1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

CM JJ Greets Karthi and Ranjani in their Residence

Discussion in 'Movies' started by Swashika, Jul 10, 2011.

  1. Swashika

    Swashika Silver IL'ite

    Messages:
    511
    Likes Received:
    29
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Loading...

  2. Swashika

    Swashika Silver IL'ite

    Messages:
    511
    Likes Received:
    29
    Trophy Points:
    63
    Gender:
    Female
    கோலிவுட்டின் நட்சத்திரக் குடும்பத்தின் 'கலர்ஃபுல்’ கல்யாணம் அது!
    ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனியைக் கரம் பற்றி இருக்கிறார் கார்த்தி. திருமணத்துக்குக் கொங்கு மண்டலமே திரண்டு வந்ததில், கோவை கொடீஸியா வளாகம் கொள்ளாத கூட்டம்!
    மணிரத்னம் பட ஷூட்டிங் கணக்காக, கார்த்திக்குப் பெண் பார்க்கும் படலம் சில வருடங்களாக நடந்துகொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் ''உனக்குப் பொருத்தமா பொண்ணு இனிமே ஆர்டர் கொடுத்துதான் செய்யணும்போல!'' என்று கார்த்தியிடம் செல்லமாக அலுத்துக்கொண்டே இருப்பாராம் அவரது தங்கை பிருந்தா. ''குடும்பத்தில் எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணைச் சொல்லுங்க... நான் ரெடி!'' என்று பவ்யமாகப் பதில் சொன்னார் கார்த்தி.
    [​IMG]
    சொன்னதுபோலவே ரஞ்சனியைக் கண்ணில் காட்டியதுமே 'டபுள் ஓ.கே.’ சொல்லிவிட்டார் கார்த்தி. 'அட... இவ்வளவு தங்கமான பிள்ளையா நம்ம கார்த்தி!’ என்று ஆச்சர்யப்பட்டுப் போனார்களாம். ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்ததும்... காதல் கியர் போட்டுக் கிளம்பியது, ரஞ்சனிக்கு கார்த்தி அளித்த முதல் பரிசு... வேறு என்ன... ஒரு மொபைல் போன்தான்!
    [​IMG]கோவை சூலூர் வட்டாரத்தில் உள்ள நெருங்கிய உறவுகளுக்கு, சூர்யாவும் கார்த்தியும் நேரிலேயே சென்று அழைப்பிதழ் வைத்து அழைத்தனராம். கார்த்தியைப் பார்க்கும்போது எல்லாம், ''புது மாப்ள... ஓவரா ஸீன் போடாத!'' என்று கலாய்த்துக்கொண்டு இருந்த அண்ணி ஜோதிகா, கவுண்டர் இன சம்பிரதாயங்களுக்கு இடையில் சிவகுமாரிடம் கேட்டுக்கொண்டு, மணமக்களுக்கு மெஹந்தி திருவிழா நடத்தினார். சென்னை ரெயின் ட்ரீ ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவின் சிறப்பு விருந்தினர் கமல்ஹாசன்.
    ''கல்யாணம், ரிசப்ஷன் தேதியில் நான் ஊரில் இருக்க மாட்டேன். ஆனால், உங்களை ஜோடியாப் பார்க்கணும்னு ஆசை!'' என்ற கமலை, மெஹந்தி திருவிழாவுக்கு அழைத்திருக்கிறார் கார்த்தி. வட மாநிலத் திருமணங்கள்போல கலர்ஃபுல்லாக நடந்த நிகழ்வில், கமல் தன் பங்குக்கு கலகலப்பு சேர்த்தார். நிகழ்ச்சியில் கார்த்தி மற்றும் ரஞ்சனியின் குழந்தைப் பருவம் முதல் சமீபத்தில் க்ளிக்கிய புகைப்படங்கள் வரை வைத்து ஒரு ஜாலி சினிமா ஓட்டினார்கள். அந்த ஸ்பெஷல் சினிமாவை ரசித்துப் பார்த்த ஒரே பிரபலம் கமலாகத்தான் இருக்கும்!
    இரண்டு நாட்களுக்கு முன்னரே கோவை வந்துவிட்ட சூர்யா, திருமண வேலைகள் ஒவ்வொன்றை யும் தன் மேற்பார்வையிலேயே வைத்துக்கொண்டார்.
    மேடையில் திருமண சம்பிரதாயங்கள் துவங்கியதும், ''என் பையன் கல்யாணத்தைச் சொந்த மண்ணுல நடத்த வந்திருக்கேன். எல்லோரும் மனசார வாழ்த்திட்டுப் போங்க!'' என்று எமோஷனலாகப் பேசி, விருந்தினர்களை நெகிழவைத்தார் சிவகுமார்.
    [​IMG]
    வாழ்த்து சொல்ல வந்த உறவினர் கூட்டத்தில் இருந்த ஒரு சுட்டிப் பையன் கார்த்தி முன் 'பருத்திவீரன்’ ஸ்டைலில் காலைப் பிணைந்து நின்று சட்டையை உயர்த்தி ''முத்தழகு... ஏய்... ஏய்... ஏய்...'' என்று சவுண்டு கொடுக்க, ரஞ்சனி முகத்தில் ஏக வெட்கம். ''டேய்! போஸீஸ்கிட்ட சொல்லிடுவேன்... ஓடுறா!'' என்று கார்த்தி மிரட்டிய பிறகுதான், இடத்தைக் காலி செய்தான்.
    சமயங்களில் மணமக்களைவிட அதிகக் கவனத்தை ஈர்த்தார்... ஜோதிகா. அவர் மேடைக்கு வந்தாலே, மொபைல் கேமராவை நீட்டியபடி படம் பிடிக்க ஓடி அலைந்தது பெரும் கும்பல். இதனாலேயே, மணமக்க ளுக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டார்.
