1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் என்பதே நீயல்லவா - 8

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Dec 21, 2011.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நான் என்பதே நீயல்லவா - 8







    உத்ராவின் முகம் சரியில்லை என்பதை பார்த்தவுடனே தெரிந்து கொண்ட சரஸ்வதி இவளுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என்று யோசித்துகொண்டே காபி கலந்து வந்து கொடுத்தார். குடித்தவள் அவரை கட்டிகொண்டாள். தினமும் தன்னை கட்டிகொண்டு கதை பல அளக்கும் தன் மகள் இன்று ஆறுதலுக்காய் தலைசாய்ந்தது போல் இருந்தது அவருக்கு. ஆதரவாய் தலைவருடி


    "என்ன டா முகமே சரியில்ல?"


    "அதெல்லாம் ஒன்னும் இல்ல மா கொஞ்சம் டையட்"


    "இல்ல சொல்லுமா"என்று அவர் தூண்ட



    "விஜி கூட சண்ட மா" என்றாள் வருத்துடன்


    "ஏன் சண்ட போட்டீங்க?"


    "சும்மா விளையாட்டுக்கு பேசினத சீரியசா எடுத்துகிட்டு திட்டீடா மா"


    "இதுக்கு போய் யாராவது இப்படி உம்முனு இருப்பாங்களா?...........ம்..... அவளே நாளைக்கு வந்து பேசுவா பாரு" என்று சமாதானபடுத்திவிட்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்.அவருக்கு இவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற நிம்மதி. உத்ராவும்அதிலிருந்து வெளிவந்தவளாக



    "எங்க மா கீர்த்தி? வர வர அவ இருக்குற இடமே தெரியமாடேங்குது?"


    "அவள பத்தி தான் உன் கிட்ட பேசனும்னு இருந்தேன் டி"


    "ஏன் மா? என்னாச்சு?


    அவளைப்பற்றிய அவரது எண்ணங்களை முழுவதுமாக கூறியவர் கவலையில் ஆழ்ந்தார்.


    " அம்மா கவலைபடாதீங்க நான் பாத்துகறேன், ஒன்னும் இருக்காது மா எதாவது டென்ஷனா இருக்கும் "


    "அவளுக்கு என்ன டென்ஷன்?"


    "ஏன் exams நல்லா எழுதலையேங்கற டென்ஷனா கூட இருக்கலாம் இல்ல மா"


    "என்னமோ டி , எனக்கு மனசே சரியில்ல"

    "அம்மா கவலைபடாதீங்க நான் பாத்துகறேன்" என்று உறுதிகூறி அவரை அமைதி படுத்திவிட்டு கீர்த்தியின் அறைக்கு சென்றாள்.

    கீர்த்தியோ இது ஏதும் அறியாதவளாக தன்னுள் போராடிக்கொண்டிருந்தாள்."அவனை பார்த்தால் தான் மனம் தடுமாறுகிறது இந்த செமஸ்டர் லீவில் பார்க்காமல் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்று எண்ணியிருந்தவளுக்கு இந்த ஒருவாரம் போவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.


    எங்கு திரும்பினாலும் அவனே வந்து நின்றான், எப்போதும் அவள் நினைவை அவனே ஆக்ரமித்திருந்தான். தான் இந்தளவுக்கு அவனை காதலிக்கிறேனா? என்று அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.அவனும் என்னை காதலிக்கிறானா? என்று குழப்பமாகவும் இருந்தது. இன்னொரு பக்கம் தனக்கு முழு சுதந்திரம் அளித்த பெற்றோருக்கும், தன் மேல் நம்பிக்கை வைத்து அவனுடன் பழகவிட்ட தமக்கைக்கும் துரோகம் செய்கிறோமோ என்ற உறுத்தலாகவும் இருந்தது. இப்படி அவனை தைரியமாக காதலிக்கவும் முடியாமல், காதலே வேண்டாம் என்று தூக்கி எறியவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தவளுக்கு தன்னை சுற்றி நடப்பதை பார்க்க நேரம் எங்கே?.

    கீர்த்தியை தேடி வந்தவள் நடப்பதேதும் அறியாமல் எங்கோ வெறித்துகொண்டிருந்தவளை பார்க்க மனம் வலித்தது காட்டிகொள்ளாமல் அவளருகில் வந்து

    "ஏய் என்னடி நீ இருந்தும் வீடு அமைதியா இருக்கு?"

    அப்போது தான் அவளை கவனித்தவள் " ம் என்ன சொன்ன?"

    "சரியா போச்சு, என்னடி ஆச்சு உனக்கு வீட்டையே ரெண்டு பண்றவ கொஞ்ச நாளா ரொம்ப அமைதியா இருக்க" என்ன முயன்றும் குரலில் கவலைஇழையோடுவதை தடுக்க முடியவில்லை

    அவள் கண்களில் தெரிந்த பாசமும் குரலில் இருந்த கவலையும் அவளை என்னவோ செய்ய அமைதியாக இருந்தாள். உத்ரா அவள் தலை வருடி

    " என்ன டா?"

