1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இயல்பு தான்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jan 4, 2012.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    "ஆனி மாச மத்தியிலே கைப்பிடிச்ச சுந்தரரை
    ஆடியிலே பிரியச் சொல்வதும் என்ன நியாயம்?"
    என்று கேட்டவளைக் கண்டு மெல்லச் சிரித்தவளாய்
    சொன்னாளாம் அன்னை, "இது என்னடி மாயம்?"

    "இருபத்தஞ்சு வயசு வரை இந்த வீட்டுலயே
    நீ இருந்தாயே பொண்ணே! அது நெனப்புல இருக்கா?
    இருபத்தஞ்சு நாள் கூட இன்னும் ஆகலையே!
    நீ சொல்லுறது உனக்கே சரியாத் தான் படுதா?"

    என்று அவள் மேலும் கேட்க, அயர்ந்து போகாது
    "அந்தக் கால வழக்கமெல்லாம் இப்ப செல்லாது!
    இப்ப இருக்க வசதியெல்லாம் அப்ப கிடையாது.
    அதனாலே உன் வார்த்தை எடுபடவும் படாது!"

    என்று சொல்லி விட்டு அவள் அப்பால் செல்ல,
    மணம் ஆன பின்பு எவரும் மாறுதல் இயல்பென்று,
    தனக்குள்ளே சொல்லிக் கொண்டு அன்னையும் செல்ல,
    சாட்சியாக இருந்த தந்தை சிரித்தார் அன்று.
     
    Loading...

  2. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Matrangal pala vandhalum, ponalum
    Maaraadha seyal sila undu
    Mangaiyarin kann nokkil manavalan mattum dhaan
    Maradhu nirpaan idhu Annai vazhi dhaan
    Magalin seyal kandu, thayaval
    Manaiviyay nadaththiyadhai
    Manadhi niruththi
    Maghizhndharo thandhai!!!! Sirappura padaikkapatta kavidhai!
    Anbhudan
    pad
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Wow! Thanks for posting a very good feedback Padmini. Happy to receive a first from you. -rgs
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்,அன்று சொன்ன மொழி,
    ஆடிக்காற்றில் அந்தகால பழக்கமும் பறக்கும் இன்று சொல்லும் மொழி!
    அனுபவ கவிதையோ!
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Not really. But her love towards him takes precedence over the prevailing custom. Thanks for your feedback. -rgs
     

Share This Page