1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் என்பதே நீயல்லவா - 5.

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Dec 12, 2011.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நான் என்பதே நீயல்லவா - 5.




    உத்ரா முதலில் முகம் திருப்பியது கோபத்தில் அல்ல ஏதாவது கேலியாக சொல்லிவிடுவானோ எதற்கு வம்பு என்று தான்,அவனே வந்து
    மன்னிப்பு கேட்கவும் தான் அதை மறந்துவிட்டதாக கூறினாள்.
    "ஐ ம் ரிஷி"

    "ஐ ம் உத்ரா" கைகுலுக்கி கொண்டனர்.

    "sorry,அன்னைக்கு கொஞ்சம் டென்ஷன் அதான் "

    "ஐயோ விடுங்க அத நான் மறந்துட்டேன், சரி......... அப்பறம் பார்கலாமா?"

    "ம் சரி வேலைய பாருங்க"

    ரிஷிக்கு அவள் அதை மறந்துவிட்டதாக கூறவும் சந்தோஷம் தாங்கவில்லை, அப்பறம் பார்கலாம் என்றவுடன் இன்னும் கொஞ்சம் பேசவேண்டும் என்ற ஆவலை அடக்கி தன் இடத்திற்கு சென்றான். எப்படியும் இங்கு தானே இருக்க போகிறாள் பேசிகொள்ளலாம் என்று சமாதானமடைந்தான்.

    மாலை விக்கி,விஜி,உத்ரா முவரும் ரயில் நிலையத்தில் சந்தித்தனர். முவரும் அன்றைய நடப்புகளை பற்றி பகிர்ந்து கொண்டனர். அப்போது உத்ரா ரிஷியை பார்த்தையும் , அவன் மன்னிப்பு கேட்டுகொண்டதையும் சொன்னாள்.விஜிக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

    "நீ ஏன் டி அவன்கிட்ட பேசுன?"

    "தானா வந்து பேசுரவன் கிட்ட பேசாம எப்படி டி இருக்க முடியும்?"

    "அவன் அன்னைக்கு பேசினது எல்லாம் மறந்து போச்சா?"

    "இல்ல டி கோவத்துலனு சொன்னான் டி"

    " சொன்னா? கோவத்துல என்ன வேனும்னாலும் பேசலாமா?"

    ".........."

    " என் கிட்ட பேசாத போடி"

    "ஏய் என்ன டி"

    "பேசாதனா பேசாதா" தன் தோழியின் கோபம் தன்னிடம் கொஞ்ச நேரத்திற்கு மேல் நில்லாது என்று தெரிந்ததால் அமைதியானாள்.விக்கியிடம் திரும்பினாள்.

    "என்ன டி இதெல்லாம்"

    மெல்லிய குரலில் "அவளே வந்து பேசுவா பாரு"

    "சரி வீட்டுக்கு வந்துட்டு போடா"

    "ம்ம்ம்....... காலைல வரேனே"

    "இப்பவே வாயேன் டா"

    "ம் ........ இல்ல ஆன்ட்டி .. அங்கிள்?"

    "ஓன்னும் சொல்ல மாட்டாங்க"

    "அப்ப சரி....." சந்தோஷமாக (கீர்த்தி ய பாக்கலாம் ல அதான் முகத்துல பல்பு எரியுது)

    "நீயும் வாயேன் விஜி அம்மா பாக்கனும்னு சொன்னாங்க"

    "அத்தைகாக வரேன்" முறுக்கிக் கொண்டாள்.

    வண்டி நின்ற பின் பேசியபடியே வீடு நோக்கி பயணமானார்கள். வீட்டில் கீர்த்தியும்,சரஸ்வதியும் மட்டுமே இருந்தனர்.மல்லிகார்ஜுன் இன்னும் வந்திருக்கவில்லை.

    "அம்மா இது விக்கி என் கூட படிச்சானே? ஞாபகம் இருக்கா?"

    "ம் ஆமாம், வா பா,எப்படி இருக்க?"

    "நல்லா இருக்கேன் ஆன்ட்டி , நீங்க எப்படி இருக்கீங்க?"

