1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆசை!

Discussion in 'Regional Poetry' started by jskls, Mar 22, 2018.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆசை !

    அழகிய கண்கள்
    உன்னை போன்றாம்
    குவிந்த இதழ்கள்
    உன்னை போன்றாம்
    சிவந்த கன்னங்கள்
    உன்னை போன்றாம்
    மலர்ந்த இதயம்
    உன்னை போன்றாம்
    என்றும்
    கவிஞரின் கற்பனைக்கு
    உகந்தவளாம் நீ !

    உள்ளத் தூய்மையில்
    உன்னை போன்றே
    சேற்றில் தோன்றினும்
    நீரின் மேல் எழுவதில்
    உன்னை போன்றே
    மெல்லிய மனதிலும்
    உன் இதழ்கள் போன்றே
    நீரில் வாழ்ந்திடினும்
    நனையாத உன்
    இலை போன்றே
    எட்டி இருக்கும்
    கதிரவனை கண்டு
    மலர்வதிலும்
    உன்னை போன்றே
    அழகாய் மலர்ந்து
    அலங்கரிப்பதிலும்
    உன்னை போன்றே
    இன்றே
    தாமரையாய்
    மாறிட ஆசை !


    Sharing for World Poetry day
     
    Karthiga, kaniths and knbg like this.
    Loading...

  2. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    வாசமிகும் பாக்கள் பல புனையும் பூம்பாவாய்...
    தேச எல்லை கடந்து எங்கள் உள்ளம் தொட்டாய் உம்பாவால்....!
    மணக்கட்டும் உம் பண்பு...
    தொடரட்டும் உம் தொண்டு....
     
    kaniths, periamma and jskls like this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி உங்க தூய தமிழ் மிக மிக இனிமை.
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நல்ல ஆசை .தாமரை இலை தண்ணீர் போல் வாழ ஆசையா .புத்தம் சரணம் கச்சாமி
     
    jskls likes this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    :)நன்றி மா. ஒட்டுதல் இல்லாவிட்டால் வேதனையும் இல்லை.
     
    kaniths likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    உங்கள் கூற்று முற்றிலும் உண்மை .அதிகம் பாசம் வைத்து பாழாப் போன ஜன்மம் நான் .மற்றவற்றில் பற்று இல்லை .ஆனால் பாசம் எனும் வலை என்னை சுருட்டி விட்டது .
     
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வருத்தம் வேண்டாம்.
    பாச வலை அன்புள்ளங்களை இணைக்கும்.
     
    kaniths likes this.

Share This Page