1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாய் மொழி !

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Apr 6, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தாய் மொழி !

    aqofr_215335.jpg

    எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......:(


    சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இங்கு வந்து தமிழில் என் படைப்புகளை போட ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது. வெளிநாடுகளில் இருக்கும் எத்தனை பேர் ஆர்வமாய் படிக்கிறார்கள், பதில் போடுகிறார்கள் என்று பார்த்தேன்...சொற்பம் தான்.


    அதனால் தான் தனியே ஒரு கட்டுரை என்று போட்டு, நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.


    நான் சம்பாதிக்க வந்திருக்கேன், தமிழைப் பாற்றியோ தமிழ் நாட்டைப் பற்றியோ எனக்கு கவலை இல்லை; இதெல்லாம் சுத்த 'ஹம்பக்' ; அவனவன் தாய் தந்தையையே விட்டு விட்டு வந்து விட்டானாம் , இதில் தாயாவது மொழியாவது............என்று நினைப்பவர்கள், மேலே படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் :) :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


    வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......


    ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......

    தொடரும்..............
     
    coolmum, uma1966, IniyaaSri and 4 others like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உங்கள் வருத்தம் மிகவும் நியாயமானதே ! எனக்கும் புரிகின்றது, இருக்கின்றது. என் மகனுக்குத் தமிழ் சொல்லித்தர என்னாலான வரை முயற்சிக்கிறேன். அவனும் ஆர்வமுடன் கற்றுக்கொள்வது இறைவன் அருள். பாரதியாரின் தமிழ் வளர்ச்சிப் பற்றிய அவரின் ஆசையையும் , கனவையும் வெளிப்படுத்திய ஒரு கவிதையையும், பகீரென்ற உணர்வை ஏற்படுத்தும் ஒரு குறும்படத்தையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன் . நன்றி !

    என்றும் அன்புடன்

    பவித்ரா

    பாரதியின் கவிதை

    "கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்
    காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
    என்னென்னவோ பெயருண்டு - பின்னர்
    யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!


    தந்தை அருள் வலியாலும் - முன்பு
    சான்ற புலவர் தவ வலியாலும்
    இந்தக் கணமட்டும் காலன் - என்னை
    ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்


    இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
    ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
    கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
    கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!


    "புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
    மெத்த வளருது மேற்கே - அந்த
    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை


    சொல்லவும் கூடுவதில்லை - அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
    மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"


    என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
    இந்த வசை எனக்கெய்திடலாமோ?
    சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
    செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!


    தந்தை அருள் வலியாலும் - இன்று
    சார்ந்த புலவர் தவ வலியாலும்
    இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
    ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."
     
    uma1966, kaniths, vaidehi71 and 3 others like this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நாங்கள் வசிக்கும் நாட்டில் நிறைய தமிழ் பள்ளிகள் வர அரம்பித்து விட்டன. சில வருடங்களாக தமிழ் கற்று தருகிறோம். ஓரளவுக்கு எழுத பேச படிக்க வரும். அடுத்த தலைமுறைக்கு எவ்வளவு எடுத்து செல்வார்கள் என்பது தெரியாது. முயற்சி செய்கிறோம்.
     
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    பவித்ரா, கவிதை மிக அருமை, அந்த குறும்படமும் பார்க்கிறேன்...பகிர்வுக்கு நன்றி.....இந்த கட்டுரையை தொடர்ந்து படித்து உங்களின் மேலான
    கருத்துக்களை பதிவிடுங்கள் :)
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி லக்ஷ்மி, நம்மாலானது முயர்ச்சி மட்டுமே...பலன்கள் நம் கை இல் இல்லை :).........உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ! .தொடருங்கள்.......
     
    uma1966 likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    [​IMG]

    மேல் தட்டு, அப்பர் மிடில் கிளாஸ் , மிடில் கிளாஸ் போக இப்போ லோவேர் மிடில் கிளாஸ் இல் இருப்பவர்கள் கூட, தங்கள் குழந்தைகள் தங்களை 'மம்மி டாடி' என்று தான் கூப்பிடணும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்............

    தங்களுக்கு கிடைக்காத கல்வி தங்கள் குழந்தைகளுக்காவது கிடைக்கட்டும் என்று இவர்கள் , தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி கல்வி நிலையங்களில் சேர்ப்பதை நான் குறை சொல்லவில்லை, அதற்காக தாய்மொழியாம் தமிழை மறக்கணுமா? என்று தான் கேட்கிறேன்.


