1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பெருக்கு!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jun 19, 2017.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    எனையுன் தோள் மேல் தூக்கி வைத்து
    நீ கூத்தாடியதும் என் நினைவில்
    நேற்றே போல் நினைவில் இருக்கிறது.
    நானின்னும் குழந்தை உன் விழியில்.

    கிளுகிளுப்பை, மெல்லிய கூச்சத்தை
    உண்டாக்கி என்னை சிரிக்க வைப்பாய்.
    இறுக்கி அணைத்தே என் உடலை
    உன்னில் பொதிந்திட முயன்றிடுவாய்.

    என்னிடம் தோற்றே எனை வென்றாய்.
    மேலானது பல அறிமுகம் செய்தாய்.
    இவை எல்லாவற்றையும் விட மேலாய்
    எனை துவளாமல் நிமிர்ந்திடச் செய்தாய்.

    உன் தொடலுக்கென நான் ஏங்குவது
    இன்றைக்கும் மாறாதிருக்கிறது.
    உன் சொல்லுக்கென் செவி கூர்வதுவும்
    என்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    உன் தொடலில், அணைப்பில் நானுணர்ந்த
    உன் பிரியம் அனைத்தும் இப்போது
    உன் சொல்லில் வழிந்து கொண்டிருக்கிறது.
    என் கண்களும் நீரால் நிறைகிறது.
     
    Loading...

  2. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    I remembered my father while reading your poem.Good one


     
    rgsrinivasan likes this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Harini for your like and feedback.
    Yes, it was an ode to a father. -rgs
     

Share This Page