1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன்னத உறவுகள்

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Feb 16, 2012.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    தோழிகளே உங்கள எல்லாம் வறுத்தெடுக்காம இருக்க முடியல, அதான் மறுபடியும் ஓடோடி வந்துட்டேன். இது ஒரு முன்னறிவிப்பு தான் நீங்களேல்லாம் (நான் கடிக்கறத) படிக்க தயராகனும் இல்ல அதுக்கு தான்.வர திங்கள்ல இருந்து எழுத வந்துடுவேன் ( அது வரைக்கும் போனா போகுது சந்தோஷமா இருங்க).



    இந்த தடவை முழுமையான காதல் கதைல இருந்து மாறுபட்டு நம்ம சுத்தி இருக்கற , நம்ம தாங்கற எல்லா உறவுகளை பற்றியும் எழுதலாம்னு முடிவு பண்ணிருக்கேன்,கூடவே ஒரு மாற்றத்தோட. அது எந்தளவுக்கு சரியா வரும்னு தெரியல ஆனா முடிந்த வரை நான் உங்களுக்கு நிறைவ ஏற்படுத்த முயற்சி பண்ணுறேன். போன கதை மாதிரி அதிக கதாபாத்திரங்கள் இருக்காது, ஏன்னா போன கதைல நிறைய கதாபாத்திரத்த டம்மியாக்கிட்டமோனு ஒரு feel, அதுனால இருக்குற காதாபாத்திரங்கள வைச்சு எல்லோரோட கருத்துகளை சொல்ல பாக்கறேன். என்னோட முதல் கதைக்கு தந்த அதே ஆதரவ ( அத விட அதிகம்னாலும் சந்தோஷம்) தரனும்னு வேண்டி விரும்பி கேட்டுகிறேன் பா....

    இதே நூல்ல தான் எல்லா பதிவுகளையும் கொடுக்கலாம்னு இருக்கேன் , ஏன்னா அது தான் படிக்க சுலபமா இருக்கு, அதுனால தயவு செய்து கருத்துகளுக்களை கீழே இருக்குற link ல கொடுத்திடுங்க பா pls.....

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/159723-a.html


    நன்றி! நன்றி! நன்றி!
     
    Loading...

  2. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai Then,

    waiting for your honey coated lovely story about the relationship. IT IS ALWAYS TO CHERISH AND THINK THE RELATIONSHIP WILL HELP US TO KEEP OUR MIND AND BODY HAPPY MY DEAR HONEY PLS POST SOON
     
  3. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    thanks sree pa........
     
  4. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    உன்னத உறவுகள் - 1


    செவ்வண்ண கதிர்களை இதமாய் பரவவிட்டு உலகினை தனது நிறங்களால் வண்ணமாயமாக்கி அழகுபடுத்தினான் கதிரவன். அவனது வரவில் நேரமறிந்த பறவைகள் தமது இனிய குரலில் ஒலி எழுப்பி பரவசபடுத்தின. தனது வரவை ஒரகண்ணால் ரசிப்பவளை கதிரவன் கண்டுவிட, அவன் தன்னை கண்டுவிட்ட நாணத்தில் ஒடிமறைந்தாள் நிலா மகள்.அணில்கள் தங்கள் சோம்பலை முறித்து இவர்களின் காதலை கண்டிவிட்ட மகிழ்ச்சியில் மரகிளையில் தாவி விளையாடின.மெல்ல மெல்ல இருள் நீங்கி ஒளி பரவ, தனது இனிய உறக்கத்திலிருந்து கலைந்தது அந்த நகரம். அங்கு வசிக்கும் மனிதர்களும் தங்களது சோம்பலை விடுத்து எழ தொடங்கினர்.

