1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓடும் மேகங்களே - 23

Discussion in 'Stories in Regional Languages' started by Anu86, Dec 11, 2011.

  1. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஓடும் மேகங்களே - 23


    முகமூடியிட்டேன் முகத்திற்கு..
    மனமூடி தேடுகிறேன் மனதிற்கு..
    என் ஐம்புலன்களும் உன்னைத்தேட
    என்று வருவாய் கண்ணா
    கண்களுக்கு விருந்தாகவும்
    காயங்களுக்கு மருந்தாகவும்..

    அவன் முன்னால் தன் மன பலவீனத்தை மறுபடி காட்டிவிடக் கூடாது என்று தான் அவள் ஆற்றில் குதித்தாள். தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணத்தில் அல்ல. ஆனால் இருபதடி தூரத்தில் முக்கூடல் சங்கமம் இருக்க ஆற்றின் வேகத்திற்கு தன் நீச்சலில் ஈடுக்கொடுக்க முடியாமல் தண்ணீரோடு போராடினாள். ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் சுழிகளும் அதிகமாக இருக்கும். அதில் மாட்டினால் மீண்டு வெளியில் வருவது கடினம்.


    ஒரு கணமே திகைத்து நின்ற சஞ்சீவ் அடுத்த கணம் தண்ணீரில் குதித்தான். லாவகமாக நீந்தி அவள்புறம் வந்து அவளை இழுத்துக் கொண்டு வந்து தரையில் போட்டான். தட்டு தடுமாறி எழுந்தவள் சஞ்சீவ் கொடுத்த அறையில் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு மறுபடி விழுந்து விட்டாள்.


    "அறிவில்லை.. எதுக்குடி தண்ணில குதிச்ச" என்று அவன் கோபமாக கத்த அவளுக்கோ அவன் கொடுத்த அடியில் காதுக்குள் நொய் என்ற சத்தம் மட்டுமே கேட்டது. அவள் பதில் பேசாமல் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க பக்கத்தில் வந்து "கேக்றேன்ல.. எதுக்குடி குதிச்ச..என்னைப் பிடிக்கலனா பிடிக்கல சொல்லிட்டு போக வேண்டித்தானே.. அதுக்கு உயிரை விடுவியா... சாகனுமா நீ.. ஏண்டி இப்படி பண்ணின.. இனி நானா வந்து உன்கிட்ட பேசினா சொல்லு.. " என்று அவள் தோளைப் பிடித்து உலுக்க, அவள் உன்னிடம் சரணடைந்துவிடுவேன் என்று பயந்து தான் குதித்தேன் என்றா சொல்லவா முடியும். தலையை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.


    சஞ்சீவிற்கு ஆத்திரமாக வந்தது, நேசத்தை சொன்னதுக்கே சாக துணிந்து விட்டாளா.. அவள் மேலும் மேலும் அமைதியைக் கடைப் பிடிக்க ஆத்திரத்தில் மற்றுமொரு கன்னத்திலும் அறைந்துவிட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டான்.


    இருவரும் அன்றிரவு உறங்கவே இல்லை. அவன் மனம் புரிந்தும் பிடிவாதத்தால் அவளும், அவள் மனம் புரியாமல் அவனும் இரவு தூங்காமல் விடியலுக்காய் காத்திருந்தனர்.


