1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் என்பதே நீயல்லவா - 15

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Jan 13, 2012.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற நேரம் மல்லிகார்ஜுன் உத்ராவை அழைத்தார்.

    "உத்தி கீர்த்தி என்ன பண்ணறா?"

    "நல்லா தூங்கிட்டு இருக்கா பா"

    "ம்........ வேற எதும் சொன்னாளா?"

    "ரொம்ப பயந்துட்டா பா, ஆனா இப்ப o.k"

    "சரி..... உன் கிட்ட ஒன்னு சொல்லனும் டா"

    "சொல்லுங்க பா......"

    "கண்ணன் போன் பண்ணாரு..........."

    "என்ன விஷயமா பா அதுவும் இந்த நேரத்துக்கு....."

    "சாயந்திரமே பேசினாரு மா....... அவரோட அண்ணன் பையன்........ சரணுக்கு உன்ன கேட்டாங்க டா....... பையனும் நல்லவன் தான் ....... நல்ல குடும்பம்........ தெரிஞ்ச குடும்பமும் கூட....... நீ என்ன டா சொல்லுற....?" அவளுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை சரணுக்கா? அதிர்ச்சி... குழப்பம் என மாறி மாறி கேள்விகள் தான் தோன்றின.அதில் முக்கியமாக தோன்றியது விஜி பற்றியது. அதை மட்டும் தன் தந்தையிடம் கேட்டாள்.

    "நான் நாளைக்கு சொல்லட்டுமா பா?..........."

    "எப்ப வேணா நல்லா யோசிச்சே சொல்லு......."

    "அப்பா சரணுக்கு பார்க்கறங்க னா விஜிக்கும் பார்ப்பாங்க இல்ல...."

    "ஆமா..... "சிறிது யோசனைக்கு பின் "விஜியும் ரிஷியும் சந்திச்சுகிட்டாங்களா...?"

    "இல்ல பா....... ரிஷி பெங்களுர் போய்ருக்கான்....."அதற்கான அவசியத்தையும் சொன்னாள்

    "ஒ....... சரி விடு சீக்கரம் கிளம்பி வர சொல்லு பாத்துகலாம்....."

    "ம்..... good night பா..."

    "எதையும் யோசிகாம தூங்கு,காலைல யோசிச்சுகலாம்.... good night ....."

    "சரி பா.... good night மா" தூங்க சென்றாள். தூக்கம் தான் வரவில்லை மனதில் இத்தனை கேள்விகள் இருக்கும் போது எப்படி தூக்கம் வரும்...

    சரணுக்கா? எப்போதும் திட்டும் அவனுக்கா? இது அவனுக்கு தெரியுமா? ஒருவேளை அவன் தன்னிடம் விளையாடி இருப்பானோ? போனதடவை கூட ஏதோ சொன்னானே? அன்று ஏன் அப்படி நடந்து கொண்டான்? விஜிக்கு தெரியுமா? தெரிந்திருந்தால் கேட்டிருப்பாளே? இப்படி கோர்வையேயின்றி கேள்விகள் தோன்ற முதலில் எழுந்தமர்ந்து ஒரு ஸ்லோகத்தை மனதை ஒருநிலைபடுத்தி சொல்லிமுடித்தாள். கேள்விகள் மறையவில்லை தான் ஆனால் ஒரு தெளிவு கிடைத்தது.முதலில் எங்கிருந்து யோசிப்பதென்ற தெளிவு.முதலில் சரண் தன்னிடம் பழகிய நேரங்களை மனதில் ஒட்டி பார்த்தாள்.

    முதல்முதலில் அவனை பார்த்தபோது தோன்றிய அனுபவத்தையும் ஆராய்ந்தாள்.அன்று அவனுடைய குறும்பும், கண்ணியமான பார்வையும், கல கல பேச்சும் உள்ளம் கவர்ந்தது என்னவோ உண்மைதான்.கோபத்தில் அதையெல்லாம் அவள் அன்று கண்டுகொள்ளவில்லை.ஆனால் இன்று அவளுக்கு இனித்தது அவனது செய்கை.அன்றய பொழுதில் இனிமையானவனாக தெரிந்தவன் முந்தினம் தன்னிடம் ஏன் அப்படி கேட்டான்? என்று விளங்கவில்லை அவளுக்கு.ஏதெனும் கோபமாக இருக்கும் என்று சமாதானமடைந்தாள்.அவனை தனக்கு பிடித்திருக்கிறது என்று கண்டு கொண்டாள். விஜிற்கு அண்ணியாய் மனதிற்கு பிடித்தவனின் மனைவியாய் செல்வதில் அவளுக்கு ஏக சந்தோஷம் தான். ஆனால், அவனது மனநிலையையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்துகொண்டாள்.

    அடுத்த பிரச்சையான விஜி விஷயத்திற்கு வந்தாள். என்ன செய்வதென்று யோசித்தாள்.ஏற்கனவே முடிவு செய்ததைபோலவே செய்யலாம்,ஆனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கரம் முடிக்கவேண்டும் இது குறித்து ரிஷியிடம் பேசவேண்டும் என்று மனதில் குறித்துகொண்டாள். சரண் தன்னிடம் பேசியது அவனது செய்கை என்று அவனை பற்றி யோசித்தபடியே உறங்கி போனாள்.அவனும் இவளைப்பற்றி தான் யோசித்துகொண்டிருந்தான்.


