1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அக்னிக்குஞ்சு

Discussion in 'Stories in Regional Languages' started by prana, Dec 15, 2011.

  1. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அந்த நீண்ட பயனத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க யாரேனும் வரமாட்டார்களா என்ற ஏக்கம் தெரிந்தது அத்தனைப் பிரயாணிகளின் கண்களிலும்.உள்ளத்தில் இருந்த வெறுமை அவர்களின் கண்களின் வழியே முகத்தில் படர்ந்துக் கிடந்தது.கிடைத்த வாகனங்களில் தொற்றிக் கொண்டும்,கால்நடையாகவும் ஊர்ந்துக் கொண்டு இருந்தார்கள் அந்த மக்கள்.அவர்களின் பயணத்தில் எந்த ஒரு அவசரமும்,வேகமும் இல்லை.அத்தனை ஒரு நிதானம் தெரிந்தது.நிதானம் என்று சொல்வதை விட ஒரு வித சலிப்பு.இன்னும் சொல்லப் போனால் வேகமாய் நடக்கவோ, இயங்கவோ தேவையான தெம்பு அவர்கள் மனதிலும் இல்லை, உடலிலும் இல்லை.இரண்டுமே ஏகப்பட்ட காயங்களை சந்தித்து இருந்தன.மற்றவர்களிடம் சொல்லி ஆறுதல் தேடவும் அங்கு வழியில்லை.ஏனெனில் அங்கு இருக்கும் அனைவரும் அதே துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள்தாம்.அழுதுக் கொண்டிருப்பவர்களிடம் சென்று நானும் அழுதுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதில்தான் என்ன லாபம் இருக்கப் போகிறது?

    கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பித்தார்கள் இந்தப் பயணத்தை.தங்கள் இருப்பிடங்களில் இருந்து கிளம்பும்போது இருந்த மனநிலை வேறு.இப்போது இருப்பதோ வேறு.அன்று, எங்குப் போகப் போகிறோம்?என்ன செய்யப் போகிறோம்?மீண்டும் நாம் வாழ்ந்த வீட்டையும்,ஊரையும் பார்ப்போமா என்று ஆயிரமாயிரம் கேள்விகள் துளைத்துக் கொண்டிருந்தன ஒவ்வொருவர் மனதிலும்.இன்று தங்கள் ஊர்களுக்கு,தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.இப்போது ஒரே ஒரு கேள்விதான் பெரும்பாலானவர்கள் மனதில்.'போய் என்ன செய்யப் போகிறோம்?'.

    உண்மைதான் அவர்கள் கேள்வியில் அர்த்தம் இல்லாமல் இல்லை.இந்த பிரயாணிகளில் பாதிப் பேர் தங்கள் உறவுகளையும்,ஏறத்தாழ அனைவரும் தங்கள் உடமைகளையும் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்.அப்படி இருப்பவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியதுதானே?

    அவர்கள் கடந்து செல்லும் வழியில், எதோ ஒரு தேனீர் கடையிலிருந்த வானொலிப் பெட்டியில் இருந்து அந்தக் குரல் காற்றில் தவழ்ந்து வந்து அவர்கள் காதில் விழுகிறது.அவர்கள் வெறுக்கும் அந்தக் குரல் சொல்லும் செய்தியை கேட்க கஷ்டப்பட்டுத் தங்கள் காதுகளைக் கூர்த் தீட்டிக் கொள்கிறார்கள்.

    இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே சிறப்புரை ஆற்றிக் கொண்டிருந்தார்.

    '..பதட்ட சூழல் தணிந்துவிட்ட நிலையில், இதுகாரும் முள் வேலியில் 'பாதுகாப்பாக' வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்.தமிழ் மக்களுக்கு சேவைகள் ஆற்றவும்,அரசின் பல சிறப்புத் திட்டங்களை அவர்களுக்குப் பயனுள்ளதாக ஆக்க வேண்டியும், ராணுவத்தினரை அவர்கள் இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.இனி மக்கள் எந்த வித பயமும் இன்றி அமைதியாக வாழ வழி வகை செய்யப்படும்...."

