1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவரை இல்லாத உணர்விது - 3

Discussion in 'Stories in Regional Languages' started by Sweetynila, Jan 26, 2012.

  1. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    அடுத்த நாள் காலை ராஜேஸ்வரி வழக்கம் போல் குடத்தை எடுத்துக் கொண்டு ஆத்தங்கரைக்கு கிளம்பினாள்.

    வாசலில் அமர்ந்திருந்த பொன்னாத்தா,

    " இந்தா புள்ள சுருக்குன்னு போயிட்டு சுருக்குன்னு வந்திடனும். அங்க இங்கன்னு நின்னுட்டு பறாக்கு பார்த்திட்டு இருக்காதே " என்றார் கண்டிப்புடன்.

    " சரிங்க பாட்டி " என்றவள் ,

    " குழலூதும் கண்ணணுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா
    குக்கூ குக்கூ குக்கூ
    என் குரலொடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
    குக்கூ குக்கூ குக்கூ "

    பாட்டை முணுமுணுத்துக் கொண்டு ஆத்தங்கரையை நோக்கி நடந்தாள்.

    இரு பக்கமும் செழித்து வளர்ந்திருந்த தோட்ட காட்டை பார்த்துக் கொண்டே நடந்தாள்.

    " எப்போதுமே பாதையை பார்த்து நடந்து போற பழக்கம் இல்லையோ ? "

    திடீரென்று ஒலித்த குரல் அவள் பாட்டை தடை செய்தது . நேற்று இரவு முழுதும் நேற்றைய சம்பவத்தை நினைத்துக் கொண்டிருந்ததில் இப்போது ஒலித்த குரல் யாருடையது என்பதை தெளிவாக உணர்த்தியது .

    ஏதோ உந்த நேற்றைக்கு போல் இன்றும் சென்று விட கூடாது என்று எண்ணியவள் குரல் வந்த திசையை நோக்கினாள் . (இப்போதான் சரியா யோசிச்சுருக்க ராஜி)

    மாநிறத்தில் வெண்ணிற பற்கள் மின்ன புன்னகைத்துக் கொண்டு மரத்தில் ஒரு காலை ஊன்றி சாய்ந்து நின்று கொண்டிருந்தான் ராஜேஸ்வரியை விழுந்து விடாமல் தாங்கி பிடித்த அதே இளைஞன் .



    அடர்த்தியான மீசை , கட்டுக்கோப்பான உடம்பு , கருமையான முடி, அதில் செய்யப்பட்டிருந்த சிகை அலங்காரம் அவன் பட்டாளத்தான் என்று சொல்லாமல் சொல்லியது.

    அவனை ஒரு நொடி உற்று நோக்கியவள் ஆத்தங்கரையை நோக்கி ஓடி விட்டாள் . (அதான சரியா யோசிக்குறேன்னு நினைச்சேன். இப்படி சொதப்பிட்டியே ராஜி)

    " ஏய் புள்ள நில்லு புள்ள உன் பேரை சொல்லிட்டு போ " என்ற அவன் வாசகம் காற்றில் கரைந்தது . (அப்படியே நின்னு பேர சொல்லிட்டு போய்ட்டாலும்)

    அடுத்த நாளும் அவன் அதே நேரத்தில் அங்கு நிற்பதை கண்டவள் மனம் எகிரி குதிக்க துவங்கியது.

    ' இவன் நமக்காக தான் இங்கே நிற்கிறான் ' என்பதை புரிந்து கொண்டவள் . அடுத்த நாள் அதிகாலையிலேயே கிளம்பினாள்.

    இதனை கண்ட பொன்னாத்தா , " இந்தா புள்ள ஏன் வெள்ளனைலே கிளம்புறே " என்றாள்.

    " இப்போ போன வெயில் எறும் முன்னமே திரும்பிடலாம் . அதான் பாட்டி" என இழுத்தாள்.

    " வெயில் பட்டா உடம்புக்கு நல்லதுதான் புள்ள . சரி சரி சிக்கிரம் போயிட்டு வந்திடு " என்று அனுமதி வழங்கினார்.

    " சரி பாட்டி " என்றவள் குடத்தை தூக்கிக் கொண்டு கிளம்பினாள்.



    இரண்டு நாள் எந்த பிரச்சனையும் இன்றி சென்றது.

    மூன்றாம் நாள் மறுபடியும் பிரச்சனை அரம்பம் ஆனது.

    அவன் கூறியதில் இருந்து இரண்டு நாட்களாக ராஜேஸ்வரி பாதையை தவிர்த்து வேறு எங்கும் பார்வையை அலைய விடுவதேயில்லை.

    அன்றும் குனிந்த தலை நிமிராமல் பாதையை பார்த்து சென்று கொண்டிருந்தவள் முன்பு இரண்டு கால்கள் வந்து நின்றது.

    ' யார் ? ' என்று நிமிர்ந்து பார்த்தவள் கிட்டதில் எதிரே நின்றவனை கண்டு சட்டென்று ஒரு அடி பின் நகர்ந்தாள்.