    உத்ராவை அவன் முதலில் பார்த்தது விஜியின் வீட்டில் இல்லை அதற்குமுன்பே அவளை பார்திருக்கிறான்.ஒரு முறை விஜி வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் போது சிக்னலில் தங்கள் பஸ்சிற்கு பக்கதில் சிரிப்பு சத்தம் கேட்கவே திரும்பி பார்த்தான்.அங்கு ஒருவரோடு பேசியபடி உத்ரா தான் சிரித்து கொண்டிருந்தாள். லாவண்டர் நிறத்தில் அழகிய பூவேலைபாடோடு கூடிய சுடிதாரில் கண்களில் குறும்போடு குழந்தைதனமாய் கேள்விகள் கேட்டபடி அமர்ந்திருந்தவளின் அழகு அவனை ஈர்த்தது.அவர்களின் பேச்சிலிருந்து அவர் அவளின் தந்தையை என்றும் இருவருமாய் கோவிலிற்கு வந்திருப்பதும் தெரிந்துகொண்டான்.சிக்னலில் பச்சை விளக்கேறிய அவளை தவறவிட்டான்.அதிலிருந்து எப்போது திருப்பூர் வந்தாலும் அவளை தேடிவதை நிறுத்தவில்லை.விஜியின் வீட்டில் அவளை பார்த்தது ஆச்சரியம் தான் ஆனால் உடனே தன் மீட்டேடுத்துகொண்டான்.அவளின் உணர்வுகளை கண்டு ரசித்தான், அவளை சீண்டி ரசித்தான்.இன்று கண்ணன் பேச்சுவாக்கில் உத்ராவிற்கும் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று சொல்ல அவரிடமே தன் விருப்பத்தை முதலில் தெரிவித்தான்.அவனது வீட்டில் அனைவருக்கும் இது சந்தோஷமான முடிவாகதான் இருந்தது.அதனாலயே உடனே மல்லிகார்ஜுனிடம் பேசிவிட்டார் கண்ணன்.

    ஆனால் இந்த செய்தி ஒருவருக்கும் மட்டும் மகிழ்ச்சியை தரவில்லை.........................
     
    1 person likes this.
    Loading...

  2. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    ஹாய் தோழிகளே!

    உங்ககிட்ட ஒரு சின்ன விண்ணப்பம்........
    நம்மெல்லாம் இப்போ பொங்கல் கொண்டாட போறோம் ல அதுனால எங்களுக்கு ஒரு நாலே நாள் பெரியமனசு பண்ணி லீவ் கொடுத்திருக்காங்க பா எங்க ஆபிஸ்ல........ அதே பெரிய மனசோட நீங்களும் எனக்கு ஒரு நாலு நாள் லீவ் கொடுங்க பா... ப்ளிஸ்...... பொங்கல் பரிசா நான் இப்ப ஒரு பகுதிய அப்டேட் பண்ணிடேன்(அது பரிசு இல்ல ........ தண்டனைனு சொல்லறது கேக்குது...... ஏதோ என்னால முடிஞ்சது........ :rotflஹா...ஹா...ஹா)

    வரும் புதனன்று உங்களுக்கு மறுபடியும் உங்களயெல்லாம் கொடுமைபடுத்த வந்துடுவேன் பா..........


    ADVANCE HAPPY PONGAL FRIENDS...........
     
  3. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் தேன் !
     
  4. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Great to see the next episode Then. Advance ponga wishes for you too. waiting eagerly for wednesday, for next update :)
     
  5. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    கதையை சுவாரஸ்யமாய் எடுத்து செல்கிறாய் தேன்..
    எழுத்து நடையும் நன்றாக இருக்கிறது..வாழ்த்துக்கள் ..

    நாலு நாள் கழிச்சு பொறுமையா வந்து அடுத்த பகுதி போடு..பொழச்சுப் போ..:)
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
     
  6. deeparani2

    deeparani2 Silver IL'ite

    Messages:
    305
    Likes Received:
    144
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Oru oru paira sernthukitu irukuranga. Gud. yaru pa athu antha oruthar who is not happy with this proposal.. Is that Viji.
    Waiting for Wendsday and Have a great pongal and pongal holidays..
     
  7. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நன்றி அகி பா........ உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் என்னோட பொங்கல் நல்வாழ்த்துக்கள் பா........
     
  8. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    thanks priya pa........
     
  9. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நன்றி ப்ரனா பா........ உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் என்னோட பொங்கல் நல்வாழ்த்துக்கள் பா

    ரொம்ப நன்றி பா.... அனுமதிக்கு
     
  10. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    சொல்லறேன் பா...... உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் என்னோட பொங்கல் நல்வாழ்த்துக்கள் பா.....
    நன்றி பா........
     

Share This Page