1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓடும் மேகங்களே - 25

Discussion in 'Stories in Regional Languages' started by Anu86, Jan 8, 2012.

  1. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஓடும் மேகங்களே - 25

    ஓடும் மேகமாய் நீ..
    நல்துளி யாசிக்கும் சிப்பி நான்..
    தந்துவிடு பெண்ணே ஒருதுளியை..
    வந்துவிடு பெண்ணே என்னுள் முத்தாய்!!!

    2003 ம் ஆண்டு தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளர் தற்கொலை செய்து உயிரிழந்தார். காரணம் கடன் தொல்லை. கந்து வட்டி, மீட்டர் வட்டி என்று வட்டி குட்டி போட்டு பெருகி கழுத்தை நெருக்கிய நிலையில் கழுத்தில் சுருக்கு மாட்டி உயிரிழந்தார். அன்று அரசின் கவனம் கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது விழுந்தது. ஒரு சட்டமும் வந்தது. வட்டிக்கு கொடுப்பவர்கள் அராஜகம் செய்து வசூலித்தால் அவர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கலாம்.

    ஆனால் நம் நாட்டின் அடிமட்ட, நடுத்தர வர்க்கத்தின் பொருள் தேவையும், ஒரு பக்கமே பணம் குவிவதால் பணத்தால் மேல்தட்டு வர்க்கமாகிவிட்ட மக்களின் பேராசையும், இந்த கந்துவட்டி தொழிலை இன்றளவும் அமோகமாக வாழ வைத்து வருகின்றது.

    இப்பொழுது சஞ்சீவ் கையாண்டுக் கொண்டிருக்கும் ஒரு வழக்கும் அது தான். ஒரு செல்வாக்குள்ள அரசியல்வாதியின் பினாமியாக இருக்கும் பிரபல ரௌடி தான் சங்கரநாதன். அரசியல்வாதி மூலமாக வரும் கறுப்புப் பணத்தை வட்டிக்கு கொடுப்பான். அதன் மூலம் வட்டி அவனுக்கு.. அவனுடைய வட்டி விகிதம் பத்து சதவீதத்திலிருந்து பதினைந்து சதவீதம் வரை வரும்.

    ஒரு அவசர தேவைக்கென்று அவனிடம் கடன் வாங்கியவர்கள் கதி அதோடு முடிந்தது. அன்றிலிருந்து அவர்கள் வட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருப்பார்கள். அசல் குறையவே குறையாது. வட்டி மேலும் மேலும் குட்டி போடும். அவன் வட்டி வசூலிக்கும் முறையும் மிகவும் கொடுமையானது. யாரவது ஒரு மாதம் வட்டி கட்ட தவறிவிட்டால், மறுநாள் அந்த வீட்டிற்கு சென்று, அந்த வீட்டில் கடன் வாங்கியவரைத் தவிர அவனைவரையும் வீட்டிற்குள்ளேயே சிறை வைப்பான். கடன் வாங்கியவர் வெளியில் சென்று பணத்தைப் புரட்டி வந்து கொடுக்கும் வரை வீட்டில் இருப்பவர்கள் அது குழந்தைகளானாலும் வயதானவர்களானாலும் பட்டினியாக தான் இருக்க வேண்டும். அது எத்தனை நாட்களானாலும் சரி.

    அன்றும் அப்படிதான் சங்கரநாதனின் குறி ஒரு ஏழை மீனவரின் வீட்டின் மீது விழுந்தது. தன் மூத்த மகளின் திருமணத்திற்காக இவனிடம் மூன்று லட்சம் கடன் வாங்கியவர் வருடம் மூன்றாகியும் வட்டி மட்டுமே கட்டி வருகிறார். இந்நிலையில் தன் அடுத்த மகளின் திருமணம் நிச்சயமாக அவரால் இரண்டு மாதங்களாக வட்டி கட்ட முடியவில்லை. தன் அடியாட்களோடு அங்கு வந்த சங்கரநாதன் அந்த மீனவரை வெளியில் அனுப்பிவிட்டு அவர் மனைவி, மற்றும் இரண்டாவது மகளை வீட்டினுள் சிறைப் பிடித்தான்.