    அந்த வருடம் பரீட்சை முடிந்த அன்று சஞ்சீவை தூரத்தில் பார்த்தது தான். அதன் பிறகு இரண்டு வருடம் அவனைப் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு கோவில் கொடைக்கும், பொங்கல் விளையாட்டு விழாவுக்கும் அவள் அவனை எதிர்பார்த்தாள். ஆனால் அவன் வரவே இல்லை. தினேஷ் அவன் நண்பர்களைப் பற்றிக் பேசினால் உற்று கவனித்தாள் சஞ்சீவைப் பற்றி பேசுவானோ என்று. ஆனால் அவன் மூலமாக எதுவும் தெரிந்துக் கொள்ளமுடியவில்லை. அவன் நினைவுகளை மனதில் போட்டு புதைக்க முயற்சித்தாள். ஆனாலும் முடியவில்லை, அவளின் பிடிவாதம் ஒருபுறம் வளர்ந்து நிற்க மறுபுறம் அதற்கு போட்டியாக அவன் மீதான காதலும் வளர்ந்தது. ஒவ்வொரு முறை அவன் வீட்டைக் கடந்து செல்லும்போதும் அவள் கண்களும் காதுகளும் கூர்மை பெறும். ஆனாலும் அவள் காதுகளுக்கு அமிர்தமாக அவன் குரல் கேட்கவில்லை. அவள் கண்களுக்கு விருந்தாக அவனும் வரவில்லை.


    அவனைப் பார்க்க முடியாத ஏமாற்றம் கோபமாக வெளிப்பட்டது. ஏற்கனவே இப்பொழுது தான் தேறி வந்த மனம் அவனின் பிரிவை ஏற்க முடியாமல் தவித்தது. வீட்டில் பழையபடி கத்த ஆரம்பித்தாள். ஊராரின் பார்வை கொஞ்சம் வித்தியாசமாக அவள் மீது படிந்து விட்டால் அன்று வீட்டில் ரணகளம் தான்.


    அவள் கல்லூரி இரண்டாம் வருடம் முடியும் தருவாயில் நடந்தது தான் மற்ற எல்லாவற்றையும் விட வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் கதிகலங்க வைத்தது. அவள் முழு சுதந்திரம் கொடுத்திருந்தவர்கள் ஒன்றில் மட்டும் பிடிவாதமாக இருந்தனர். அதாவது அவள் எங்கு சென்றாலும் மாலை ஆறு மணிக்குள் வீட்டிற்கு வந்து விட வேண்டும். அன்று அவள் பேருந்து வராமல் தூத்துக்குடியில் மாட்டிக் கொள்ள இரவு நேரமாகிவிட்டது. பேருந்து நிலையத்தில் ஒருவன் குடித்துவிட்டு தள்ளாடிக் கொண்டு வந்து அவள் மீது மோத அவளுக்கு எங்கிருந்து அந்த வெறி வந்ததோ தெரியாது அவனைப் பிடித்து கன்னத்தில் மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தாள். பேருந்து நிலையத்தில் பலர் வேடிக்கைப் பார்க்க சிலர் அவளிடம் இருந்து அந்த குடிக்காரனைப் பிரிக்க முயன்றுக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவள் சோர்ந்து மயங்கி விழவும், அவளைத் தேடி தினேஷ் வரவும் சரியாக இருக்க அவன் அவளை வீட்டிற்கு கூடிக் கொண்டு வந்தான்.

    ஊருக்கு வந்து தர்ஷினியைப் பார்த்தால் தன் கனவைக் கோட்டை விட்டுவிடுவோமோ என்று பயந்து தான் சஞ்சீவ் ஊர் பக்கமே வரவில்லை. மறுபடி சென்னை சென்று அங்கிருந்து தன்னுடைய தேர்வுக்கு தயார் செய்தான். அந்த வருடம் ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றியும் பெற்றுவிட்டான். அதன் பிறகு உடல் தகுதிக்கான பரீட்சை, நியமன அறிவிப்புக்காக காத்திருத்தல், பயிற்சி காலம் என்று அனைத்தும் முடிந்து அவனது பதவி நியமன உத்தரவு அவன் கைகளுக்கு வர இரண்டு வருடங்கள் ஆகின. அவனுக்கு முதலில் பயிற்சிகாலம் வேலூரில் முடிந்தது. அடுத்து முதல் தகுதிகாண் பருவக்காலம் (probationary period ) பதவியான காவல் துறை துணை கண்காணிப்பாளராக (Assistant Superintendent of Police ) தஞ்சாவூரில் நியமிக்கப்பட்டான்.


