1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திருவானைக்கா

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Dec 26, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    கா வீற்றிருக்கும் அன்னையையே
    கோ முதல் பலரும் வணங்கிடுவர்.
    ஆ முதலான விலங்கினமும்
    கைம்மாவும் கூடப் பணிந்திடுமே!

    அப்பனும் இனிதே உறைகின்றான்
    அப்புத் தலமாம் அவ்விடத்தில்!
    அப்புறம் எனும் சொல் சொல்லாது
    அப்பொழுதே வழங்கும் அத்திருத்தலத்தில்.

    மாவிலங்குகளிலே ஒன்றான
    ஆனையும் முன்பே தினந்தோறும்
    மாதவனின் தங்கை பதியான
    ஈசனை நீராட்டிப் பணிந்ததுவாம்.

    சீலம் நிறைந்ததோர் நற்செயலை
    சிலந்தியும் கூடச் செய்தாலும்,
    சீர் பலவும் பெற்றுச சிறந்ததனை
    செங்கணானின் மூலம் ஊரறியும்.

    அன்னை அணிந்த நற்தாடங்கம்,
    திருமணத் தடையைப் போக்கிடுமே!
    அன்னையின் எழில் கொஞ்சும் முகமோ
    நம் கவலையை அறவே நீக்கிடுமே!

    குறிப்பு:
    1 . கா - சோலை [திருவானைக்கா] 2 . கோ - அரசன் 3 . ஆ - பசு 4 . கைம்மா - யானை
    5 . அப்பன் - ஜம்புலிங்கேஸ்வரர் 6 . அப்புத் தலம் - பஞ்சபூதத் தலங்களுள் இது நீர்த் தலம்.
    7 . சிலந்தி, செங்கணான் - சிலந்தியே, சிவலிங்கத்தின் மேல் வெயிலும், குப்பையும் படாது வலை கட்டியதால், மறுபிறப்பில் செங்கணான் எனும் சோழ வேந்தனாகப் பிறந்தது. இந்த அரசனே முதன்முதலில் திருவானைக்காவல் கோயிலைக் கட்டியதாக வரலாறு.
    8 . தாடங்கம் - காதணி. ஆதிசங்கரர் இதை பிரதிஷ்டை செய்ததாகக் கூறுவர். இதை தரிசித்தால் திருமணத் தடை நீங்கும் என்பது ஒரு நம்பிக்கை.
    -ஸ்ரீ
     
    3 people like this.
  2. sadhu72

    sadhu72 Gold IL'ite

    Messages:
    1,721
    Likes Received:
    364
    Trophy Points:
    165
    Gender:
    Female
    அருமையான பதிவு. அற்புத விளக்கங்கள் .
    கா & கைம்மா பொருள் அறிந்து கொண்டேன். நன்றி.
     
  3. kkmalar

    kkmalar New IL'ite

    Messages:
    23
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    நீண்ட நாட்களுக்குப் பிறகு "பழைய வகை" கவிதை படித்த திருப்தி. நன்று.
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation Sadhana. -rgs
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation KKMalar. Wrote a few like this long back. Happy to see that it is well received. -rgs
     
  6. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அருமை அருமை ஸ்ரீ..
    கலக்கிட்டீங்க..
    என் மனதுக்கு நெருக்கமான கோவில் அது..உங்கள் வரிகளில் அதன் சிறப்பைப் படிக்கையில் மனம் சிலிர்க்கிறது..
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks a lot Prana. Very happy to see that your works are published in Sangap Palagai as well. Congratulations! -rgs
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Very many thanks to Vasupradha and ShruthiSP for liking this post. -rgs
     
  9. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    மதிப்பிற்குரிய rgs ,
    பல ஆண்டுகளுக்கு முன், பாங்காய் தரிசித்தேன் அன்னை அகிலாண்டேஸ்வரியை......
    அந்த அற்புத அனுபவத்திற்கு புத்துணர்வு ஊட்டியது உம் கவிதை......
    நன்றிகள்....!!
     
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks again, for your nice feedback and continuous motivation Bhargavi. -rgs
     

Share This Page