    காலை பொழுது இனிதாய் தொடங்க, அதோ முன்னால் அவசர நடையிட்டு சென்று கொண்டிருக்கும் மனிதரை தொடர்வோமா?.அவர் தான் சின்னசாமி ஏன் இவ்வளவு வேகம்? என்று தானே கேட்கிறீர்கள் வாருங்கள் என்னவென்று பார்ப்போம். எங்கே வந்திருக்கிறோம்? எந்த இடம் இது? இந்த வனத்திற்குள் எதற்காக செல்கிறார்? என்ற கேள்விகள் தோன்றினாலும் எதையும் கேட்கமுடியாது, கேட்டாலும் அவர் இருக்கும் அவசரத்தில் பதில் கிடைக்காது, அதனால் அமைதியாக நடையை தொடர்வோமா?.


    ஆகா.. என்ன ஒரு இன்னிசை எத்தனை இசைகருவி வைத்து இசைத்தாலும், இதோ இயற்கை கிளிகளையும், குயில்களையும் இன்னும் பெயர் அறியா பல பறவைகளையும் வைத்து நடத்தும் கச்சேரியை போல் வராது தானே..... இயற்கையை ரசித்தபடி நாம் எங்கு வந்திருக்கிறோம்? இது என்ன வனத்திற்குள் ஒர் சொர்கமா? எத்தனை அழகு ...... எங்கும் இயற்கை தன் பச்சை ஆடையிலிருந்து மாற்றாமல் காட்சியளிக்க, புதிய விருந்தினர்களான நம்மை வரவேற்க தலைகுனிந்து நிமிர்வது போல் சுற்றியிருந்த தென்னை மரங்களும், பனைமரங்களும் , வேப்ப மரங்களும் தலையசைப்பதும், அதில் அமர்ந்திருந்த கிளிகளும், குயில்களும் ராகம்படிப்பதும், அதற்கேற்றவாறு மூங்கில்கள் இசைப்பதும் நம்மை வரவேற்பது போலல்லவா இருக்கிறது. முன்புறமுள்ள சோலையிலிருந்த பூக்கள் எல்லாம் நம்மை பார்த்து கண்சிமிட்டி சிரிப்பது உங்களுக்கும் தெரிகிறதா?.... அவை" இன்பாலயத்தின் வரவு உங்களுக்கு இன்பத்தை கொடுக்கட்டும்" என்று சொல்லவது கேட்கிறதா?...... ஆம் நாம் வந்திருப்பது இன்பாலயத்திற்கு தான். பெயரை போலவே இங்குள்ளவர்களின் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி, இன்று இன்னும் அதிகமான மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் காரணம் என்னவோ? யாரது நம்மை நோக்கி ஓடிவருவது?..... அட ஸ்வீட்டியா...... ஆகா... அவளது கையிலும் ஸ்வீட் என்ன ஒரு பொருத்தம்.....

    "தாத்தா..... இந்தாங்க... எடுத்துகோங்க..... "

    "கேள்விபட்டு தான் மா ஒடிவரேன்....... ரொம்ப சந்தோஷம் மா....கமலாவும், ராமுவும் எங்க?"

    " அம்மாவும் அப்பாவும் ஆபிஸ் ரூம்ல இருக்காங்க ...."

    "சரி நான் போய் பார்த்துகறேன்......" தலையாட்டியபடி அவர்களை தேடிச்சென்றார்.

    நமக்கெல்லாம் ஸ்வீட் கொடுத்தாளே அவ தான் ஸ்வீட்டி (எ) ஸ்வேதா. ராமசந்திரன் - கமலா தம்பதியரின் செல்ல மகள்.மாநிறத்துக்கும் கொஞ்சம் அதிகம், அளவான உயரம், சிறு பிள்ளை குறும்புடன் வலம் வரும் இவள் இந்த இன்பாலத்தின் செல்லபிள்ளையில் ஒருத்தி, இன்னோருத்தி்யை பார்க்கும் போது அறிமுகபடுத்துகிறேன்.