    அந்த அடியாட்களில் ஒருவனுடைய பார்வை அந்த நிச்சயமான சின்ன பெண்ணின் மீது தவறாக விழ, மானத்தைக் காத்துக் கொள்வதற்காக தன் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டாள் அவள். அவளைக் காக்கப் போய் அவளுடைய தாயும் தீயில் கருக, அங்கே இங்கே என்று பணம் புரட்டிவிட்டு ஓடி வந்த மீனவனுக்கு கருகி போன மனைவியும் மகளும் தான் கிடைத்தனர்.

    யாருமே இல்லை என்றாகிவிட்டது இனியும் பயந்து இருப்பதில் அர்த்தமில்லை என்று அவர் தைரியமாக வந்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவருடைய துரதிர்ஷ்ட்டம் அந்த காவல் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் சங்கரநாதனின் கைக்கூலி. அவர் புண்ணியத்தில் மறுநாள் செய்திதாளில், "மகள் வயிறுவலி தாளாமல் தற்கொலை செய்துக் கொள்ள, காப்பாற்ற போன தாயும் உயிரிழந்தார்.. மனைவி மகள் போன துக்கத்தில் தந்தையும் கூவத்தில் விழுந்து தற்கொலை" என்ற செய்தி தான் வெளிவந்தது.

    இதைக் குறித்து கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு மொட்டைக் கடிதம் வர, விஷயத்தின் தீவிரம் குறித்து கமிஷனர் ஆராய்ந்தார். ஆராய்ந்ததில் கடிதத்தின் உண்மை தெரியவரை, தன் நம்பிக்கைகுரியவனான நேர்மையான சஞ்சீவிடம் இந்த வழக்கை ஒப்படைத்தார். எந்தவிதமான புகாரோ, சாட்சியோ இல்லாத பட்சத்தில் சங்கரனாதனைப் பிடிக்க வேண்டுமானால் வலுவான ஆதாரம் வேண்டும். அதுவும் ஆளும்கட்சி அரசியல்வாதியின் முழு பக்கபலம் இருக்கும் அவனை நெருங்குவது கடினம் தான்.

    வெளியில் விஷயம் கசியாமல் மேலும் மேலும் சஞ்சீவ் அதை விசாரித்துக் கொண்டிருக்கும் போது தான் அவன் எதிர்பாராதவிதமாக அவனுக்கு ஒரு சாட்சி கிடைத்தது.

    ஒரு பிரபல வங்கியில் காசாளராக வேலைப் பார்ப்பவர் பச்சையப்பன். வங்கிக்கு கடன் கேட்டு வருபவர்களை சங்கரநாதனிடம் திசை திருப்பி விடுவது தான் இவரது வேலை. அதற்குமேலாக வங்கியில் காசாளரான இவர் காலையில் தன் கையில் வங்கியின் பணம் வந்தவுடன் அதில் ஒரு பத்து லட்சம் எடுத்து சங்கரநாதனின் ஆட்களிடம் கொடுத்துவிடுவார். பெயருக்கு அவனிடம் காசோலை வாங்கி வைத்துக் கொள்வார். ஆனால் அவன் கணக்கில் நூறு ரூபாய் கூட இருக்காது. அந்த பணத்தை அன்றாட வியாபாரிகளுக்கு வட்டிக்கு கொடுத்து மீண்டும் மாலை அசலோடு வட்டி பணத்தில் ஒரு பகுதியும் இவரிடம் திரும்பி வந்துவிடும். காலையில் எடுத்தப் பத்து லட்சத்தை வங்கி பணத்தோடு வைத்துவிடுவார். வட்டியில் வந்த பங்கு இவருக்கு. முதலில் சந்தேகம் வராத மேலாளருக்கு ஒரு நாள் சங்கரநாதனின் கணக்கை எடுத்துப் பார்க்கும் போது பொறி தட்டியது. மறுநாளில் அவர் கவனித்துப் பார்க்க அவருக்கு உண்மை புரிந்தது.

    அன்று பச்சையப்பன் வீட்டிற்கு சென்றபின் இவர் வங்கியில் உள்ள மற்றவர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு அந்த பகுதி காவல் நிலையத்திற்கு புகார் செய்ய வந்தனர். அங்கே தன் வழக்கமான கண்காணிப்பு வருகைக்காக சஞ்சீவ் அந்த காவல் நிலையத்திற்கு வந்தது அவனுடைய அத்ரிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். விவரத்தைக் கேட்டு அறிந்தவன் அவர்களிடம் எழுத்து மூலமாக அனைத்தையும் வாங்கிக் கொண்டான். பின்னர் பச்சையப்பனின் முகவரி கேட்டு அறிந்துக் கொண்டு அவரின் வீட்டை நோக்கி சென்றான்.