    இன்னும் அவர் வேறு எதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்.கேட்டவர்களுக்கு அதற்கு மேல் கேட்க பொறுமையும் இல்லை, விருப்பமும் இல்லை.'மக்களுக்கு சேவை செய்ய ஆயுதம் தாங்கிய ராணுவம் எதற்கு?' இந்தக் கேள்வியை ஏன் யாருமே அவரிடம் கேட்கவில்லை என்றுதான் அவர்களுக்குத் தெரியவில்லை.

    அவர் பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருந்ததாய் சொல்லப் பட்ட மக்களில் ஒரு பகுதியினர்தான் இப்போது தங்கள் ஊரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.அங்கு மக்கள் பாதுகாப்பாய் வைக்கப் பட்டிருந்தார்களோ இல்லை, வெகு பாதுகாப்பாய் அனுப்பி வைக்கப் பட்டிருந்தார்கள்.

    அந்த மக்கள் கூட்டத்தில் சிலரை உங்களுக்கு அறிமுகப்படுத்திவைக்கிறேன்.அவர்கள் துன்பத்தில் பங்குக் கொள்ளமுடியாவிட்டாலும்,அவர்கள் கஷ்டங்களைத் துடைக்க வழி வகை செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அவர்கள் வேதனைகளையாவது என்னவென்று அறிந்துக் கொள்வோமே!அறியாமை ஒரு சாபக்கேடு இல்லையா?

    இதோ இந்த மக்கள் கூட்டத்தின் நடுவில், ஒடுங்கிய கண்களும்,தளர்ந்த நடையுமாய் சென்றுக் கொண்டிருக்கும் மகிம்மா, தன் இருபது வயது மகனைத் தொலைத்த ஆற்றாமையில் நடந்துக் கொண்டிருக்கிறாள்.திலீபன் என்று அழகான பெயர் வைத்து, ஒரே மகன் என்று ஆசையைக் கொட்டி வளர்த்த மகன் இப்போது இந்த பூமியில் இல்லை.புலிப் படையில் ஆயுதம் தாங்கிப் போர் புரிந்ததாய்க் குற்றம் சாட்டப்பட்டு, இழுத்து செல்லப்பட்ட மகன், உயிரற்ற உடலாகத்தான் திரும்பி வந்தான்.அந்த உடல் மீதுப் படுத்துக் குலுங்கி அழத்தான் முடிந்தது அவளால்.

    இரண்டுக் கண்களை இழந்து, மனைவியின் கையைப் பிடித்து நடந்துக் கொண்டிருக்கிறாரே சேகரன், அவர் நிலைமை இதை விடக் கொடுமையானது.போர்க்காலத்தில் பயணத்தின் பாதி வழியில், போர் விமானகளுக்கு பயந்து பங்கர்ஸ்(பதுங்கு குழியில்) தஞ்சமடைந்தார்கள் மக்கள்.அதில் இவர்கள் குடும்பமும் ஒன்று.அவருடைய பத்து வயது மகன் ரவீந்திரன், சிறுநீர் கழிக்க வேண்டி குழியை விட்டு வெளியே வரவும், எறிகணை ஒன்று அவன் மேல் விழவும் சரியாய் இருந்தது.உடல் சிதைந்து ரத்தம் சொட்ட அவன் இறந்தக் காட்சியைத் தாயும் தந்தையும் பார்த்த அவலம் மிகக் கொடியது.அதே விபத்தில்தான் சேகரனின் கண்களும் பார்வையை இழந்துவிட்டன.