    சின்னசாமி அந்த அறையை அடைந்த போது அவசரமாய் தங்களின் கண்களை துடைத்துகொண்டனர் இருவரும். அவர்களின் மனநிலை சின்னசாமிக்கு நன்றாகவே புரிந்தது, ஆதரவாய் ராமசந்திரனின் தோளில் தட்டிகொடுத்து,

    "தவறு செய்யாத மனிதன் இல்லையடா.... " என அவரது அன்பில் நெகிழ்ந்து

    "சித்தப்பா......" என மறுபடியும் கலங்க

    "எதுக்கு டா நல்ல நேரத்தில போய் கலங்கிட்டு இருக்க...." என்று அதட்டினார். முவருமாய் பேசியபடி முன்னறைக்கு வர அங்கு வந்த முதியவர்கள் சிலர்

    "ரொம்ப சந்தோஷம் பா..... உன்ன நம்ம அரசாங்கம் கவுரவிக்கரதுகாக பாராட்டு விழா நடக்க போகுதாமே.... நம்ம ஸ்வீட்டி இப்ப தான் சொன்னா..... எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?...... நீ நல்லா இருக்கனும் தம்பி....." என்று மனதார வாழ்த்த ராமசந்திரனுக்கோ கண்ணில் குளம் கட்டியது, மறுபடியும் முகம் கலையிழக்க, வலிய வரவழைத்த புன்னகையோடு அவர்களிடம் பேசி அனுப்பிவைத்தார்.

    அதுதானா செய்தி, அதுக்கு தான் ஸ்வீட்டா... ஆனா எதுக்காக அவருக்கு பாராட்டு விழா நடத்துறாங்க?........ அதுக்கு சந்தோஷப்படாம எதுக்கு இவரு கண்கலங்கறாரு?........ இதுக்கெல்லாம் பதில அடுத்த பகுதில தேடுவோம்...............
     
    1 person likes this.
  5. guna36

    guna36 New IL'ite

    Messages:
    26
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Male
    romba arumaiya ezhuthirukinka then......so nice.....wer is next part.....?????????
     
  6. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நன்றி குணா பா...... தயவு செய்து கருத்துகளைhttp://www.indusladies.com/forums/stories-in-regional-languages/159723-a.html இங்க பதிவு செய்யுங்க pls..... இப்போ அடுத்த பகுதிய போட்டுடுவேன் படிச்சுட்டு சொல்லுங்க பா....
     
  7. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    உன்னத உறவுகள் - 2


    இராமசந்திரன் ஊட்டியில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வருகிறார், அது மட்டுமின்றி தனக்கு சொந்தமான சின்ன எஸ்டேட்டில் இந்த "இன்பாலயத்தை" நடத்திவருகிறார். இன்பாலயம் முதியவர்கள், பிள்ளைகள் என கவனிக்கபடாதவர்களுக்காக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இது ஒரு ட்ரஸ்டாக செயல்பட்டு அங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இங்கு சேர்க்கபடும் முதியவர்களுக்கு தங்களின் சோகத்திலிருந்து விடுபட பணிகள் வழங்கபடுகின்றன, எத்தகைய பணிகள் என்றால் அங்குள்ள மக்களுக்கு அரசு உதவிகளை வாங்கிதருவதில் உதவும் பணி, அங்குள்ள பிள்ளை பராமறிக்கும் பணிகள், பாடம் சொல்லி கொடுக்கும் பணி. மற்றவர்களின் துன்பங்களை பார்க்க நேரிடுகையில் அவர்களுக்கு தங்களின் துன்பம் பெரிதாக தோன்றாது என்ற நோக்கத்தில் தான் இந்த வழக்கத்தை உருவாக்கினர், அது பலனையும் தந்துவருகிறது. இங்குள்ளவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக தான் வாழ்ந்து வருகின்றனர். இதனை உருவாக்கும் எண்ணம் தோன்றியதிலிருந்து இன்று வரை அதில் ஏற்படும் சிக்கல்களை சமாளிப்பதில் இராமசந்திரனுக்கு துணையாக இருந்து வருகிறார் கமலா.