    இதற்குள் வங்கியில் இருந்த மற்றுமொரு கருப்பு ஆடு பச்சையப்பனுக்கு விஷயத்தை சொல்லிவிட, அவர் வீட்டில் தெரிந்து விட்டது. அவருடைய பிள்ளைகள் இருவரும் "இப்படிதான் எங்களை வளர்த்தீங்களா.. இதுக்கு எங்களை அன்னைக்கே கொன்னுப் போட்ருக்கலாம்" என்று திட்டிவிட்டு தன் அன்னையையும் கூட்டிக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். இதனால் மனமுடைந்த பச்சையப்பன், மறுநாள் வரபோகும் அவமானத்தையும் மனதில் கொண்டு விஷம் அருந்திவிட்டார்.

    சஞ்சீவ் அவர் வீட்டை அடையும்போது அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை அழைத்துக் கொண்டு பிரபாவதி மருத்துவமனையில் இருந்த தலைமை மருத்துவரிடம் சென்றான். அவரிடம் விஷயத்தை கூறி அவரின் உதவியை நாடினான். முன்பு மருத்துவமனை இட தகராறில் சஞ்சீவ் உதவி புரிந்துள்ளமையால் அவரும் இப்பொழுது உதவி செய்ய சம்மதித்தார். மாடியில் மூலையில் இருந்த ஒரு அறையில் சேர்த்து நம்பகமான சில நபர்களை மட்டும் வைத்து மருத்துவம் பார்த்து அவரின் உயிரைக் காப்பாற்றினார் அந்த மருத்துவர். அங்கிருந்த மற்ற மருத்துவர்களுக்கு கூட அது தெரியாது. யாரும் அறியும் முன்னர் இரவோடு இரவாக முடித்துவிட்டனர். உயிர் பிழைத்த பச்சையப்பனும் தான் அப்ரூவராக மாறுவதாக கூறிவிட்டார்.

    மறுநாளே கமிஷனர் உத்தரவிட சங்கரநாதன் சஞ்சீவால் கைது செய்யப்பட்டான். ஆனால் அவன் ஆட்கள் சும்மா இருக்கவில்லை. அவர்கள் சாட்சியான பச்சையப்பனைத் தேடினர். சஞ்சீவின் பின்னால் இரண்டு ஆட்கள் போடப்பட்டனர். அவன் எங்கு சென்றாலும் அவனைத் தொடர்ந்து இரண்டு ஆட்கள் வந்தனர். கமிஷனர் அலுவலத்திலிருந்து அவர்களுக்கு போக்கு காட்டிவிட்டு பின்னாலிருந்து அவன் மருத்துவமனைக்கு சென்று பச்சையப்பனிடம் வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் நாளையும் அன்று அவன் வந்து கூட்டி செல்வதாகவும் சொல்லிவந்தான்.

    அமைச்சரிடமிருந்து மறைமுகமான மிரட்டல்கள் சஞ்சீவிற்கு வந்துக் கொண்டிருந்தன. அவன் அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. எப்படியாவது பச்சையப்பனை வழக்குமன்றத்திற்கு வராமல் தடுத்துவிட்டால் போதும் அவர்கள் வென்றுவிடலாம் என்று சங்கரனாதனின் ஆட்கள் நினைத்தார்கள். ஆனால் அவர் இருக்கும் இடம் தெரிந்தால் தானே..

    இத்தனை நாட்களுக்குள் சந்தேகம் வரும் அனைத்து இடங்களையும் சங்கரனாதனின் ஆட்கள் சல்லடைப் போட்டு தேடி விட்டனர். பச்சையப்பனைக் கண்டுப்பிடித்த பாடில்லை. அன்று அவர் தற்கொலைக்கு முயன்றது அவரின் பிள்ளைகளுக்கு கூட தெரியாததால் மருத்துவமனையில் இருப்பார் என்ற சந்தேகம் சிறிதும் வரவில்லை. அப்படியும் சஞ்சீவ் வந்துபோவதால் அவனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்தவர்களால் சஞ்சீவ் சாவித்திரியைப் பார்த்து செல்வது மட்டுமே அறிய முடிந்தது.

