1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தர்மவான்களின் புத்திரர்கள்.

Discussion in 'Stories in Regional Languages' started by swarnalata.N.S., Jan 7, 2013.

  1. swarnalata.N.S.

    swarnalata.N.S. Platinum IL'ite

    Messages:
    1,397
    Likes Received:
    791
    Trophy Points:
    208
    Gender:
    Female
    அப்பா தெய்வமாகி போயி ஒரு மாதம் ஓடி விட்டது.
    அன்பான அப்பா. தர்மம் ,அறம் ,நன்னேறி , எளிமை, ஒழுக்கம் எல்லாம் கடைபிடித்து வாழந்த உயர்ந்த மனிதர். பழுத்த வயதில் நோய் நொடி இன்றி , நிம்மதியாக தூக்கத்திலேயே போய் விட்டார் , புண்ணியவான் .

    இன்று தான் ரமேஷ், அவரது உடமைகளை எடுத்து பார்த்து கொண்டிருந்தான். உடமைகள் என்று அதிகம் இல்லை, ஒரு பெட்டிக்குள் அடங்கிவிடும். பேனா , கண்ணாடி, சால்வை , ஒவ்வொன்றையாக எடுத்து ஆசையுடன் தொட்டு பார்த்து, நினைவுகளில் மூழ்கி கொண்டிருந்த போது , அந்த மஞ்சள் பை கிடைத்தது. அதற்குள் ஒரு புத்தகம்.

    அவனுக்கு நினைவு வந்தது......... சுமார் இரண்டு வருடங்களுக்கு முன், ராமலிங்க மாமா கொண்டு வந்து அதை அப்பாவுக்கு கொடுத்திருந்தார். ராமலிங்க மாமாவும் அப்பாவும் பால்ய சிநேகிதர்கள். உடன் பிறக்க வில்லையானாலும், கிட்ட தட்ட இரட்டையர்கள் போல் தான் . ராமலிங்க மாமாவும் , அப்பாவை போலவே காந்திய வாதி . அதே தர்ம நெறி ஒழுக்கங்களுடன் வாழ்ந்தவர் . சென்ற வருடம் தான் சிவலோக ப்ராப்தி அடைந்தார்.

    " கேட்டு கிட்டே இருந்தே....மறந்து மறந்து போகுது ! இந்தா , இன்னிக்கு தான் நினைவு வந்தது......." என்று சொல்லி அன்று அவர் கொடுத்த போது , ரமேஷ் அங்கு தான் இருந்தான். ஆனால், அது என்ன ஏது என்று அவன் அப்போது கவனம் கொடுத்திருக்கவில்லை . நண்பருடன் வழக்கம் போல் அரட்டை அடித்துகொண்டிருந்த அப்பாவும் பிறகு அதை பற்றி ஒன்றும் சொல்லாமல் மறந்துவிட்டார்........


    புத்தகத்தை திறந்து பார்த்தான் ரமேஷ். பிரமித்தான் ! " ஆ ! என்ன பொக்கிஷம் ! "
    1939 ல் பிரசுரமான காந்தியடிகளின் சொற்பொழிவுகளின் கைப்பிடி. எட்டணா பத்து காசு விலை. முதல் பக்கத்தில் வெளிர் நீல மையில், பண்டிட் ஜவஹர்லால் நேரு கையொப்பம் இட்டிருந்தார் ! ரமேஷுக்கு புல்லரித்தது ! எப்பேர்பட்ட விலைமதிப்பற்ற பொருளை அப்பாவிடம் கொடுத்திருக்கிறார் இராமலிங்க மாமா !

    ரமேஷுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது ......மாமாவின் புத்தகத்தை திருப்பி கொடுக்க மறந்து விட்டதே அப்பாவுக்கு......பாவம் வயதாகி விட்டதால் மறந்து விட்டார் போலும்......மாமாவும் போய் விட்டார் ........இப்போது என்ன செய்வது ? மற்றவர் பொருள் என்று தெரிந்தும் அதை நாமே வைத்து கொள்வது திருட்டு போல் ஆகாதா ? சத்தியத்துக்கு எதிரானதை அப்பாவும் விரும்ப மாட்டார்........அதுவும் இப்படி பட்ட ஒரு பொக்கிஷம் !

    ராமலிங்க மாமாவின் மகன் சத்தியமூர்த்தியிடம் புத்தகத்தை திருப்பி கொடுத்து விடவேண்டியது தான்......அப் போது தான் அப்பாவின் ஆத்மா சாந்தி அடையும்.


