1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவரை இல்லாத உணர்விது - 7

Discussion in 'Stories in Regional Languages' started by Sweetynila, Jan 30, 2012.

  1. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    இதுவரை இல்லாத உணர்விது - 7

    " நண்பன் ஒருவன் வந்த பிறகு

    விண்ணை தொடலாம் உந்தன் சிறகு

    வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே.

    துன்பம் வரலாம் இன்பம் வரலாம்

    நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்

    கல்லூரி நட்புகில்லை முற்றுபுள்ளியே "



    நண்பர்கள் இல்லாதவன் எவ்வளவு துரதிஷ்டசாலி என்ற எண்ணம் ரேகாவை பார்க்கும் போது மதுராவிற்கு தோன்றியது .


    மதுரா தன்னையே பார்பதை உணர்ந்த ரேகா , " என்ன ? " என்று புருவம் உயர்த்தினாள் .


    " ஒண்ணுமில்ல " என்று தலையசைத்து புன்னகைத்தாள் .


    " ஹேய் நோ •பீலிங்க்ஸ் ஓகே " என்று தோள் தட்டினாள் ரேகா.


    " அப்போ நேற்று எப்படிடா சமாளித்தே ? "

    " என்னது ? "

    " நேத்து டியூசன் வந்த பசங்களை எப்படி சமாளித்தே ? "


    " அந்த கொடுமையை ஏன் கேட்கறே ? நீ வரலைன்னு நான் எடுத்தா அந்த வாண்டுகள் எல்லாம் சேர்ந்துட்டு, ' அக்கா வேண்டாம் விட்டுடுங்க உங்களுக்கு தான் சொல்லி கொடுக்க வரலையே பின்ன எதுக்கு கஸ்டப்பட்டுட்டு விட்டுடுங்கன்னு ' என்னை மொக்கை பண்ணிடுசிங்க " என்று ரேகா புலம்பியதை கேட்ட மதுராவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

    " நீ நல்லா சிரிப்பே கஸ்டப்பட்டது நான்ல . நீ எப்படி தான் சமாளிக்கிறியோ" என சிலாகித்தாள்.



    அதே நேரம் அவர்களை நோக்கி வந்தாள் நிமிஷா .



    " ரேகா இதுதான் நிமிஷா . நிம்மி இதுதான் ரேகா " என்று இருவருக்கும் பரஸ்பர அறிமுகம் செய்து வைத்தாள் .



    " ஹாய் " என்று இருவரும் கைகுலுக்கி கொண்டனர் .

    காலை வகுப்பிற்கு பிறகு சாப்பாடு வேளையில் அனைவரும் ஒன்றாக கூடினர் .


    " சரிப்பா நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க . நான் ஹாஸ்டலில் போய் சாப்பிட்டு வரேன் " என்று மதுரா எழ எத்தனிக்கவும் ,

    அவள் கையை பிடித்து அமர்த்தினாள் நிம்மி .

    " இரு அம்மா உனக்கும் சேர்த்து தான் கொடுத்து இருக்காங்க . வா நீயும் எங்ககூட சாப்பிடு " என்று இரண்டு டிபன் பாக்ஸை எடுத்து வைத்தாள் .



    " ஏய் ஏன்ப்பா இதெல்லாம் ? ? அம்மாக்கு தான் வீண் கஷ்டம் " (ஆனாலும் நீ அநியாயத்துக்கு நல்லவளா இருக்க வாணி)



    என்னது கஷ்டமா ? ? நேத்து உன்னை பார்த்தேன்னு சொன்னதுல இருந்து உன்னை உடனே பார்க்கனும்னு ஒரே அலப்பறை . ஹாஸ்டல்ல விசிட்டர்ஸ் கார்ட் வச்சிருக்கிறவங்க தவிர மத்தவங்களை பார்க்க விட மாட்டாங்கன்னு சொல்லி அடக்கி வச்சிருகேன்டா . உனக்கு அது பிடிக்குமே அது பிடிக்குமேன்னு ராத்திரி பூரா சொல்லி காலைல ரெடி பண்ணி கைல கொடுத்துடாங்க . இதுல உன்னை கண்டிப்பா சாப்பிட வைக்கணும்னு ஆர்டர் வேற " என்று புன்னகைத்த நிம்மியுடன் மதுராவும் இணைந்தாள் .