    இராமசந்திரன் ஏழைக்குடும்பத்தில் பிறந்து தன் உழைப்பில் முன்னுக்கு வந்தவர், தனது அனைத்து சொத்துகளையும் விற்று இந்த இன்பாலயத்தை நடத்திவருகிறார். அதற்கு காரணம் அவர் வாழ்வில் நடந்த சம்பவம் தான் என்று அடிகடி சொல்லுவார், ஆனால் என்ன சம்பவம் என்று கமலாவை தவிர எவருக்கும் தெரியாது.இப்போது அரசு அவருக்கு "மனித நேயமிக்க மனிதர்" என்ற விருதை வழங்கி பாராட்டவுள்ளது. அங்குள்ள மக்களின் மேம்பாட்டிற்கு பாடுபட்டதற்காக.இதெல்லாம் அங்க இருக்கவுங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டது.

    ஸ்வீட்டி எதிர்பார்ப்போடு வாயிலில் அமர்ந்து பார்த்துகொண்டிருந்தாள். அவளது கண்கள் மகிழ்ச்சி விரிய அவளருகில் வந்தாள் ஸ்னேகா. அவள் மூச்சிறைப்பதை பார்த்தாலே தெரிந்தது ஓடிவந்திருக்கிறாள் என்று. ஸ்வீட்டி அவளை கடிந்து கொண்டாள்.

    " எத்தன தடவை சொல்லுறது உனக்கு இப்படி ஓடி வராதனு? பாரு எப்படி மூச்சு வாங்குதுனு"

    "எத்தன தடவை சொல்லுறது உனக்கு நான் அப்படி தான் ஓடி வருவேன்னு" ஸ்வீட்டி செல்லமாய் முதுகில் அடிவைக்க

    " அப்பாக்கு விருது கிடைக்கபோகுதுனு தெரிஞ்சதுக்கு அப்பறமும் மெதுவா வரமுடியுமா?"

    "உனக்காக தான் காத்துகிட்டு இருந்தேன் இந்தா" இரண்டு இனிப்பை வாயில் திணித்தாள், பதிலுக்கு அவளும் திணிக்க, இருவரும் வாய்கொள்ளா இனிப்புடன் இராமசந்திரனை தேடிச்சென்றனர். அவர் சின்னசாமியுடன் பேசிகொண்டிருந்தார். இவர்களை பார்த்ததும் சின்னசாமி

    " என்ன ஸ்னேகு அங்க வேலையெல்லாம் அப்படியே போட்ட படி போட்டுட்டு ஒடிவந்துட்டயா......"

    "ஆமா தாத்தா....... கேட்டதும் ஒடிவந்துட்டேன்........ பசங்களும் வரேன்னாங்க நான் தான் வேண்டாம்னு சொல்லிடேன்......" இராமசந்திரனின் அருகில் வந்தவள் "அப்பா ... காங்கிராட்ஸ்..... சந்தோஷம்மா இருக்குபா..." என்றாள் உணர்ச்சி பொங்க, அவளாய் பார்த்து புன்னகைத்தவர் தலையை ஆதரவாக தடவிவிட்டார்

    " நான் சொல்லும்போது எதாவது கேட்டீங்களா? atleast ஒரு சிரிப்பு......இப்ப ஸ்னேகு சொன்னதும் சிரிப்பு வருது..." என்று போலியாய் குறைபட்டுகொண்டாள். மகளின் குறும்பை புரிந்து

    " அவ்வளவு தான இவ்வளவு சிரிச்சா போதுமா?...." என்று உதட்டை காதுவரை நீட்டி சிரிக்க,

    " அய்யோ அப்பா வேண்டாம் எனக்கு ஊசினா பயம்....... காய்ச்சல் ல படுக்கவச்சுடாதீங்க..... நான் கேட்டது தப்பு தான் விட்டுடுங்க பா....." என பயப்படுவது போல் நடிக்க

    " ஆமா அப்பா அப்பறம் அவளே அவளுக்கு வைத்தியம் பார்த்துக்க வேண்டியது வரும்...... அப்பறம் படுத்த படுக்கை தான் பெட் வேற எக்ஸ்ட்ரா இல்ல...." என்று ஸ்னேகு கூறியது தான் தாமதம் அவளை துரத்திகொண்டு ஓடினாள் ஸ்வீட்டி, அவள் அந்த இடத்தையே ஒரு சுற்று சுற்ற ஸ்வீட்டியால் முடியாமல் பாதியிலேயே நின்றுவிட்டாள். அவளை பார்த்துவிட்டு அருகில் வந்தவளிடம்

    "எப்படி டி இவ்வளவு ஸ்பீடா ஓடற....."