    "ம் நல்லா இருக்கேன் பா, விஜி நீ ஏன் மா அங்க நிக்குற வா"

    "ஒன்னுமில்ல அத்த"

    "உக்காரு பா காபி கொண்டு வரேன்"

    "சரி ஆன்ட்டி"

    முவரும் சமையலறையினுள் நுழைந்தனர். விக்கியின் கண்கள் கீர்த்தியை தேடின.வீட்டிற்குள் நுழைந்தபோது வந்து "வாங்க" என்று அழைத்தவள் பின் கண்களுக்கு அகப்படவில்லை.அவளை காணவே வந்திருந்தவனுக்கு தான் ஏமாற்றமாய் போனது.உத்ரா அன்னையிடம் அனைத்தையும் கூறி அவனிடம் பெற்றோரை பற்றி கேட்கவேண்டாம் என்று எச்சரிக்கை செய்தாள்.காபியோடு வந்தார்கள்.
    "எடுத்துக்க பா"

    "தாங்கஸ் ஆன்ட்டி, காபி ரொம்ப நல்லா இருக்கு"

    "விக்கி உனக்கு பெருந்தன்மை ஜாஸ்தி பா"

    "ஏன் ஆன்ட்டி அப்படி சொல்லறிங்க"

    "பின்ன உத்தி போட்ட காபிய கூட நல்லா இருக்குனு சொல்லறியே"

    முவரும் நகைக்க உத்ரா "அம்மா உங்கள.......... அப்பா வரட்டும் சொல்லி தரேன்"

    "யார சொல்லி தரபோற செல்லம்" என்று கேட்ட படி உள்ளே வந்தார் மல்லிகார்ஜுன்.

    "அப்பா.........அம்மாவ பாருங்க பா நான் போட்ட காபி நல்லாவே இருக்காதுனு சொல்லறாங்க, நீங்க குடிச்சு பார்த்து சொல்லுங்க பா"என்றாள் சினுங்கியபடியே

    "அய்யயோ செல்லம் அப்பா பாவம் ல விட்டுடுமா, நான் நாளைக்கு ஒரு எலிவாங்கிட்டு வரேன் அத வைச்சு டெஸ்ட் பண்ணலாம், என்ன விட்டுடு மா"

    "அப்பா நீங்களும்................பேசாதீங்க போங்க பா"

    இருவரையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருந்தான் விக்கி.அதை பார்த்த சரஸ்வதி

    "சரி சரி அப்பாவும் மகளும் கொஞ்சினது போதும்" என்றும் மகளிடம் கண்களால் சைகை செய்தார்.

    அப்போது தான் விக்கியை பார்த்த மல்லிகார்ஜுன் கண்களால் யார் என்று மகளிடம் வினவ அனைத்தையும் காதில் கிசுகிசுத்தாள் மகள்.

    " வா பா நல்லா இருக்கியா?, வா மா விஜி"

    "நல்லா இருக்கேன் அங்கிள்"

    "ஆமா , நம்ம சின்ன வாண்டு எங்க ?"

    "அவளுக்கு தல வலியாம் பா அதான் இல்லனா அவதான என்ன வம்பிழுக்கறதுல முதல்ல நிப்பா"

    "அப்படியா, நீ ஏன் மா silenta இருக்க ,என்ன சண்ட ரெண்டு பேருக்குள்ள"

    "அப்படியேல்லாம் இல்ல மாமா"

    "சரி சரி ரெண்டு பேரும் சாப்பிட்டு தான் போகனும்"

    "அம்மாவும் அப்பாவும் தேடுவாங்க மாமா"

    "கண்ணன் கிட்ட நான் சொல்லறேன்"

    "சரி மாமா"

    வீடே கல கல வென்றிருந்தது.இளையவர்கள் முவரின் கிண்டல்களும் பெரியவர்களின் சிரிப்பு வீட்டை நிறைத்தது.கீர்த்திக்கு தான் எதுவும் ரசிக்கவில்லை.
    பிறர் அறியாமல் அவனின் அவனை பார்த்து கொண்டிருந்தாள் அவள்.ஏனோ தன் மனம் அவன் முன்பு மட்டும் தடுமாறுகிறது ,இது வரை இல்லாத மாற்றங்கள் என்னிடம் ஏன்? அவனை பார்த்து கொண்டே இருக்க சொல்கிறதே மனம் ஏன்? அவனின் ஏக்க பார்வைகண்டு உத்தி மேலும், அப்பா மேலும் தான் கோபம் கொண்டது ஏன்? மனதினுள் எழுந்த எண்ணங்களோடு போராடி கொண்டிருந்தாள் அவள்.

