1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அப்பா அப்பாதான்!

Discussion in 'Stories in Regional Languages' started by Rrg, Dec 7, 2018.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    அப்பா அப்பாதான்!

    “ஏண்டா ராமு, மணி ஏழரை ஆறது.
    இன்னும் என்னடா தூக்கம்? இப்பிடி தூங்கினா எப்பிடி உருப்படுவ?”
    “இல்லப்பா. ரொம்ப டயர்டு ஆக இருக்கு”
    “இல்லாம என்ன பண்ணும? நாளெல்லாம்ஊர் சுத்தும் போது தெம்பா இருக்கு. வீட்டுக்கு வந்தா டயர்டா? இதையே உன் பையன் செஞ்சா நீ ஒத்துப்பாயா? நினைச்சுப்பாரு”
    “அப்பா, இன்னிக்கு லீவு தானேப்பா. ஒரு நாளாவது நிம்மதியா தூங்க விடுங்களேன். தொண தொணன்னு ஏதாவது சொல்லிண்டே இருக்கீங்களே?”
    “ஆமாண்டா அப்பா சொன்னா ‘தொண தொணன்னு’ தோணும். நாளைக்கு நடோடி மன்னன்ல எம் ஜி ஆர் பாடின மாதிரி ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன்தானும் கெட்டார்’னு ஆனப்புறம் ஏம்ப்பா என்ன திருத்தலேன்னு நீயே கேப்ப. இப்போ சொன்னா புரியாது”
    “அய்யோ அப்பா! கொஞ்சம் பேசறத நிறுத்துங்களேன். இப்பவே எழுந்து தொலைக்கறேன்”

    “ஏன்டா ராமு, எங்க தொலைஞ்சு போயிட்ட?”
    “இங்கதான்ப்பா இருக்கேன்.”
    “இங்கதான்னா?”
    “பேப்பர் படிச்சுண்டு இருக்கேம்பா.”
    “எழுந்துக்கறதே ஏழரை மணிக்கு. அதுவும் தார்குச்சி போட்டு எழுப்ப வேண்டிருக்கு. அப்புறம் பேப்பரை வெச்சிண்டு ஒரு மணி நேரமா? இன்னிக்கு லீவு நாள் தானே? மத்யானமா பேப்பர் படி. இப்போ
    குளிச்சு கிளிச்சு ஆக வேண்டியதை பாரு.”
    “ஒரு அஞ்சு நிமிஷமாவது நிம்மதியா இருக்க விடுங்களேன் அப்பா”
    “இன்னிக்கு நீ பண்றத நாளைக்கு உன் பிள்ளை பண்ணினா சும்மா இருப்பியா? குதிக்க மாட்ட?”
    “சரிப்பா, இப்போ என்ன பண்ணனும்? குளிக்க போறேன். போதுமா?”
    “பேப்பரை ஒழுங்கா மடிச்சு வெச்சுட்டு போ. அப்பிடியே குப்பையா போட்டா எப்பிடி?”
    ராமு தலையில் அடித்துக் கொண்டான். பேப்பரை மடித்து வைத்து விட்டு குளிக்கபோனான்.

    “ஏண்டா ராமு? காதுல விழையலையா? அம்மா அரைமணி நேரமா கடைக்கு போகச்சொல்லி கத்திண்டே இருக்காளே?”
    “இதோ இந்த pageஐ முடிச்சுட்டு போறேன்பா.”
    “ஏன்டா நீ கதை படிக்கற முட்டும் கத்திரிக்கா சாம்பார்காத்திருக்குமா? bookஐ மூடி வச்சுட்டு அம்மா சொல்றதே கேளு. நாளைக்கே உன் பிள்ளை இப்படிப் பண்ணினால் எப்படி இருக்கும் உனக்கு?”