    "எத்தன தடவ நானும் மகேஷும் ஓட்டபந்தயம் வைச்சு ஓடிருப்போம்........" என்று முடிக்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டு கண்களில் கோர்த்த நீரை மறைக்க தலைகுனிந்தாள். அருகில் வந்தவள் அவள் கண்கலங்குவதை பார்த்தும் பார்காதது போல்

    " ஏய் அந்த கடைக்குட்டி அனு இல்ல அறுந்த வாலு காலையில ஒரே ரகளை வா..... இப்ப என்ன பண்ணுறானு பார்ப்போம்...." என்றபடி அவளை அழைத்து சென்றாள்.


    அய்யோ இவங்க பேசிக்கறதுல இருந்து ஒன்னுமே புரிய மாட்டேங்குதேனு தான புலம்பறீங்க.... நான் எதுக்கு இருக்கேன்.... கண்டுபிடிக்க நான் உங்களுக்கு உதவுறேன் கவலையே படாதீங்க........ அடுத்த பகுதில பார்ப்போம் எதாவது தெரியுதானு.........
     
  8. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    உன்னத உறவுகள் - 3


    மனதில் உருவான புயலில் பழைய நினைவலைகள் பெரிதாய் எழும்ப , தன்னை கட்டுபடுத்திகொள்ள முயன்றுகொண்டிருந்தாள் ஸ்னேகா. அவளுக்கு இது ஒன்றும் புதிதல்ல இந்த முன்று ஆண்டுகளாய் அவள் சமாளிப்பதுதான்.அதனாலயே ஸ்வீட்டியும் அவளுக்கு தொந்தரவு தராமல் அமைதிகாக்க, அங்கிருந்த பிஞ்சு முகங்களை கண்டு மனதை தெற்றினாள் ஸ்னேகு. இருவரும் சிறிது நேரம் பிள்ளைகளின் குறும்பை ரசித்து, அவர்களும் குழந்தையாய் மாறி விளையாடிகொண்டிருந்துவிட்டு கல்லூரி செல்ல தயார் ஆனார்கள்.

    இருவரும் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கின்றனர்.கல்லூரி நேரம் முடிந்ததும் இருவரும் அங்குள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவார்கள், அது தவிர அவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் செய்துவருகின்றனர்.இருவருக்கும் அந்த மலைபாதையில் சைக்கிள் ஓட்டி செல்வது தான் மிகவும் பிடித்தவிஷயம், அதனாலயே இருவரும் கல்லூரிக்கு சைக்கிளில் செல்கின்றனர்.அது ஒரு பணக்கார கல்லூரி அங்கு படிப்பவர்கள் அனைவரும் காரில் வரும்போது இவர்கள் மட்டும் சைக்கிளில் வந்தால் கிண்டல்களும் கேலிகளும் எழாமல் இருக்குமா என்ன? . ஆனால் இவர்கள் அதை காதில் போட்டுகொண்டால் தானே.....

    இருவருக்கும் நிறைய நண்பர்கள் கிடையாது. முதலாம் ஆண்டில் இவர்கள் இருவரை தவிர அவர்களது நட்புவட்டதில் யாருமில்லை, இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில் இவர்களது இணைபிரியா நட்பை கண்டு ஆச்சரியபட்டவர்களில் ஒருத்தியான மஞ்சுவுக்கு அவர்களின் நட்பின் மீது மதிப்புகூட அவளாய் இருவரிடமும் நட்பை ஏற்படுத்திகொள்ள முவர் ஆனார்கள். இரண்டாம் ஆண்டின் முடிவில் இவர்களுக்கு மேலும் இரு நட்புகிடைத்தது, ஒருவன் வாசு, இன்னொருவன் ஸ்ரீ .