    இவர்கள் வீடுகளில் இப்படி என்றால், பள்ளிகளில் தமிழில் பேசினாலே அபராதம் என்று சொல்கிறார்கள்...பின் எங்கு தான் தமிழ் பேசுவது?....எப்படி நம் குழந்தைகள் தமிழ் கற்கும்?.............


    ஆனால் நம் அரசியல் வாதிகள் உடனே, "ஆஹா! தமிழில் பேசினால் அபராதமா? " என்று சும்மாவாணும் கொஞ்சநாளுக்கு போர்க்கொடி பிடித்து போராடுவார்கள்......அப்புறம் காற்றாட வைத்த அப்பளம் போல நமுத்து போகும்..............

    ஆங்கில வழி கல்வி பெருகி விட்ட இந்த நாளில், குறைந்த பக்ஷம் வீட்டிலாவது நாம் தமிழை பேச வைக்க வேண்டும். பொதுவாக நாம் முதலில் நம் தாய் மொழியில் தான் சிந்திப்போம். அதைத்தான் பேசுவோம், இவர்களுக்கு சிந்தனையே ஆங்கிலத்தில் வரும்படிக்கு நாம் செய்து விட்டால்............எதிர்காலத்தில் நம் மொழி என்னாகும்? ......கொஞ்சம் யோசிக்கணும் நாம்.

    தொடரும்..............
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    முதலில் நான் ஊடகத்தில் கேட்ட அந்த அதிர்ச்சியான சம்பவத்தை இங்கு பகிர ஆசைப்படுகிறேன். ஒரு வயதான மூதாட்டி லண்டனில் இருக்கும் தன மகன் மற்றும் மருமகளுடன் இருக்க வருகிறார். அவர்களுக்கு 2 பேரக் குழந்தைகள் ; ஆனால் இருவருக்கும் ஆங்கிலம் மட்டுமே தெரியும். பாட்டிக்கு தமிழ் மட்டுமே தெரியும், என்றாலும் ஆசையாய் பேரன்களைப் பார்க்க வந்து விட்டார்கள். எனவே , பாட்டியுடன் சைகை பாஷை தான்.( இவங்க நம் ஊர்பக்கம் வருவதே இல்லை...பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாததால் ஒரேநாளில் இந்தியா போர் அடிக்கிறதாம் :( )


    ஒருநாள் , பாட்டியும் பேரன்களும் தனியே இருந்தபோது, அந்த மூதாட்டிக்கு நெஞ்சு வலி வந்து விட்டது, அவர்கள் வலியால் துடிக்கிறார்கள் .தவித்த வண்ணமே தண்ணீர் எடுக்க போயிருக்கிறார்கள்...கிழே விழுந்து விட்டார்கள்........சத்தம் கேட்டு வந்த , பேரன்களை பேர்சொல்லிக் கூப்பிட்டு ....தண்ணீ தண்ணீ என்று கேட்கிறார்கள்..........ஜாடை காட்டுகிறார்கள், பாட்டியை கீழே இருந்து தூக்க முயலுகிறார்கள் பேரன்கள்.......அவங்க ஏதோ கேட்கிறார்கள் என்று தாமதமாகத்தான் புரிகிறது.பாவம், சின்ன பசங்க.......... இவர்களுக்கு புரிவதற்குள், அந்த மூதாட்டி போய் சேர்ந்து விடுகிறார்........... :(


    அப்பா அம்மா வந்ததும், பதறி என்ன நடந்தது என்று கேட்கிறார்கள்......இவர்களும் சொல்கிறார்கள்......தன் அம்மா கடைசியாக என்ன கேட்டார் என்று அறிய ஆசைப்படுகிறார் அப்பா, பிள்ளைகள் தட்டு தடுமாறி , யோசித்து , " when we entered in the kitchen , she was on the floor, and holding her chest , and called us ........she asked something 'thanithani ' " என்று சொன்னார்கள்.