    " சரிப்பா நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க நான் கிளம்புறேன் " என்று ரேகா எழவும் .



    " இப்போ நீ எங்க போற ? ? இரு எங்க கூடவே சாப்பிடு" என்றாள் நிமிஷா .

    " இல்ல நீங்க ரொம்ப நாளைக்கு அப்புறம் மீட் பண்ணிருக்கிங்க . நீங்க பேசுங்க " என்று செல்ல எத்தனிக்கவும் ,


    "நாங்க என்ன லவ்வர்ஸா தனியா பேச . அட சும்மா உட்காருப்பா " என்று ரேகாவையும் ஒன்றாக அமர வைத்தாள் .
    சாப்பிட அமர்ந்ததும் , " இன்றைக்கு ஒரு நாளைக்கு சாப்பிடுறேன் . ஆனா இனி இப்படி கொண்டு வர கூடாது " என்று கட்டளையிட்டாள் மதுரா.

    " ஏனோ மேடம் " என்று புருவம் உயர்த்தினாள் நிமிஷா.

    " ஏன்ன இப்படி ருசியான சாப்பாடு சாப்பிட்டு பழகிட்டா ஹாஸ்டல் சாப்பாடு இறங்காது . அதுக்குத் தான் "

    " நான் அம்மாக்கிட்ட சொல்லுறேன் . கேட்டுகிட்டா ஓகே . இல்லனா என்னை சொல்லக் கூடாது " என்றவள் சாப்பிட தொடங்கினாள் .

    சாப்பிட்டு முடிந்ததும் ராஜேஸ்வரியை பற்றிய பேச்சு வந்தது .

    " வாணி ஆன்டி சுப்பரா சமைப்பாங்கன்னு அம்மா சொல்லுவாங்க . அவங்க சாப்பாட்டை விட்டுட்டு இங்க வந்து இருக்குறது கஷ்டம் தான் இல்ல ? ? " என்று நிமிஷா வினவியதும் மதுராவின் கண்களில் நீர் கட்டியது .


    " ம் " என்று மெல்ல தலையசைத்தாள் .


    " ஆன்டி இப்போ எப்படி இருக்காங்க ? " என்ற நிமிஷாவின் கேள்விக்கு வேகமாக பதிலளித்தாள் ரேகா .

    " ஓ ஆன்டி நல்லா இருக்காங்க "


    " அப்போ நீயும் ஆன்டிய பார்த்துருக்கியா ? நீ எப்ப பார்த்தே ? "

    " நான் கடைசியா ஆன்டி தூங்கும்போது பார்த்தேன் " என்று புணர்ந்த ரேகா ,


    " டைம் ஆச்சே நீ க்ளாஸ்க்கு போகலையா நிமிஷா ?? " என்றாள் .

    " போகணும்ப்பா வாணி நீ வரலையா ? " என்று மதுராவிடம் வினவினாள் .

    " மேமை போய் பார்த்துட்டு வரோம் " என்றாள் ரேகா .


    " ஓ அப்போ சரி . நான் க்ளாஸ்க்கு போறேன் " என்றவள் வகுப்பறைக்கு சென்றுவிட்டாள் .

    அவள் சென்றதும் மதுராவை நோக்கி திரும்பிய ரேகா , " என்னை சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டு நீயே காட்டி கொடுத்துடுவே போல ? " என்ற ரேகாவின் கேள்விக்கு மவுனமாக நின்றாள் மதுரா .

    " இப்படி ஒண்ணும் சொல்லாம நின்னா என்னப்பா அர்த்தம் ? "


    " இனிமே கவனமா நடந்துக்குறேண்டா " என்று கண்ணிரை உள்ளிழுத்து புன்னகைத்தாள் .

    செமஸ்டர் நெருங்கியதால் அனைவரும் படிப்பில் கவனம் செலுத்தினர்.


    நாட்கள் விரைந்து செல்ல கடைசி பரிட்சை முடிந்த அன்று மதுராவின் முன் வந்து நின்றாள் நிமிஷா .

