1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Yen Periamma? Puriyaleye?
     
    jskls likes this.
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @kaniths pagirnthu kolgiren apdinnathum vera oruthanga eluthinathai share panreengalonnu nenachuten.
    Nalla Tamilil eluthi irukeenga:clap2::clap2:
     
    kkrish, kaniths and PavithraS like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நீங்கள் பதிந்த என்றும் பதினாறும்,கல்யாண நாள்- இரு பாடல்களும் எனக்குப் பிடித்தவை ! நன்றி !
    நீங்கள் பதிந்த இந்தப் பாடலில் வருகின்ற

    கோமகளென்னும் பூமகள் நெஞ்சில் சாய்ந்து வர
    தாமரை பொய்கை போலொரு வைகை பாய்ந்து வர
    தேவலோகமும் தெய்வ கீதமும்
    ராஜ யோகமும் சேர்ந்து வந்ததோ

    இந்த வரிகளில் இத்திரியின் இப்போது பயணிக்கும் திசைக்கேற்ற வகையில் 'தாமரை' எனும் வார்த்தை அன்புத் தோழி லக்ஷ்மிக்காகவும் @jskls , 'ராஜ யோகமும் ' என்ற வார்த்தை நம் நித்யா ராஜாவிற்காகவும் @kaniths , 'தேவலோகமும் ' என்ற வார்த்தை வேதாவிற்காகவும் @singapalsmile ( இந்திரலோகம் என்றாலென்ன தேவலோகமென்றாலென்ன,எல்லாம் ஒன்று தானே ?) செவ்வனே சேர்ந்து அமைந்திருப்பதாகக் கொள்கிறேன் ! :)


    வேதா உங்கள் வேண்டுகோளை ஒவ்வொருமுறையும் தள்ள விரும்பவில்லையாதலால், நிறைவேற்றி விடுகிறேன் !

    @kaniths
    நீங்கள் பதிந்த பாடலோடு தொடர்புடைய ஓரழகிய ஆரம்பகால (இன்னும் தொடர்கால) மெல்லுணர்வு என் திருமண வாழ்விலுண்டு.
    புது வெள்ளை மழையும்,பூவாசமும் எனக்குப் பிடித்தப் பாடல்கள். இவற்றைத் திருமணத்திற்கு முன்னான என் பணிவழித்தடப் பேருந்துப் பயணங்களில் கேட்கும்போதெல்லாம் எண்ணிக்கொள்வேன் " இத்தனை பேரோடு பயணிக்காமல் தனியாகப் போகும்போதில் இதை இழையவிட்டு இரசித்தால் எப்படி இருக்கும் ?" என்று.

    எங்கள் திருமணம் முடித்து அவரின் ஊருக்குப் போய் (இன்று எனக்குமாகிவிட்டக்) குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றியபின் , கணவரது வீடு அப்போதிருந்த வேற்று மாநிலத்திற்குப் போகுமுன்னர் கிடைத்த இருதினங்களில் என் புகுந்தவீட்டினரின் சொந்த ஊரான குன்னூருக்கு(ஆம், நீலகிரி ஊட்டி,குன்னூர் தான் அவருக்கு சொந்த ஊர் !) சென்று வரத் தீர்மானித்தோம் என்பதைவிட,வீட்டுப் பெரியோரால் வழியனுப்பிவைக்கப்பட்டோம்.

    திருமணமாகி 2 நாட்களே ஆகியிருந்தபடியால்,அப்பயணம் எங்களின் அறிவிக்கப்படாத தேனிலவுப் பயணமானது ! அவரது ஒன்றுவிட்டத் தமையனொருவரின் மகிழுந்தில் அழைத்துச் சென்றார். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தபடி சென்றோம்,நீலகிரி மலையின் அடிவாரத்திற்குச் சென்றவுடன்,அதன் இயற்கை வளத்தில் மூழ்கிக் களித்தபடியே பயணித்தேன். அப்போதுதான் முதன் முதலில் அங்கு செல்கிறேன் என்பதால் பிரமிப்பு அதிகம் ! அத்துடன் கணவரும் நானுமாகத் தனித்தப் பயணம் !

    என்ன நினைத்தாரோ அந்த நேரம் அவரின் பென் -டிரைவ் எடுத்து வண்டியில் பொருத்தி ஓட விட்டார். நான் கேட்ட முதல் பாடல் "புது வெள்ளை மழை" --- அந்தக் காட்சியில் கொட்டிய பனியெல்லாம் என் மீதே கொட்டியது போன்ற உணர்வெனக்கு. விழிகளை மூடி அப்பாடலை இரசித்த விதம் கண்டு மீண்டும் மீண்டுமென்று அப்பாடலை 2 முறை இழையவிட்டார் !

