1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உங்களுக்கு 40+ஆ? {Thanks to 'Mangaiyar Malar'}

Discussion in 'Posts in Regional Languages' started by bharatheeyan, Mar 17, 2012.

  1. bharatheeyan

    bharatheeyan New IL'ite

    Messages:
    9
    Likes Received:
    8
    Trophy Points:
    8
    Gender:
    Male
    மார்ச் 8 - மகளிர் தினம்
    உங்களுக்கு 40+ஆ?

    தொகுப்பு, பேட்டி: உஷா ராமகிருஷ்ணன்

    [​IMG]
    தாய்க்குலத்துக்கு மறுபெயர் தியாகம். தன் உடல்நலம், ஆசைகள், மகிழ்ச்சி, இலக்கு எல்லாவற்றையும் குடும்பத்துக்காகத் தியாகம் செய்யும் போக்கு குறிப்பாக நம்மூர்ப் பெண்களுக்கு அதிகம். உண்மையிலேயே தங்கள் குடும்பத்துக்கு இறுதிவரை தூணாய் இருக்க விழைபவர்கள், தங்களது உடல் நலத்தை உதாசீனப்படுத்தாமல் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.
    மார்பகப் புற்று நோய் பற்றிய ஆதாரமான விளக்கங்களை ‘சென்னை ப்ரெஸ்ட் சென்டர்’ நிறுவனர் ஆங்கோப்ளாஸ்டிக் மார்பக அறுவை சிகிச்சை வல்லுநர் டாக்டர். செல்வி ராதாகிருஷ்ணா உங்களுக்காகத் தருகிறார்.
    மார்பக வலி, மார்பகத்தில் கட்டி என்றாலே அது புற்றுநோயோ என்ற பயம் தேவையற்றது.
    மார்பகக் கட்டி:
    முன்பெல்லாம் மார்பில் கட்டி என்றாலே அறுவை சிகிச்சை செய்யும் போக்கு இருந்தது. இப்போது பரிசோதிக்க நவீன வசதிகள் இருப்பதால் கான்ஸர் கட்டி அல்லது வேறு அசாதாரண வகை என்று இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்கிறோம்.


    [​IMG]
    இளம் பெண்களுக்கு ஃபைப்ரோ அடினோமா என்ற வகை புற்று நோய் அல்லாத கட்டிவரக்கூடும். ஒரே சமயத்தில் நான்கைந்து கட்டிகள் கூடத் தோன்றும். அத்தகைய பெண்களிடம், என்ன ரத்தினக் கற்களை ஒழிச்சு வச்சிருக்கியா" என்று விளையாட்டாகக் கேட்பேன். இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதை வல்லுநரிடம் காட்டி, அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியது என்று சொன்னால் ஒழிய, அப்படியே விட்டுவிடலாம். அதனால் ஆபத்தில்லை.


    இளம் வயதில் மேமோக்ராம் சோதனை செய்வதைத் தவிர்த்து, வேறு வகைப் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடத்துக்கொரு முறை இந்த சோதனையை செய்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, இளம் பெண்கள் தேவையின்றி மேமோகிராம் செய்து கொள்ளாமல் இருப்பதும் முக்கியம். இளம் பெண்களில் முப்பது சதவிகிதம் பேருக்கு சிறிது காலத்தில் கட்டி தானாகவே கரைந்துவிடும். பலபேருக்கு இது அப்படியே இருக்கும். அதனால் தொல்லை எதுவும் இருக்காது. ஆனால் அதை அப்படியே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு நீங்களாகவே வராதீர்கள்.
    நாற்பது வயதுக்கு மேற்பட்டவருக்கு ‘ஸிஸ்ட்’ என்ற நீர்க்கட்டிகள் தோன்ற வாய்ப்புண்டு. வயதானால் ஆங்காங்கே தலை நரைப்பது போல ஆங்காங்கே சருமம் சுருங்குவதுண்டு. அந்த இடைவெளிகளில் நீர்கட்டிகள் தோன்றக் கூடும். இந்த ஸிஸ்ட் கான்ஸராக மாறாது. ஆனால், ஸிஸ்ட் என்று அனுமானித்துக் கொண்டு கான்ஸரை உதாசீனப்படுத்தி விடக்கூடாது.



    மார்பக வலி:

    இதில் முதல் வகை, மாதவிடாய் சம்பந்தப்பட்டது. மாதவிடாய் நாள் நெருங்கும்போது மார்பு கனத்து வலியோடு தோன்றும். இது ஒவ்வொரு முறையும் எல்லாருக்கும் தோன்றும் என்ற கட்டாயம் இல்லை. எந்த வயதிலும் தோன்றி மறையலாம், இதற்கு குறிப்பிட்ட காரணமோ மருந்தோ கிடையாது, சில மருத்துவர்கள் வைட்டமின் ஈ, ப்ரிமோஸா மருந்துகளைக் கொடுக்கிறார்கள் என்றாலும் இது தேவையில்லாத ஒன்றுதான். இந்த வலியைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் சரியான அளவு உள்ளாடை போடுவது. இறுக்கமான பிராவினால் வலி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
    மற்றொரு வகை, மாதவிடாய் சுழற்சிக்கு சம்பந்தமில்லாத வலி. இது தசைப்பிடிப்பால் ஏற்படலாம். அல்லது ஸ்பாண்டிலைட்டிஸ் பிரச்னை காரணமாகக் கூட வலிக்கலாம். வலி நிவாரணி எடுத்துக் கொண்டாலே சாதாரண வலி மறைந்து விடும். செய்யும் வேலைகளை ஜாக்கிரதையாக செய்வதும், கோணல்மாணலாக அமர்வதைத் தவிர்ப்பதும் நல்லது.