    நாளை வழக்கு நீதிமன்றத்தில் வருகிறது. இன்று சஞ்சீவ் மருத்துவமனையில் இருந்த சாவித்திரியைப் பார்க்க வந்தான். அவள் வீட்டிற்கு தெரிவிக்காமல் நண்பர்களே அவளைப் பார்த்துக் கொண்டனர். மருத்துவம் மட்டுமல்லாமல் மன நல ஆலோசகர் மூலமாகவும் பேசியதால் ஓரளவு தெளிந்திருந்தாள் சாவித்திரி.

    "எப்படி இருக்கீங்க சாவித்திரி"

    "உடம்பு தேறியாச்சு சார், இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடறதா சொல்லி இருக்காங்க.." விரக்தியாக வந்தது அவள் குரல்.

    "எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனுமே.. இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகாம நாளைக்கு ஆகணும்.. டாக்டர்ட்ட நா பேசிக்கிறேன்."

    எதற்கு என்று புரியாவிட்டாலும் குழப்பத்துடனேயே சரி என்று தலை அசைத்தாள் சாவித்திரி.

    "குட், நாளைக்கு நானே வந்து உங்களைக் கூட்டிட்டு போறேன்.. " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான். நேராக தலைமை மருத்துவரிடம் சென்றவன் ஒரு துண்டு காகிதத்தில் "tn 9576 , வைட் கலர் அம்பாசிடர்" என்று எழுதி அதை பச்சையப்பனிடம் கொடுத்துவிடுமாறு கூறிவிட்டு சென்றான். அவனைத் தொடர்ந்து மருத்துவமனைக்குள்ளும் ஆட்கள் வந்ததால் பச்சையப்பனை நேரில் பார்க்காமல் இவ்வாறு செய்தான்.

    இரவோடு இரவாக பச்சையப்பன் மருத்துவ வளாகத்தில் இருந்த tn 9576 வண்டியில் ஏறி பின்னால் இருக்கைக்கு அடியில் மறைந்துக் கொள்ள, காலையில் எதுவுமே நடவாதது போல் சஞ்சீவ் வந்து சாவித்திரியை அழைத்துக் கொண்டு அதே வண்டியில் ஏறினான். ஏற்கனவே நண்பர்கள் யாரையும் வரவேண்டாம் என்று தடுத்திருந்ததால் வேறு எவரும் வரவில்லை.

    சாவித்திரியை முன்னால் ஏற சொல்லி வண்டியை எடுத்தவன் நேராக நீதிமன்றத்திற்கு செல்ல சங்கரனாதனின் ஆட்களும் குழம்பினர், பச்சையப்பனை எப்படி எப்போது கூட்டி வர போகிறான் என்று. சாவித்திரி கேள்வியாகப் பார்க்க "கோர்ட்ல ஒரு கேஸ் மா.. தர்ஷினி உன்னை அங்கே வரசொல்லியிருக்கா.. கோர்ட்ல இருந்து ஸ்ரீனி உன்னை தர்ஷினி வீட்டுல விட்டுடுவான். கொஞ்ச நாள் அங்கேயே இரு. ஆன்ட்டி உன்னை நல்லா பாத்துப்பாங்க.. சரியா" என்றவன் நீதிமன்ற வளாகத்தில் வண்டியை நிறுத்தினான். இதற்குள் துப்பாக்கி ஏந்திய இரு காவலர் அருகில் வர பச்சையப்பன் காரிலிருந்து இறங்கினார். உடன் வந்த சாவித்திரிக்கே இது தெரியாது என்றால் சங்கரனாதனின் ஆட்களைக் கேட்கவா வேண்டும். அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாத நிலை. அவர்கள் கலவரத்துடன் உள்ளே விரைய ஏற்கனவே அங்கு காத்திருந்த ஸ்ரீனி சாவித்திரியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

    உள்ளே சென்று காக்கி நிற உடைக்கு மாறிக் கொண்டு வழக்கும் நடக்கும் இடத்திற்கு வந்தான் சஞ்சீவ். வழக்கில் பச்சையப்பன் மட்டுமல்லாது, சங்கரனாதனால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் சஞ்சீவ் கொடுத்த தைரியத்தால் சாட்சி சொல்ல, தீர்ப்பு சங்கரனாதனுக்கு எதிராக முடிந்தது. இடைத் தேர்தல் நெருங்கி வர அமைச்சராலும் ஒன்றும் செய்யமுடியாது போயிற்று.