    தர்ஷினியின் தேடல்கள் சஞ்சீவின் காதுகளை தினேஷ் மூலம் எட்ட தான் செய்தன. தூக்கணாங்குருவி இரவு நேர இருட்டை விரட்ட மின்மினி பூச்சியை பிடித்து தன் கூட்டில் ஒட்டி வைத்துக் கொள்ளுமாம். அது தரும் வெளிச்சத்தில் இரவின் இருட்டை சமாளித்து விடுமாம். அதுபோல் தினேஷ் மூலம் அறியவரும் தர்ஷினியின் தேடல்களை மனதில் நம்பிக்கையாக ஒட்ட வைத்து அவளைப் பிரிந்து பார்க்காமல் இருக்கும் பிரிவாற்றாமையை ஓட்டிக் கொண்டிருந்தான் சஞ்சீவ்.


    இரண்டு வருடங்களில் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தவள் தன் மனம் கவர்ந்தவனைப் பார்க்க முடியாமல் தவித்தாள். அவன் நினைவோடு வீட்டின் பின்புறத்தில் அந்தி மாலை நேரத்தில் வானத்தின் இள சிவப்பை ரசித்தவாறு வீடு சுவரில் ஏணி வைத்து ஏறி அமர்ந்து அவள் ஆசையாக வளர்க்கும் பிச்சி பூ செய்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். ஏனோ இன்று அவனுடைய நினைப்பு அவளுக்கு அதிகமாக வந்தது. அந்த நினைவில் அவள் பக்கத்துக்கு வீட்டு வாண்டுகள் வந்து ஏணியை எடுத்து சென்றதை அவள் கவனிக்கவே இல்லை.


    பூக்களைப் பறித்து முடித்தவள் அங்கு ஏணி இருக்கும் நினைப்பில் கீழே பார்க்காமலேயே காலை அந்த புறமாய் வைக்க தடுமாறி சுவரில் இருந்து கீழே விழப் போனாள். பிடிக்காக செடிகளைப் பிடிக்க அதுவும் ஒடிந்து அவளோடு சேர்ந்து கீழே விழுந்துக் கொண்டிருந்தது. தரையில் விழுந்து முதுகு உடையப் போகிறது என்ற நினைப்பில் "ஹையோ.." என்று கண்களை மூடிக் கொண்டவள் தரையில் வந்து விழுந்தாள். செடிகளின் அடியில் கல் எதுவும் இல்லாததால் அடி பலமாக இல்லையென்றாலும் மேலே இருந்து விழுந்த வேகத்தில் அவளால் எழுத்துக் கொள்ள முடியவில்லை. அப்பொழுது யாரோ ஓடி வரும் சத்தம் கேட்க அந்தபுறமாய் திரும்பியவள் வலியை மறந்து விழி விரித்து நோக்கினாள்.

    ஏனென்றால் அவளை நோக்கி ஓடி வந்து அவளைத் தூக்கி நிறுத்தி கையை இழுத்து விட்டுக் கொண்டிருந்தவன் சஞ்சீவ்.


    அவள் திகைப்பில் இருந்து வெளியில் வருவதற்குள் சஞ்சீவ் எப்படி அவள் வீட்டு பின்புறம் வரை வந்து அவளைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறான் என்று பார்த்துவிடுவோம்.

    தர்ஷினி மூன்றாம் வருடம் கல்லூரி முடிக்கும் போதே அவளை திருமணம் செய்து கொடுத்துவிடவேண்டும் என்று நினைத்த அவளுடைய தாத்தா அவளுக்கு வரன் பார்த்தார். ஆனால் இன்றுவரை குடிப்பவர்களைப் பார்த்தால் அவள் நடந்துக் கொள்ளும் விதமும், ஊரார் யாரவது அவளை பரிதாபமாக பார்த்தால் வீட்டில் வந்து அலறுவதும், அவள் இன்னும் முழுமையாக தெளியவில்லை என்பதை அப்பட்டமாக காட்ட, யாருக்கு எப்படி புரிய வைத்து திருமணம் செய்து வைக்க என்று குழம்பி போயிருந்தார்.