    இப்படி அங்கு இருக்கும் ஒவ்வொருவரிடமும் உயிரைப் பதைப் பதைக்க செய்யும் ஒரு கதை இருக்கிறது.வன் கொடுமைக்கு ஆளானப் பெண்கள்,நகத்தில் ஊசியால் குத்தப்பட்டு சித்திரவதை அனுபவித்த ஆண்கள்,நிர்வாணப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் என்று பாதிக்கப்பட்டோர் ஆயிரமாயிரம்.

    அனைவருக்கும் கடைசி கடைசியாய் சந்திரன் வந்துக் கொண்டிருந்தார்.அவர் மனதில் ஏகப்பட்ட சிந்தனைகள்.எதோ, அங்கு போய்க் கொண்டிருக்கும் மக்களுக்குத் தான் ஒரு பாதுகாப்பு வளையம் அமைப்பதுப் போல் கடைசியாய் நடந்துக் கொண்டிருந்தார்.சந்திரனுக்கு வயது ஐம்பதுக்கும் மேல் ஆகிவிட்டது.ஆனால் அவர் தோற்றம் அது அறுபதைத் தாண்டிவிட்டதாய் சொல்லியது.மனதில் இருந்த சோர்வும்,இயாலாமையும் அவருடைய உடலையும்,அவருடைய தன்னம்பிக்கையையும் வெகுவாய் தளர்த்திவிட்டிருந்தன.தன்னம்பிக்கைப் போன மனிதன் வெறும் பொம்மைக்கு சமானம்.அவனால் எதுவும் யோசிக்க முடிவதில்லை,எந்தக் காரியத்தையும் தொடங்க முடிவதில்லை,எதுவுமே செய்ய இயலமுடிவதில்லை;தாழ்வு மனப்பானமையில் உழன்றுக் கொண்டிருப்பதைத் தவிர.

    ஆனால் இவரது அவ நம்பிக்கையில் சுயநலம் சிறிதும் இல்லை.தம் மக்களுக்காய்,தம் மக்களின் அங்கீகாரத்திற்காய் எதுவுமே தன்னால் செய்ய முடிவதில்லையே என்ற இயலாமை கொடுத்த அவ நம்பிக்கை அது.அவர் விடுதலை இயக்கத்தில் சேர்ந்த போது ஒரு இருபது வயது இருக்கும்.தலைவரின் எழுச்சி மிகு உரைகளைக் கேட்டு அவருடைய நோக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு, தன்னையும் இயக்கத்தில் ஈடுப்படுத்திக் கொண்டவர் அவர்.தன் கொள்கைகளுக்கு உறவுகள் எந்தவிதத்திலும் தடையாய் இருக்கக் கூடாது என எண்ணி, குடும்பத்தை விட்டுப் பிரிந்தார்.திருமணம் என்ற வார்த்தையை மறந்தும் கூட அவர் உதடுகள் உச்சரித்ததில்லை.முதல் முதலில் யாழ்ப்பாணப் போரில் பங்கேற்றார்.அதற்குப் பின் எத்தனையோ களங்கள் பார்த்தாகிவிட்டது,எத்தனையோ பேரை சாய்த்தாகிவிட்டது.அப்படிப்பட்ட ஒரு சண்டையில்தான் தன் ஒரு காலையும்,ஒரு கையையும் இழந்து இன்று தன் கையுடன்,தன்னம்பிக்கையும் இழந்து நிற்கிறார்.தன்னுடைய இழப்பிற்குப் பின்னும் கூட இயக்கத்தில்தான் இருந்தார்.தன்னுடைய மூளையை ஆயுதமாய்ப் பயன்படுத்தும் (இயக்கத்தின்)பத்திரிக்கைத் துறையில் இருந்தார்.ஒரு குள்ள நரியின் வஞ்சக சூழ்ச்சியால் சிங்கள ராணுவப்படையிடம் காட்டிக் கொடுக்கப்பட்டார்.