    புற்றுநோய்:

    இது பொதுவாக நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருகிறது. இதன் அறிகுறிகள் என்ன என்பதைப் பார்ப்பதைவிட, அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே விழித்துக் கொள்ள வேண்டும் என்பதில் தான் எனக்கு உடன்பாடு.
    நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டுக்கொருமுறை மேமோகிராஃபிக் ஸ்க்ரீனிங் செய்வது நல்லது. முடிந்தவரை ஒரு மாதவிடாய் சுழற்சி முடிந்த பிறகு செய்து கொள்ளுங்கள். பேருக்கு ஏதாவதொரு மருத்துவமனைக்குச் செல்வதால், இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும் நினைத்துக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது. டிஜிட்டல் மேமோகிரஃபி இயந்திரம் கொண்ட, பார்க்கத் தெரிந்த தேர்ந்த மருத்துவர் கொண்ட மருத்துவமனைக்குச் சென்று சரியான முறையில் எடுப்பது அவசியம். கான்ஸர் அறிகுறி இருந்தால் அதற்குப் பிறகு டிஷ்யு டயக்னாலிஸ் செய்வார்கள். அதோடு வேறு எங்காவது பரவியிருக்கிறதா என்றும் முதலிலேயே சோதனை செய்து விட்டால் சரியான முறையில் ஒரே அறுவை சிகிச்சையாக செய்யலாம். அவசர அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்த்து முதலில் சோதனைகளை சரியாக, தேவைப்பட்டால் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள இன்னொரு இடத்திலும் செய்து கொள்ளுங்கள். எல்லா சோதனைகளுக்கும் தெளிவான அறிக்கையை வாங்கிக் கொள்ளுங்கள்.



    அறுவை சிகிச்சையில், கான்ஸர் இருக்கும் நிலையையும் கட்டத்தையும் பொறுத்து மார்பகத்தைப் பாதுகாக்கக் கூடிய நவீன முறைகள் வந்திருக்கின்றன. அப்படி முடியாமல் போனாலும், செயற்கை முறையிலோ அல்லது உடலின் வேறு பகுதியிலிருந்து சதை எடுத்தோ வைப்பதன் மூலம், இரு பக்கங்களும் ஒரே மாதிரி தோன்றுவது போல் செய்ய முடியும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற கடினமான சிகிச்சை முறைகள் உண்டு. இதை மன ரீதியாகவும், பணரீதியாகவும், உடல் ரீதியாகவும் சந்திக்க குடும்பமே தயாராய் இருக்க வேண்டும்.
    மார்பகப் புற்று நோய் வரக் காரணமாயிருக்கும் சாத்தியக்கூறுகள்:
    சீக்கிரம் பூப்படைதல், ஐம்பது வயதுக்குப் பிறகும் மாதவிடாய் சுழற்சி தொடர்தல், 30 வயதுக்குப் பிறகு முதல் பிரசவம் ஆகுதல், மலட்டுத் தன்மை, தாய்ப்பால் தராத நிலை, அதிக எடை ஆகியவற்றால் வரலாம்.
    [​IMG]
    பொதுவாக, நாற்பதைத் தாண்டினால், ரத்த அழுத்தம், எடை, உயரம், சர்க்கரைக்கான பரிசோதனை, கொலஸ்ட்ரால், தைராய்ட், லைபிட் ப்ரொஃபைல், கர்ப்பப்பை - மார்பகப் பரிசோதனைகளை பயமோ தயக்கமோ இல்லாமல் ஆண்டுக்கொரு முறை செய்து கொள்வது நல்லது. உங்கள் வண்டியை சர்விசிங்குக்கு அனுப்பி சோதனை செய்து கொள்கிறீர்களே, வாழ்க்கை வண்டி சுகமாய் ஓட இந்தப் பரிசோதனைகள் முக்கியம் என்பதை உணருங்கள். நல்ல உணவுமுறை, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை உங்கள் நலத்தைக் காக்கும் சக்தி வாய்ந்தவை.

    ---------------------------------------------------------------------------
    It is just for information. One need not worry; such troubles will occur to some one only. They need to take care.


    "bharatheeyan"
     
    1 person likes this.
    Loading...

  2. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    thanks for sharing...bharathy
     
  3. bharatheeyan

    bharatheeyan New IL'ite

    Messages:
    9
    Likes Received:
    8
    Trophy Points:
    8
    Gender:
    Male
    Thanks for your feedback. I did not do much; just reproduced the article from "Mangayar Malar",because some people will miss it.

    "bharatheeyan"
     
  4. vidukarth

    vidukarth Platinum IL'ite

    Messages:
    2,444
    Likes Received:
    1,091
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thanks for sharing such a nice article.
     
  5. JeniFlora

    JeniFlora Gold IL'ite

    Messages:
    917
    Likes Received:
    503
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Thanks for sharing such a useful article
     
  6. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    thanks for nice info.....
     

Share This Page