    மஞ்சு கோதுமையில் கொஞ்சம் வெளுத்த நிறம், சராசரி உயரத்தோடு இருப்பாள். கொஞ்சம் பயந்த சுபாவம் ஆனால் எதற்கெடுத்தாலும் பயப்படமாட்டாள்.இவளின் தந்தை செல்வம், சென்னையில் ஒரு புகழ்மிக்க தொழிலதிபர். பெரிய இடத்துபெண்களுக்கு பெரும்பாலும் உள்ள பிரச்சனை இவளுக்கும் உண்டு , என்னவென்று கேட்கறீர்களா? அதான் பாசமின்மை. சிறுவயதிலையே தாயை இழந்த இவளுக்கு தாயாய் துணையிருக்க வேண்டிய தந்தை தனக்காய் ஒரு துணை தேடிகொள்ள , அப்போதே அந்த பிஞ்சு மனதில் தந்தையிடம் ஒற்றுதல் இன்றி போனது. அதற்கு தோதாய் சிற்றனையும் விலக்கி வைக்க, இங்கு அவர்களுக்கு சொந்தமான கெஸ்ஹவுசில் தங்கி படித்துவருகிறாள்.பாசதிற்கு ஏங்கி தவிக்கும் இவளுக்கு இவர்களின் நட்பும், இன்பாலயத்தின் அன்பும் பெரிய பலத்தை தந்துகொண்டிருக்கிறது. சமீப காலமாய் அவளுள் ஒரு தடுமாற்றம் அதை இனம் காணமுடியாமல் தவித்துகொண்டிருக்கிறாள்.

    வாசு இங்குள்ள பெரியமனிதர்களில் இவனின் தந்தையும் ஒருவர்.வீட்டிற்கு ஒரே பிள்ளை செல்லம் அதிகம். இவனின் தந்தை கருணாகரன் இவனுக்கு தோழனாகவே இதுவரை இருந்துவருகிறார். தாய் பார்வதிக்கு இவன் ஆசைமகன். இருவருக்கும் மகனின் மேல் உயிரையே வைத்திருகின்றனர். அவனுக்கும் அவர்கள் தான் உலகம். எப்போதும் குறும்போடு விளையாடும் இவன் கல்லூரியின் கனவு நாயகனில் ஒருவன்.

    ஸ்ரீ இவனும் அங்குள்ள ஒரு பெரிய மனிதரின் மகன் தான். ஆனால் அந்த பெரிய மனிதர் தான் உயிரோடு இல்லை. தந்தை ராஜன் இறப்பிற்கு பிறகு தாயே உலகமென எண்ணி வருகிறான். தாய் பத்மினி அம்மாளும் அப்படியே.எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் இவன் தான் கல்லூரியின் இன்னொரு கனவு நாயகன். வாசுவும், ஸ்ரீயும் பள்ளியிலிருந்தே இணைபிரியா தோழர்கள்.

    இவர்கள் ஐந்துபேரும் தினமும் சந்திக்கும் கல்லூரி அருகில் உள்ள மரதடிக்கு வந்த ஸ்வீட்டியும், ஸ்னேகுவும்

    "என்னடி யாரையும் காணோம்....?"

    "நானும் உன் கூட தான இருக்கேன் எனக்கு மட்டும் எப்படி தெரியும்?" அவளை முறைத்த ஸ்னேகு

    "எதாவது கேட்டா பதில் கேள்வி கேட்காம இருக்கயா?"

    "அதுல எதாவது ஒரு கேள்விக்கு பதில் சொல்லறாயா?"

    "அம்மா தாயே........ விட்டுடு மா.......முடியல "

    "ரொம்ப கெஞ்சுற பிழைத்து போ......"