    அந்த சித்திரவதை முகாமில் எத்தனையோ கொடுமைகளை அனுபவித்தார்.ஒரு முறை அவருடைய மலத்தை வழுக்கட்டாயமாக வாயில் திணிக்க சிங்கள வீரர்கள் முற்பட்டபோது,தன் தலையைப் பிடித்திருந்தவனின் மர்மப் பிரதேசத்தில் தன் ஒரு காலால் உதை விட அவன் சுருண்டு விழுந்தான்.அந்த ஒரு அடிக்கு அவருக்குக் கிடைத்த அடிகள் என்னவோ ஏராளம்தான்.ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பின் அங்கிருந்தவர்கள் அவரிடம் ஒரு அடி தள்ளியே இருந்தார்கள்.

    போருக்குப் பின், ஐ,நா சபை உட்பட உலக நாடுகள் விடுத்த கண்டனங்களுக்கு இணங்க, இலங்கை அரசு முகாமில் இருந்த வயதானவர்கள்,நோயாளிகள்,பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் விடுவித்தது.அப்போது அங்கிருந்து பிடிவாதமாய் வெளியேற மறுத்துவிட்டார்.அனைத்து மக்களும் விடுதலை அடையும் நாளில்தான் வெளியேறுவேன் என திட்டவட்டமாய் கூறினார்.இப்போது அவருடைய முகாமில் இருந்து அனைத்து மக்களும் வெளியேற்றப்பட அவரும் அவர்களுடன் தன் ஊருக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்.

    ஒரு வழியாய் அவர்கள் ஊரை வந்து அடைந்தார்கள்.ஆனால் வந்தவர்களுக்கு ஒரு பெரும் குழப்பமும்,அதிர்ச்சியும் அங்குக் காத்துக் கிடந்தது.'வந்தது தங்கள் ஊர்தானா?' என்ற பெரும் சந்தேகம்.என்ன ஒரு கொடுமை?அவர்கள் வீடு இருந்த இடங்கள் எல்லாம் வெறும் மயானம் போல் இப்போது காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.அவர்கள் தெருவின்(தமிழ்) பெயர் மாற்றப்பட்டு சிங்களத்திலும்,ஆங்கிலத்திலும் புதுப் புது பெயர்கள் மின்னிக் கொண்டிருந்தன.தடம் மாறி வந்துவிட்டோமா?இப்படி ஒட்டுமொத்தமாக எல்லோருமா தடம் மாறுவோம்?'

    ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.சற்று தூரத்தில் சில மரங்கள் தெரிய, அங்கு சில பேர் டென்ட் போட்டு இருப்பதுத் தெரிந்தது.மெல்ல அந்தக் கூட்டம் அவர்களை நோக்கி முன்னேறியது.அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஊன்றுக் கோலை வேக வேகமாய் இயக்கி, முன்னுக்கு சென்றார் சந்திரன்.

    டென்ட் போட்டிருந்தவர்கள் அவர்களுடைய மக்கள் தான்.சொந்தங்கள்,அக்கம்பக்கத்தினர்,வேறு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்கள்.

    "என்ன நடக்கிறதிங்கே?நம் மக்களுடைய வீடுகள் எல்லாம் எங்கே?" அவருடைய குரலில் பதட்டத்தைத் தாண்டிய கோபம் தெரிந்தது.

    கூட்டத்தில் ஒரு குரல் ஒலித்தது.