    திருமணப் பேச்சு வீட்டில் வரவுமே தினேஷ் தன் நண்பனுக்கு தெரிவிக்க அப்பொழுது தான் தன் பணி நியமன உத்தரவைக் கையில் வாங்கியிருந்தான் சஞ்சீவ். சென்னையிலிருந்து கிளம்பி வந்தவன் இரண்டு வருடங்களுக்கு பிறகு தன் சொந்த ஊருக்கு போகாமல் நேராக சென்றது திருநெல்வேலிக்கு தான். தினேஷை அங்கு வர சொல்லிவிட்டு இருவரும் சென்று பார்த்தது மனநல மருத்துவர் திலகவதியை.


    அவரிடம் அவளது இன்றைய நிலையையும், தான் திருமணம் செய்துக் கொள்ள எடுத்திருக்கும் முடிவையும், அவளது பிடிவாதத்தையும் எடுத்துக் கூறி தான் அவள் வாழ்வில் வருவதால் மன ரீதியாக அவள் பாதிக்கப் படுவாளா என்று கேட்டான். அவனைப் பொறுத்தவரை அன்று அவள் சாகத் துணிந்தவள் ஆயிற்றே.


    அனைத்தையும் அமைதியாகக் கேட்டவர் "முதலில் ஒரு விஷயம் சொல்லுங்க சஞ்சீவ், தர்ஷினி மேல உங்களுக்கு இருக்கிறது காதலா பரிதாபமா.." என்று கேட்டார். "நிச்சயமா காதல் தான் டாக்டர்.. நான்கு வருடக் காதல்" என்று தெளிவாக பதில் கூறினான் சஞ்சீவ். "சரி உங்க வேலை.. அவள் வெறுக்கிற ஒரு துறை.." என்று அவர் இழுக்கவும், "நிச்சயமா நா மாத்திடுவேன் டாக்டர்..வெறும் வாய் வார்த்தை அவளால நம்ப முடியாது... பட் இப்போ எனக்கு போஸ்டிங் வந்தாச்சு.. நடைமுறைல பாத்து அவள் புரிஞ்சிப்பா" என்று அவன் கூறவும்.. "இதற்கு எவ்வளவு நாள் ஆகும் சஞ்சீவ்.. ஒரு மாசம்.. ஒரு வருடம்..இல்ல.. " என்று அவர் இழுக்கவும் சஞ்சீவ் திகைத்தான். ஆம் எவ்வளவு நாள் ஆகும் தெரியாதே.. .


    ஆதரவாக சிரித்தவர் "போலீஸ் ஆகணும்ங்க்றது உங்க கனவு. நீங்க காதலிக்றீங்க தான்.. அதுக்காக தர்ஷினிக்கும் அந்த துறைல இருக்கிற வெறுப்பு மாறி உங்கள ஏத்துக்கனும்ங்க்றது கிடையாது.. முதல்ல உங்க கனவோட மிச்சத்த அவமேல திணிக்கிறத நிறுத்துங்க.. அவளுக்கும் காதல் வந்ததுனாலே அவள் உங்களை முழுசா புரிஞ்சிக்கணும்னு எதிர்பார்க்க கூடாது. காதல்ல எத்தனையோ மிஸ்-அண்டர்ஸ்டான்டிங் இருக்கும்.. அதையும் தாண்டி ஜெயித்து நிக்கிறது தான் உண்மையான காதல். நீங்க உங்க வழில நேர்மையா இருங்க.. உங்களை புரிஞ்சிக்கிற விஷயத்துல உங்கமேல அவளுக்கு இருக்கிற காதல் கூட அவளை கட்டாயப் படுத்தக்கூடாது. ஒரு பூ எவ்வளவு இயல்பா மலருதோ அப்படி தான் இயல்பா அவள் உங்களை புரிஞ்சிக்கணும்.. கொஞ்ச நாள், ஒரு ரெண்டு வருஷம் அவளை விட்டு பிடிங்க...அப்புறமும் உங்களுக்கு நம்பிக்கையும், அவளுக்கு காதலும் இருந்தா திருமண பேச்சை எடுங்க"