    அந்த அப்பாவுக்கு 'சொரேர்' என்றது....தண்ணி கேட்டிருக்காங்க அம்மா, அது தன் பிள்ளைகளுக்கு புரியலை என்று உறைத்தது. ............அந்த மூதாட்டி போய்விட்டார்கள் ஆனால் இந்த பிள்ளை சாகும் வரை இந்த நிகழ்வு அவன் நெஞ்சை அறுக்குமா இல்லையா?....கேட்ட நமக்கே 'திக்' என்று இருக்கே, அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?...சொல்லுங்கள்..........:flushed::flushed::flushed:
     
    Last edited: Apr 6, 2016
    uma1966, kaniths, IniyaaSri and 5 others like this.
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற நிலை மாறி தான் விட்டது. தொடருங்கள் உங்கள் கட்டுரையை
     
    krishnaamma likes this.
  9. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எவ்வளவோ குறும்படங்கள் வந்து விட்டன.கடைசி யில் பேரனோ, பேத்தியோ 2வார்த்தை தமிழ் பேசி, அதுவே தமிழுக்குக் கிடைத்த வெற்றி போன்று முழக்கம் செய்வார்கள்.இன்னும் பல முயற்சிகள் தோல்வி தான் அடைந்துள்ளன. திராவிட கட்சிகள் எல்லாம் மேடையில் தமிழ் முழக்கம் செய்து விட்டுத் தன குழந்தைகளை 'பிரெஞ்சு 2nd language ஆக எடுத்துக் கொள்ள வைக்கிறார்கள்.தமிழ் நாட்டில் தான் இந்த கேவல நிலைமை.என்னுடைய பிள்ளை, மருமகள் முழுதும் வீட்டில் தமிழ் பேசினாலும் பள்ளிக்கூடத்தில் முக்கால் வாசி குழந்தைகள் ஆங்கிலம் பேசும்போது குழந்தைகள் என்ன செய்யும்? நிறைய பொழுது ஸ்கூலில் கழியும்போது ஆங்கிலம் பேசத் தான் நிறைய சந்தர்ப்பம். நாம் கரடியாய்க் கத்தினாலும், பக்கம் பக்கமாய் நம் ஆதங்கத்தை வெளிப் படுத்தினாலும் பலன் பூஜ்யம் தான்.1972ல் என் பெண்ணை
    L K G யில் சேர்க்கப் போனோம்.interview இருக்குமென்று தெரியாது.
    ஆப்பிள் பழத்தைக் காட்டி'what is this ?" என்றார்கள் .apple என்று சொல்லி விட்டாள் .மின் விசிறியைக் காட்டினார்கள்,
    fan என்றாள் .ஒரு யானையின் படத்தைக் காட்டி அவளை elephant என்று சரியாக சொல்ல வைக்க 'எலி எலி 'என்று prompt பண்ணினார்கள்.குழந்தை குபீரென்று சிரித்து'அம்மா, இவர்கள் யானையைப் போய் 'எலி ' என்று சொல்றா .இது கூட மிஸ்ஸுக்கு தெரியலை என்று சிரித்துக் கொண்டே இருந்தாள் . என்னால் அதட்டவும் முடியவில்லை.இல்லை கண்ணு.யானைக்கு இங்கிலீஷ் பெயர் 'elephant 'என்று சொல்லி சமாளித்தனர்.
    என் பெண் படு சுட்டி.என் பேரு சத்யா.இங்கிலிஷில் என் பேரு என்ன ? என்றாள் .
    இப்போது அவளுடைய பெண் ஒரு வார்த்தை கூட தமிழில் பேச மாட்டேன் என்கிறாள். நன்கு புரிந்தாலும் ,நாம் தமிழில் கேட்டாலும் spontaneous பதில் ஆங்கிலத்தில் தான் வருகிறது.குழந்தையைத் திட்டவா முடிகிறது?செகண்ட் language malaai .என் பெண் தான் கற்றுக் கொண்டு சொல்லித் தருகிறாள்.
    பேசவே கஷ்டப்படும் போது ,இலக்கிய ரசனைக்கு எங்கே போவது? எங்கள் தலை முறையுடன் மறக்க வேண்டியது தான்-அடுப்பு, அம்மி, ஆட்டுக்கல் மறந்த மாதிரி தமிழ் நினைவும் போக வேண்டியது தான்.
    இருக்கவே இருக்கு ஒரு போலி சமாதானம்'After all language
    is only a means of communication ,அதை எந்த மொழியில் தெரிவித்தால் என்ன ?மற்றவர் புரிந்து கொண்டால் சரி
    There is justification for everything in the world

    Jayasala 42
     
    vaidehi71 and krishnaamma like this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வாவ் ! நான் ஒரு 10 நாளாய் ( நிஜமாகவே நான் இந்த வீடியோ வை இப்போ தான் பார்த்தேன் பவித்ரா :) ) எழுதியதை, இவர்கள் வீடியோ வாக போட்டிருக்கிறார்கள்.......எனக்கும் என் கணவருக்கும் இது ரொம்ப ஆச்சரியத்தைக் கொடுத்தது :)
     
    kaniths and PavithraS like this.

Share This Page