    “ஏண்டா ராமு என்ன பண்றே?”
    “டீ வீல கிரிக்கெட் மேட்ச் பாக்கறேம்பா?”
    “எப்ப பார்த்தாலும் டீவீ, டீவீ, டீவீ. இதுக்கு நேரம் பொழுதே கிடையாதா? நடு ராத்திரி வரை கண்ட கண்ட சினிமால்லாம் பார்க்க வேண்டியது. காலைல ஏழரைமணி வரை தூங்க வேண்டியது. இப்படியே நாளைக்கு உன் பிள்ளை பண்ணினால்எப்படி இருக்கும்? ஒத்துப்பாயா?”
    “சரிப்பா, மேட்ச் பார்க்கல அவ்வளவுதானே? இப்போ திருப்தியா?”
    ராமு டிவி யை கோபத்துடன் அணைத்து விட்டு,
    சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான்.

    “ஏண்டா ராமு, எங்க கிளம்பிட்ட?”
    “என் பிரண்ட்ஐ பார்த்திட்டு வரேன்பா”
    “எந்த பிரண்ட்டு?”
    “என் கிளாஸ் மேட் பா. இப்பிடியெல்லாம் கண்ட்ரோல் பண்ணினா எப்படி மனுஷன் வாழறது?”
    “நீ கண்டவனோடெல்லாம் சுத்திட்டு சைபர் மார்க் வாங்கிண்டு வருவ. நான் ப்ரோக்ரெஸ் ரிப்போர்ட்ல ரப்பர் ஸ்டாம்ப்அடிக்கணும் இல்லையா?”
    “ஐயோ ஏன்பா இப்படி படுத்தறேள்? நான் ஒரு ப்ரெண்டையும் பார்க்க போகலே. சும்மா ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வரேன். வீட்டுலயே அடைஞ்சு கிடக்க பிடிக்கல”
    “ஆமாண்டா, நிலா காயறது; சார்குஷியா ஊர் சுத்த கிளம்பிட்டார். படபடைக்கிற வெய்யில்ல சுத்திட்டு
    வந்து படுத்திண்டா எவன் டாக்டர்ருக்கு ஓடறது? உள்ளே போய் உட்காருடா.
    இதையே நாளைக்கு உன் பிள்ளை பண்ணும் போது பார்த்திண்டு சும்மா இரு பார்க்கலாம்”

    ராமுக்கு பொறுக்கவில்லை.
    “படவா நிறுத்துடா. எதுக்கிடுத்தாலும் ’உன் பிள்ளை செஞ்சா, உன் பிள்ளை செஞ்சா’ன்னு குத்தி
    காமிச்சுண்டு. நான் அப்பா அப்பவாவே இருக்கேன்; நீ பிள்ளை பிள்ளையாவே இரு. இந்த ‘ரோல் ரிவர்சல்’ விளையாட்டெல்லாம் இத்தோட போறும். கொஞ்சம்விட்டா தலைக்கு மேல போற. நீ போய் உன் பாடம் ஏதாவது படிக்கிறதை பாரு.”
    சுப்பிணி, S/o ராமு, gameல் ஜெயித்த திருப்தியோடு, சிரித்துக்கொண்டே அவன் அறைக்குப் போனான்.
    ————————-

    Anbudan,

    RRG
     
    Last edited: Dec 7, 2018
    Loading...

  2. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    appanuke paadam sona supan..
     
    Rrg likes this.
  3. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    Ha ha.:grinning: Well said.
    Thanks.
     
  4. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Very nice.
    Indha madiri role reversal neraya per nadathanum. Amma - magal, kanavan-manaivi, maamiyaar-maatruppen, sagodharan-sagodhari. "Walking in other's shoes" endru aangilathil oru kootru undu. Ippadi seidhal thaan matravarin siramangal puriyum.
     
    sindmani and Rrg like this.
  5. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    Thanks Krish.
    What you said is true. But, who is to bell the cat? First of all, there has to be a genuine desire to understand the other ones view point, which in most of the cases is non-existent.
    Thanks for sharing your views.
    Cheers
     
    kkrish likes this.
  6. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    I know. Mine is just wishful wistful thinking :)
     
    Rrg likes this.
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:அருமையோ அருமை குட்டி கதை. உண்மை நிலை இது தான்.
    Child is father of son!
    நன்றி.
     
    Rrg likes this.
  8. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    Thanks sir, for your appreciation.
    Pleased that you liked it.
    Cheers
     

Share This Page