    "உத்தி நீயும் அம்மாவும் வீணா கவலபடுறீங்க ஒன்னும் இல்ல டி"

    "கீர்த்தி எங்களுக்கு தெரியாதா நீ எப்படி இருப்பனு பொய் சொல்லாத டி"

    "இல்ல உத்தி exam சரியா எழுதல டி அதான் பயமா இருக்கு"

    அவள் சொல்வது பொயென்று தெரிந்தும் சமாதானபடுத்தி அவளை இப்போதய கவலையிலிருந்து மீட்டெடுக்க முயன்றாள்.

    "அதனால என்ன கீர்த்தி அடுத்த செமஸ்டர்ல எழுதிட்டா போச்சு cheer up baby"

    அவளும் இவளுக்காக சகஜமானாள்(அல்லது நடித்தாள்). சிரித்தபடியே

    "office எல்லாம் எப்படி இருக்கு?"

    "ம் நல்லா இருக்கே"

    "எதாவது சொன்னாங்களா?"

    "இல்ல" குழப்பத்துடன்

    "அந்த company ரொம்ப strong டி"

    "ஏன் அப்படி சொல்லற?"

    "இல்ல நீ போய் கூட அந்த company இன்னும் close ஆகாம இருக்கே அதான் சொன்னேன்"

    "ஏய் உன்ன............... நில்லுடி ஒடாத......."

    சரஸ்வதியிடம் வந்து சரணடைந்தவள் " அம்மா காப்பாத்துங்க மா....."

    "அம்மா விடுங்க மா அவள......"

    "என்னடி பண்ண ?"

    "உண்மைய தான் மா சொன்னேன்......"

    "என்ன உண்மை?"

    "அத நான் சொல்லரேன்... நான் போய் கூட அந்த COMPANY முடலையாம் அதனால அந்த கம்பனி ரொம்ப STRONGனு சொல்லறா மா"

    "விடு உத்தி அவளுக்கே தெரியாம உண்மைய சொல்லிட்டா தெரியாம தான விடு"

    "அம்மா........."

    அன்று முழுவதும் இருவரும் அவளை வாரிகொண்டே இருந்தனர் இருந்தும் அவள் சந்தோஷமாகவே உணர்ந்தாள் அவளின் கவலையை நினைக்க நேரமில்லாமல் இருந்தாள். மல்லிகார்ஜுனும் வந்து விட அவரும் இவர்களுடன் சேர்ந்து உத்ராவை வார ஆரம்பித்துவிட்டார் குடும்பமே சந்தோஷமாக இருந்தனர். ஆனால் அது எத்தனை நாளுக்கு நீடிக்கும் என்று தான் தெரியவில்லை.
     
    3 people like this.
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சந்தோஷமாக இருந்தனர் என்றதோடு நிறுத்தியிருக்க கூடாதா மொழி......அது எத்தனை நாளைக்கு என்ற துணைத் தகவலை சொல்லி எங்களுக்கு கிலி உண்டு பண்ண வேண்டுமா?
    அருமையா எழுதுறீங்க மொழி.....உங்கள் முதல் கதை என்ற நினைப்பே எங்களுக்கு வரவிடாமல் எழுதுகிறீர்கள்! :thumbsup
     
  3. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Honey dear... good going.... manasula ulladha veliya udaney sona ella kulapamum pogum anaa nama makkal adha thaana seiya maatanga
     
  4. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    thanks deva pa,

    சும்மா அதுல ஒரு சந்தோஷம் தான் ஹா...ஹா....
    நன்றி தேவா பா..
    தொடர்ந்து படிங்க பா..........
     
  5. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நன்றி அகிலா பா,

    உண்மை தான் அகி பா ஆனா யாரு அத செய்யறாங்க....
    தொடர்ந்து படிங்க பா.......
     
  6. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hai ma...
    vikky sikkarama vandhu keerthi kooda pesa vainga......
    viji kooda vandha chinna sandai ke uthra romba sogamanadhu , avangloda deep frndship ah kamikkudhu.... superb ma.....
     
  7. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    தேனு..

    கதை சூப்பரா போகுது. நடையும் ரொம்ப இயல்பா பக்கத்திலிருந்து கதை கேட்பது போல இருக்கு.

    கலக்குறமா.. கிட்ட இருந்தா கைகுலுக்கியிருக்கலாம். பரவாயில்ல. virtual handshake பண்ணிக்கலாம்.
    கதையின் மேல் நல்ல ஆளுமை இருக்கிறது.
    குட். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.
     
  8. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Story is going very nice ma. Enna aachu Thean neega romba busyah Yaanai pasikku sola kathir madiri kutti episode podareengale..........Kadhi periya episodeah daily pogungapa......(its a request).....
     
  9. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஹாய் தேனு..

    மன்னிச்சுக்கங்க பா.. லேட்டா வந்ததற்கு.. சூப்பரா போகுது பா கதை.. உத்ராவுக்கும் ஜோடி ரெடி.. விஜிக்கும் ஜோடி ரெடி, கீர்த்திக்கும் ஜோடி ரெடி.. பட் எல்லாரும் எப்படி சேர போறாங்க.. காத்திருக்கிறோம்..

    அனு
     
  10. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female

    thanks sunganya pa.....
     

Share This Page