    பின்னர் அவரும் இராஜாவிற்கும்,இரஹ்மானின் மெல்லிசைக்கும் இரசிகரென்று அறிந்து கொண்டேன். அது மட்டுமா ? அந்த ரோஜா படத்தையே காஷ்மீர் போலத் தோன்றும்படி அவர்கள் ஊரில் தான் உப்பைக் கொட்டிப் படம் பிடித்தார்கள் என்றத் தகவலையும் பகிர்ந்தார் ! உப்போ,பனியோ- நான் விரும்பியபடியே அப்பாடலைத் தனிமைப் பயணத்தில் கேட்டுவிட்டேன் என்ற ஆனந்தமும்,அவர் மீதான என் நேசமும் இன்றும் என் நினைவில்... பின்னர் பனிமழை பொழியும் பிரதேசத்திலும் அவரோடு குடித்தனம் நடத்திவிட்டேன் என்பது வேறு.

    உங்களின் அன்பான வரவேற்பிற்கும் ,அனைவருக்குமான இறைப்பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி ! தவறாக எண்ணவில்லையெனில் உங்கள் இயற்பெயரைத் தெரிந்து கொள்ளலாமா ? விரும்பாவிட்டால் சொல்லவேண்டாம்,கட்டாயமில்லை ! இங்கு இப்போது பதிகின்ற அனைவரது பெயர்களும் தெரிந்திருக்கிறபடியால் தங்களுடையதும் தெரிந்துகொள்ளக் கேட்டேன். சங்கடமாயிருப்பின் மன்னிக்கவும்.

    உங்கள் பாராட்டிற்கு நன்றி !

    மஹாகவியின் நினைவிற்கு அழகான அஞ்சலி செலுத்திவிட்டீர்கள்,அருமை !

    @jskls -
    லக்ஷ்மி அழகிய 'மை' பாடல் பதிவால் திருஷ்டி சுற்றிப் போட்டுவிட்டீர்கள், இந்தத் திரிக்கே ! பதினாறு வயதினிலே எப்போது கேட்டாலும் இனிமை,இளமை !

    @periamma - பெரியம்மா ! பேரக்குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகின்ற உங்களின் குறும்பும் இளமையும் (பாடல் பதிவின் மூலம்) தெரியக் காண்கிறேன் !!
     
    Last edited: Sep 12, 2017
    kkrish, knbg, singapalsmile and 3 others like this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இன்று என் மனதில் நிறைந்திருப்பது காற்று- அதன் குழைவும்,கனிவும்,கோபமும்,தாண்டவமும்.
    கவியரசரின் மூன்றாம் பிறைப் பாடல் "பூங்காற்று,புதிரானது " இன்றைய என் விருப்பம்...
     
    kkrish, kaniths, jskls and 1 other person like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Inimael amaichchurunga :wink::wink:

    Kaniths,
    Idhuvarai neengal share pannadhil idhu dhaan enakku best aaga pattadhu!! :clap2::clap2:

    ~~~~~~~~~~~~~~

    Tasks:

    20) Car super aaga otta therindhu car la azhaiththu selvadhu (Car super ah Otta therilana, task #21 mudiyadhu)
    21) Otha kai steering wheel la vaithu vittu, innoru kai la hand holding panradhu

    ~~~~~~~~~~~~~~
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi APS,

    Adutha varudam idhae paadaludan saerthu innoru paadalum ungal iruvarukkum dedicate panraen. Neengalum ungaladhu 'sweet nothings' edhaavadhu onru ingu share pannunga paadaludan saerthu.
     
    kaniths likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நன்றி KK. :grinning:

    Last week oru friend kku birthday. Vayadhu aagi vittadhu enru romba feel panninaan. Naan sonnaen: Age is just a number; adharkku andha friend sonnaan: BP um oru number dhaan, cholesterol um oru number dhaan..adhai kettu naan siriththu vittaen!

    Ungaladhu sweet 16 la neenga eppadi irundheenga nu edhaavadhu share pannungalaen. வீட்டிற்கு தெரியாமல் ஸ்கூல்/காலேஜ் கிளாஸ் கட் பண்ணது, தியேட்டர் சென்று நண்பர்களுடன் படம் பார்த்தது, school report card la neengale sign pannadhu, நெருங்கிய தோழியின் காதலுக்கு உதவி செய்தது, இப்படி ஏதாவது செய்து வீட்டில் மாட்டி இருக்கீங்களா?