    ************
    " ....அப்படியா ? இது எங்க அப்பா கொடுத்ததா....? எனக்கு ஏதும் தெரியாதுப்பா ...." என்று விழித்தான் சத்தியமூர்த்தி , " நீ சொல்லலேன்ன, எனக்கு ஒன்றும் தெரிஞ்சிருக்காது , ரமேஷா ! ரொம்ப தேங்க்ஸ்- டா ....."

    காப்பி கொண்டுவந்த மனைவியிடம், நண்பனை புகழ்ந்தான் சத்தியமூர்த்தி. " பாரு சுஷீலா , அப்பா வை போலவே, மகனும் தர்மத்தை கடை பிடிச்சு வாழறான் ! வேறு யாரும் இருந்தால் இப்படி ஒரு அறிய பொருளை திருப்பி கொடுப்பார்களா ? !....உன்னை என் நண்பன்னு சொல்லிக்க நா ரொம்ப பெருமை படறேன் ரமேஷ்.....! "
    அப்பாவும், இராமலிங்க மாமா வும் தன்னை ஆசிர்வதிப்பது போல் நிறைவாக இருந்தது ரமேஷுக்கு !

    *************
    அன்று இரவு , விஸ்வஜித் தாஸ் க்கு போன் போட்டான் சத்தியமூர்த்தி .
    " மிஸ்டர் தாஸ் ! சென்ற "க்ளப் பார்ட்டி" போது நீங்கள் சொன்னீர்களே , ANTIQUE பொருட்களுக்கு நல்ல விலை கொடுத்து வாங்குகிறார் உங்கள் நண்பர் என்று ....நீங்கள் கூட, என் தந்தையிடம் ஏதாவது அறிய பொருட்கள, பழைய பிரபலங்களின் கையொப்பங்கள் இப்படி ஏதும் இருக்குமா என்று கேட்டீர்களே .....ஒன்று கிடைத்தது......" புத்தகத்தை வர்ணித்தான் சத்தியமூர்த்தி.
    " ஓ ! வெரி குட் ! wonderful ! எங்கு திடீர் என்று கிடைத்தது?" பரவசபட்டார் தாஸ் .
    " Actually , அது என் அப்பாவின் பால்ய நண்பருக்கு சொந்தமானது . படிக்க இரவல் வாங்கியிருந்தார் அப்பா ......பல வருஷம் கழித்து நண்பருக்கே திருப்பி கொடுத்து விட்டார்....ஆனால், அந்த நண்பரும் சமீபத்தில் காலமாகி விட்டார் ,பாவம்........அவர் மகனுக்கு இந்த மாதிரி புத்தகங்களில் நாட்டம் இல்லையாம் , தனக்கு வேண்டாம் என்று எனக்கு கொடுத்து விட்டான் .......சரி மிஸ்டர் தாஸ் , நாளை புத்தகத்துடன் வரேன் . உங்கள் நண்பரின் ANTIQUES கடைக்கு போவோம் ..........நீங்கள் தான் சொல்லி நல்ல விலைக்கு ஏற்பாடு பண்ணனும் ! "
    " Sure , சத்யா !.....அதில் 2 பர்சென்ட் எனக்கு கமிஷன் , மறந்துடாதே ! "
    " கண்டிப்பா .....குட் நைட் ! "

    *****************
     
    2 people like this.
  2. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi swarna..
    nice one..
    ramesh is really great.. sathya too bad..
     
  3. helpmeangel

    helpmeangel Platinum IL'ite

    Messages:
    1,795
    Likes Received:
    1,005
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Unfortunately, this is the way of the world these days. Hopefully the guy realizes it some day and hopefully he repents for it!
     
  4. swarnalata.N.S.

    swarnalata.N.S. Platinum IL'ite

    Messages:
    1,397
    Likes Received:
    791
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Suganyarangasam and Helpmeangel :
    Thank you for reading and commenting.
     
    1 person likes this.
  5. accool

    accool Silver IL'ite

    Messages:
    187
    Likes Received:
    103
    Trophy Points:
    93
    Gender:
    Female
    pokkisham miss pannitiye rameshaaaa............

    but nice guy................

    sathya idhu thappu........... vilai mathipillatha porul adhu...........
     
    1 person likes this.
  6. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    veery nice story swarna. most people are behaving like this.
     

Share This Page