உயிரோவியம்(23Jul2009) காதலின் அடையாளமாய் கவிதையாய் முளைத்த விதையே.. எங்களுக்கு மட்டும் தெரிந்த இருட்டினில் நடந்த நாடகத்தை வெளியேற்ற இருட்டினில் வளரும் நிலவே.. முத்துக்கு சிப்பி போல் உன்னை பாதுகாத்து என்னுள் உன் அசைவுகளை ரசிக்கிறேன்.. தனது வறண்ட பூமி குளிர மழைக்காக ஏங்கும் ஏழை உழவனைப் போல் காத்திருக்கிறேன் மலரே - உன் வருகைக்காக.. கண்மணியே உன் ஒளிரும் கண்களையும் ரோஜா இதழ்களையும் தாமரை பாதங்களையும் காண என் உள்ளம் துடிக்கிறதே.. என் குருதியையும் அன்பினையும் கலந்து ஊட்டி.. தாலாட்டி உறங்க வைத்து.. சிரிப்புடன் துள்ளி எனை அணைத்திடும் நாட்களை மனம் நாடுதே..! அருமைச் செல்வன்(28Jul2009) தேவதை மகனின் சிரிப்பொன்று போதுமே உள்ளத்தின் துக்கத்தை துறக்க... கண் அசைவில் மொழிந்திடும் கண்ணனே நீ தவழும் நிலவே... கொஞ்சி கொஞ்சி பேசிடும் கிளியே நீ மழலைச் செல்வமே... தோழர்களுடன் ஆட்டம் போடும் தோழனே நீ சுட்டி குழந்தையே... அலுவலகம் செல்ல அடம் பிடிக்கும் அமுதே நீ ஒரு பள்ளிச் சிறுவனே... வேலைக்கு சோம்பல் காட்டும் தேனியே நீ வீளையாட்டு பிள்ளையே... கண்ணாளா! நீயே என் முதல் சேய்..! -தேவி @ பூஜாஅருண்.
thanks a lot Suganya.. at a stretch ah ellathaiyum padithathirku mikka nanri ma.. felt very happy 2 c ur comment in all my post sure ma.. wiil post more.. kathai yelutha thodangiyathum intha kirukalgal ninru vittathu.. athan 1st kathaiyil few kirukalgal koduthen.. already yeluthinathai konjam konjama post panren ma.. -devi.
Welcome .....happy to c such a talented people here.....pls let me knw wen u post ur next article......superrra eluthura neenka evlo thannadakathoda ellarukum thanks solrinka u r great..........
Thanks 4 ur compliments pa.. irunthaalum neenga romba pugalreenga Guna.. ungal aarvarthirkaagave inru enathu sila kirukkalgalai post panren pa.. http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/156170-a-2.html above link s d thread for my ongoing 2nd serial-story யாருக்கு யாரோ? when u have time mudinja padinga.. thanx 4 ur interest in my writings.. -devi.