1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் என்பதே நீயல்லவா - 6

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Dec 13, 2011.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    [I][U]நான் என்பதே நீயல்லவா - 6.[/U][/I]







    அன்று உத்ராவிற்கு பிறந்த நாள் , காலையில் எழுந்தவள் பிரம்மித்து போனாள். அறை முழுக்க வண்ண காகிதங்களால் அலங்கரிக்கபட்டிருந்தது.கீர்த்தி,சரஸ்வதி,மல்லிகார்ஜுன் முவரும் குளித்து தயாராகி அவள் முன் நின்றிருந்தனர்.முவரும் ஒரே குரலில்


    "HAPPY BIRTHDAY " என அவளால் பேசமுடியவில்லை அந்தளவு இன்ப அதிர்ச்சி புரிந்துகொண்ட அவர்கள் சிரித்தனர்.மல்லிகார்ஜுன் அவள் அருகில் வந்து தலையை மிருதுவாக தடவி



    "சீக்கரம் கிளம்பு டா , கோவிலுக்கு போய்டு நான் ஆபிஸ் போகனும்"


    "இன்னைக்கு Sunday தான பா"


    "ஆமா மா ஆனா ஒரு பெட்டி போகவேண்டியது இருக்கு டா"


    "என்ன பா நீங்க " சினுங்கினாள்


    "செல்லம் ல "


    "சரி சீக்கரம் வந்துடனும்"


    "ம் .... நீ ஹொம் ல இருந்து வரதுகுள்ள வந்துடுவேன், அப்புறம் சினிமா போலாம் சரியா?"


    "ம் சரி" குளிக்க சென்றாள். தயாராகி வந்தவளை பார்த்து முகம் மலர்ந்தனர் பெற்றோர்.அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவள் புது துணியையும் பெற்றுகொண்டாள். உத்ராவிடம் இது ஒரு பழக்கம் பிறந்தநாளுக்கு எடுக்கும் துணியை மட்டும் அன்றுதான் பார்ப்பாள் பிடிக்காவிட்டாலும் சந்தோஷமாக அணிந்து கொள்வாள். அன்று அவர்கள் கொடுத்தது ஒரு புடவை இளம் நீல நிறத்தில் பிங்க் நிற பூக்களோடு கூடிய டிசைனர் புடவை. அணிந்து வந்து காண்பித்தாள்.
    கீர்த்தி ஒடி வந்து கட்டிகொண்டாள்.


    "உத்தி ரொம்ப அழகா இருக்கே டி ,இன்னைக்கு உன்ன பாக்கறவன் கதி அவ்வளவு தான்"


    "ஏய் சும்மா இருடி , அம்மா அப்பா காதுல விழுந்துட போகுது"


    "அதுக்கு தான சொல்லறது , ஏய் உண்மைய சொல்லு டி யாரையாவது select பண்ணிடியா"


    "அடிவாங்க போறடி" ஒரு விரல் நீட்டி மிரட்ட



    "ஆனா பாவம்டி அவன்"


    " உன்ன...."


    "ஆ... அடிக்காதடி வலிக்குது "

    "அந்த பயம் இருக்கட்டும்"

    கீர்த்தி சிரித்து கொண்டே மேஜை மேலிருந்த பரிசை எடுத்து வந்து"HAPPY BIRTHDAY உத்தி" என்றாள்.


    "THANKS செல்லம்" என்றபடி பிரித்தாள் அதில் ஒரு பெண் அளவில்லா மகிழ்ச்சியோடு கைநிறைய கோப்பைகளுடன் இருந்தாள்.



    "இது மாதிரி நீயும் எல்லாதிலையும் வெற்றி பெற்று, அளவில்லா சந்தோஷத்தோட இருக்கனும் கா"


    "தாங்கஸ் டா குட்டிமா" என்று அணைத்து கொண்டாள்.


    அனைவரும் பக்கதிலுள்ள கோவில் சென்று வந்தனர்.மல்லிகார்ஜுன் கம்பனிக்கு கிளம்பினார். உத்ரா விஜி வீட்டிற்கு செல்ல தயாரானாள்.



    "நீயும் வாயேன் கீர்த்தி"


    "இல்லடி நீ விஜியக்கா கூட போ,நான் அம்மாவுக்கு Help பண்ணறேன்"


    "சரி அம்மா , கீர்த்தி பை " வண்டி எடுத்துகொண்டு புறப்பட்டாள்.