    " வாணி உங்கிட்ட ஒரு குட் நியூஸ் சொல்லணும் "

    " என்னடா ? "

    " அது.. நான் சொல்லி இருந்தேன்ல வீட்ல மாப்பிள்ளை பார்க்கறாங்கன்னு . முடிவு பண்ணிடாங்க . வர்ற சண்டே எனக்கு எங்கேஜ்மென்ட்டா " என்று கூறும் போது பெண்களுக்கே உரிய நாணம் அவளிடம் குடிகொண்டது . (வெட்கப்பட்டு கால்ல கோலம் போடுறேன்னு குழி தோண்டி வச்சுடாதம்மா . நாங்க வந்து மண்ணு போட்டு மூட முடியாது நிம்மி ).

    " ஹேய் கங்கிராட்ஸ்டா !!! இன்னைக்கு வெள்ளி கிழமை ஆச்சே ?? அப்போ நாளானைக்கு நிச்சயமா ? " ( எவ்வளோ அறிவு வாணி உனக்கு ? சண்டே நிச்சயம்னா அது நாளானக்குதானே ?? )

    " ஆமாம்ப்பா . நீ கண்டிப்பா வரணும் . ஆண்டியையும் அழைச்சுட்டு வரணும் " என்று நிமிஷா சொன்னதும் என்ன சொல்லுவது என்று தெரியாமல் திரு திரு என்று முழித்தாள் மதுரா .

    " என்ன முழிக்குறே ?? வீட்டில் எல்லோரும் உன்னை பார்க்கணும்னு ஆசை படுறாங்க . நீயும் ஆன்டியும் கண்டிப்பா வர்றிங்க " என்று கட்டளையாக நிமிஷா சொல்லவும் இனி உண்மையை மறைக்க முடியாது என புரிந்து கொண்டாள் .

    " இல்லடா ஹாஸ்டல்ல லீவ் கொடுக்க மாட்டாங்க . நிறைய பார்மாலிட்டிஸ் இருக்கு " என்றாள் குனிந்த தலை நிமிராமல் .

    " அதான் எக்ஸாம் முடிஞ்சு லீவ் விட்டுடாங்கல்ல அப்புறம் என்ன ?"

    " நான் இந்த ஹாஸ்டல்ல இல்ல "

    " பின்ன ? "

    " கவர்மென்ட் ஹாஸ்டல்ல இருக்கேன் "

    " எப்படி தான் இருந்தாலும் ஊருக்கு போவேல அப்போ வந்துட்டு போ "

    " இல்லப்பா . நான் போக மாட்டேன் "

    " ஏன் ? " என்று கேட்கும் போதே அவள் முகத்தில் குழப்பம் நிலவியது .

    " ஊருல எனக்குன்னு யாருமே இல்லை . அதான் போகல " என்று அவள் கூறியதும் , " என்ன சொல்லுறே ?? " என்று வினவியவளின் குரலில் அதிர்ச்சி .

    " ஆமா . அம்மா இறந்து ஒரு வருசமாச்சு " என்றாவள் கூறியதும் நிமிஷாவால் தன் காதுகளை நம்ப முடியவில்லை .


    " எங்கே என் முகத்தைப் பார் " என்று அவ்வளவு நேரம் குனிந்து கொண்டிருந்தவளின் மேவாயை தொட்டு நிமிர்த்தினாள் .

    நான் வெளியே வரலாமா ? என்று எட்டி பார்த்த கண்ணிரை உள்ளிழுத்து புன்னகைக்க முயன்றாள் மதுரா .

    " இதை ஏன் நீ முன்னமே எங்கிட்ட சொல்லல ?? " என்றாள் காட்டமாக .

    " உன்னையும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு நினைச்சேன் "

    " •ப்ரெண்டுனா சந்தோசம் துக்கம் இரண்டையும் பகிர்ந்துக்கனும். சந்தோசத்தை மட்டும் தான் பகிர்ந்துக்கனும்னா அப்போ நீ என்னை •ப்ரெண்டா நினைக்கலை இல்ல " .( நல்லா மண்டைல உரைக்குற மாதிரி கேளு நிம்மி )

    " அப்படி எல்லாம் இல்ல நிம்மி "

    " அப்படி இல்லன வேற எப்படி ?? இந்த விசயம் ரேகாக்கு தெரியும் இல்ல ?? "

    " ம் "

    " ஆனா நீ எங்கிட்ட சொல்லலை . இதுல இருந்தே தெரியுதே நீ என்னை •ப்ரெண்டா நினைக்கலைனு . சின்ன வயசுல பழகினவளாச்சேன்னு சும்மா ஏதோ பேசுற இல்ல ? "என்றாள் கோபம் சற்றும் குறையாமல்.