    சங்கரனாதன் உள்ளே செல்லும் முன் "என்னையே உள்ள தள்ளிட்டல்ல, சாட்சி சொன்னவனுகளை நா ஒன்னும் பண்ண மாட்டேன்.. ஆனா எல்லாத்தையும் சாதிச்சது நீ தானே.. உன்னை சும்மா விட மாட்டேன்... ஞாபகம் வச்சுக்கோ, இன்னைல இருந்து பதினைந்தாவது நாள் நா உன்னை அடிக்கிறேன்.." என்று சீறிவிட்டு சென்றான்.

    தோளைக் குலுக்கிவிட்டு சென்ற சஞ்சீவிற்கு தெரியாது அவன் தன் ஆட்களுக்கு இட்ட கட்டளை.

    ஒரு வழக்கை வெற்றிக்கரமாக முடித்துவிட்ட சந்தோஷத்தில் வீட்டிற்கு செல்ல அங்கே ஆர்த்தியும், அருணும் திருமணத்திற்கு அழைக்க வந்திருந்தனர்.

    தோட்டத்தில் ஆர்த்தி, அருண், சாவித்திரி, தர்ஷினி நால்வரும் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க சஞ்சீவின் கார் உள்ளே நுழைந்தது.

    புன்னகையுடன் காரிலிருந்து இறங்கியவன் "வாங்க வாங்க, கல்யாண மாப்பிள்ளை அண்ட் புது பொண்ணு.." என்றவாறே அவர்களை நோக்கி வந்தான்.

    "சஞ்சீவ் அண்ணா வாங்க வாங்க.. உங்களுக்காக தான் காத்திட்டு இருக்கோம்.." என்றாள் ஆர்த்தி.

    அதுவரை சிரித்துக் கொண்டிருந்த தர்ஷினி சஞ்சீவை நிமிர்ந்தும் பார்க்காமல் "நா போய் காபி எடுத்துட்டு வந்துடறேன்.." என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

    சஞ்சீவின் பார்வை அவளையே தொடர "என்ன அண்ணா இன்னும் எதுவும் சரியாகலையா.. என்ன சொல்றா தர்ஷு" என்று கேட்டாள் ஆர்த்தி.

    "என்னமா பண்றது பிடிவாதத்துக்கு பிறந்தவளா இருக்கிறாளே என் தர்ஷு" என்று சஞ்சீவ் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, "கவலைப்படாதீங்க பாஸ்..தர்ஷு உங்க தண்டனை காலத்தை தள்ளி போடுறா.. அவ்ளோ தான்.. பட் என்னைக்கா இருந்தாலும் கல்யாணம்ங்கற சட்டத்துல உங்களை மாட்டி விட்டு ஆயுள் தண்டனை கொடுக்க தான் போறா.. என்னை மாதிரி நீங்களும் சீக்கிரம் ஆயுள் தண்டனை அனுபவிக்க ரெடியா இருங்க" என்று சொன்னான். சஞ்சீவும், சாவித்திரியும் வாய்விட்டு சிரிக்க, ஆர்த்தி அவனை முறைத்தாள்.

    "சரி சரி தாயே.. முறைக்காதே.. பாஸ், வர இருபத்தி இரண்டாம் தேதி கல்யாணம்.. சண்டேதான்.. சனிக்கிழமை ராத்திரி ரிசெப்ஷன்.. எந்த சாக்கு போக்கும் சொல்லக் கூடாது.. நீங்களும் தர்ஷுவும் ஒண்ணா வந்தா ரொம்ப சந்தோசம்.." என்று கூறி அருண் பத்திரிக்கை எடுத்து கொடுக்க ஆர்த்தியும் "ஆமா அண்ணா.. கண்டிப்பா வந்துடனும்" என்று புன்னகை பூத்தாள்.

    "அப்புறம் பாஸ்.. முக்கியமா சனிக்கிழமை ராத்திரி பச்சிலர்ஸ் பார்ட்டி இருக்கு.. மறக்காம வந்துடுங்க..ஹே சாவி நீயும் கண்டிப்பா வந்துடு.. பார்ட்டி தான் உனக்கு பழக்கம் தான.." என்று அருண் கூற, சாவித்திரியின் கண்கள் பனித்தன.