    வாயில் மிஸ்வாக் குச்சியை வைத்து கொண்டு புன்னகைத்தான் அதே இளைஞன் .

    " இப்போ எல்லாம் பாதையை தவிர வேறு எதையும் பார்க்கிறது இல்லை போல " என்ற அவன் கிண்டலில், வேண்டுமென்றே தான் தன் முன்னே வந்து நிற்கிறான் என்பதை புரிந்து கொண்டாள் .

    அவனைக் கடந்து வேகமாக நடக்க தொடங்கினாள் .

    அவன் பின்னேயே தொடர்ந்து வந்து பேச்சு கொடுத்தான் .

    " என்ன காலையில வர நேரத்தை மாத்திடிங்க . எனக்கு பயந்தா மாற்றினே ? "

    " நான் என்ன அவ்ளோ பயங்கரமாகவா இருக்கேன் ? " என்ற அவனது எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் வேகமாக நடந்தாள் .

    அவளோட வேகத்திற்கு ஈடு கொடுத்து அவனும் அவளோடு இணைந்து நடந்தான்.

    " இப்படி எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம இருந்தா என்ன புள்ள அர்த்தம் ? "

    " இதுக்கும் பதில் சொல்ல மாட்டியா ? சரி உன் பேரு என்ன ? " என்ற அவனுடைய கேள்வியில் சுதாரித்தவள்.

    " எதுக்கு கேட்குறிங்க ? " என்று நின்று வினவினாள் . (பேரை எதுக்கு கேட்பாங்க கூப்பிடுறதுக்குதான். இதெல்லாம் ஒரு கேள்வியா ராஜி)

    " சும்மா தெரிஞ்சுகலாம்முன்னு தான் "

    " தெரிஞ்சு என்ன பண்ண போறிங்க ? " என்றபடி மீண்டும் நடக்க தொடங்கினாள் . (மறுபடியும் நடக்க ஆரம்பிசாச்சசா)

    " தெரிஞ்சு என்ன வேணாலும் பண்ணலாம் . உன்ன வந்து பொண்ணு கேட்கலாம் " என்ற அவன் வாசகத்தில் நின்று அவனை திரும்பி பார்த்தவள் மீண்டும் நடக்க தொடங்கினாள்.

    " என்ன புள்ள பதில் சொல்லாம போற ? "

    " நீங்க பார்த்த பெரிய இடத்து புள்ளையாட்டம் இருக்கிங்க . உங்களுக்கும் எங்களுக்கும் எந்த காலத்திலயும் ஒத்து வராது . அதனால சும்மா நின்னு வம்பு பண்ணாம இங்கயிருந்து கிளம்புங்க "

    " நான் எப்போ புள்ள உங்கிட்ட வம்பு பண்ணினேன் ? "

    " இப்படி பின்னாடியே வர்றதுக்கு பேர் என்னவாம் ? "

    " நான் உங்கிட்ட பேரை கேட்டேன் . சொல்லி இருந்தா போய் இருப்பேன் "

    " பேரை சொல்லிட்டா போய்டுவிங்களா ? என் பேரு ராஜேஸ்வரி. சொல்லிபுட்டேன் இப்போ கிளம்புங்க "

    " ராஜேஸ்வரி ரொம்ப நல்ல பேர் . சரி உன் பேரை சொல்லிட்டே என் பேர் கேட்க மாட்டியா ? " என்றவன் தொடந்து அவளுடன் இணைந்து நடந்தான்.

    " உங்க பேரை தெரிஞ்சுகிட்டு நான் ஒண்ணும் பண்ண போறது இல்லை "

    " நீ கேட்கலைனாலும் நானே சொல்லுறேன் . என் பேர் சுந்தர்ராஜன் . பட்டாளத்துல இருக்கேன் . ராஜன் ராஜேஸ்வரி பேர் பொருத்தமா இருக்கில்லை " என்று அவன் புன்னகைத்தான்.

    " தயவு செஞ்சு என் பின்னால வராம போங்க . ஊர்காரங்க யாராவது பார்த்த தப்பா நினைப்பாங்க . இப்படி எல்லாம் பேசிகிட்டு தயவு பண்ணி என் பின்னாடி வராதிங்க " என்று சொல்லிவிடு சுற்றி முற்றும் பார்த்து கொண்டு வேகமாக நடந்தாள்.

    அப்போதைக்கு அங்கு நின்றானே தவிர தினமும் அவள் பின் வருவதை நிறுத்தவில்லை.

    மூன்றாம் நாள் பேசிய பின் அவள் அவனோடு மறுபாடியும் பேசவில்லை. அவனும் அவளை பின் தொடர்வதை நிறுத்தவில்லை.

    பத்து நாட்கள் கடந்திருக்கும் , அன்றும் தன் பின்னே நடந்து வருபவனிடம் என்ன சொல்லி இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது என்று யோசித்தவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனோடு பேச தொடங்கினாள்.

    " எதுக்கு இப்படி என் பின்னாலயே வா¡£க , யாருக்காவது தெரிஞ்சா ஊருக்குல்ல என் பேர நாறடிச்சு புடுவாக " என்றாள் கலக்கத்துடன்.