    மனைவி, குழந்தையுடன் வந்திருந்த பாலா, ''என் தம்பி கல்யாணம்யா இது! யாரையும் சாப்பிடாம வெளியே விட்ராதீங்க!'' என்று உள்ளூர் சொந்தங்களிடம் உரிமையாகப் பேசிக்கொண்டு இருந்தார். 'பட்டினி சாதம், பந்தக்கால் நடுவது, இணைச்சீர், கைக் கோர்வை, பாத பூஜை என்று கவுண்டர் சமுதாயத்துக்கு உரித்தான அத்தனை சீர்களையும் மணமக்கள் செய்யச் செய்ய... சிவகுமார் கண்களில் ஆனந்தப் பரவசம். உருமால் கட்டு சீரின்போது தலையில் தலைப்பாகை கட்டியதும், மீசையை முறுக்கி கார்த்தி விறைப்பு காட்ட, பயப்படுவதுபோல ரஞ்சனி நடுங்க, ''ஹைய்யோ... பொண்ணு என்னமா நடிக்குது. ஜாடிக்கேத்த மூடிதான்'' என்று சொல்லிக்கொண்டார்கள் விருந்தினர் கள்.
    ஒவ்வொரு சொந்தங்களாக மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, மேடையை விட்டு இறங்கியபடி இருக்க, ஒரு சிறுமி மட்டும் கார்த்தியின் சட்டையைப் பிடித்தபடியே நின்றுகொண்டு இருந்தாள்.
    ''யாருடாம்மா நீ... உன் அம்மா எங்கே?'' என்று கார்த்தி அவளிடம் விசாரிக்க, அது வீடியோ திரையில் ஒளி பரப்பானது.
    உடனே, கூட்டத்தில் இருந்து முண்டியடித்து மேடையேறிய ஒருவர், ''ஸாரி சார்... அவ என் குழந்தைதான். டி.வி-யில் உங்க பாட்டு என்ன போட்டா லும் அழுகையை மறந்து பார்த்துட்டு இருப்பா. அதான் உங்களை நேர்ல காட்டலாம்னு கல்யாணத்துக்கு அழைச்சுட்டு வந்தேன். உங்களைப் பார்த்ததுமே மேடையில ஏறணும்னு துடியாத் துடிச்சுட்டு இருந்தா. அதட்டி மிரட்டி வெச்சிருந்தேன். ஏதோ ஒரு கேப்ல மேடை ஏறிட்டா. இவளைக் காணோம்னு அரை மணி நேரமா, பதற்றமா தேடிட்டு இருக்கேன். இவ இங்கே வந்து நிக்கிறா!'' என்று மூச்சு வாங்கியபடியே சொன்னார் அந்தப் பெண்ணின் அப்பாவி அப்பா. உடனே, முகமெல்லாம் பூரிப்பாக மணமக்கள் அந்தச் சிறுமியைத் தங்களுடன் இறுக்கிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அவர்களைக் காட்டிலும் அதிக பூரிப்பில் சிவந்து இருந்தது அந்தச் சிறுமியின் முகம்!
     
    2 people like this.
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    good information thanks dear really enjoyed reading!
     
  4. puni88

    puni88 Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    12,320
    Likes Received:
    7,223
    Trophy Points:
    545
    Gender:
    Female
    Hi,
    can anybody translate into English please.....
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Thanks for the sharing with lovely pics my friend.
     
  6. lathaviswa

    lathaviswa IL Hall of Fame

    Messages:
    5,450
    Likes Received:
    2,002
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Swashi thanks for all the information with pictures.
     
  7. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Swashi,

    lovely photos with good informaion. thanks for sharing.
     
  8. shashiv

    shashiv Gold IL'ite

    Messages:
    2,293
    Likes Received:
    458
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Lovely photos................



    Shanti
     
  9. hemalathaK

    hemalathaK Platinum IL'ite

    Messages:
    1,460
    Likes Received:
    1,062
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thanks swasthika for these pictures.Ranjani looks really beautiful. Feeling happy to see the pictures
     
  10. Swashika

    Swashika Silver IL'ite

    Messages:
    511
    Likes Received:
    29
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Puni will surely translate when i find time... Its big... so needs time...


    thank you all for liking my post.....
     

Share This Page