    "அப்போலாம் நீங்க, தர்ஷு, ஸ்ரீனி லாம் நைட் பார்ட்டிக்கு வரமாட்டீங்க.. நாகரீகம் தெரியாதவங்கனு உங்களை ஏளனமா நினைச்சிருக்கேன்.. இப்போ அதுக்கு உரிய தண்டனை அனுபவிக்கிறேன்.. நா பண்ணின தப்புக்கு ஒண்ணுமே அறியாத ஒரு உயிரையும் கொன்னுட்டு கொலைக்காரியா நிக்கிறேன்" என்று மனம் கசந்து கூற சஞ்சீவ் "பார்ட்டிக்கு போற பொண்ணுங்க எல்லாரும் கெட்ட பொண்ணுங்களும் கிடையாது.. வீட்ல இருக்கிற பொண்ணுங்க எல்லாரும் நல்ல பொண்ணுங்களும் கிடையாது.. உன்னை அன்னைக்கு நாகரீக மோகம் மனசைக் கெடுத்து மறைச்சிருந்தது.. எப்போ நீ உன் தப்பை உணர்ந்து அதுக்காக வருத்தப்படுறியோ அன்னைக்கே கடவுள் உன் தப்பையெல்லாம் மன்னிசிடுவார். அதனால குழம்பாம வாழ்க்கையே இனிமே தெளிவா எதிர்கொள்ளணும் சரியா.." என்று அறிவுரைக் கூறினான்.

    கண்ணை துடைத்துக் கொண்டு "சரி அண்ணா" என்று நிமிர, "போச்சு போ.. பிரியா, ஆரத்திய தொடர்ந்து நீயும் என்னை அண்ணனா ஆக்கிட்டியா.. வர வர தங்கச்சிகளோட எண்ணிக்கை அதிகமாய்ட்டே போகுது பா.. எல்லாரும் சுத்தி நின்னு 'அண்ணன் ஒரு கோவில் என்றால்' னு ராகம் பாடாதது தான் குறை" என்று பொய்யாக அலுத்துக் கொண்டான் சஞ்சீவ். அவன் அலுத்துக் கொண்ட விதத்தில் சாவித்திரியும் சிரிக்க அருணும் ஆர்த்தியும் புன்னைகயோடு விடைப் பெற்று சென்றனர்.

    நாட்கள் ஓட அருண் ஆர்த்தியின் திருமண நாளும் வந்தது. பிரியா, தர்ஷினி, சாவித்திரி மூவரும் இரண்டு நாட்கள் முன்பே ஆர்த்தியின் வீட்டிற்கு சென்று விட, ஸ்ரீனி அருணின் வீட்டிற்கு சென்றான். வரவேற்பு நாளன்று அலுவலகத்திலிருந்து மேலும் சில நண்பர்கள் வந்து சேர திருமண மண்டபமே நண்பர்களின் கலாட்டாவினால் களைக் கட்டியது. சரியாக வரவேற்பிற்கு வந்த சஞ்சீவ் தர்ஷினியை ஏறிட்டும் பார்க்கவில்லை.

    மணமக்களுக்கு வாழ்த்துக் கூறியவன் ஸ்ரீனியுடனேயே சுற்றிக் கொண்டிருந்தான். சாப்பிடும் போது இவர்கள் அருகில் அமர்ந்தவன் பிரியா, ஸ்ரீனி, சாவித்திரியிடம் அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிட்டான். மறந்தும் தர்ஷினியிடம் பேசவில்லை. தர்ஷினிக்கு அவனின் புறக்கணிப்பு மனதை சுட்டது. அவன் செல்லும் இடமெல்லாம் அவள் கண்கள் பின்தொடர்ந்தன. என்ன வேலையாய் இருந்தாலும் அவள் கவனம் அவன் மீது இருந்தது. என்ன செய்கிறான்.. எங்கு செல்கிறான் என்று.

    வரவேற்பு முடிய ஆர்த்தியுடன் சென்று அவளை அறையினுள் விட்டுவிட்டு வெளியில் வந்த தர்ஷினியின் கண்கள் சஞ்சீவை தேடின. அவனை காணாமல் மண்டபத்தின் வெளியே அவள் வந்தாள். அந்த வளாகத்தினுள் ஒரு பக்கத்தில் மண்டபமும் மறுபக்கம் விருந்திற்கான அறையும் இரண்டிற்கும் நடுவில் தோட்டமும் அமைந்திருந்தன.

