)
     
    1 person likes this.
  8. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    Thank you.. I had a tight schedule at office. unable to write
     
  9. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    மிக்க நன்றி :) :)
     
  10. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    நன்றி சூர்யா.. !!
     
    1 person likes this.

Share This Page