    " நிம்மி பிளீஸ் " என்று அவள் கெஞ்சவும்.

    " சரி விடு . இந்தா இன்விடேசன் . இதுல என்னோட அட்ரெஸ் இருக்கு . நீ என்னை உண்மையான •பிரண்டா நினைச்சா வா " என்றவள் மதுராவின் பதிலை எதிர் பாராமல் அங்கிருந்து சென்றாள் .

    " என்ன பண்ணுவது ? " என்று புரியாமல் விளித்தாள் மதுரா . ஹாஸ்டலுக்கு சென்று சற்று நேரத்தில் ஒரு முடிவுடன் வார்டனின் ரூமை நோக்கி சென்றாள் .

    உண்மையில் நிமிஷவிற்கு ராஜேஸ்வரியின் இழைப்பை தாங்கி கொள்ள இயலவில்லை . அவர் என்றுமே மதுராவையும் நிமிஷவையும் வேறாக நினைத்ததோ நடத்தியதோ இல்லை . ஏன் மற்ற இரு ஆண் பிள்ளைகளுமே அவளுக்கு அப்படி தான் .

    ஒரு தாயை போல் பழகியவரை மீண்டும் சந்திக்கலாம் என்று சந்தோசத்தில் இருந்தவளுக்கு இது பேரதிர்ச்சி .

    இதைவிட அதிர்ச்சி மதுரா அதனை அவளிடமிருந்து மறைத்தது . தன்னுடைய வருதத்தை மறைக்கவே மதுராவிடம் சண்டையிட்டாள் . அதையும் மீறி எங்கே தாம் அழுது அவளுக்கும் கஷ்டம் கொடுத்து விடுவோமோ என்ற பயத்தில் தான் அவள் அங்கிருந்து வேகமாக கிளம்பியது .

    மதியம் உணவு வேண்டாம் என்று தன் அறைக்கு சென்றவளை மாலை 7 மணிக்கு சாப்பிட அழைக்க சென்ற கண்மணி அதிர்ந்து விட்டார்.

    அழுது அழுது கண்களும் முகமும் வீங்கி போய் இருந்தது

    " என்னாச்சிம்மா ? " என்று பதறிய கண்மணியை கட்டி கொண்டு மீண்டும் அழுதாள் .

    " என்னாச்சிம்மா ஏன் அழறே ? சொல்லிட்டு அழுடா " என்றார் சற்றும் பதட்டம் குறையாமல் .

    " அம்மா ராஜி ஆண்டி ராஜி ஆண்டி " என்று தேம்பியவள் முதுகை தட்டி கொடுத்தவர்.

    " ராஜிக்கு என்னடா ? " என்றார் .

    " ராஜி ஆண்டி இறந்து ஒரு வருஷம் ஆச்சாம்மா " என்று விசும்பல் இடையே அவள் கூறுவதை கேட்டவர் மீண்டும் ஒரு முறை அதிர்ந்தார் .

    " என்னடா சொல்லறே ? " என்று நிமிஷவின் இரு தோள்களையும் பற்றி உலுக்கினார்.

    " உண்மைம்மா இதை கேட்டதும் எனக்கு தாங்க முடியலைம்மா . அவ நம்ம கிட்டே இருந்து இதை மறைச்சுட்டாமா " என்று தேம்பினாள்.

    இதை கேட்டதும் மொத்த குடும்பமுமே ஸ்தம்பித்தது .

    " நாளைக்கு ஹாஸ்டலுக்கு போய் வாணியை பார்கலாம் " என்றார் மஹேந்திரன்.



    அதனை ஏற்று கொண்டு கனத்த மனதுடம் அனைவரும் உறங்க சென்றனர்
    ஆனால் ஹாஸ்டலுக்கு சென்று அவர்கள் மதுரவை சந்திக்க போவது இல்லை என்று உண்மையை அவர்களிடம் யார் சொல்வது ???