    "அவளை ஒரு புது இடத்துக்கு மாத்துங்க.. அவளுக்கு சின்ன வயசுல மனசுல பதிஞ்ச குடிப்பழக்கம் இன்னைக்கு அவளை அறியாமலே வெறியா வெளில வருது.. புது இடம், புது மனிதர்கள் நிச்சயமா அவகிட்ட மாற்றத்தை ஏற்படுதுவாங்க.. " என்று அறிவுரை கூறினார்.


    அங்கிருந்து வந்தவன் முதலில் தன் வீட்டில் பேசினான். தான் காதலித்து மணந்ததாலோ இல்லை காதல் மீது இருந்த நம்பிக்கையோ சஞ்சீவின் தந்தை தங்கபாண்டி அனைத்தையும் கேட்டப் பின் தன் மனைவியிடம் கண்களால் சம்மதம் வாங்கிவிட்டு தன் சம்மதத்தை தெரிவித்தார். அழகம்மை ஆச்சி கேட்கவே வேண்டாம். அவருக்கு தன் பேரனின் நிம்மதி தான் முக்கியம். ஆனாலும் அவள் மனம் மாறி சீக்கிரம் திருமணம் ஆகவேண்டுமே என்ற கவலை வேறு. அந்த கடவுள் தான் துணை நிற்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டார்.


    பின் தன் தந்தையையும் தாயையும் அழைத்துக் கொண்டு தர்ஷினியின் வீட்டில் பேச சென்றான். தினேஷையும் வைத்துக் கொண்டு தர்ஷினியின் தாத்தா, பாட்டியிடமும், தாயிடமும் தன் காதலைப் பற்றியும், மனநல மருத்துவர் திலகவதி பேசியது பற்றியும் சொல்ல முதலில் அவள் தாத்தா தயங்கினார். அவள் அவனை ஏற்றுக் கொள்வாளா என்று. அவ்வளவு நாள் சஞ்சீவின் வீட்டிலும் காத்திருப்பார்களா என்று.


    சஞ்சீவின் தந்தை நம்பிக்கை ஊட்டும்படி பேச சஞ்சீவ் எழுந்து சுந்தரியிடம் சென்று இரு கைகளையும் கூப்பி, "அத்தை. தர்ஷினியை என் உயிரா பாத்துப்பேன்.. அவள் மனசு மாறும்வரை அது எத்தனை வருஷமா ஆனாலும் சரி நான் காத்திருப்பேன்.. என்னை நம்பி உங்க பொண்ணைக் கொடுங்க அத்தை.." என்று கேட்க சுந்தரி உருகி விட்டார். உடனே சரி என்று கூறிவிட்டார். அனைவருக்கும் மகிழ்ச்சி.


    "சரில, புது எடம்னா, மருமவள எங்க அனுப்பலாம், மதராசுல நம்ம வீடு இருக்கே அங்கன அனுப்பிடலாமால" என்று தங்கபாண்டி கேட்க சஞ்சீவ் "இல்ல பா.. அங்க அனுப்பினா அவளால ப்ரீயா இருக்க முடியாது.. வேணாம்.. சென்னைக்கே அனுப்பலாம் ஆனால் வேற வீடு பார்க்கலாம். என் பிரெண்ட் ஸ்ரீனி இருக்கான் அங்க.. அவன் ஆபீஸ்லையே வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டா சந்தேகம் வராது.. அத்தை உங்களுக்கு சம்மதம் தானே.. நீங்களும் தர்ஷினியும் சென்னைல சமாளிச்சிப்பீங்க தானே.. ஸ்ரீனி உங்களுக்கு எல்லா உதவியும் பண்ணுவான்" என்று நம்பிக்கை ஏற்படுமாறு பேச, சுந்தரி சம்மதம் தெரிவித்தார்.