    "என்ன சொல்ல?வடக்கிலும்,கிழக்கிலும் தானே நம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.அதனால்தானே இந்தப் பகுதிகளை நாம் தமிழ் தாயகமாய் கேட்கிறோம்.இதைத் தானே தமிழ் ஈழமாக்குவோம் என்று முரசறைகிறோம்.இந்தப் பகுதிகளில் சிங்களவர்களைப் பெரும்பான்மை ஆக்கிவிட்டால்..?இப்படி ஒரு பேச்சுக்கு வழியே இருக்காது இல்லையா?நாம் இருந்த இடங்களை எல்லாம் ராணுவத்திற்கும்,ஊர்ப்படைக்கும் வேண்டுமென்று வாங்கிக் கொண்டுவிட்டார்கள்.இந்த இடங்கள் ராணுவ வீரர்களுக்கு அவர்கள் பெயரில் எழுதிக் கொடுக்கப்பட்டுவிடும்.அதற்குப் பின், அவர்கள் அந்த இடங்களை சிங்களவர்களுக்கு விற்று விடுவார்கள்.இதுதான் அவர்கள் திட்டம்.நம் பத்திரங்களைக் கொண்டுப் போய் காண்பித்ததற்கு செல்லாது என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.இனி இங்கு வாழ இயலாது.வேறு எங்கு செல்வது என்ற வழியையும் நாம் அறியவில்லை."

    அவர் துக்கமாய் சொல்லி முடித்தார்.இருக்க இடம் இல்லாததுப் போல் ஒரு கொடுமை வேறு இருக்க முடியாது.அடுத்த நாள் எங்கு தூங்குவது,எங்கு சமைப்பது என்ற கேள்விகள் ஏற்படுத்தும் பயங்கரம் எழுத்தில் வடிக்க இயலாதது.

    சந்திரனுக்குக் கோபம் அழுகையைக் கொண்டுவந்தது.அவரால் எதுவுமே பேச முடியவில்லை.'எத்தனை ஒரு அநீதியை விதைக்கிறார்கள்.நாம் எல்லாம் வாழவே தகுதியற்றவர்களா?இத்தனை நாட்களாய் இத்தனைப் பேர் தங்கள் சுகங்களை இழந்து,உயிரைத் துறந்து செய்த தியாகங்கள் எல்லாம் பொய்யாய்ப் போய்விட்டனவா.இந்த ஈழ மக்களின் எதிர்காலம் உண்மையாகவே இருண்டுவிட்டதா?என்ன செய்ய?இத்தனைப் போராட்டங்களுக்கும்,இத்தனை வலிகளுக்கும் அர்த்தம் இல்லாமல் போய்விட்டனவே?இனி எங்கள் வாழ்க்கை கேள்விக் குறிதானா?மலையுடன் மோதிய மடுவென ஆகிவிட்டோமா?இம்மக்களைக் காப்பாற்ற யாருமே வர மாட்டார்களா?'
    மனதில் எண்ணங்கள் விரிந்துக் கொண்டிருந்தன அவருக்கு.

    "இன்னும் கூட கட்டுப்பாடுகள் தகர்ந்தப் பாடில்லை.தமிழ்க் கோவில்களில் மணி அடிக்கக் கூடாது என்றும் ,கோவில் திறக்கப்படக் கூடாது என்றும் அரசாணை வந்துள்ளது"
    கூட்டத்தில் ஒருவர் சொல்லிக் கொண்டிருக்க, திடீரென ஒரு சிறுவனின் உற்சாகக் குரல் அவர்கள் அனைவரையும் அவனை நோக்கித் திரும்ப செய்தது.

    "எல்லோரும் வாருங்கள்.அங்கு ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது.சீக்கிரம் வாருங்கள்."

    சென்றுப் பார்த்த அத்தனை முகங்களிலும் ஒரு சின்ன மின்னல் கீற்று.

    'வீழ்வது வெட்கமில்லை.வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கம்.சத்தியத்தின் வழியில் புனிதப் போர் நிகழ்த்தி, தங்கள் இன்னுயிரை பொது நலனுக்காய் காணிக்கை ஆக்கிய மாவீரர்களின் வழி நடப்போம்.சுதந்திர தமிழீழம் அமைப்போம்'

    சந்திரன் மெல்ல அந்தக் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்தார்.அந்த வாசகங்கள் அங்கிருந்தோர் கண்களில் தீக்கனல்களை உண்டுப் பண்ணியிருந்தன.இத்தனை நேரம் இருந்த சோர்வு இருந்த இடம் தெரியாமல் போனதுப் போல் அவர்களுக்குள் ஒரு வெறி;அந்தக் கோபத்தை,எழுச்சியை அவர்கள் கண்கள் காட்டிக் கொடுத்தன.அங்கிருந்த இளைஞர்களிடம் திடீரென ஒரு முறுக்கு.நெஞ்சை நிமிர்த்திர் நின்றிருந்தார்கள்.அந்த மாற்றம் சந்திரனுக்கு ஒரு புதுத் தெம்பைத் தந்தது.