    " நான் ஒண்ணும் உங்கிட்ட தப்பா நடந்துக்களையே "

    " இது ஒண்ணும் பட்டணம் இல்ல . இது கிராமம் . ஒரு புள்ள பின்னாலயே ஒருத்தன் வந்தா தப்பாதான் நினைப்பாக . தயவு பண்ணி என்னை விடுங்க " என்றவள் நடக்க எத்தனிக்க அவள் கையை பிடித்து தடுத்தான்.



    சட்டென்று அவன் பிடியில் இருந்து கையை உருவிக் கொண்டவள் ,

    " என்ன பண்ணுறிங்க " என்று படபடப்போடு சுற்றி முற்றும் பார்த்தாள்.

    ' நான் ஒண்ணும் உங்கிட்ட தப்பான எண்ணத்தோடு பழகலை. உன்னை கல்யாணம் கட்டிகிடனும்னுதான் ஆசை படுறேன் " என்று தன் எண்ணத்தை வெளியிட்டான்.

    " அதெல்லாம் நடக்காத காரியம் "

    " ஏன் நடக்காது ? உன்னை ஏமாத்திட்டு போயிடுவேன்னு பயப்படுறியா? அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் . நான் இந்த ஊர் நாட்டாமையோட பங்காளி வீரபாண்டியனோட பையன் . என்னை பத்தி வேணும்னா ஊருக்குள்ளாற விசாரிச்சுக்கோ "

    " அதனாலத்தான் சொல்லுறேன் . நீங்க பெரிய இடம் . உங்களுக்கும் எங்களுக்கும் ஒத்து வராது "

    " ஏன் வராது . அதெல்லாம் ஒத்து வரும் . உன்னை கட்டிக்க போறவன் நானு. நானே சொன்னதுக்கு அப்புறம் என்ன ? "

    " உங்க அப்பாரு ஒத்துக்கணுமில்ல "

    " அதெல்லாம் எடுத்து சொன்ன ஒத்துப்பாரு "

    " ஒத்துக்க மாட்டாக "

    " ஏன் ஒத்துக்க மாட்டாங்க ? "

    " ஒரு அனாதைய மருமகளா ஏத்துக்க சம்மதிக்க மாட்டங்க "

    " அனாதையா ? உனக்கு ஒரு பாட்டி " என்று அவன் தயங்கவும் ,

    " அது என்ன எடுத்து வளத்தவுக . என்னகுன்னு வேற யாருமேயில்ல அதுனாலதான் சொல்லுறேன் வேற ஜோலிய பாத்துகிட்டு போங்கன்னு " என்று அவள் நில்லாது நடக்கவும்,

    " நாளைக்கு எங்க அப்பா சம்மதம் வாங்கிட்டு வந்து உன்னை பார்க்குறேன் " என்று அவன் வீடு நோக்கி நடந்தான் .

    தன் அப்பாவிடம் சம்மதம் வாங்கி ராஜேஸ்வரியிடம் பெருமையாக கூறலாம் என்று எண்ணியவன் சந்தோசமாக வீடு நோக்கி நடந்தான்.

    அவன் சந்தோசம் பொய்க்க போவதை அறியாமல்!!


    --உணர்வுகள் விளையாடும்....

    - நூருல் & நிலா
     
    1 person likes this.
    Loading...

  2. bgraji

    bgraji New IL'ite

    Messages:
    14
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    hai !

    this story has two writers,isn't it? now only i noticed.nice combination
    :thumbsup
     
    1 person likes this.
  3. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    rajan ku vera ponnu fix panni tangala????
    waiting for next update..!!!
     
    1 person likes this.
  4. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi...
    rajan ku veetla appa edhirpu therivippangla??????
    rajan-raji per porutham super o super...
    eager to read what s next...
     
    1 person likes this.
  5. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Hi Raji,

    Ya this story has two writers :)
    Thanks for the comment.
     
  6. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Hi Janani,

    Thanks for the comment.
    Vera ponna paarthu fix panninaalum Rajan kalyanathuku othukanum illa ;-)
     
  7. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    வானதி & நூருல்,

    கதை அருமையாக உள்ளது.......
    அப்படியென்ன சோகம் வாணிக்கு.....
     
  8. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Hi Suganya Mam,

    Thanks for the comment.
    Appa kita irunthu ethirpu vanthaalum namma Rajan athaiellam meeriya rajiya kalyaanam pannika maatara enna ;-)
    per porutham nalla irukunu sonnathuku thanks again :)
     
  9. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Hi Theanu Mam,

    Thanks for the comment :)
    Vaanioda sogathuku karanatha koodiya sikiram sollidurom.
     
  10. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi nadhi,

    Super. rendu paer serndhu azhagaa kadhai solreenga....Raji , Rajan servaangala........ If s,yaaroda parents rendu paer um...Hero voda entry eppo.. paeriya build upooda daan entry kuduppaar nu nenakaraen...Awaiting for next update.

    Vasupradha.S
     

Share This Page