    இவர்களின் சண்டையை ரசித்துகொண்டே தனது தேவதையின் மேலிருந்து கண்களை அகற்ற முயன்று முடியாமல் தோற்று போய் அதை மறைக்க சன் கிளாஸ் அணிந்துகொண்டு அவர்களை நோக்கிவந்தான் ஸ்ரீ. சில தினங்களாய் ஸ்வீட்டி அவனுக்கு தனியாய் தெரிகிறாள். அவளது குறும்பும், துறுதுறு கண்ணும், அன்பான குணமும் அவனை நிலைகுலைய செய்கிறது. அதனாலயே தினமும் இவர்களுக்கு முன்னால் வந்து மறைதிருந்து சிறிது நேரம் அவளை ரசித்துவிட்டு பின் இவர்களுடன் கலந்து கொள்கிறான்.
     
  9. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    உன்னத உறவுகள் - 4

    ஐந்துபேரும் வர அவர்களுக்கு ராமசந்திரனுக்கு கிடைக்க இருக்கும் விருதினை பற்றி பூரிப்போடு சொல்லி இனிப்புகளை கொடுத்தாள் ஸ்னேகு. முவரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு இனிப்பு உண்ண , வாசு

    " ஸ்வீட்டி எனக்கு சிலசமயம் ராமசந்திரன் அங்கிளுக்கு நீ பொண்ணா? இல்ல ஸ்னேகு பொண்ணா னு சந்தேகம் வருது டி" என ஸ்வீட்டி அவனை முறைத்துவிட்டு ஸ்னேகுவின் முகம் பார்க்க, அவள் தன் வருத்ததை மறைத்து

    " எனக்கும் அவர் அப்பா தான்" என்று மெல்லிய குரலில் சொல்ல அங்கு ஒரு கனத்த மவுனம் நிலவியது. ஸ்வீட்டி அவனருகில் சென்றவள்

    " டேய் எங்க அப்பாவுக்கு ஸ்னேகுவும் நானும் ஒண்ணுதான்.... எங்கள பிரிச்சு பாக்கறதா இருந்தா நீ என் கிட்ட பேசாத......." ஸ்னேகுவிடம் திரும்பியவள் " வாடி போகலாம் " என்று முன்னாடி செல்ல வேறு வழியில்லாமல் வாசுவை இயலாமையோடு பார்த்துவிட்டு அவளை தொடர்ந்தாள்.

    வாசு அவளை வருத்தோடு பார்த்துகொண்டு நின்றான். அவனருகில் வந்த மஞ்சுவும், ஸ்ரீயும் அவனை சமாதானபடுத்தினர்.

    "டேய் விடுடா நீ தெரியாம தான சொன்ன ...... கவலைபடாத நாம அவகிட்ட பேசினா சரியாகிடுவா...." என்று ஸ்ரீ சொல்ல

    "ஆமா....... உனக்கு தான் தெரியுமில்ல ஸ்னேகுவ எதாவது சொன்ன ஸ்வீட்டியால தாங்கிக்க முடியாதுனு.." என்றாள் மஞ்சு

    "தெரியும் ........ ஆனா நான் ஒன்னும் வேனும்னு சொல்லயே ...... விளையாட்டா தான் சொன்னேன்...."

    "அது ஸ்னேகுவ எவ்வளவு பாதிச்சு இருக்கும்னு உனக்கு புரியலயா......" மஞ்சு சொல்ல தவறை உணர்ந்தவனாய்

    "தப்புதான்....... நான் போய் ஸ்வீட்டிகிட்டயும், ஸ்னேகுகிட்டயும் பேசறேன்....."

    "இப்ப போகாத கோவமா இருப்பா மதியம் பேசிகலாம் வா......" என்றபடி அழைத்து சென்றான் ஸ்ரீ.