    தான் மிகவும் மதிக்கும் அந்த மகாகவியின் வரிகளை மனதில் ஓடவிட்டார்.

    'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்..
    அதை ஆங்கொரு காட்டினிற்
    பொந்திடை வைத்தேன்..
    வெந்துத் தணிந்தது காடு..
    கனல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்று உண்டோ..
    தத்தகிட தத்தகிட தித்தோம்.."

    தன் ஒருக் காலை வைத்து அவர் குதிக்க ஆரம்பித்தார். வாய் மட்டும் 'தத்தகிட தத்தகிட தித்தோம்.' என்று பாடிக் கொண்டிருந்தது.அங்கிருந்தவர்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    பக்கத்திலிருந்த பெருமாள் கோவிலிலிருந்து மணி ஓங்கி அடிக்கப்பட்டது
     
    3 people like this.
  2. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Prana,
    expressed feelings nicely.
     
  3. manjukps

    manjukps IL Hall of Fame

    Messages:
    1,738
    Likes Received:
    2,349
    Trophy Points:
    300
    Gender:
    Female
    Hi Prana,

    You brought the happening very realistically. As you said we could not do anything to those people other than praying.

    Actually in my children's school, last year in a campaign they collected 3 containers of rice, dresses, blankets etc. But they had great difficulty in delivering that into the country. They had to undergo very severe formalities.

    Finally it got delivered only after 10 months. God know what happened to the perishables. We all felt so sad on hearing this.

    Regards
    Manjukps
     
  4. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    நம்மை போன்ற மனிதர்கள் இலங்கையில் படும் அவலங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை....

    "சுதந்திரத்தின் தேவை இருக்கும் வரை, போராட்டங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும்.... " என்பதை ரொம்ப அழகா சொல்லியிருகீங்க பிரனா...

    வாழ்த்துக்கள்....!!!
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    போராட்டாத்தால் ஏற்படும் அக்னியில் மறுபடியும் மறுபடியும் எரிந்துக் கொண்டிருப்பவர்களும் அவர்கள் தான்.உலகின் ஏதாவது ஒரு மொழியில் இது நடந்துக்கொண்டே தான் இருக்க போகிறது.
     
  6. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    ப்ரனா பா,

    அவங்க படுற கஷ்டத்த நான் பட்ட மாதிரி இருந்தது பா....இத படிச்சப்ப.....
    அழுகையே வந்துடுச்சு......... பாவம் அவுங்க........:cry::cry::cry:
     
  7. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female

    Thank u Priya...
     
  8. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    I too heard these kinds of stories sometime back.But thanks God, finally it reached them anyway.

    Whenever I hear/read abt these people, my heart feel the immense pain.I really blame myself on my inability for not doing anything for the victims.Hope everything would be better soon.

    ANd thanks a lot for nominating this thread..
     
  9. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாமல், அங்கு வாழவே முடியாத ஒரு சூழலில் அந்த மக்கள் என்னதான் செய்ய முடியும்..
    ஒரு சக மனிதன் அங்கு துடித்துக் கொண்டிருக்கையில் , நம்மால் வேதனை மட்டும்தான் அடைய முடிகிறது

    நன்றி நித்யா உங்கள் பின்னூட்டத்திற்கு...
     
  10. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    இந்தக் கொடுமைகள் இனியேனும் அடங்கட்டும்..
     

Share This Page