    அப்பொழுது தான் பின்னாலிருந்து ஏணியைத் தூக்கிக்கொண்டு வந்த இரண்டு வாண்டுகள் அதைத் தூக்கிக்கொண்டு ஓடும் வேகத்தில் சஞ்சீவின் கையிலிருந்த காபி தம்ளரைத் தட்டி விட்டு சென்றன. காபி அவன் சட்டையில் கொட்ட பதறிய சுந்தரி அவனைப் பின்னால் சென்று சுத்தம் செய்துக் கொள்ளும்படி கூறினார்.

    இவை அனைத்தும் முன்னால் வராண்டாவில் நடந்துக் கொண்டிருக்க இது எதுவும் தெரியாமல் பின்னால் பூ பறித்துக் கொண்டிருந்தாள் நம் தர்ஷினி. இது தான் சஞ்சீவ் பின்பக்கம் வந்து அவளைத் தூக்கும் முன் நடந்த கதை.

    திகைப்பில் இருந்து வெளி வந்த தர்ஷினி அவசரமாக விலக, அவனும் சிரித்துக் கொண்டே விலகி நின்றான்.

    "எப்படி இருக்க தர்ஷினி" என்று அவன் கேட்க, தர்ஷினிக்கு இத்தனை வருடங்கள் கழித்து அவனை இவ்வளவு அருகாமையில் பார்த்ததால் ஏற்பட்ட படபடப்பு கொஞ்சமும் அடங்கவில்லை. அவன் விழிகளைப் பார்க்காமல் "யாரைக் கேட்டு என்னை தூக்கினீங்க" என்று அவள் தன் படப்படப்பை மறைத்து சம்பந்தமே இல்லாமல் கேட்டாள்.

    அவள் குழந்தைத்தனமான கேள்வி சிரிப்பை வரவழைக்க, "இது என்ன கேள்வி.. கீழே விழுந்து கிடந்த.. சரி பாவமேன்னு தூக்கி விட்டேன்.. இதுக்கு யாரை நான் கேட்கணும்" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் சஞ்சீவ்.

    தலையை சிலுப்பிக் கொண்டு "என்னை கேட்கணும்" என்றாள் தர்ஷினி..

    "சரி கேட்கிறேன் சொல்லு"

    "என்ன சொல்லணும்"

    "நீ தானே எதோ என்னை கேட்கனும்னு சொன்ன.. அதைதான் கேக்றேன் சொல்லு" என்று நிதானமாக அவன் கூற ஒரு கணம் முழித்துவிட்டு அவனை முறைத்தாள் "ரொம்ப அறிவுப்பூர்வமா பேசுறதா நினைப்பா.. நான் உங்களை கல்யாணம் செய்துக்க முடியாது" என்று அவள் படப்படப்பாக கூறினாள்.

    சஞ்சீவ் மௌனமாய் சிரித்துக் கொண்டே "நான் இப்போ கல்யாணத்தைப் பத்தி பேசவே இல்லையே தர்ஷுமா" என்று கூறினான். தர்ஷினி நாக்கைக் கடித்துக் கொண்டாள். 'நாமாத்தான் உளறிவிட்டோமோ' என்று மனதில் நினைத்துக் கொண்டு "அப்புறம் எதுக்கு இவ்வளவு தூரம் வந்து எங்க வீட்டு பின்கட்டுவரை வந்திருக்கீங்கலாம்" என்று உள்ளே போன குரலில் கேட்டாள்.

    "நான் என் பிரெண்ட் தினேஷைப் பார்க்க வந்தேன்.. வந்த எடத்துல என் ஷர்ட் புல்லா காபி கொட்டிடுச்சு.. மேடம் கொஞ்சம் கண்ணை நல்லா விரிச்சி பாருங்க.. " என்று தன் சட்டையைக் காண்பித்தான். 'அப்போ அவன் என்னை பார்க்க வரவில்லையா..' அவள் முகத்தில் தோன்றிய பலவிதமான பாவங்களைப் பார்த்தவாறே கொஞ்சம் நெருங்கி வந்த சஞ்சீவ் "ஆனா தர்ஷினி.. நீயா கல்யாணத்தைப் பத்தி பேசினதுனால சொல்றேன்.. நீ தான் என் மனைவி.. நாம சீக்கிரமாவே கல்யாணம் பண்ணிக்க போறோம்" என்று கூறினான்.