    அடுத்த நாள் விடிந்ததும் விடியாததுமாக மதுரா தன் உடைகளை மடித்து பைக்குள் தினித்து கொண்டிருந்தாள் .

    தனக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து விட்டு குளிக்க சென்றாள் .


    குளித்து முடித்து விட்டு வெளியே வந்தவள் எதிரே வந்த சுதா ,
    " நீ கண்டிப்பா போய் தான் ஆகனுமா மதுரா ? நீ இல்லைன்னா எனக்கு யார் கம்பேனி கொடுப்பா ? " என்று அவளுடைய வருத்தமான கேள்விக்கு புன்னகை மட்டும் பதிலாய் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

    தயார் ஆகி தன் பையை எடுத்து கொண்டு வார்டன் அறைக்கு சென்று செய்ய வேண்டிய பார்மாலிடீஸ் எல்லாம் முடித்து கொண்டு கனத்த இதயத்தோடு கிளம்பினாள் .



    இது அவள் வாழ்வில் எடுக்கும் சரியான முடிவு தானா ? என்ற குழப்பத்தோடு தன் பயணத்தை துவங்கினாள்.



    இதுவரை தெளிந்த நீரோடையாய் இருந்த தன் வாழ்வு கல்விழுந்த குட்டையாய் மாற போவதை அறிந்ததால் தான் மனம் குழம்பி தவித்ததோ???


    --உணர்வுகள் விளையாடும்....


    - நூருல் & நிலா
     
    2 people like this.
    Loading...

  2. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Nadhi,

    Paavam madhura....avalukku irukkum kashtam podhadhu nu innum neenga enna start panreenga new ah.......... have to wait.... But ava ivalo pidivadhamaa irukka kuudadhu........ friend ooda polam daane........seri...Hero daan vandhu indha ponna maththanam....... avar eppo intro tharuvaar...........Waiting Eagerly for the next one!!!!

    Vasupradha.S
     
    1 person likes this.
  3. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi NooruNila..
    very nice story pa.. thodarnthu paditthalum ippothu than comment poduren..
    ungalathu yeluthunadai miga arumai.. antha bracket la neenga kudukkura comments - i love it pa.. naanga solrathuku munnadi athaye neenga sollidureenga.. nice :)
    Mathura patta kastam pothathu nu innum kastam kudukka poreengale pa, ithu niyayama?
    hero intro yeppo?
    eagerly waiting 4 next update..
    -devi.
     
    1 person likes this.
  4. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    what happened to mathura? why she has taken sudden decision to leave the hostel? eager to read the next.
     
    1 person likes this.
  5. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    hi...
    cha romba pavama iruku...madhura va patha...
    avaluku help panna mahendran and family varuma illa vera yaravathu varuvangala...
    waiting to read where have she started and what will happen to her...
     
    1 person likes this.
  6. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    nimma raji irandhuttanga nu therinju romba upset aiyta ... paavam...
    en madhura nimmi family ah meet panradha avoid panra????????
    hero nimmi oda annan la oruthangla???
    madhu hostel la irundhu kilambi poradhuku munnadi avala ivanga patharnum....
     
    1 person likes this.
  7. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi suganya..
    Madhu kilamburathu kulla Mahendran family avala parkanum nu naama aasai padalaam but athu thaan nadakathu nu theliva namma NooruNila sollitangale!
    -devi.
     
    2 people like this.
  8. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Hi Vasupradha,
    Thanks for the comment.
    Athoda neenga Nathi koopidurathuku oru special thanks :)
    Puthusa kastamellam vanthaalum atha pokurathuku thaan Nimmi & family irukaangalae.
    Hero entry koduthachu.
     
    1 person likes this.
  9. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Hi Devi,

    Thanks for the comment.
    bracket comments & ezhuthu nadai pidichurukunu sonnathuku again thanks :)
    Madhuravoda kastatha pakirnthukaga thaan ippo Nimmi kudumbam vanthachae.
    Ini avanga Madhuraava nalla paarthukuvaanga.
     
    1 person likes this.
  10. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Hi Padhmu,

    Thanks for the comment.
    Madhura is going to Nimmi's Home :)
     

Share This Page