    வேகமாய் ஸ்வீட்டியை நெருங்கிய ஸ்னேகு

    "ஏன் டி இப்படி பேசிட்டு வந்த பாவம் வாசு , எவ்வளவு ஃபீல் பண்ணுவான்" என அவளை முறைத்தவள்

    "உன்னோட மனசு எவ்வளவு கஷ்டபடும்னு நான் கவலைபடறேன்..... நீ என்னடானா அவனுக்காக ஃபீல் பண்ணறயோ........"

    " என் மனசு எதுக்கு கஷ்டபடுது? அவன் கேட்டதுல என்ன தப்பு? எனக்கு ஒன்னும் தெரியல"

    "ஏய் என் கிட்ட பொய் பேசாத எல்லாம் எனக்கு தெரியும்.....வா சும்மா..." என்று கைபிடித்து இழுத்து சென்றவளை பார்க்க தன் தாயை போல் தெரிந்தாள் அவளுக்கு.

    மதியம் உணவு இடைவேளையில் கூட இவர்களின் முகம் பார்க்கவில்லை ஸ்வீட்டி. சாப்பிட்டு விட்டு ஸ்னேகு லைப்ரரிக்கு சென்றுவிட தனியாக அமர்ந்து படித்துகொண்டிருந்த ஸ்வீட்டியிடம் சென்றான் வாசு.

    "சாரி டி ஸ்வீட்டி நான் எதோ யாதர்த்தமா தான் கேட்டேன்....."

    "காலைல தான் மகேஷ் ஞாபகம் வந்து அவ கவலை பட்டுகிட்டு இருக்கா, நீ வேற இப்படி பேசி அவள காய படுத்திடயே டா"

    " எனக்கு தெரியாது ஸ்வீட்டி........ சாரி..டி....நான் வேணா அவகிட்ட பேசவா?"

    "வேண்டவே வேண்டாம் எதாவது பேசி மறுபடியும் அவள கஷ்டபடுத்தாத விடு அவ இப்ப நார்மல் ஆகிட்டா......., நானும் கொஞ்சம் harsha தான் பேசிட்டேன் ......" என

    " பரவாயில்ல.......விடு டி......"

    "ஹல்லோ இப்ப யாரு உன் கிட்ட சாரி கேட்டது... பரவாயில்லங்கற..."

    "அதான நீயாவது சாரி கேட்கறதாவது......."

    "தெரிஞ்சா சரி....." இவர்களை தூரத்தில் இருந்து பார்த்துவிட்ட ஸ்னேகு

    "என்ன பா எல்லாம் வாசிச்சு முடிச்சுடீங்களா?" என இருவரும் முழித்தனர் " அதான் பா...... மன்னிப்பு மடல் எல்லாம் வாசிச்சாசுனு கேட்டேன்...." என முவரும் சிரித்தனர்.

    மாலையில் ஐந்துபேரும் சேர்ந்து எப்போதும் போல் பேசிகொண்டே அந்த மரதடியில் சிறிது பேசிகொண்டிருந்துவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
     
  10. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    ஹாய் ஃப்ரண்ட்ஸ்,


    நான் திரும்ப வந்துட்டேன் (அய்யோ நீயா????.............வாடி வா உன்ன தான் தேடிகிட்டு இருந்தோம்னு..... கைல கட்டை, கம்பு எல்லாம் எடுக்கறது தெரியுது.......) வேண்டாம் பா நான் ரொம்ப பச்ச புள்ள பயந்துடுவேன்..... பாவம் போனா போகுதுனு விட்டுடுங்க பா pls......... கொஞ்சம் personal work அதிகமா இருந்ததால தான் என்னால எழுத முடியல , மறுபடியும் எழுதலாம்னு இருக்கேன் அதுக்கு உங்க அனுமதி எல்லாம் வேணும் கொஞ்சம் பெரிய மனசு வைச்சு இந்த சின்னபுள்ளய மன்னிச்சு அனுமதிய தரனும்னு கேட்டுகறேன் பா


    நன்றி!நன்றி!நன்றி!



    அனுமதிய இந்த லிங்க் ல கொடுத்துடுங்க பா plsssssssssssss.....................http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/159723-a-4.html
     
    2 people like this.

Share This Page