    விஜியின் வீட்டிற்கு வந்து கதவை தட்டியவள் திறக்காமல் போகவே மறுமுறை தட்டிவிட்டு கைபிடியை பிடித்துகொண்டு திரும்பி சாலையை பார்த்துகொண்டிருந்தாள்.அந்த பக்கத்திலுருந்து கதவு வேகமாக திறக்கபட தடுமாறி திறந்தவரின் மேல் பின்பக்கமாய் சாய்ந்தாள். தன்னை தாங்கியது ஒரு ஆண் என்று மட்டும் தெரிந்தது , விஜியின் அப்பாவாய் தான் இருக்கும் என்று நினைத்துகொண்டு நின்று

    "சாரி மாமா" என்று திரும்பினாள். ஆனால் அங்கு நின்றிருந்தது கண்ணன் இல்லை சரண். உத்ராவை பார்த்தவுடன் ரசிக்க ஆரம்பித்திருந்தான்.அவளோ யாரிவன் ? எப்படி இங்கு வந்தான்? அய்யோ இவன் மேல் விழுந்து விட்டேனே , இதில் சாரி மாமா வேறு உத்தி உனக்கு அறிவே இல்லடி என்று தன்னையே திட்டி கொண்டிருந்தாள்.அத்தனை எண்ணங்களையும் அவள்முகம் பளிங்காய் காண்பிக்க அதனை ஒரு புன்னகையுடன் ரசித்து கொண்டிருந்தான் சரண்.தடுமாற்றதுடன் அவனை பார்த்து

    "யாரு நீங்க"

    "என் வீட்டுக்கு வந்து என்னையே யாருனு கேட்கறீங்களே நீங்க யாரு?"

    "உங்க வீடா? ........... விஜி இருக்காளா?"

    "அவளா ம்........ வெளில போய்டா"

    "எங்கனு தெரியுமா"

    "இருங்க வந்ததும் கேட்டு சொல்லறேன்"

    அவனை முறைத்து கொண்டே விஜியின் செல்லிற்கு தொடர்பு கொண்டாள். கொஞ்சமாய் முடிஎடுத்து center clip இட்டிருந்தாள் , நெற்றியில் சின்ன பொட்டிட்டு சந்தன கிற்றுடன் அழகாய் புடவையில் இருந்தவளை கண் இமைக்காமல் பார்த்தான் சரண். செல்லின் சினுங்கள் உள்ளிருந்து வர அவனை எரித்துவிடுவது போல் முறைத்து கொண்டே "விஜி" அழைத்தாள். அதே சமயம் செல்லின் சினுங்கள் கேட்டு விஜியும் வர

    " ஏ ஏன் டி அங்கயே நிக்குற உள்ள வா"

    "வழிய விடறீங்களா?" என்றாள் சரணிடம்.

    ஒரு புன்னகையோடு வழிவிட்டான். விஜியின் அருகே வந்தவள்

    "யாருடி இவரு நீ இல்லனு பொய் சொல்லறாரு"

    "சரண் டி என் அண்ணன், சும்மா சொல்லிருப்பான் வா" என்று அழைத்து சென்றாள்.

    "என்னடி இன்னும் கிளம்பாம இருக்க?"

    "sorry டி, சரண், பெரிப்பா , பெரிம்மா எல்லோரும் காலைல தான் வந்தாங்களா அதான் பேசிட்டு இருந்தேன் , ரெண்டு நிமிஷத்துல கிளம்பிடரேன் டி , அப்பறம் அம்மா கிச்சன்ல இருக்காங்க போய் பாரு , அம்மா கேட்டாங்க"

    " சரி நீ சீக்கரம் கிளம்பு டி" என்று கிச்சனை நோக்கி நடந்தாள்.

    "என்ன அத்த என்ன ஸ்பெஷல் வாசன தூக்குது"

    "ம் கேசரி டா உனக்கு பிடிக்கும்னு விஜி சொன்னா அதான் செய்யறேன், HAPPY BIRTHDAY மா"

    "THANKS அத்த" என்று காலில் விழுந்தாள்.

    "சித்தி இதெல்லாம் அநியாயம், எனக்காக செய்யறேனு தான சொன்னீங்க இப்ப இவங்க கிட்ட அவுங்களுக்குனு சொல்லறீங்க" என்ற படி பிரபாவதியின் அருகில் வந்து நின்றான் சரண்.

    "சரண் உனக்கு பாதி , உத்ராவுக்கு பாதி"

    "எனக்கு முழுசா தான் வேணும்"

    அவன் பேசியதை காதிலையே வாங்காமல் "அத்த மாமா எங்க?" என்றாள்.

    "மேல இருப்பாரு மா"

    "சரி அத்த, நான் மாமாவ பார்த்துட்டு வரேன்"

    "சரி "என்று சரணிடம் திரும்பியவர்"என்ன கேட்ட முழுசா வேனுமா?"

    "சும்மா கேட்டேன் சித்தி விளையாட்டுக்கு"

    "என்ன விளையாட்டோ போ" சரணை பற்றி தெரியுமாதலால் ஏதும் சொல்லவில்லை.

    கண்ணனை தேடி சென்றவள் அங்கு அவருடன் பெருமாளும் ராஜாத்தியும் இருப்பதை கண்டு தயங்கி நின்றாள்.அவளை பார்த்த ராஜாத்தி

    "யாரு மா நீ?" என அவளை பார்த்தனர் மற்ற இருவரும். கண்ணன்

    "உத்ரா வா மா , இவ விஜி friend" இருவருக்கும் வணக்கம் தெரிவித்தவள்

    "மாமா கூப்டீங்களாம் விஜி சொன்னா"

    "ஆமா அங்க shelf ல ஒரு box இருக்கும் எடுத்துட்டு வா"

    "ம்" சென்று பக்கத்து அறையில் இருந்ததை எடுத்து வந்து கொடுத்தாள்.