    அதைக் கேட்ட தர்ஷினி 'எவ்வளவு திமிர்.. என் மனசைப் பதை கவலையே படாம அவன் பாட்டுக்கு முடிவு எடுத்துட்டு பேசிட்டு இருக்கிறான்..' என்று அவளின் இயல்பான பிடிவாதம் தலைத்தூக்க "கனவு கண்டுட்டு இருங்க சார்.. ஒருநாளும் நடக்காது.. உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்.. யார் மேலேயும் எனக்கு நம்பிக்கை கிடையாது.. அந்த யாருல நீங்களும் அடக்கம்" என்று ஆவேசமாக கூறினாள்.

    "ம்ம்.. அப்படியா.. பார்க்கலாமா.. நீயே வந்து சஞ்சீவ் ஐ லவ் யூ அப்படினு சொல்றியா இல்லையான்னு.." என்று அவன் சவால் விடுமாறு பேச, தர்ஷினியும் தலை வேக வேகமாக அசைத்துக் கொண்டு "பார்க்கலாம் பார்க்கலாம்.. " என்று கூறினாள். அவள் சொன்ன வேகத்தில் சஞ்சீவிற்கு சிரிப்பு வர திரும்பி சிரித்துக் கொண்டே நகர முற்பட்டான். "உடம்பு புல்லா திமிரு" என்று முனுமுனுக்க சடாரென்று திரும்பிய சஞ்சீவ் அவள் பக்கத்தில் மிக நெருங்கி நின்று "என்ன சொன்னே" என்று கேட்டான். சட்டென்று திரும்பிய வேகத்தில் அவள் திகைத்து நிற்க "ஒ ஒன்னுமில்ல" என்று மெதுவாக அவள் உதடு கூறியது. கண்களில் சிரிப்புடன் சஞ்சீவ் அவள் நேரே கையை நீட்ட பயத்துடன் பின்னடைந்தாள் தர்ஷினி. இன்னும் முன்னேறி அருகில் நெருங்கி வந்தவன் அவள் கண்களில் தெரிந்த திகைப்பைப் பார்த்துக் கொண்டே தன் மேல் சாய்ந்ததால் அவள் கன்னத்தில் ஒட்டி இருந்த காபியைத் துடைத்துவிட்டு புன்னகையுடன் நகர்ந்து விட்டான். அவனின் அருகாமையில் திகைத்து நின்ற அவள் அந்த நிலையிலிருந்து மீண்டு வர சில மணி நேரம் ஆனது.

    அதற்கு பின்னால் வேலைகள் வேகமாக நடந்தன. ஏதோ செய்திதாளில் பார்த்ததாக கூறி அந்த ஸ்ரீனி வேலைப் பார்க்கும் அலுவலகத்தின் விண்ணப்பப்படிவத்தை தர்ஷினியின் தாத்தா அவளிடம் கொடுத்தார். பின்னர் அவளின் மதிப்பெண்ணும், ஸ்ரீனியின் சிபாரிசும் சேர அவளுக்கு அங்கேயே வேலையும் கிடைத்தது. வேலையைக் காரணம் காட்டி சுந்தரியும், தர்ஷினியும் சென்னைக்கு பயணமானார்கள்.

