1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சொல்லாமலே .......

Discussion in 'Stories in Regional Languages' started by swarnalata.N.S., Jan 8, 2013.

  1. swarnalata.N.S.

    swarnalata.N.S. Platinum IL'ite

    Messages:
    1,397
    Likes Received:
    791
    Trophy Points:
    208
    Gender:
    Female
    " இவளுக்கு என்ன வந்துவிட்டது ? " என்று திகைத்தான் ரமேஷ். காலையில் இருந்து கவனிக்கிறான், சுமதி ஒரு தினுசாக தான் நடந்து கொள்கிறாள். எல்லாவற்றிலும் ஏனோ தானோ என்று. பல முறை, பல விஷயங்களில் அவளை கடிந்து கொள்ள வேண்டி வந்துவிட்டது......அதுவும் , அண்ணி வந்திருக்கும் நேரம் பார்த்தா இப்படி நடந்துகொள்வாள்....?

    சுமதி நன்றாக சமையல் செய்வாள், புது புது டிஷ் களை ஆசையுடன் கற்று , sunday lunch போது பிரமாத படுத்துவாள். ஆனால், இன்று வைத்திருக்கும் சாம்பாரில் உப்பு குறைச்சல், முட்டை போரியலில் மசாலா வாசனையே காணோம், வெண்டைக்காய் சரியாக வதங்கவில்லை .......கடனே என்று சாபிடவேண்டி இருந்தது. " ஏண்டி, அண்ணி கிட்ட தானே இதை பண்ண கத்துகிட்டே , அவங்க கை மணத்துலே இம்மி அளவு இதுலே காணோமே !"
    அண்ணி குறுக்கிட்டு , " எதோ முடியவில்லை போலிருக்கு- டா , குத்தம் சொல்லாதே ,பாவம் ....." என்று சமாதானம் சொன்னாள் .

    அண்ணி சென்ற பிறகு, சுமதியை பிடித்துகொண்டான் ரமேஷ் : " ஏண்டி இப்படி அழிச்சாட்டியம் பண்ணிட்டே இன்னிக்கு ? அண்ணி என்ன நினைப்பாங்க ! வருத்தப்பட மாட்டங்களா ...."
    " வருத்தபடமாட்டங்க ! சந்தோஷ படுவாங்க !"
    " என்ன உளர்ரே ?"
    " அண்ணி உங்களுக்கு அம்மா மாதிரி இருந்து பார்த்துகிட்டவங்க ன்னு எனக்கு தெரியும்க. நீங்களும் அவங்க அன்பை, அரவணைப்பை, சமையலை புகழ்ந்து சொல்லுவீங்களே ! நமக்கு கல்யாணமான பிறகு அவங்க நம்முடன் தங்க வந்திருந்தபோது , என் சமையலை, பராமரிப்பை நீங்க பெருமையுடன் ஆஹா ஓஹோ ன்னு புகழ்ந்து பேசினது ஞாபகம் இருக்கா ? "
    " ஆமா, அதுக்கென்ன ? அண்ணியும், 'உனக்கு அருமையான மனைவி வாய்ச்சதை நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா' ன்னு சொன்னாங்களே !"
    " ஆமாங்க ! தம் பிள்ளைக்கு நல்ல வாழ்வு அமைஞ்சா வளர்த்தவங்களுக்கு சந்தோசம் தான்.....ஆனாலும், அண்ணியும் ஒரு பெண்ண தான். நீங்க என்னை கொண்டாடுறத ஒரு பக்கம் ஏத்து கிட்டாலும், இன்னொரு பக்கம் கொஞ்சம் வருத்த படாம இருக்கமாட்டாங்க ; உங்க மனசில் தான் ஒரு படி இறங்கிவிட்டோமோ ன்னு தோணி இருக்கும். " ம்ம் , அருமையான மனைவி கிடைச்சாச்சு , இனிமேல் ரமேசு நம்மளை எல்லாம் மறந்துடுவான்' ன்னு ரெண்டு மூணு தரம் சொல்லிட்டாங்க . ராதிகா வீட்டு கல்யாணத்து பொது கூட மத்தவங்க கிட்டே சொல்லிட்டிருந்தாங்க. சிரிச்சு கிட்டே தான் சொன்னாங்க . இருந்தாலும், மனசு மூலையிலே ஒரு சின்ன வருத்தம் இருந்தால் தானே அப்படியோரு பேச்சு வரும் ? பாவம் அண்ணி, நா அவங்களை ஒரம் கட்டிட்டதா நினைக்க கூடாது . அதுவே என் மீது பகையாக மாறிட கூடாது. அதனால தாங்க , கொஞ்சம் டிராமா போட்டேன் !"
    " அட கடவுளே ! இது எனக்கு தோணாம போச்சே ! உனக்கு எப்படி புரிஞ்சிது ?
    " பெண் உள்ளங்களுக்கு சொல்லாமலே புரியும் !...அண்ணி இனிமே அப்படி வருத்தப்பட மாட்டங்க, பாருங்க !.... ....நீங்களும் இனிமே மத்தவங்க எதிர்லே கொஞ்சம் அடக்கி வாசிக்க பழகுங்க !"
    " உத்தரவு, அம்மணீ!"
     
    2 people like this.
    Loading...

  2. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi swarna...
    nice one...
     
  3. swarnalata.N.S.

    swarnalata.N.S. Platinum IL'ite

    Messages:
    1,397
    Likes Received:
    791
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Thank you , Suganyarangasam
     
    1 person likes this.
  4. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    suganya,
    pennin manasu pennukku thann theriyum enpathai thelivaga sonnay..Swarna..good one
     
  5. helpmeangel

    helpmeangel Platinum IL'ite

    Messages:
    1,795
    Likes Received:
    1,005
    Trophy Points:
    208
    Gender:
    Female
    swarna..a good read!!
     
  6. accool

    accool Silver IL'ite

    Messages:
    187
    Likes Received:
    103
    Trophy Points:
    93
    Gender:
    Female
    wow super story...........
     
  7. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    good story swarna.
     
  8. vidhya3b

    vidhya3b IL Hall of Fame

    Messages:
    2,502
    Likes Received:
    1,074
    Trophy Points:
    308
    Gender:
    Female
  9. mahesaran

    mahesaran IL Hall of Fame

    Messages:
    2,999
    Likes Received:
    4,956
    Trophy Points:
    308
    Gender:
    Female
  10. surya1992

    surya1992 New IL'ite

    Messages:
    18
    Likes Received:
    9
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi

    Sweet story.

    Cheers
    Surya
     

Share This Page