    மண்டப வாசலில் நின்று பார்க்கும் போது அந்த பக்கம் விருந்து அறையில் நடந்த கலாட்டாக்கள் தெரிந்தன. பச்சிலர்ஸ் பார்ட்டி என்ற பெயரில் சில பேர் கையில் மதுக் கோப்பையுடனும், மது அருந்தாதவர்கள் குளிர்பானத்துடனும் நின்றிருந்தனர். நடுநாயகமாக அருணை வைத்து அனவைரின் கிண்டலும் அதைத் தொடர்ந்து சிரிப்பொலியும் மண்டப வாசலை எட்டிக் கொண்டிருந்தது. அருணும், ஸ்ரீனியும் கையில் கோப்பை இல்லாமல் பேசிக் கொண்டிருந்தனர்.

    இங்கே இருந்து பார்த்த தர்ஷினிக்கு வேறு யாரும் கண்ணுக்கு தெரியவில்லை சஞ்சீவைத் தவிர. சஞ்சீவை தவிர என்பதை விட அவன் கையில் இருந்த மதுக் கோப்பையைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை என்றே சொல்லலாம். 'சஞ்சீவ் கையில் மதுக் கோப்பையா' தர்ஷினிக்கு வெறி ஏறியது.

    மேகம் ஓடும்..

    அனு
     
    2 people like this.
    Loading...

  2. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    nice update...
    sankaranathan enna seyya poran????
    arun aarthi marriage la en sanjay dharshu kooda pesa mattengran...
    kai la vera drinks... dharshu tension aaga vera enna panuva!!
    sanjay adi dhan unakku..
     
    1 person likes this.
  3. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    super anu... how are u?
    avan enamo plan poduran... waiting to see
     
    1 person likes this.
  4. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Hi Anu...

    Yepdi maa irukka?


    Hey Sanjeev.... darsh pakkaradhu therinju thaan nee kaiyil antha koppaya yeduththiyaa... pathuppa avan inuum yedhavadhu murukkikka pooraa...

    apram antha arasiyaviyathi (apampa intha maadhiri irukkavanunga yella viyadithaan) yenna panna porano? darsh avan kayila mata poralaa? nee kaapaathiduva but paavam paa ava?

    oru jodi marriage vanduduchchu... lasta jodi serndhu firsta marriage panikittanga mattha jodi yellam yeppa serradhu?
     
  5. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi Anu..
    very nice update da..
    villan kitta dharshu maatta koodathu nu than sanjeev avala avoid pannana?
    dharshu vin hysteria(regarding drunkens) porathuku yetho plan panni than sanjeev dharshu parkura mathiri drinks glass ooda irukuran nu ninaikuren..
    lets wait & c :)
    -devi.
     
    1 person likes this.
  6. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Devi,

    How is your health now????????
    Indha dharshu romba avasara padaraa....... paavam sanjeev marubadiyum darshu ta thittu vaanga poraan nu nenakaraen...... endha paien naavadhu konjam carefulla nadandhukalaam...... adha vittutu kaila ................. emmmmm waiting to know, what will happen...sanjeev ku enna aabathu varum.eppadi thappikka poraan...... more questions........... waiting for the reply, in your next post........

    Vasupradha.S
     
    1 person likes this.
  7. upfsabari

    upfsabari IL Hall of Fame

    Messages:
    3,562
    Likes Received:
    1,918
    Trophy Points:
    308
    Gender:
    Female
    supera poitu iruku anu.. plz late pannama next part podunga..
     
    1 person likes this.
  8. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Hi Sugan...

    Happy to see u again...

    Thanks ma commentsku..

    sankaranathan enna panna poran... dharshu and sanjeev epdi sera poranga.. innum rendu episodela therinjidum pa..

    keep reading and share your comments da..

    Anu
     
  9. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    mmm enna plan seekirame sollidren pa..

    now ok ma.. oralavu udambu theridichi...:)

    romba thanks ma unga ellaroda wisheskum..

    Anu
     
  10. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    hi Sowmy..

    Romba naal kalichi meet panrom pa.. epdi irukeenga..
    enaku ippo healthu konjam ok..

    Dharshu innum murikika porala.. avanga epdi sera poranganu adutha epdisodela parkalam pa..

    mm amam pa intha mathiri alunga nattuku viyathi than pa.. eppo ithu sariyagumo therila..

    Anu
     

Share This Page