    "இந்தா இது உனக்கு தான் பிரிச்சு பாரு "பிறந்தநாள் வாழ்த்துகள் டா"

    "எதுக்கு மாமா இதெல்லாம் உங்க wishesஎ எனக்கு போதும்"

    "ஏன் நான் கொடுத்தா வாங்க மாட்டியா?"

    "ஐயோ !அப்படியேல்லாம் இல்ல மாமா" பிரித்தாள் அது ஒரு பேனா அழகாயிருந்தது.

    "ரொம்ப நல்லா இருக்கு மாமா thanks"

    பெருமாளும் ராஜாத்தியும் தம் பங்கிற்கு வாழ்த்து சொன்னார்கள்.அவர்களுக்கு நன்றி சொன்னாள். கீழே வந்து பிரபாவதியிடம் சொல்லிவிட்டு, விஜியை கூப்பிட சென்றாள்.விஜி தயாராகி கையில் பரிசுடன் நின்றிருந்தாள்.

    "MANY MORE HAPPY RETURNS OF THE DAY உத்தி" பரிசை கொடுத்தாள். அதை வாங்கியவள்

    "Thanks விஜி" என்று பிரித்தாள் அதில் இரு பெண்கள் ஒன்றாய் சிரித்து கொண்டிருந்தனர்.

    "இது மாதிரி நாம பிரியவே கூடாது டா"என்று நெகிழ்ச்சியுடன் சொன்னவளை அணைத்து

    "கண்டிப்பா பிரிய மாட்டோம் டா" என்றாள்.

    சரண் இவர்களின் பின்னாலில் இருந்து"sentiment தாங்கல பா சாமி"என்றான்.

    "டேய் போடா சும்மா வம்பிழுத்துகிட்டு"சரண் உத்ராவிடம் வந்து

    "MANY MORE HAPPY RETURNS OF THE DAY" என்றான்

    "thanks"

    "அத சிரிச்சுக்கிட்டே சொல்லலாமே"

    அவனை முறைத்து கொண்டே விஜியை அழைத்துகொண்டு கிளம்பினாள்.அவள் போவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தான் சரண்.ஹொம் சென்றுவிட்டு வந்து கீர்த்தி,சரஸ்வதி,உத்ரா,மல்லிகார்ஜுன் அனைவரும் சினிமா சென்று வந்தனர்.விஜி சரண் குடும்பத்தினர் வந்திருப்பதால் தான் வரவில்லை என்று சொல்லிவிட்டாள்.விக்கி காலையில் வந்து உத்ராவிற்கு வாழ்த்துசொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

    அடுத்த நாள் காலையில் உத்ராவின் அலுவலகத்தில் ஒருவர் அலுவலகத்திலிருந்து விடைபெறவிருப்பதால் அவருக்கு send off பார்ட்டி ஏற்பாடு செய்ய பட்டிருந்தது.அதில் அனைவரும் கலந்து கொண்டனர். அங்கு தனியாக அமர்ந்திருந்த உத்ராவிடம் சென்றான் ரிஷி.​








     
    2 people like this.
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அப்பாடா....உத்ராவுக்கு சரண் கிடைத்துவிட்டான்! ரிஷியை நிம்மதியா தூக்கி கொடுத்துவிடலாம் விஜிக்கு....அப்படித்தானே மொழி?! :) தமிழ் பட வில்லன் ரேஞ்சுக்கு எதையும் யோசிச்சு ஜோடிய பிரிச்சுடாதீங்க :drowning
     
    1 person likes this.
  3. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hai ma...
    saran oda entry epponu romba yosichan...
    uthra voda birthday annaiku avanga meet pannadhu super...
    rishi ya sikkarama viji ya pathi visarikka vainga...
     
  4. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    super saranuku uthrava?

    im rishi uthra kita ena sola porano?
     
  5. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Very Nice update Then.
     
  6. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    ஹா ....ஹா..... தேவா பா என்ன வில்லி ரேஞ்சுக்கு கொண்டுபோய்டீங்களே!
    நன்றி தேவா பா.....
    தொடர்ந்து படிச்சு பின்னுட்டம் தாங்க பா........
     
  7. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நன்றி சுகன்யா பா.....
    தொடர்ந்து படிச்சு பின்னுட்டம் தாங்க பா........
     
  8. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    அடுத்த பகுதில சொல்லிடரென் பா......
    நன்றி ரம்யா பா.......
    தொடர்ந்து படிச்சு பின்னுட்டம் தாங்க பா........
     
  9. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    thanks priya pa,
    keep reading & give a valuable comments.
     
  10. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    yes honey.... ippdiye kondu po villan villi nu yaraiyavadhu konduvandha appram dev madam ulla nulanjuduvaanga !!!!! nice dear the story got clear picture of the pairs
     

Share This Page