    ஸ்ரீனியும் சஞ்சீவும் உயிர் நண்பர்கள். இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் போது காஞ்சிபுரத்திலிருந்து வந்த ஸ்ரீனி விடுதியில் தங்கி இருக்க, சஞ்சீவ் அவனை வற்புறுத்தி தன்னுடன் வீட்டில் தங்க வைத்துக்கொண்ட அளவு நட்பு. அவனுக்காக அனைத்தையும் செய்தான் ஸ்ரீனி. முதலில் சென்னை வந்து இறங்கி முதல் நாள் அலுவலகத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றி வந்த தர்ஷினி அவன் கண்களுக்கு குழந்தையாக தெரிய இயல்பிலேயே அவளை பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டான் ஸ்ரீனி.

    முதல் தகுதிகாண் பதவிக்காலத்தை தஞ்சாவூரில் முடித்த சஞ்சீவ் தன் இரண்டாம் தகுதிகாண் பதவிக்காலத்தை கரூரில் தொடர்ந்தான். பின்னர் காவல்துறை துணை ஆணையராக (Assistant commissioner of police ) பதவி ஏற்றவன் தேனிக்கு மாற்றப்பட்டான். அவன் மறுபடி சென்னை வர நான்கு வருடங்கள் ஆகின. போக்குவரத்து துறையில் துணை ஆணையராக பதவி ஏற்று சென்னை வந்தவன் தர்ஷினியை சந்திக்க நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்தான். அன்று லைசென்ஸ் இல்லாமல் இவனிடம் மாட்டிக் கொண்டு நின்றவள் கண்களில் தெரிந்த ஒளியின் மேல் நம்பிக்கை கொண்டு அவளை மாற்றி விடலாம் என்று ஸ்ரீனியின் உதவியுடன் அவளைத் தன் வீட்டிற்கே குடி வர செய்துவிட்டான்.

    ன்று மொட்டைமாடியில் நின்று தர்ஷினியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு ஒன்று விளங்கியது. குடிப்பவர்களைக் கண்டால் அவளை அறியாமலேயே அவள் நடந்துக் கொள்ளும் அந்த நேரத்திலும், தர்ஷினி தன் குரலை அடையாளம் கண்டு தன் கைகளில் சரணடைந்தாள். எனவே இனி தைரியமாக தன் வேலையைப் பற்றி அவளிடம் பேசிவிட்டு திருமணத்தைப் பற்றியும் பேச ஆரம்பிக்கலாம் என்று முடிவு எடுத்துக் கொண்டு கீழே இறங்கி தூங்க சென்றான்.

    மறுநாள் அவன் முயற்சி செய்யாமலேயே சூழ்நிலை அவனுக்கு உதவி செய்தது.

    மேகம் ஓடும்..

    அனு
     
    2 people like this.
    Loading...

  2. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Hi Anu,
    Good episode... expecting next episode....
     
    1 person likes this.
  3. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi Anu...
    Story is going on very interesting... Bore adikam story ya remba nalla kondu poreenga.. Keep Rocking
     
    1 person likes this.
  4. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    அனு பா,

    சூப்பர் பா............
    சீக்கரம் தர்ஷுவும், சஞ்சீவும் சேரபொறாங்க தான பா...........
     
    1 person likes this.
  5. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    anu super ma...
    dharshu ini sanjeev ku ok sollervala ????
    dharshu nalla vidhama react pannanum ma...
     
    1 person likes this.
  6. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ivolu naal kalichu update potadhuku inum konjam perusa koduthirukanum. sekram mudinchuduchu pa
     
    1 person likes this.
  7. omsrisai

    omsrisai IL Hall of Fame

    Messages:
    3,326
    Likes Received:
    2,722
    Trophy Points:
    315
    Gender:
    Female
    Super episode Anu...waiting for the next episode soon
     
    1 person likes this.
  8. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Hi Nithi..

    Thank u so much pa..
    Next update mudinjavarai seekiram potudren pa..

    Anu
     
  9. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Hi uma,

    Thanks a lot pa..
    pls keep reading and share your thoughts..

    Anu
     
  10. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Hi Thenu..

    Thanks pa.. sera porangala illa, idaiyla ethuvum nadanthu piriya porangala.. parakalam pa..

    Anu
     

Share This Page