    SPB அவர்களின் ஆரம்ப காலத்து குரல் வளம் ரொம்பவே இனிமையாக இருந்து இருக்கிறது.
    'என் இனிய பொன் நிலாவே' - நான் ஆராதிக்கும் ஒரு ரொமான்டிக் பாடல்.
     
    kkrish and kaniths like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Periamma,

    நான் என்னை நலமாகவே வைத்து இருக்கிறேன்.:grinning:

    நான் ஏதாவது எக்கு தப்பா கேள்வி கேட்டாலும் அதற்கு பொறுமையாக பதில் அளிக்கும் அனைத்து நண்பர்களால் தான் இந்த thread கலக்கல் ஆக தற்போது பயணித்து கொண்டிருக்கிறது. எல்லோரும் உண்மையாக மனம் திறந்து எழுதுவது பாராட்டிற்கு உரியது. படிப்பதற்கு இதமாகவும், சந்தோசமாகவும் இருக்கிறது!!

    நீங்களும் எங்களது கூட்டணியில் கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த பழைய பாடல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ~~~~~~~~~~~~~~~~~~~

    Bhargs - Ungaladhu 'Like' kku nanri. Ungaladhu entry kkaaga naan aavaludan waiting!! :wink::wink:

    ~~~~~~~~~~~~~~~~~~~
     
    jskls, PavithraS, periamma and 3 others like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Kaniths,
    Amma patri ezhudhi manadhai thottu vitteergal. Padiththadhum negizhndhu vittaen!

    Lakshmi,
    Neengalum niraya sentiments nirandha Amma enru ninaikkiraen. Kuduththu vaiththavargal kudumbathaargal!!
    ~~~~~~~~~~~~~~~~~

    எனது அம்மா அப்படி கிடையாது. என்னை என் வழியில் விட்டு விடுவார். செய்யாதே என்று எதையும் ஒரு போதும் சொன்னதில்லை.

    எனது அம்மா அதிகாலையிலேயே விழித்து இரவில் சீக்கிரமே தூங்கும் நல்ல பழக்கம் உள்ளவர். நான் அதற்கு எதிர்மறை. ஒரு முறை தாயகம் சென்று இருந்த போது லேப்டாப் ல இரவு நேரத்தை கழித்தேன். அம்மா சீக்கிரம் தூங்குபவர் என்பதால் பேசி தொந்தரவு செய்ய கூடாது என்பதற்காக நான் லேப்டாப் ல நேரத்தை போக்கினேன். அம்மா நான் தாயகத்தில் இருந்த வரை ஒன்றுமே சொல்லவில்லை. அந்நிய தேசம் வந்த பிறகு என்னிடம் போனில் சொன்னார்கள்: "நீ இரவு தோறும் லேப்டாப் யூஸ் பண்ணிட்டே இருந்து என்னோட பேசாமல் இருந்து விட்டாய் என்று."

    அதில் இருந்து நான் தாயகம் சென்றால் லேப்டாப், டேப்லெட் எதுவும் எடுத்து செல்வதில்லை. அம்மா போதும் போதும் என்று சொல்லும்வரை இரவில் அவருடன் பேசி கொண்ட இருப்பேன். என் அம்மாவே போதும் மா, எனக்கு தூக்கம் வருது என்று சொல்லும்வரை பேசிட்டு இருப்பேன்! :grinning::grinning:

    அம்மாவை பற்றி பக்கம் பக்கமாக என்னால் எழுத முடியும்.

    இனி ஒரு வரி அம்மாவை பற்றி இப்போ எழுதினால் நான் அழுது விடுவேன், அதனால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.

    ~~~~~~~~~~~~~~~~~
     
    jskls, PavithraS, kkrish and 2 others like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    உங்களது பாடல் பதிவுகள் வைத்து பாரதி கலெக்சன் வைத்து விடலாம். நன்றி!
    நீங்கள் போஸ்ட் பண்ண பாடல்களில் எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் இது தான்.

    எனக்கும் தான்.
    கண்ணம்மா - கவித்துவமான பேர்.

    இன்றைய எனது பாடல்:
    YT - கண்ணம்மா கண்ணம்மா - றெக்க
     
    jskls, PavithraS, kkrish and 2 others like this.

Share This Page