    உணவு முடிந்து அவரவர் வீட்டிற்கு சென்றனர் இருவரும் .போகும் போது விக்கியை அழைத்து சரஸ்வதியும்,மல்லிகார்ஜுனனும் "உனக்கு யாருமில்லைனு நினச்சுகாத நாங்க இருக்கோம், நீயும் இந்த வீட்டுல ஒருத்தன் தான் சரியா?" என்றனர். அவனால் பதில் கூற முடியவில்லை. அமைதியாய் கிளம்பி சென்றான்.
    அப்போதும் அவள் வெளி வரவில்லை.

    இப்படியே ஒரு வாரம் ஒடிற்று. முதல் நாள் அவனை நிமிர்ந்து பார்த்தோடு சரி அதன் பின், அவனோடு பயணிக்கும் நேரத்திலும் புத்தகத்தை முகத்திற்கு முன் விரித்து வைத்து கொள்வாள், விஜியோ,உத்ராவோ எதாவது கேட்டால் பரிட்சை என்பாள். விட்டிலும் முன் போல் அவள் தன்னிடமும் தாயிடமும் வம்பிழுப்பதோ,பேசுவதோ கூட கிடையாது உண்மையாகவே பரிட்சை தான் காரணமாக இருக்கும், தேர்வு முடிந்த பின் சரியாகி விடுவாள் என சமாதானம் அடைந்தாள் உத்ரா. விக்கி அவளை பிறர் அறியாமல் பார்பதே போதும் என்று நிம்மதியடைந்தான்.

    உத்ரா ரிஷியை பற்றி சொன்னதிலிருந்து அவனின் நினைவு அதிகமாய் தாக்கியது விஜிக்கு அவனை எப்படியாவது பார்த்து திட்ட வேண்டும் என்று துடித்தாள்.விஜி அன்று அப்படி சொன்னதிலிருந்து ரிஷி தவிர்க்க ஆரம்பித்தாள் உத்ரா. ரிஷியும் தினமும் அவளிடம் பேச எத்தனையோ முயன்றும் அவனால் முடியவில்லை.எப்படியாவது அவளிடம் சீக்கரம் பேச வேண்டும் என்று முடிவுசெய்தான்.

    தானாக அந்த வாய்ப்பு அமையும் என்று அவன் நினைக்கவில்லை. ஆனால் அவன் நினைத்தது நடந்ததா பார்போம்...................












     
    2 people like this.
    Loading...

  2. zingy

    zingy Local Champion Staff Member Platinum IL'ite

    Messages:
    1,115
    Likes Received:
    791
    Trophy Points:
    215
    Gender:
    Female
    was waiting for this . very much disappointed with the size :( but a neat and cute episode :)
    )
     
  3. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi thaen,

    Neenga romba suspense thareenga........ Pls next post la sollidunga, Rishi manasula viji dhaan nu.........
    Super narration. ellaa charactersyum first story laye azhagaa handle panreenga.... chamathaa ippadiye continue pannanum. My Best Wishes!!!!!!!!!!!

    Vasupradha.S
     
  4. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hai ma...
    indha update layum rishi manasuka enna nu neenga sollala....
    waiting to know..
    and very interesting.. super ma
     
  5. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Then,

    Eppa than suspenseah break pannuveenga, waiting eagerly for that.
     
  6. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Hai Thenu..

    super pa..
    Rishi pavam pa.. intha uthrava konjam pesa sollunga..
    apram viji enna thaan ninaikira.. ava villi illaiya.. seekiram sollunga pa
    apram namma keerthi, vikkiyum supera sight adikiranga.. parakalam eppo vai thiranthu pesikranganu..
    jollyana familya azhaga solliyirukeenga pa..
    waiting for the next update..

    Anu
     
    1 person likes this.
  7. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Madam nice episode. Expecting the next soon
     
  8. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    hai thaenmozhi
    oru vaaram IL varala ...athukkulla puthu kathai ellam ....sema kalakkal pa athukkulla itthanai episodes aaaaaaaaaa ??????? innum padikkaladaa ..padicchuttu comment poduren thaenu :) :)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இப்போதைக்கு யாரு ரிஷியின் மனதில் என்பதை சொல்ல மாட்டீர்களா மொழி? சொல்லவே மாட்டீர்களா?? என்ன ஒரு கொலைவெறி இந்த பொண்ணுக்கு
     
    2 people like this.
  10. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    thanks zingy pa,

    keep reading & give ur valuable comments pa
     

Share This Page